தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.4.11

26.4.11

டீ கடை பெஞ்சு - சாஸ்திரா பி.எட். விவகாரம்


"அரசு முடிவெடுக்காததால, பள்ளி மாணவர்களுக்கு தான் பாதிப்பாம் வே...'' என்றபடி, பெஞ்சில் வந்து அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

"எந்த விஷயத்துல பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.

"தஞ்சாவூர் சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலையில தபால் வழியா, இடைநிலை ஆசிரியர்கள் பலர், பி.எட்., படிச்சிருந்தாங்க... இவங்களுக்கு பட்டதாரி ஆசிரியரா பதவி உயர்வு வழங்குறதுல போன வருஷம் மே மாசம் பிரச்னை ஏற்பட்டது வே... இந்த பட்டத்தை அரசு ஏற்க மறுத்ததால, சென்னை ஐகோர்ட்டிலும், மதுரை ஐகோர்ட் கிளையிலும் ஆசிரியர்கள் வழக்கு தொடர்ந்தாங்க...

"மதுரை ஐகோர்ட் பிறப்பிச்ச இடைக்கால உத்தரவுல, "விசாரணை முடியும் வரை, தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு அந்தந்த ஒன்றியத்துல இருக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவிகளை நிரப்ப வேண்டாம்''ன்னு தெரிவிச்சது... ஒரு வருஷமாகியும் இந்த பிரச்னைக்கு தனியார் பல்கலை நிர்வாகமோ, தமிழக அரசோ தீர்வு காணலை வே... அதனால, 1,300 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை காலியாவே வைச்சிருக்காங்க... இந்த பிரச்னையில பாதிக்கப்பட்டது, சம்பந்தப்பட்ட நடுநிலைப் பள்ளி மாணவர்களோட கல்வித் தரம் தான் வே... ஆனா, இதே பல்கலையில இதுக்கு முன்னால பி.எட்., முடிச்சவங்க, அதுக்கான ஊக்க சம்பளத்தை வாங்கிட்டு தான் இருக்காங்களாம்...'' எனக் கூறி முடித்தார் அண்ணாச்சி.

நன்றி


எட்டாம் வகுப்பு தேர்வு அனைவரும் "பாஸ்''

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரையும் "ஆல் பாஸ்'' செய்ய, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசு, 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி என்ற சட்டத்தை, கடந்த கல்வியாண்டு முதல் அமல்படுத்தியுள்ளது. இருப்பினும், கிராம நடுநிலைப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால், உயர்நிலை கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இடை நிற்றல் அதிகமாக உள்ளது. 

இதை தவிர்க்க, எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய அனைவரையும் "ஆல் பாஸ்' செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் எட்டாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும், ஒன்பதாம் வகுப்பில் சேர்க்கப்பட உள்ளனர். 

இதேபோல், ஒன்பதாம் வகுப்பு இறுதி தேர்வு எழுதிய மாணவர்களில் 90 சதத்திற்கும் மேல் தேர்ச்சி பெற வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி


24.4.11

பணி நிறைவு இடைநிலை ஆசிரியர்களுக்கு தஇஆச கன்னியாகுமரி சார்பில் பாராட்டு விழா


தபால் வாக்கு: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தபால் வாக்குகளை தங்களது கட்சிக்கு சாதகமாக போடுமாறு அரசியல் கட்சியினரோ, அரசு ஊழியர் சங்கங்களோ பிரசாரம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
 
ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீஸôர் ஆகியோருக்கு தபாலில் வாக்கு அளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியாற்றினர்.  

இவர்கள் வாக்களிக்க ஏதுவாக அவர்களுக்கு தபால் வாக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டியில் அவர்கள் தங்களது வாக்குகளை மே 13-ம் தேதி காலை வரை செலுத்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  

தபால் வாக்குகளுக்கு நீண்ட நாள் கால அவகாசம் வழங்கப்பட்டதுக்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், காட்பாடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் துரைமுருகனின் ஆதரவாளர்கள் தபால் வாக்குகளை மிரட்டிப் பெற்று வருவதாகப் புகார் எழுந்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலும் தபால் வாக்குகள் பணத்துக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன.  

இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி: தபாலில் வாக்களிக்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அரசு ஊழியர் சங்கங்கள் ஆகியோர் அணுகி பிரசாரம் மேற்கொள்வதாகவும், தங்களுக்குச் சாதகமாக வாக்களிக்க நிர்பந்திப்பதாகவும் பத்திரிகைகளில செய்திகள் வருகின்றன.  

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் ஏப்ரல் 11-ம் தேதி மாலை 5 மணியோடு நிறைவடைந்துவிட்டது. அதன்பிறகு, எந்த அரசு ஊழியரும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. அரசியல் கட்சிகளுக்காகப் பிரசாரம் மேற்கொள்வதோ, வாக்காளர்களை நிர்பந்திக்கவோ கூடாது.  

இதில் அரசு ஊழியர்கள் யாரேனும் தவறு செய்தால் அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.  

அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் இப்போது பிரசாரம் மேற்கொள்வதோ, வாக்காளர்களை நிர்பந்திப்பதோ நடத்தை விதிமுறைகளை மீறும் செயல் ஆகும். விதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

நன்றி:

23.4.11

ஆசிரியர்கள் பொது மாறுதல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் & விண்ணப்பப் படிவம்

General Transfer 2011 - 2012

ஆசிரியர் - தனியாள் விவர படிவம்

உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொத்து உட்பட, அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது. 


பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆசிரியர் - தனியாள் விவர படிவம் பெற இங்கே சொடுக்கவும். 


விளக்கக் குறிப்பு பெற இங்கே சொடுக்கவும்.
.

21.4.11

கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின், ஜூன் 1ல் திறக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில் மார்ச் இறுதியில் இருந்தே விடுமுறை விடப்பட்டுள்ளன. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏப்ரல் 21ல் இறுதி தேர்வு முடிந்து, இன்று முதல் விடுமுறை துவங்கியுள்ளது. விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவு வெளியிடுதல், மாணவர் சேர்க்கை போன்ற காரணங்களால் பல பள்ளிகளில், ஆசிரியர்கள் இம்மாத இறுட வரை பள்ளிக்கு வரும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்கக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்., 30 வரை பள்ளிகள் செயல்படும். 

இந்நிலையில் கோடை விடுமுறைக்கு பின் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1ல் திறக்க வேண்டும். பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள் கையில் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 

நன்றி


19.4.11

ஊதியக் குழு நிலுவைத் தொகை - மூன்றாவது தவணைக்கான அரசின் கடிதம்


வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ஊதியமில்லை? இடைநிலை ஆசிரியர்கள் முறையீடு

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உழைப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  

நடைபெற்ற தேர்தலையொட்டி வீடுவீடாகச் சென்று புகைப்படத்துடன்கூடிய வாக்குச்சாவடிச் சீட்டு வழங்கும் பணிக்கு மாவட்டத்தில் 2,766 பேர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இடைநிலை ஆசிரியர்கள். அவர்கள் ஏப். 1 முதல் 11-ம் தேதிவரை வீடுவீடாகச் சென்று சீட்டுகளை வழங்கினர். கடந்த 10-ம் தேதி சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியிலிருந்து அடையாளச் சீட்டு வழங்கும் பணியை மேற்கொண்டனர்.  தினமும் வழங்கப்பட்ட சீட்டுகள் குறித்த விவரம் தொலைபேசி மூலம் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற பயிற்சி வகுப்புகளிலும் அவர்கள் பங்கேற்றனர். ஆனால் இதற்கான உழைப்பூதியம் வழங்கப்படாதது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட கிளை நிர்வாகிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியும் ஆட்சியருமான ராஜேந்திர ரத்னூவை திங்கள்கிழமை சந்தித்து மனு அளித்தனர். 

விவரம்
 மாவட்டத்தில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்பட்டு வீடுவீடாகச் சென்று வாக்குச்சாவடிச் சீட்டு, ஒப்புகைக் கையொப்பம் பெற்றபின் வழங்கும் பணியை உரிய நேரத்தில் செய்து முடித்தனர். ஆனால் அதற்கான உழைப்பூதியம் வழங்கப்படவில்லை.  1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பணிச்சுமை சாதாரண வாக்குச்சாவடிகளைவிட இருமடங்காக இருந்தது.   எனவே, அதைக் கருத்தில்கொண்டு ஊதியம் கிடைக்கச் செய்ய வேண்டும். 

மேலும் ஏப். 10-ல் வாக்குச்சாவடிகளில் அமர்ந்து பணியாற்றியோருக்கும் உழைப்பூதியம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்றனர் அவர்கள்.

நன்றி:


ஊதியக் குழு நிலுவைத் தொகை - ஓரிரு நாளில் அரசாணை

ஆறாவது ஊதியக் குழுவின் கடைசி நிலுவைத் தொகையை அளிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை ஓரிரு நாட்களில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆறாவது ஊதியக் குழுவின் அறிக்கைப்படி, கடந்த 2006 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது. இந்த பரிந்துரைகளைப் பெற்றுக் கொண்ட தமிழக அரசு அதனை ஆய்வு செய்வதற்கு தனியாக ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை அளிக்க இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் மாநில அரசு, 1.6.2009-ம் ஆண்டு தேதியில் இருந்து புதிய ஊதியத்தை அளித்தது. 

மத்திய அரசு 1.1.2006-ம் தேதியில் இருந்தே தனது ஊழியர்களுக்கு புதிய ஊதியம் கொடுத்தது. தமிழக அரசு 1.1.2007-ம் ஆண்டில் இருந்து மட்டுமே ஊதியம் அளிக்க முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, இந்தத் தேதியில் இருந்து 31.5.2009-ம் காலத்துக்குள் உள்ள நிலுவைத் தொகையை மூன்று தவணைகளாக அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 2009-ம் ஆண்டு முதல் தவணையையும், 2010-ம் ஆண்டு இரண்டாம் தவணையையும், 2011-ம் ஆண்டு மூன்றாவது தவணை நிலுவைத் தொகையையும் அளிக்க தமிழக நிதித் துறை முடிவு செய்து அதனை அளித்தது. மூன்றாவது நிலுவைத் தொகை 2011 ஏப்ரலில் அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. 

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்த காரணத்தால் கடைசி நிலுவைத் தொகையை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நிலுவைத் தொகையை அளிப்பதற்கு உரிய அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறுவதற்கான கோப்புகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, நிதித் துறை அனுப்பியது. இதற்கு, இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரியின் அனுமதி தேவை எனக் கூறி கோப்பு தில்லிக்கு அனுப்பப்பட்டது. 

இதனிடையே, கோப்பின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயல சங்க நிர்வாகிகள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை அண்மையில் சந்தித்து வலியுறுத்தினர். அவர்களிடம், விரைவில் அனுமதி பெற்றுத் தருவதாக பிரவீண் குமார் உறுதி அளித்தார். அதன்படி, தேர்தல் ஆணையத்தின் அனுமதியை அவர் திங்கள்கிழமை பெற்றுத் தந்துள்ளார். 

இதையடுத்து, ஓரிரு நாட்களில் அதற்கான அரசு உத்தரவை நிதித் துறை வெளியிடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வளவு கிடைக்கும்
கடைசி கட்ட நிலுவைத் தொகை கிடைப்பதன் மூலம், அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நன்றி:



பொது மாறுதல் கவுன்சிலிங் அறிவிப்பு: வெளியாகாததால் ஆசிரியர்கள் தவிப்பு

பொது மாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பம் வழங்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடாததால், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், உதவி கல்வி அலுவலர்களிடம், கடைசி பள்ளி வேலை நாளில் பொது மாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் பெறுவது வழக்கம். இந்த விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள் பரிசீலனை செய்து, கையெழுத்திட்டு வழங்கப்படும். இந்த கடிதம் இருந்தால் தான், அடுத்த மாவட்டத்தில் நடக்கும் பொது மாறுதல் கவுன்சிலிங்கில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியும். ஏப்., 21ல் பள்ளிகளுக்கு கடைசி வேலை நாள் என்பதால், இதுவரை பள்ளிக் கல்வித்துறை விண்ணப்பம் வழங்குவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

பொது மாறுதல் கவுன்சிலிங், மே கடைசி வாரத்தில் தான் நடக்கும். அதற்கு முன்னதாக இந்த பணிகள் நடந்தால் தான், பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்த முடியும். மே கடைசி வாரத்தில் தான் கவுன்சிலிங் நடப்பதால், அதற்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகி, புது அரசு பதவி ஏற்ற பின் தான், ஆசிரியர்களுக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்படும். ஜூனில் பள்ளி திறக்கும் நாளில், மாறுதல் பெற்ற புதிய பள்ளிக்கு சென்று பணியாற்ற முடியும். 

தற்போதுள்ள சூழ்நிலையில், பள்ளி திறந்த பின் கவுன்சிலிங் நடத்தினால், மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியில் பாதிப்பு ஏற்படும். பள்ளிக்கல்வித்துறை, இதுவரை பொது மாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.

நன்றி


ஆசிரியர்களின் சொத்து விவரம்: பள்ளிக்கல்வித்துறை சேகரிப்பு

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சொத்து உட்பட, அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை சேகரித்து வருகிறது.

பள்ளிக்கல்வித்துறை வழங்கிய விண்ணப்பத்தில், 
  • ஆசிரியர்களின் தனித்திறன் கவிதை, பேச்சு, நாடகம், விளையாட்டு, இசை, கற்பனை ஆற்றல், 
  • கம்ப்யூட்டர் பயிற்சி,
  • குடும்ப நிலவரம், 
  • ஓட்டுனர் உரிமம் உள்ளதா, அதனுடைய வரிசை எண், டூவீலர், கார் ஓட்ட தெரியுமா, 
  • தற்செயல் விடுப்பு தவிர மற்ற அனைத்து விடுப்பு விவரம், 
  • ஒழுங்கு நடவடிக்கைகள், 
  • ஆசிரியர்களின் உயரம், எடையளவு, 
  • 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண்டு, மார்க் பட்டியல், 
  • அசையும், அசையா சொத்துக்கள், 
  • கடன் 
உட்பட, பல விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன. 

இந்த விண்ணப்பங்களை நிரப்பி, இரண்டு நாட்களுக்குள் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நன்றி



16.4.11

தேர்தல் பணி மதிப்பூதியம் வழங்கியதில் குழப்பம்: ஆசிரியர்கள் அதிருப்தி

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பணம் குறைத்து வழங்கியதால் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
 
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேர்தல் கமிஷன் சார்பில் மதிப்பூதியம் வழங்கப்படும். இதில் ஓட்டு சாவடி அலுவலருக்கு ரூ.1,450ம், பி.1, 2,3 என மூன்று நிலையில் பணியாற்றிய அலுவலர்களுக்கு ரூ.1,075 ம் தேர்தல் கமிஷன் வழங்கியது. மூன்று கட்ட பயிற்சி வகுப்புகளுக்கு ஒரு வகுப்புக்கு ரூ.250 வீதமும், தேர்தலுக்கு முதல் நாள் ஓட்டு சாவடிக்கு செல்வதால் ரூ.250 ம், சாப்பாட்டுக்கு 100, ஓட்டுப்பதிவு நாளில் ரூ.350 ம் வழங்க வேண்டும். பி.1, பி.2, பி.3, அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சியில் ஒரு வகுப்புக்கு ரூ.175 ம், ஓட்டு சாவடிக்கு முதல் நாள் செல்லும் போது ரூ.175 ம், சாப்பாட்டுக்கு 100 அதே போல் ஓட்டுப்பதிவு நாளில் ரூ.275 ம் மதிப்பூதியம் அனுமதிக்கப்பட்டது.


தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டு சாவடி அலுவலர்கள், பி.1, நிலை அலுவலர்களுக்கு இரண்டு கட்ட முழு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. பி.2, பி.3, ஆகியோருக்கு அரைநாள் பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டது. மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பில் பணி நியமன உத்தரவு மட்டும் வழங்கப்பட்டது. இதில் ஒரு சில மாவட்டங்களில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு மதிய சாப்பாடாக லெமன், தயிர் சாத பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு ரூ.1,250 ம், பி.1,பி.2, பி.3, நிலை அலுவலர்களுக்கு ரூ.900 மட்டுமே வழங்கப்பட்டது.


இதில் மதிய உணவுக்காக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சில மாவட்டத்தில் ஆயிரம் பணியாளர்கள் தேவை எனில் கூடுதலாக 200 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் நாளில் பணி வழங்கப்படாததால் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. தேர்தல் கமிஷன் வழங்கிய மதிப்பூதியத்தில் பல இடங்களில் குறைத்து வழங்கப்பட்டதால் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். 

நன்றி


15.4.11

சட்டசபை தேர்தல் முடிந்தது; துவங்கியது உள்ளாட்சி தேர்தல்

சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக, அதிகாரிகளுக்கு, தமிழக தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் வரும் அக்., 21ல் முடிவடைகிறது.புதிய உறுப்பினர்கள் அதற்குள் பதவியேற்க வேண்டும். இதற்கான தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.

பட்டியல்
உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டுகள் விவரம், வாக்காளர் விவரத்தை இம்மாதம் 30-க்குள் தயார் செய்து தருமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் முடிவடைந்ததையடுத்து, அடுத்த தேர்தலுக்கு அரசு அதிகாரிகள் தயாராகின்றனர்.

நன்றி


நாங்குநேரி தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்கள் சம்பளத்தில் முறைகேடு

நான்குநேரி சட்டசபைத் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கியதில் லட்சக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ஆசிரியர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். 

தமிழக சட்டசபைத் தேர்தல் கடந்த 13ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில் ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய தேர்தல் கமிஷன் ஆசிரியர்களை நியமனம் செய்தது. ஒவ்வொரு ஓட்டுச்சாவடிகளிலும் ஒரு ஓட்டுச்சாவடி தலைமை அலுவலரும், மூன்று அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டனர். ஆயிரம் வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நான்கு பேர் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். 

 இதில் தேர்தல் கமிஷன் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு சம்பளமாக ஆயிரத்து 450 ரூபாயும், அலுவர்களுக்கு ஆயிரத்து 75 ரூபாய் வழங்குவதாக அறிவித்து இருந்தது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் நான்குநேரி தவிர்த்த 9 சட்டசபைத் தொகுதிகளிலும் தேர்தல் கமிஷன் அறிவித்தபடி ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு ஆயிரத்து 450 ரூபாயும், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஆயிரத்து 75 ரூபாயும் சம்பளமாக வழங்கப்பட்டது. 

ஆனால் நான்குநேரி சட்டசபைத் தொகுதியில் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் அறிவித்தபடி ஆயிரத்து 450 ரூபாய் வழங்கப்பட்டது. ஆனால் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு ஆயிரத்து 75 ரூபாய்க்கு பதிலாக 175 ரூபாய் குறைத்து 900 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான சம்பளம் எவ்வளவு என்று தெரிந்தவர்கள் 900 ரூபாய் சம்பளத்தை வாங்க மறுத்து நள்ளிரவில் போராட்டம் நடத்த துவங்கி விட்டனர். 

இதுகுறித்து நேற்று முன்தினம் நள்ளிரவில் சம்பளம் வாங்க மறுத்த ஆசிரியர்கள் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ஜெயராமனிடம் செல்போனில் புகார் செய்தனர். கலெக்டர் ஜெயராமன் தேர்தல் கமிஷன் அறிவித்தபடி ஆயிரத்து 75 ரூபாயை உடனடியாக வழங்க நான்குநேரி தொகுதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் புகார் செய்த ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு மட்டும் மீதமுள்ள 175 ரூபாய் வழங்கினர். ஆனால் புகார் செய்யாத மற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 900 ரூபாய் மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று தேர்தல் பணி முடிந்து வீட்டிற்கு வந்த நான்குநேரி தொகுதியில் தேர்தல் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்ற தொகுதிகளை விட தங்களுக்கு சம்பளம் குறைத்து வழங்கி இருப்பது தெரிந்து அதிருப்தி அடைந்துள்ளனர். 

ஒவ்வொரு தொகுதியிலும் ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றி இருக்கின்றனர். இதில் நான்குநேரி தொகுதியில் உத்தேசமாக ஆயிரம் ஆசிரியர்களிடம் இருந்து தலா 175 ரூபாய் வீதம் குறைத்து வழங்கப்பட்டதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் என்பதற்காக கடந்த பல நாட்களாக அதிரடி சோதனை, வீடியோ பதிவு என்று தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் நான்குநேரி தொகுதியில் தேர்தல் பணிகளை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் "வேலியே பயிரை மேய்ந்த' கதையாகஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு சம்பளம் வழங்குவதில் செய்துள்ள முறைகேடு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இதுதொடர்பாக மாநில மற்றும் மாவட்ட தேர்தல் கமிஷன் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நான்குநேரி தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

நன்றி



11.4.11

சட்டப் பேரவைத் தேர்தல் 2011 - சில தகவல்கள்

வாக்குப் பதிவுக்கான நடைமுறைகளில் தேர்தல் ஆணையம் என்னென்ன செயல்வழி முறைகளை அமல்படுத்துகிறது என்பதை அறியும் வண்ணம் சில தகவல்கள் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. அவை:  

மைசூரில் தயாராகும் அடையாள மை:  
கள்ள வாக்கைத் தடுப்பதில் முக்கிய பங்காற்றுவது அடையாள மை. ஆள் காட்டி விரலில் வைக்கப்படும் இந்த மையை அதற்கு முன்பு எல்லாம் கலைத்துவிட்டு அதே நபர் வேறு ஒருவரின் வாக்கைப் போட்ட காலம் எல்லாம் இருந்தது. இப்போது வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் அடையாள மையை அழிக்கவே முடியாது.  மைசூரிலுள்ள கர்நாடக அரசின் வார்னிஷ், பெயிண்ட் லிமிடெட் நிறுவனம் தான் இதைத் தயாரித்துக் கொடுக்கிறது. இந்த நிறுவனத்தின் மை தான் நாடு முழுவதும் எங்கு தேர்தல் நடந்தாலும் செல்கிறது.  இந்த மை வெளியில் கிடைக்காது. தேர்தல் துறைக்கு மட்டும்தான் சப்ளை செய்யப்படும். அதனால் போலி என்பதற்கே பேச்சு இல்லை.  

கிரீன் பேப்பர்
முத்திரைத் தாள், ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள அரசு நிறுவனத்தில்தான் கிரீன் பேப்பர் சீல், ஸ்டிப் சீல் தயார் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. வாக்குப் பதிவு நாளில் மாதிரி வாக்குப் பதிவு முடிந்தப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் அந்தத் தகவல்கள் எல்லாம் அழிக்கப்பட்டு இந்த சீல் வைக்கப்படும். இந்த கிரீன் பேப்பரில் போலி வராது.  

இதெல்லாம் புதுமை:  
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் 2 கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கொண்டது. ஒன்று கன்ட்ரோல் யூனிட் (கட்டுப்பாட்டுப் பிரிவு) மற்றொன்று பேலட் யூனிட் (வாக்களிப்புப் பிரிவு). இந்த முறை புதுமையாக வாக்களிப்பு பொத்தானுக்குக் கீழ் பகுதியில் ரிப்பன் அளவுக்கு உள்ள பிங்க் பேப்பரில் ஆன ஒரு சீல் பேலட் யூனிட் இயந்திரத்தைச் சுற்றி ஒட்டப்படுகிறது. இயந்திரத்தில் உள்ள தகவல்களை மாற்றாமல் இருக்க இது ஒரு பாதுகாப்பு சீல்.  

மாதிரி வாக்குப் பதிவு சான்றிதழ்:  
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இந்த முறை வேட்பாளர்கள் அல்லது ஏஜெண்ட்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவாகக் குறைந்தப்பட்சம் 100 வாக்குகளைப் பதிவு செய்து காட்ட வேண்டும். அதற்கு முன்பு 10, 15 வாக்குகளைப் பதிவு செய்து காட்டிவிட்டு வாக்குப் பதிவைத் தொடங்கி விடுவர். பல்வேறு தரப்பிலிருந்தும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் மீது விமர்சனங்கள் ஏற்கெனவே வந்துள்ளதால் இந்திய தேர்தல் ஆணையம் இந்த முறை கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. குறைந்தபட்சம் 100 வாக்குகளை மாதிரி வாக்குப் பதிவாகப் பதிவு செய்ய வேண்டும்.  சுயேச்சை வேட்பாளர் இருந்தாலும் அவருக்கும் இந்த மாதிரி வாக்குப் பதிவில் சமமான வாக்கு எண்ணிக்கை வருமாறு இந்த மாதிரி வாக்குப் பதிவு நடக்க வேண்டும். அதை விட முக்கியம் வாக்குச் சாவடி அதிகாரி இந்த மாதிரி வாக்குப் பதிவு நடந்தது என்பதை ஏஜெண்டிடம் சான்றிதழ் வாங்க வேண்டும்.  

வாக்குச் சாவடி சிலிப்:  
இதற்கு முன்பெல்லாம் எந்த வாக்குச் சாவடிக்குச் செல்ல வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள வரிசை எண் என்ன போன்ற விவரங்களை எழுதி பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வாக்குச் சாவடிக்கு வழிகாட்டும் வகையில் வாக்குச் சாவடி சிலிப் வழங்கி வந்தார்கள். தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதற்கு இதைத் தடை செய்ய வேண்டும் என்ற யோசனையில் இப்போது தேர்தல் துறையே இந்த சிலிப்பை முதல் முறையாக வழங்குகிறது. புதுச்சேரியைப் பொறுத்தவரை அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குச் சாவடி சிலிப் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.  

முதல்முறையாக... 
முதல்முறையாக வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஏற்கெனவே வாய்ப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் நேரில் வந்து வாக்களிக்கலாம்.  

திருநங்கைகள்:  
இதுவரை வாக்காளர் பட்டியலில் ஆண், பெண் என்ற பாலின பாகுபாடு மட்டும் இருந்தது. இப்போது முதல்முறையாக இதர பாலினம் என்ற பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒதுக்கப்பட்டு வந்த திருநங்கைகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் 5 திருநங்கைகள் தங்கள் பெயரைப் பதிவு செய்துள்ளனர்.  

புதுச்சேரியில் மட்டும்:  
இந்தத் தேர்தலில் புதுச்சேரியில் மட்டும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைத் தவிர வேறு ஆவணங்களுக்கு அனுமதியில்லை. இங்கு 100 சதவீதம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. அட்டையை தொலைத்த சுமார் 25 ஆயிரம் பேருக்கும் கடந்த 10 நாளில் புதிய அட்டை வழங்கப்பட்டுள்ளது.  

வெப் கேமிரா மூலம் ரியல் டைம் வாக்குப் பதிவு:  
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில உள்ள 851 வாக்குச் சாவடிகளிலும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் இணைப்பு, வெப் கேமரா இருக்கும். இதன் மூலம் ரியல் டைம் வாக்குப் பதிவு முறை அமல் செய்யப்படுகிறது. தில்லியில் இருக்கும் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி உள்பட தேர்தல் தொடர்பான பணியில் உள்ள அதிகாரிகள் புதுச்சேரியில் நடைபெறும் வாக்குப் பதிவை நேரடியாக உடனுக்குடன் பார்க்க முடியும். வாக்குச் சாவடி அதிகாரியிடம் தொடர்பு கொள்ள முடியும். பேச முடியும்.  மேலும் வாக்குப் பதிவு உள்ளிட்ட புள்ளிவிவரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். எதாவது அசம்பாவிதம் நேரிட்டாலும் படம் பிடித்துவிடும். 

எந்த மாநிலத்திலும் எல்லா வாக்குச் சாவடிகளிலும் இந்த வசதியை இதுவரை செய்து கொடுத்தது இல்லை. புதுச்சேரியில்தான் முதல் முறை. இதிலும் 100 சதவீதம் பெறுகிறது புதுச்சேரி. ÷இந்த வசதிக்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் இப்போது கூடுதலாக ஒரு கம்ப்யூட்டர் நிபுணர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வாக்குச் சாவடி நிகழ்ச்சிகள் எல்லாம் சி.டி.யில் ரைட் செய்யப்பட்டு ஆவணமாகப் பாதுகாக்கப்பட உள்ளன. 

தமிழகத்தில் 54,016 வாக்குச் சாவடிகள் இருக்கின்றன. இதில் பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ள சுமார் 28 ஆயிரம் வாக்குச் சாவடிகளில்தான் வெப் கேமரா வசதி செய்து கொடுக்கப்படுகிறது.  

மணி காட்டும் பேட்டரி:  
புதுச்சேரியில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கடிகாரங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரி பொருத்தப்படுகிறது. வாக்குப் பதிவின் போது பொத்தானை அழுத்தும்போது இது வேலை செய்து ஒவ்வொரு வாக்குப் பதிவும் எந்த நேரத்தில் பதிவாகியுள்ளது என்பதை துல்லியமாகக் கூறிவிடும். இதில் மணி, நிமிடம், நொடி போன்ற எல்லா விஷயங்களையும் இதன்மூலம் அறிந்து கொள்ளலாம். வாக்குச் சாவடி அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்குள் வாக்குப் பதிவைத் தொடங்காவிட்டாலும் இந்தப் பேட்டரி காட்டிக் கொடுத்துவிடும். இது சுமார் 50 பைசா அளவுக்குதான் இருக்கும்.

நன்றி



வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பஸ் வசதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு
பேரவைத் தேர்தலையொட்டி, வாக்குச்சாவடிகளில் பணிபுரிய நியமனம் செய்யப்பட்ட வாக்குச்சாவடி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை (ஏப். 12) நடைபெறும் பயிற்சி வகுப்பு முடிந்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு செல்ல வசதியாக ஒரு மண்டலத்துக்கு ஒரு பேருந்து, 2 சிற்றுந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

வாக்குச்சாவடி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை தாங்கள் பணிபுரியும் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பயிற்சி வகுப்புக்கு வரும்போது தங்களுக்கு தேவையான உடைமைகளையும், மதிய உணவையும் எடுத்துவர வேண்டும்.  மதிய உணவை முடித்துக்கொண்டு அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பேருந்து மூலம் பணியமர்த்தப்படும் வாக்குச்சாவடியைச் சென்றடையலாம். 

புதன்கிழமை (ஏப். 13) வாக்குப்பதிவு முடிந்து சம்பந்தப்பட்ட பொருள்களை ஒப்படைத்தபின், மண்டலத்தின் கடைசி வாக்குச்சாவடியிலிருந்து ஒவ்வொரு வாக்குச்சாவடியாக வாக்குச்சாவடி அலுவலர்களை அழைத்து, அவர்கள் ஊருக்குச் செல்ல வசதியான இடத்தில் கொண்டு சேர்க்கவும் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நன்றி

10.4.11

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான உழைப்பூதியம் அறிவிப்பு

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான உழைப்பூதிய விவரத்தை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
  • ஓட்டுச்சாவடி தலைமை அதிகாரி (3 பயிற்சிகள் உட்பட) - ரூ.1,450
  • ஓட்டுப்பதிவு அதிகாரிகள் (3 பயிற்சிகள் உட்பட) - ரூ.1,075
  • அலுவலக உதவியாளர் - ரூ.400
  • ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர் (ஒரு பயிற்சிக்கு ரூ.250) - எண்ணிக்கை நாளன்று - ரூ.350
  • ஓட்டு எண்ணிக்கை உதவியாளர் (ஒரு பயிற்சிக்கு ரூ.175) - எண்ணிக்கை நாளன்று - ரூ.275
  • அலுவலக உதவியாளர் (ஓட்டு எண்ணிக்கை) - ரூ.200
  • மைக்ரோ அப்சர்வர் (ஓட்டுப்பதிவு) - ரூ. 1,000
  • மைக்ரோ அப்சர்வர் (ஓட்டு எண்ணிக்கை) - ரூ.450
  • மண்டல அதிகாரி - ரூ.1,500
  • உதவி மண்டல அதிகாரி - ரூ.1,000
  • வரவேற்பு அதிகாரி - ரூ.550
  • கேஷியர் - ரூ.550
  • கிராம நிர்வாக உதவியாளர் - ரூ.550
  • கிராம உதவியாளர் - ரூ.400
  • பயிற்சியாளர் - ரூ.550
  • அலுவலக உதவியாளர் - ரூ.400
  • இதர பணியாளர் - ரூ.400
நன்றி:



9.4.11

வாக்குச் சாவடி முதன்மை அலுவலர்களுக்கான சரிபார்ப்புப் பட்டியல்

பூத் சிலிப் வழங்கும் பணி இன்றுடன் நிறைவு

சட்டசபை ‌தேர்தலில் ஓட்டளிப்பதற்காக, அனைவருக்கும் பூத் சிலிப்கள் வழங்கும் பணி கடந்த 1ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இன்றுடன் இந்த பணி முடிவடைவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இந்த சிலிப்பை பெறாதவர்கள், நாளை தங்களது ஓட்டுச்சாவடிக்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் என்று கமிஷன் மேலும் தெரிவித்துள்ளது. 

நன்றி



தாமதங்களை தவிர்க்க "டிரை ரன்' திட்டம். ஓட்டுச் சாவடிகளில் புதிய அறிமுகம்

ஓட்டுச் சாவடிகளுக்கு, ஓட்டுப்பதிவிற்கு தேவையான பொருட்களை சரியான நேரத்திற்கு கொண்டு போய் சேர்க்கவும், பாதுகாப்பு வீரர்கள் விரைந்து வரவும் வசதியாக, "டிரை ரன்' என்ற சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதே போன்ற ஒரு சோதனை ஓட்டத்தை, வரும் 11ம் தேதியன்றும் நடத்த வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன், அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில், ஏப்ரல், மே மாதங்களில் சட்டசபைக்கான தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் வரும் 13ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெற உள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும் 54 ஆயிரத்து 63 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப் பதிவிற்கான மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், வாக்காளர் பட்டியல்கள், மை உள்ளிட்ட சாதனங்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 

தேர்தல் நாள் நெருங்குவதை முன்னிட்டு, ஓட்டுப் பதிவிற்கு தேவையான பொருட்கள் ஒவ்வொரு தொகுதியிலும், பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஓட்டுப் பதிவிற்கு முதல் நாள் இந்த பொருட்கள் ஒவ்வொரு ஓட்டுச் சாவடிகளுக்கும் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும். கடந்த தேர்தல்களின் போது, இந்த பொருட்களை குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு, பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கும், ஓட்டுச்சாவடிக்கும் இடையிலான வழித்தடத்தை கண்டறிவதில் ஏற்பட்ட சிக்கலே காரணம் என்று தெரிய வந்தது. இதன் அடிப்படையில், தாமதத்தை தவிர்க்க இந்த தேர்தலில் ஒரு புதிய நடைமுறையை தேர்தல் கமிஷன் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, ஒவ்வொரு தேர்தல் அதிகாரியின் கட்டுப்பாட்டில் உள்ள ஓட்டுச் சாவடிகளில் இருந்தும், தேர்தல் பணியாளர்கள், போலீசார், அதிகாரிகள் ஆகியோர் ஓட்டுப் பதிவிற்கான பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து, குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிக்கு வாகனங்கள் மூலம் ஒரு சோதனை ஓட்டத்தை மேற்கொள்ள வேண்டும். இந்த சோதனை ஓட்டம், அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நடத்தப்பட வேண்டும். இதன் மூலம், ஓட்டுச் சாவடிகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும்.

இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவரை கேட்டபோது கூறியதாவது:
பொருட்களை கொண்டு செல்வதில் ஏற்படும் சிக்கல்களை தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, "டிரை ரன்' எனப்படும் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்படுகிறது. கடந்த 7ம் தேதி முதல் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக, வரும் 11ம் தேதியும் இதே போல் ஒரு சோதனை ஓட்டத்தை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய தேர்தலில், பல்வேறு இடங்களில் இருந்து வந்த புதியவர்கள் பணியில் உள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்த போலீசார், அதிகமாக உள்ளனர். இவர்களுக்கு பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு செல்வது குறித்து, ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், இந்த சோதனை ஓட்டத்தின் மூலம் அவை தெளிவாகும். அதே போல், பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து, குறிப்பிட்ட ஒரு ஓட்டுச் சாவடிக்கு செல்ல எவ்வளவு நேரம் தேவைப்படும் என்பதும் தெரிய வரும். 

மேலும், அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்தால், கூடுதல் போலீசார் குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிக்கு வரவேண்டும். வேறு இடங்களில் இருந்து வந்து, ஒரு இடத்தில் தங்கியுள்ள போலீசாருக்கு, எந்த ஓட்டுச் சாவடி, எங்கு இருக்கிறது என்று தெரியாது. இந்த சோதனை ஓட்டம் மூலம், ஓட்டு சாவடிகள் இருப்பிடம் அறிந்து போலீசார் விரைந்து வர முடியும். 

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி


8.4.11

எத்தனை வகை ஓட்டுகள்

சட்டசபை தேர்தலில் எத்தனை வகையான ஓட்டுகளை பதிவு செய்யலாம் என்பது குறித்து தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

எதிர்க்கப்பட்ட ஓட்டு(சேலன்ஞ் ஓட்டு): ஓட்டு போட ஒருவர் வரும் போது, "இவர் உண்மையான நபர் இல்லை' என எதிர்ப்பு தெரிவிக்கும் அரசியல் கட்சி ஏஜன்டிடம் 2 ரூபாய் பெற்றுக் கொண்டு ரசீது வழங்க வேண்டும். படிவம் 14ல், சம்பந்தப்பட்டவரின் பெயர், முகவரி பதிவு செய்து கையெழுத்து அல்லது விரல் ரேகை பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஓட்டு போட வந்தவர், "சரியான நபரா' என அறிந்த பின்னரே ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும். போலி வாக்காளர் என்றால் போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரைய்லி முறையில் படிக்க தெரியாத பார்வையற்றவரோ, முற்றிலும் உடல் இயக்கம் இல்லாதவர் என்றால், ஓட்டளிக்க உதவியாளரை உடன் அழைத்து வரலாம். அவருக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். படிவம் "14ஏ'ல் பதிவு செய்ய வேண்டும். "ஓட்டுப்பதிவு ரகசியம் காப்பேன்' என சான்றழித்த பின்னர் ஒட்டுப்பதிய அனுமதிக்கலாம். 

49 ஓ: யாருக்கும் ஓட்டு போட விரும்பவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் உள்ள அவரது வரிசை எண்ணை 17 ஏ படிவத்தில் குறிக்க வேண்டும். ஓட்டளிக்க மறுப்பதற்கான காரணம் குறித்து கேட்டு, அவரிடம் கையெழுத்து பெற வேண்டும். மறுக்கப்பட்ட ஓட்டு என எழுதி கையெழுத்திட வேண்டும்.

டெண்டர் ஓட்டு: ஒருவருடைய ஓட்டு, வேறு நபரால் போடப்பட்டிருந்தால், உண்மையான வாக்காளர் வந்தால், அவரது அடையாள ஆவணங்களை சரி பார்த்து டெண்டர் ஓட்டு சீட்டு கொடுத்து ஓட்டுப்பதிய அனுமதிக்க வேண்டும். இந்த வாக்காளர்களை பேலட் யூனிட்டில் ஓட்டளிக்க அனுமதிக்க கூடாது. ஓட்டுப்பதிவை 17 பி பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.

49-எம்: ஓட்டளிக்க வருபவர் இவருக்கு தான் ஓட்டளிக்க போகிறேன் என தெரிவித்தால், தேர்தல் ரகசியத்தை மீறியவராகிறார். 49 எம் விதியின் கீழ், இவரது ஓட்டுரிமையை ரத்து செய்து ஓட்டுச் சாவடியை விட்டு வெளியே அனுப்ப வேண்டும்.

பதிலி ஓட்டு: ராணுவத்தில் பணிபுரியும் நபர்களுக்கு பதிலாக, பதிலி வாக்காளர் ஓட்டளிக்க வரும் போது, தனக்கு ஓட்டளிக்கும் போது ஆள்காட்டி விரலில் ஏற்கனவே ஓட்டு போட்டதற்கான மை அடையாளம் இருந்தால், நடுவிரலில் அடையாள மை இட வேண்டும். 17 ஏ பதிவேட்டில் பதிவு செய்யும்போது பதிலி ஓட்டு என பதிய வேண்டும். 

இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

நன்றி


6.4.11

ஓட்டுச்சாவடி டூட்டி பிரிண்ட் அவுட் விற்பனை: பிரவுசிங் சென்டருக்கு "சீல்'

தேர்தல் ஓட்டுபதிவு அலுவலகங்களுக்கு செல்லும் அலுவலர்களுக்கு, எந்த பூத் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை நெட் மூலம் எடுத்து கொடுப்பதாக கூறி, ராமநாதபுரத்தில் வசூல் செய்த பிரவுசிங் சென்டருக்கு தேர்தல் அலுவலர்கள் "சீல்' வைத்தனர்.
 
நேற்று ராமநாதபுரம் தொகுதியில் ஆசிரியர்களுக்கு எந்த ஓட்டு சாவடியில் பணி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை இன்டர்நெட் மூலம் தெரிந்து கொள்ளலாம், என்ற தகவல் பரவியது. இதை அறிந்து ஆசிரியர்கள், சாலை தெருவில் உள்ள பாக்யா பிரவுசிங் சென்டருக்கு சென்று பத்து ரூபாய் கொடுத்து, தேர்தல் வெப்சைட்டிலிருந்து பிரின்ட் அவுட் எடுத்து வாங்கி சென்றுள்ளனர். தகவலறிந்த ராமநாதபுரம் உதவி தேர்தல் அலுவலர் பிச்சை பிரவுசிங் சென்டருக்கு சீல் வைத்து பிரின்ட் அவுட் எடுத்தவர்களை விசாரணை செய்து வருகிறார். 

தேர்தல் அலுவலர் முத்துகுமரன் கூறும்போது, "" தேர்தல் பணியில் யாருக்கு எந்த ஓட்டுசாவடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தேர்தலின் முதல் நாள்தான் தெரியும். ஆனால், தவறான தகவலை பரப்பி, நெட்டிலிருந்து எடுப்பதாக கூறி, பலரும் பிரவுசிங் சென்டரில் பிரின்ட் அவுட் எடுத்து, அதை விலைக்கு வாங்கி சென்றனர். இதுபோல் தேர்தல் தொடர்பாக தவறான தகவலை பரப்புவது தவறு என்பதால் பிரவுசிங் சென்டருக்கு சீல் வைத்து விசாரித்து வருகிறோம்,'' என்றார். 

நன்றி:


5.4.11

வாக்குச் சாவடி முதன்மை அலுவலர் கையேடு

தேர்தல் நடத்தை விதிகள் 1961

மின்னணு வாக்குப் பதிவு கருவி - காணொளி

சவால் வாக்கு (CHALLENGE VOTE)

வாக்குச் சாவடிக்குள் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்த முகவர்கள் இருப்பார்கள். வாக்களிக்கும் ஒவ்வொருவரின் அடையாளத்தையும் அவர்கள் சோதிப்பார்கள். அதாவது, நீங்கள் வாக்களிக்கும் போது உங்களின் அடையாளம் கட்சி முகவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தலாம். அந்தச் சூழலில், உங்களது வாக்கு சவாலான வாக்காக (CHALLENGE VOTE) கருதப்படும். 

அடையாள சான்றாக புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் ஆகியவற்றைக் காட்டலாம். சான்றுகளின் உண்மைத்தன்மை அடிப்படையில் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். அவர் வாக்காளர் இல்லை என்ற கட்சிகளைச் சேர்ந்த முகவர்களின் சவால் நிரூபிக்கப்படவில்லை என்றால் வாக்காளருக்கு வாக்குரிமை அளிக்கப்படும். சவால் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வாக்காளர் வாக்களிக்க முடியாது. 

அதேசமயம், அவர் கள்ள வாக்கு அளிக்க முயற்சித்தார் என காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டு அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் வழிவகை உள்ளது.

நன்றி


உங்கள் வாக்கை யாரேனும் செலுத்தினால்...(Tendered Vote)

உங்களுடைய வாக்கை வேறு யாரேனும் செலுத்தினால், வாய்ப்பு பறிபோய் விட்டதே எனக் கருதி உடனடியாக வாக்குச் சாவடியை விட்டு வெளியேறாதீர்கள். இதற்கான மாற்று ஏற்பாட்டை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடி சென்றதும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா? என சரிபார்க்கப்படும். அப்போது, உங்களுடைய பெயரில் வேறு யாரேனும் வாக்களித்து இருந்தால் அந்தத் தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். நீங்கள் வாக்களிக்காத பட்சத்திலும் உங்கள் வாக்கு பதிவு செய்யப்பட்டிருந்தால் இதனை வாக்குச் சாவடி அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். 

இதையடுத்து, தேர்தல் சட்டத்தின் "49 பி' பிரிவின்படி வாக்குச் சீட்டு தரப்படும். மேலும், இதற்கான பதிவேட்டில் உங்கள் பெயர் மற்றும் கையெழுத்து பெறப்படும். இதன்பின், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குச் சீட்டைப் போன்றே ஒரு சீட்டு தரப்படும். அந்தச் சீட்டின் பின்புறம், வாக்களிக்க இயலாத நிலையில் உள்ள வாக்குச் சீட்டு (tendered ballot paper) என எழுதப்படும். அதில் தேர்தல் வாக்குச் சாவடி அதிகாரியின் கையெழுத்திடப்படும். 

அந்தச் சீட்டு உங்களிடம் தரப்படும். அதனுடன் அம்புக்குறியிட்ட ஒரு ரப்பர் சீல் கொடுக்கப்படும். சீட்டில் நீங்கள் விரும்பும் நபரின் பெயருக்கு எதிரே அந்த சீலின் உதவியுடன் அச்சிடலாம். இந்தச் சீட்டுகள் தனியாக ஒரு கவரில் வைக்கப்படும்.

நன்றி



மே 13 வரை தபால் ஓட்டு போட வாய்ப்பு

தமிழகத்தில் தேர்தலுக்கு பின், ஒரு மாதம் தாமதமாக மே 13ம் தேதி ஓட்டு எண்ணப்படுவதால், அன்றைய தினம் வரை தபால் ஓட்டு போட வாய்ப்பு உள்ளது. 

தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் ஓட்டுச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவது வழக்கம். ஆனால், தேர்தல் பணிக்கு செல்லும் அரசு ஊழியர்கள், ராணுவத்தினர், போலீசார் உட்பட பலர் அன்றைய தினம் ஓட்டுச் சாவடிக்கு சென்று ஓட்டு போட முடியாது. தேர்தல் நாளில் ஓட்டு போட முடியாத வாக்காளர்கள், தபால் மூலம் ஓட்டு போட வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

தபால் ஓட்டுக்கான விண்ணப்பம் ஒவ்வொரு தொகுதியிலும் தேர்தல் நடத்தும் அதிகாரி மூலம் வழங்கப்படுகிறது. வழக்கமாக, தேர்தல் முடிந்து 15 நாட்களுக்குள் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். அதுவரை வாக்காளர்கள் தபால் ஓட்டு போடுவார்கள். தற்போது, தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்தாலும், பிற மாநில தேர்தலை கருத்தில் கொண்டு ஒரு மாதத்துக்கு பின், மே 13ம் தேதி ஓட்டு எண்ணப்படுகிறது. எனவே, தேர்தல் முடிந்தாலும், ஒரு மாத இடைவெளிக்கு பின்பே ஓட்டு எண்ணப்படுகிறது. அன்றைய தினம் காலை 8 மணி வரை வாக்காளர்கள் தபால் ஓட்டு போட முடியும். 

இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி கூறியதாவது
மற்ற வாக்காளர்கள் ஏப்ரல் 13ம் தேதியே ஓட்டு போட்டு விடுவர். தபால் ஓட்டு போடுபவர்களுக்கு மட்டும் மே 13ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அவர்கள் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் இடத்துக்கு காலை 8 மணிக்குள் தபால் ஓட்டு கொண்டு வந்தால் கூட ஏற்றுக் கொள்ளப்படும். அதுபோல, அஞ்சல் ஊழியர்கள் மூலம் தபால் ஓட்டுகளை காலை 8 மணிக்குள் ஓட்டு எண்ணும் இடத்தில் பட்டுவாடா செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி


4.4.11

ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கு 12ம் தேதி இறுதி கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு, பணி ஆணை வழங்கப்படும்

"ஓட்டுச் சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு, 12ம் தேதி இறுதி கட்ட பயிற்சி அளிக்கப்பட்டு, பணி ஆணை வழங்கப்படும்,'' என, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார். 

சென்னை மாவட்டத்தில் நேற்று இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. அதுபோல், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச் சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நடந்த பயிற்சி வகுப்புகளை, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் பார்வையிட்டனர்.
 
பின்னர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி கூறுகையில், ""ஓட்டுச் சாவடியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மூன்றாம் கட்டமாக, வரும் 12ம் தேதி இறுதி பயிற்சி அளிக்கப்பட்டு, எந்த ஓட்டுச் சாவடியில் பணிபுரிய வேண்டும் என்பதற்கான பணி ஆணை வழங்கப்படும். தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்திய தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ள விதிகளின் படி தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறது,'' என்றார்.


நன்றி



புலியால் தேர்தல் அதிகாரிகள் கிலி :"வனவாசம்' போக தயக்கம்

"மலைப்பகுதியான வால்பாறை தொகுதியில் புலி, யானை தாக்குதல்கள் உள்ளதால், தேர்தல் பணி ஏற்பதில் அரசு அலுவலர்கள் தயங்குகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அரசு ஊழியர்கள் பலர், பல்வேறு இயலாமைகளை சுட்டிக்காட்டி, தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற முயற்சி செய்து வருகின்றனர். தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டு, பணி ஒதுக்கப்பட்ட அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பணிபுரிந்தாக வேண்டும் என, மாவட்ட வருவாய் அலுவலர் கூறியுள்ளார்.
 
அரசு ஊழியர்களில் சிலர், மலைப்பகுதிகளில் பணிபுரிய தயங்குகின்றனர். குறிப்பாக, வால்பாறை மலைப்பகுதிகளில் புலி, யானை தாக்குதல் பிரச்னைகள் இருப்பதாலும், மலைகளில் சுமைகளை சுமந்து செல்ல வேண்டியதில் உள்ள சிரமம் காரணமாகவும் பெண் ஊழியர்கள் பலர், தங்களுக்கு வேறு தொகுதிக்கு பணி மாறுதல் வழங்க வேண்டும் அல்லது பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து, "வால்பாறை தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியாளர்கள், அங்குள்ள மலைப்பகுதிகளில் பணிபுரிய வேண்டியதில்லை' என கலெக்டர் அறிவித்துள்ளார்.

மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் உமாநாத் வெளியிட்டுள்ள அறிக்கை:  
தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கும், அவர்கள் பணிபுரிய வேண்டிய சட்டசபை தொகுதி ஒதுக்கப்பட்டு, ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. தொகுதி ஒதுக்கீடு முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மாறுதல் குறித்த எந்தவொரு கோரிக்கையும் ஏற்கப்பட மாட்டாது. வால்பாறை தொகுதியில் ஒதுக்கப்பட்ட அலுவலர்கள், மலைப்பகுதியில் பணிபுரிய வேண்டியதில்லை. மாறாக, கோட்டூர், ஆனைமலை சமவெளிப் பகுதிகளில் மட்டும் பணிபுரிய ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளில் அமைந்துள்ள ஓட்டுச்சாவடி மையங்களுக்கு, அங்குள்ள அலுவலர்களே பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வாறு உமாநாத் கூறியுள்ளார்.

நன்றி


மரங்கள் இல்லாத "பூத்' களுக்கு சாமியானா; ஓட்டு போட மூத்த குடிமக்களுக்கு தனி "க்யூ'

கோடை காலத்தில் தேர்தல் நடப்பதால் மரங்கள் இல்லாத ஓட்டுச் சாவடிகளில் வாக்காளர்கள் வெயிலில் அவதிப்படுவதைத் தடுக்க சாமியானா பந்தல் போட தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஓட்டு போட வரும் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில், ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தல் நாளில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்காக பள்ளிகளில் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் ஏப்ரல் மாதம் கோடைகாலம் என்பதால், வெயில் உக்கிரம் அதிகமாக இருக்கும்.

பெரும்பாலான பள்ளிகளின் மைதானம் மற்றும் வராண்டாவில் நிழல்தரும் பெரிய மரங்கள் இருப்பதில்லை. நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போடும் வாக்காளர்கள், ஓட்டுச்சாவடிகளில் நிழல் தரும் மரங்கள் இல்லாவிடில், வெயில் நேரத்தில் அவதிப்பட நேரிடும். அதை கருத்தில் கொண்டு, அருகில் மரங்கள் இல்லாத ஓட்டுச் சாவடிகளில் சாமியானா பந்தல் அமைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மரங்கள் இல்லாத ஓட்டுச்சாவடிகள் குறித்து வி.ஏ.ஓ.,க்கள் கணக்கெடுத்து வருகின்றனர். 

தேர்தல் நாளில் 60 வயது கடந்த மூத்த குடிமக்கள் ஓட்டு போட நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க முடியாது என்பதால், ஓட்டுச்சாவடிகளில் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்படுகிறது. எனவே, மூத்த குடிமக்கள் ஓட்டு போட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. 

மேலும், ஓட்டுச்சாவடிகளில் கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெண்கள், ஊனமுற்றோர் ஆகியோருக்கும் ஓட்டு போட முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் நீண்டநேரம் காத்திருக்காமல் உடனடியாக ஓட்டு போட முடியும்.

நன்றி


"பூத் ஸ்லிப்' இல்லாவிட்டாலும் வாக்களிக்கலாம்: தேர்தல் கமிஷன் அறிவிப்பு

வாக்காளர் அடையாளச் சீட்டை (பூத் ஸ்லிப்) வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்லாவிட்டாலும், வாக்களிக்கலாம் எனத் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

தமிழகம் 13ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த தேர்தல் வரை, ஓட்டுப்பதிவிற்கு முந்தைய நாள் அரசியல் கட்சியினர் வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்குவர். அதில், வாக்காளர் பெயர், பாகம் எண், வரிசை எண் ஆகியவை இடம் பெற்றிருக்கும். வாக்காளர்களும் அதை வாக்குச்சாவடிக்கு கொண்டு செல்வர். அங்கிருக்கும் அலுவலர்கள், சிலிப்பில் குறிப்பிட்டுள்ள பாகம் எண்ணில் பெயர் இருக்கிறதா என சரி பார்ப்பர்.


பூத் சிலிப் கொடுக்கிறோம் என்ற பெயரில், அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதாகப் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, அரசியல் கட்சிகள், "பூத் ஸ்லிப்' வழங்க தேர்தல் கமிஷன் தடை விதித்தது. அதற்கு பதிலாக, பூத் அலுவலர்கள் மூலம் நேரடியாக வாக்காளர்களுக்கு, "பூத் ஸ்லிப்' வழங்க உத்தரவிட்டது. அதன்படி, தற்போது வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், பூத் சிலிப்பில் இச்சீட்டு வாக்காளரின் வசதிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதை வாக்குச்சாவடிக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயமில்லை என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.


இது, சிலரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பூத் சிலிப் கொண்டு வர வேண்டிய கட்டாயமில்லை என்றால் அதை ஏன் வழங்க வேண்டும் எனக் கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "பூத் ஸ்லிப்' கொண்டு வந்தால், வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயரை காண்பது எளிதாக இருக்கும். "பூத் ஸ்லிப்' இல்லாவிட்டால், வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து ஓட்டளிக்கலாம்' என தெரிவித்தனர். 

நன்றி


1.4.11

பார்வையற்றோர் ஓட்டளிக்க புதுமுறை

பார்வையற்றோர், உதவியாளர் இன்றி ஓட்டளிக்கும் வகையில், மின்னணு இயந்திர மாதிரி அட்டை வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. பார்வையற்றோர் ஓட்டளிக்க வசதியாக, இயந்திரத்தில், "பிரெய்லி' முறையில் எண் குறிப்பிடப்பட்டிருக்கும். சின்னத்தை தேர்வு செய்து அதன் அருகில் உள்ள எண்ணை தடவி பார்த்து ஓட்டளித்தனர். இதற்கு, உதவியாளர் ஒருவர் உடன் இருக்க வேண்டும்.
 
இதனால், யாருக்கு ஓட்டளித்தார் என்ற விவரம் உதவியாளருக்கு தெரியும். ஓட்டளிப்பதன் ரகசியம் கருதி, வரும் தேர்தலில் உதவியாளர் இன்றி ஓட்டளிக்க, புது முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஓட்டளிக்கும் முன், தடவி பார்த்து வாசிக்கும் வகையில் வரிசை எண், சின்னம் பொறித்த மாதிரி ஓட்டு இயந்திர அட்டை வழங்கப்படும். தனக்கு பிடித்த சின்னம் எந்த எண்ணில் உள்ளது என்பதை தெரிந்து கொண்டு, பார்வையற்றோர் ஓட்டளிக்கலாம்.

நன்றி



பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்