தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.9.13

ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்கல்வி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்

ஓய்வூதியம் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தினர் நாகர்கோவிலில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ம. எட்வின் பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார்.

தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம், தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தர ஊதியம், ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாட பிரிவு தொடங்க வேண்டும். தொழிற்கல்வியில் நவீன பாட திட்டத்தை புகுத்த வேண்டும். தொழிற்கல்வி ஆசிரியர்களை உடன் பணி வரன்முறை செய்ய வேண் டும். பணி விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வும், உதவி தலைமை ஆசிரியர் பதவி உயர்வும் வழங்க வேண் டும். தொழிற்கல்வி ஆசிரியர்களை பணி மாறுதல் கலந்தாய்வில் சேர்க்க வேண்டும், மேல்நிலை பள்ளி தொழிற்கல்விக்கு தனி இயக்குநரகம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் தென் மண்டல அளவிலான உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

சங்க மாநில துணைத் தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். தூத்துக்குடி தலைவர் செல்வராஜ், விருதுநகர் தலைவர் முத்துராஜ், ராமநாதபுரம் முனியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க குமரி மாவட்ட தலைவர் பரமேஸ்வரன் வரவேற்றார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் வள்ளிவேலு தொடக்கி வைத்தார். சங்க மாநில கொள்கை பரப்பு செயலாளர் நாகராஜன் போராட்டத்தை விளக்கி பேசினார். மாநில பொருளா ளர் நேரு, மூட்டாவை சேர்ந்த நாகராஜன், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் ஹெர்பர்ட் ராஜா சிங், பால் செபாஸ்டின், ஞான செல்வ திரவியம், பல்வேறு ஆசிரியர் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாலச்சந்திரன், ராபர்ட் ஜேம்ஸ், வேலவன்,  கனகராஜ், ராஜ குமார், செல்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் ஜிம்சன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்