தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

31.3.11

கர்ப்பிணிகளையும், "அபார்ஷன்' ஆன ஆசிரியைகளையும் விட்டு வைக்காத தேர்தல் கமிஷன்

பொது மக்கள் பாராட்டும் வகையில், அரசியல் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு கிடுக்கிப்பிடி நடவடிக்கைகளை எடுக்கும் தேர்தல் கமிஷன், அதே பாணியை, கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களிடமும் காட்டுவது, அவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில், இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
தேர்தல் பணியில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் பணி என்றாலே, அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் அல்லாட வேண்டியிருக்கும் என்பதாலும், தேர்தலின்போது அபாயகரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதாலும், இந்தப் பணிகளை பெரும்பாலும் யாரும் விரும்பி ஏற்பதில்லை. அரசு ஊழியர்களாக இருப்பதால், வேறு வழியின்றி தேர்தல் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
உடல்நிலை உள்ளிட்ட காரணங்களால், தேர்தல் பணியில் ஈடுபட முடியாத நிலை இருப்பதை ஊழியர்கள் எடுத்துக் கூறினாலும், அதிகாரிகள் கேட்பதில்லை. தேர்தல் பணியில் ஈடுபட்டே ஆக வேண்டும் என, பல இடங்களிலும் நிர்ப்பந்தம் செய்யப்படுகின்றனர். 

கோவை மாவட்டத்தில், அரசு பள்ளி ஆசிரியர்கள் பலருக்கும், தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. இதில், பல ஆசிரியைகள் எட்டு, ஒன்பது மாத கர்ப்பிணிகளும், பச்சிளம் குழந்தை உள்ள ஆசிரியைகள் உட்பட பலர் உள்ளனர். தேர்தல் பணி ஒதுக்கீட்டு உத்தரவு வந்ததும், பயிற்சி நடக்கும் இடத்திற்கு சென்று, தேர்தல் பணி பார்க்க முடியாத நிலையை, ஆசிரியைகள் விளக்கமாக கூறியுள்ளனர். ஆனாலும், எதையுமே அதிகாரிகள் காதில் வாங்கவில்லை என, கூறப்படுகிறது. சம்பந்தபட்ட ஆசிரியைகள், பயிற்சி வகுப்புக்கு செல்லவில்லை. இந்நிலையில், பயிற்சி வகுப்புக்கு வராத ஆசிரியைகளிடம் விளக்கம் கேட்டு, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. 

சிங்காநல்லூரைச் சேர்ந்த ஒரு ஆசிரியைக்கு திடீரென, "அபார்ஷன்' ஆகியுள்ளது. இதனால், டாக்டர் அறிவுரைப்படி ஓய்வெடுக்க விடுமுறை எடுத்துள்ளார். ஆனால், இவருக்கும் தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, அந்த ஆசிரியை கூறியதாவது: 
எனக்கு,சில தினங்களுக்கு முன் தான், "அபார்ஷன்' ஆனது. எனது உடல்நிலையை ஆய்வு செய்த டாக்டர், ஒரு மாதம் வரை ஓய்வெடுக்க வேண்டும் என கூறினார். அதன்படி, மருத்துவ விடுப்பின் கீழ், ஒரு மாதம் கருச்சிதைவு விடுப்பு எடுத்துள்ளேன். ஆனாலும், தேர்தல் பணிக்கு வந்தே ஆக வேண்டும் என, அதிகாரிகள் வற்புறுத்தினர். தேர்தல் பணி உத்தரவைக்கூட, எனது தந்தை தான் வாங்கி வந்தார். பல நாட்கள் அலையவிட்டதால், எனது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. நீண்ட போராட்டத்திற்குப் பின், இன்று தான் (நேற்று) தேர்தல் பணி உத்தரவை ரத்து செய்தனர். 

ஒன்பது மாத கர்ப்பிணியாக உள்ள ஆசிரியைகளுக்கும் தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. என்ன செய்வதென தெரியாமல், பலரும் கலக்கமாக இருக்கின்றனர்.


பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த மற்றொரு ஆசிரியை கூறும்போது,"எனக்கு நான்கு மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டியிருப்பதால், தேர்தல் பணியில் ஈடுபட முடியாது. மாவட்ட தொடக்க கல்வி அதிகாரியிடம் விவரத்தைக் கூறி, அவரிடம் இருந்து பரிந்துரை கடிதம் பெற்று, மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கொடுத்தேன். ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல், தற்போது, "மெமோ' அனுப்பியுள்ளனர்' என்றார்.


கர்ப்பிணி ஆசிரியைகளை விடுவிக்க ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஆசிரியர் கூட்டமைப்பின் தலைவர் சிங்காரவேல் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும், எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வள மைய ஆசிரியர்களும், தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனால், கோவை மாவட்டத்தில் உள்ள 220 ஆசிரியர்கள் மட்டும், தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. மாறாக, ஆள் பற்றாக்குறை என கூறி, அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கும், ஒரு மாதம், இரண்டு மாதம் குழந்தை உள்ள ஆசிரியைகளுக்கும் தேர்தல் பணி வழங்கியுள்ளனர். ஆசிரியைகள், தங்களது பிரச்னையை மாவட்ட வருவாய் அதிகாரி சண்முக சுந்தரத்திடம் எடுத்துக் கூறினர். அவர் கேட்கவில்லை. இந்நிலையில், பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ளாத ஆசிரியைகளுக்கு, "நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. கர்ப்பிணி ஆசிரியைகளையும், இளம் தாய்மார்களாக உள்ள ஆசிரியைகளையும் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்க, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சிங்காரவேல் கூறினார்.

நன்றி:


தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும் ஆசிரியர்கள்: தேர்தல் கமிஷன் "மெமோ'

தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும் ஆசிரியர்களுக்கு தேர்தல் கமிஷன், "மெமோ' அனுப்பி வருகிறது. தமிழகம் முழுவதும், 30 ஆயிரம் பேர் இந்த பட்டியலில் உள்ளனர்.

ஏப்., 13ல் ஓட்டுப்பதிவு நாளன்று ஓட்டுச்சாவடியில், ஆசிரியர்களை ஓட்டுச்சாவடி அலுவலர்களாக பணியாற்ற தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது. இதற்காக, கல்வித்துறை மூலம் ஆசிரியர்களின் பட்டியல் பெறப்பட்டு, அவர்களுக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பல ஆசிரியர்கள் இந்த உத்தரவை வாங்கவில்லை. பலர் உத்தரவை வாங்கி விட்டு, மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர். சிலர், தங்களை தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கக்கோரி, டாக்டர்கள் சான்றுகளுடன் கடிதம் கொடுத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் பேர் இதே போல் பணிக்கு வர மறுத்துள்ளனர். 

தேனி மாவட்டத்தில் பெரியகுளம்(தனி) தொகுதியில், 120 பேர், கம்பத்தில் 120, போடியில் 133, ஆண்டிபட்டியில், 98 பேர் என, 472 பேர் தேர்தல் பணியை மறுத்துள்ளனர். இவர்களுக்கு தேர்தல் கமிஷன் சார்பில் விளக்கம் கேட்டு, "மெமோ' அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது
நாங்கள் கடந்த ஆறு மாதங்களாக தேர்தல் பணியில் இரவு, பகல் பாராமல் உழைத்து வருகிறோம். இவர்களோ, 1,175 ரூபாய் சம்பளத்துடன் ஒருநாள் தேர்தல் பணியாற்ற, உடல்நிலையை காரணம் காட்டியும், பல்வேறு பிரச்னைகளை கூறியும் மறுக்கின்றனர். இதனால், நாங்கள் வேறு ஆசிரியர்களை நியமிப்பதில் சிக்கல் உள்ளது, என்றனர்.

நன்றி



சட்டசபை தேர்தல்: பொது விடுமுறை அறிவிப்பு

சட்டசபை தேர்தலையொட்டி, ஏப்ரல் 13ம் தேதியன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கை:  
தமிழகத்தில் வரும் 13ம் தேதி, சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேலும், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு அன்றைய தினத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கும்படி நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறையால் அறிவுறுத்தப்படுவர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நன்றி


தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வரும் 3ம் தேதிக்கு முன்பாக தபால் ஓட்டு சீட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சட்டசபை தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதற்குரிய படிவம் 12 அந்தந்த தாலுகா அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்களில் 3ம் தேதிக்கு முன்னர் விண்ணப்பித்தால் அவர்களுக்கு தபால் ஓட்டுச் சீட்டுகள் வழங்கப்படும். அவ்வாறு விண்ணப்பிக்க தவறினால் வரும் 3ம் தேதி நடக்கும் 2வது கட்ட பயிற்சி வகுப்பில் விண்ணப்பம் அளித்து தபால் ஓட்டு சீட்டுகளை பெற்று கொள்ளலாம். 

ஏற்கனவே ஓட்டு சீட்டுகளை பெற்றவர்கள் பயிற்சி வகுப்பில் வைக்கப்படும் பெட்டியிலும், தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் அலுவலகங்களில் வைக்கப்படும் ஓட்டு பெட்டிகளிலும் ஓட்டுகளை போடலாம். வரும் ஓட்டு எண்ணிக்கைக்கு முன்பாக ஓட்டு சீட்டுகளை தபால் மூலமும் அனுப்பலாம்.

நன்றி



இன்றைய இந்திய மக்கள் தொகை 121 கோடி தான்

இந்திய திருநாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது. இத்துடன் குழந்தைகளுக்கு எதிரான செக்ஸ்குற்றம் மிக, மிக குறைந்து விட்டதாகவும், இதுவரை இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் முதல் நடப்பு கணக்கெடுப்பில் தான் குறைந்த அளவு இந்த குற்றம் நடந்திருப்பதாகவும் சென்சஸ் விவரத்தில் தெரியவந்துள்ளது. 
 
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல் இன்று வெளியிடப்பட்டது. உள்துறை செயலர், மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவாளர் இந்த விவர அறிக்கையை வெளியிட்டார். இந்த கணக்கெடுப்பின படி இந்திய நாட்டின் மொத்த மக்கள் தொகை - 1.21 பில்லியன்.(121 கோடி ) . இந்திய மக்கள் தொகை 181 மில்லியன் ( 18 கோடியே பத்து லட்சம் ) அதிகரித்துள்ளது, ஆண்களின் எண்ணிக்கை : 62.3 கோடி ; பெண்களின் எண்ணிக்கை : 58.6 கோடி.

சதவிகித குறைப்பு : வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்தது: கடந்த 2001ம் ஆண்டில் எடுக்கப்பட்ட சென்சஸ்சின் போது இருந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை விட 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்துள்ளது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 21.15 ( 2001 ம் ஆண்டில்) சதவிதத்தில் இருந்து 17.64 ( 2011ம் ஆண்டில் ) சதவீதமாக குறைந்துள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்-2011) பிப்.9ல் துவங்கி பிப்.28ல் முடிந்தது. முதல் சென்சஸ்: முதல் இந்திய கணக்கெடுப்பு 1872ல் நடந்தது. வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் நடந்தது. 1881ல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடந்தது. அதுமுதல் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை சென்சஸ் நடக்கிறது.

நன்றி


29.3.11

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.

அரசாணை எண்: 98 நாள்: 28 - 03 - 2011

G.O No. 98 Dt : March 28, 2011
 ..

தேர்தல் பணியில் மாணவர்களின் பங்கு

தேர்தல் பணியில் வழக்கமாக ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிவது வழக்கம். இந்தாண்டு மாணவர்களையும் களமிறக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

தேர்தல் கமிஷன் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது
  • பெற்றோர்கள் தவறாமல் ஓட்டுபோடுவது பற்றியும், சுமுகமாக தேர்தல் நடைபெற வேண்டியது குறித்தும், அதை காலை நேரங்களில் பள்ளி பிரார்த்தனையின் போது மாணவர்களுக்கு விளக்க வேண்டும். 
  • தேர்தல் நாளன்று ஒவ்வொரு மாணவரும் தங்களுடைய பெற்றோர், உறவினர்களுடன் ஓட்டுச் சாவடிக்கு செல்ல வேண்டும். ஓட்டுப் போட்டார்களா கைவிரலில் மை உள்ளதா என்பதை பார்க்குமாறு அறிவுரை வழங்க வேண்டும். 
  • என்.எஸ்.எஸ்., மாணவர்கள் ஓட்டின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.
  •  தேர்தல்விழிப்புணர்வு குறித்து கமிஷன் வெளியிட்டுள்ள படக்காட்சிகளை மாணவர்களுக்கு தவறாமல் காண்பித்து பாடம் நடத்த வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:  



ஓட்டளிக்க விரும்பாதவர்கள் 49 "ஓ' பயன்படுத்த புதிய நடைமுறை

ஓட்டளிக்க விரும்பாதவர்கள் 49"ஓ' படிவத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.மேலும் அதை பயன்படுத்துவதில், புதிய நடைமுறையை கடைபிடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய தேர்தல் கமிஷன் தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரம் ஓட்டு வீணாகாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓட்டளிக்க விரும்பாத நிலையை தெரிவிக்கும் 49'ஓ படிவம் பயன்படுத்துவதை வாக்காளர்கள் தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளது. ஓட்டளிக்க விரும்பாதது வாக்காளர்களின் உரிமை என்றாலும், இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரித்து விடக்கூடாது என்பதில் கமிஷன் கவனமாக உள்ளது. 

தற்போது 49'ஓ படிவ நடைமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் ஓட்டுச்சாவடியில் அந்த படிவத்தை கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டு வழங்குவர். அதில் காரணத்தை தெரிவிக்க வேண்டும். அந்த படிவம் தனியாக கவரில் போடப்பட்டு பராமரிக்கப்படும். அது போன்று எத்தனை படிவங்கள் வந்துள்ளன என்ற எண்ணிக்கை மட்டும் கணக்கிடப்படும். படிவம் உள்ள கவர் பிரிக்கப்பட மாட்டாது. 

தற்போது, இப்படிவத்தை பயன்படுத்துவோர் தங்களின் முழு முகவரியுடன் அவர் சார்ந்த பகுதியின் பாகம் எண் முதற்கொண்டு, அனைத்து விவரங்களையும் குறிப்பிட வேண்டும். இப்படிவத்தின் கவரை தேர்தல் கமிஷனால் இதற்கென ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட உள்ள அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்தல் முடிவிற்கு பின் இந்த கவர்கள் பிரிக்கப்பட்டு அதில் அந்த நபர் குறிப்பிட்டிருக்கும் காரணங்கள் சரிபார்க்கப்படும். அரசியல் காரணங்களைத் தவிர தேர்தல் கமிஷன் செயல்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகள், எதிர்காலத்தில் செய்யப்பட வேண்டியது பற்றி குறிப்பிட்டிருந்தால் அந்த நபரை நேரில் சந்தித்து கருத்துக்களை கேட்டு பதிவு செய்து கமிஷனுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

நன்றி


வாக்காளர் அடையாள அட்டை: தேர்தல் கமிஷன் விளக்கம்

"ஒரு வாக்காளர், அவர் வேறு தொகுதியை சேர்ந்த வாக்காளர் அடையாள அட்டையை காட்டினாலும், அவரை ஓட்டு போட அனுமதிக்க வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

ஒவ்வொரு வாக்காளருக்கும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. இதில் விடுபட்டு போனவர்கள், தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களை காட்டி ஓட்டு போட அனுமதிக்கப்படுவர். இதற்கான உத்தரவு ஏற்கனவே அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடையாள அட்டை குறித்து மேலும் ஒரு விளக்கத்தை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதில், "ஒரு சில வாக்காளர்கள், தேர்தலின் போது தொகுதியை விட்டு இடம் பெயர்ந்திருக்கலாம். அவர்கள் முந்தைய தொகுதியில் பெற்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளையே வைத்திருப்பர். அவர்கள், மாற்று தொகுதியில் ஓட்டளிக்கும் போது முந்தைய புகைப்பட அடையாள அட்டையை காட்டினால், அதை ஒப்புக் கொண்டு, ஓட்டு போட அனுமதிக்கலாம்' என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி


சொத்து வாங்கியதை தெரிவிக்காததால் கட்டாய ஓய்வு உத்தரவு: தீர்ப்பாயத்தில் ரத்து

சொத்து வாங்கியதை பெண் ஊழியர் தெரிவிக்காததால், கட்டாய ஓய்வு அளித்து பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை, மத்திய நிர்வாக தீர்ப்பாயம் ரத்து செய்தது. வெறும் எச்சரிக்கையே போதும் என, தண்டனையை மாற்றியது தீர்ப்பாயம். 

சென்னையைச் சேர்ந்தவர் தீபா கதிரேசன். பி.எஸ்.என்.எல்., துறையில் மூத்த தொலைத் தொடர்பு உதவியாளராக பணியாற்றிய போது, குற்றச்சாட்டு அடங்கிய "மெமோ' இவருக்கு வழங்கப்பட்டது. அசையா சொத்து வாங்கிய விவரத்தை தெரிவிக்க தவறியதாக அதில் கூறப்பட்டது. இதற்கு தீபா தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
 
குரூப் "சி' மற்றும் "டி' பிரிவில் பணியாற்றுபவர்கள், சொத்து வாங்கிய விவரங்களை தெரிவிக்க வேண்டியதில்லை; 1995ம் ஆண்டு இந்தச் சொத்து வாங்கப்பட்டது; நடத்தை விதிகள் 2006ம் ஆண்டு அமலுக்கு வந்தது; இந்தச் சொத்து விவரத்தை நிர்வாக பொறியாளராக பணியாற்றும், தனது கணவர் தெரிவித்துள்ளார் என, தீபா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

இதையடுத்து, தீபாவுக்கு கட்டாய ஓய்வு அளித்து பி.எஸ்.என்.எல்., தலைமை பொது மேலாளர் உத்தரவு பிறப்பித்தார். கடந்த ஆகஸ்ட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் தீபா கதிரேசன் மனு தாக்கல் செய்தார். மனுவை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் கே.இளங்கோ, நிர்வாக உறுப்பினர் சோசம்மா விசாரித்தனர். மனுதாரர் சார்பில் வக்கீல் கே.செல்வராஜ் வாதாடினார்.

தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு

சொத்து விவரம் தெரிவிக்கவில்லை என்பதற்காக, இவ்வளவு பெரிய தண்டனை எப்படி அளிக்க முடியும் என, தெரியவில்லை. மனதைச் செலுத்தாமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு சட்டவிரோதமானது. நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பின், அதிகாரிகளிடம் விவரங்களை தெரிவித்திருக்க வேண்டும். விதிக்கப்பட்ட தண்டனையானது அதிகபட்சமானது. கட்டாய ஓய்வு அளித்தது ரத்து செய்யப்படுகிறது. கட்டாய ஓய்வு என்பதற்குப் பதில், "எச்சரிக்கை' என மாற்றப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி

புதிய பென்ஷன் மசோதா ரத்து செய்ய வலியுறுத்தல்

புதிய பென்ஷன் மசோதாவை ரத்து செய்ய, அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. மத்திய அரசு, புதிய பென்ஷன் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. 

இதன்படி மத்திய அரசில் 1.1.2004 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கும், தமிழகத்தில் 1.4.2003 முதல் அரசு பணியில் சேர்ந்து பணியாற்றும் ஊழியர்களுக்கும், இத்திட்டம் அமல் படுத்தப்படவுள்ளது. இதன்படி அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் 10 சதவீதமும், அரசு 10 சதவீதமும் செலுத்தும். ஓய்வு பெறும் போது எவ்வளவு பென்ஷன் வழங்கப்படும் என்பது வரையறுக்கப்படவில்லை.
 
பென்ஷன் தொகையை அரசு, பங்குச் சந்தையில் முதலீடு செய்யும். பங்குச் சந்தை நிலவரத்தை பொறுத்தே பென்ஷன் தொகை வழங்கப்படும் என, அரசு தெரிவிக்கிறது. பொது சேமநல நிதியில் இருந்து கடன் பெற முடியாத நிலை புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ளது. 

மேலும் இந்த மசோதாவில் மாநில அரசு விரும்பினால், 2003 க்கு முன்பு அரசு பணியில் இருக்கும் ஊழியர்களுக்கும் செயல்படுத்தலாம் என, தெரிவித்துள்ளது. இதனால், அனைத்து மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த மசோதவை ரத்து செய்து அனைத்து அரசு ஊழியர்களும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். இல்லை எனில் முதல் கட்டமாக 2 மணி நேரம் வெளி நடப்பு போராட்டம் மற்றும் அடுத்தக்கட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நன்றி:


பயிற்சிக்கு வராத தேர்தல் அலுவலர்களை :சஸ்பெண்ட் செய்ய கலெக்டர் உத்தரவு

பயிற்சி வகுப்பிற்கு வராமல் "கட்' அடித்த தேர்தல் அலுவலர்களை சஸ்பெண்ட் செய்யுமாறு கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 780 பணியாளர்கள், பயிற்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
 
உளுந்தூர்பேட்டையில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்த பயிற்சி வகுப்பில் தேர்தல் பணியாற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் 1,118 பேர் பங்கேற்றனர். தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனபால், தேர்தல் தாசில்தார் ராதாகிருஷ்ணன், தனி தாசில்தார் ராஜேந்திரன், தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் வேல்முருகன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.

பயிற்சி வகுப்பின்போது, மதியம் 1.15 மணியளவில் கலெக்டர் பழனிசாமி திடீரென "விசிட்' செய்தார். ஒவ்வொரு அறையாக பார்வையிட்ட கலெக்டர், பயிற்சிக்கு வராதவர்களை உடனடியாக"சஸ்பெண்ட்' செய்யுமாறு தேர்தல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இவர்களில் உடல் நிலை பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள், பிரசவ வலி மற்றும் குழந்தை பெற்ற இரண்டு மாதங்களுக்குள் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க அறிவுறுத்தினார். 

இப்பயிற்சியில் கலந்து கொள்ளாத 22 அலுவலர்களின் பெயர் பட்டியல், கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நன்றி


28.3.11

மின்னணு வாக்குப் பதிவு கருவியில் பேப்பர் சீல் பொருத்துதல் - காணொளி


வாக்குச் சாவடி அதிகாரி - காணொளி


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2011 - காணொளி

உங்கள் வாக்கு! உங்கள் எதிர்காலம்!! சரியாக பயன்படுத்துங்கள் - காணொளி


வாக்காளரின் உரிமையும் கடமையும் - காணொளி


26.3.11

புகைப்பட வாக்காளர் அட்டையில் சிறு தவறுகள்:ஓட்டு போட அனுமதிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு

நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில், ஓட்டு போட வருபவர்களின் வாக்காளர் அடையாள அட்டையில் சிறு தவறுகள் இருந்தால், அவற்றை பொருட்படுத்தாமல் வாக்காளர்களை ஓட்டு போட அனுமதிக்கலாம் என்று, தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டு போடுவதற்கு வாக்காளர் அடையாள அட்டை அவசியம் என்று தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, பெரும்பாலான வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தேர்தல் கமிஷன் வழங்கியுள்ளது. இருப்பினும், வாக்காளர் அடையாள அட்டையில் பெயர், விலாசம், வயது உள்ளிட்ட விஷயங்களில் சிறு தவறுகள் உள்ளன.

இவ்வாறு தவறு உள்ள, வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் ஓட்டளிப்பதில் மிகவும் சிக்கல் ஏற்படுகிறது. தவறு உள்ள வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் ஓட்டளிக்க, ஓட்டு மையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் அனுமதிப்பதில்லை. இதனால், பலர் ஓட்டளிக்க முடியாமல் போகிறது. இதை கருத்தில் கொண்டு தேர்தல் கமிஷன் ஒரு புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன்படி, சிறு தவறுகள் உள்ள வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருப்பவர்கள் இம்முறை ஓட்டளிக்க முடியும்.

இது குறித்து தேர்தல் கமிஷன் அளித்துள்ள விளக்கம்:

தமிழகத்தில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 13ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள், தேர்தல் கமிஷனால் அளிக்கப்பட்டுள்ள வாக்காளர் அடையாள அட்டையை ஓட்டளிக்க வரும் போது, ஓட்டுச்சாவடியில் உள்ள அதிகாரியிடம் காண்பித்துவிட்டு ஓட்டளிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட வேறு ஆவணங்களை காட்டியும் ஓட்டளிக்கலாம்.

எந்தெந்த ஆவணங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து, ஓட்டுச்சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு ஏற்கனவே முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டையில் சிறு தவறுகள் உள்ளன என்று கூறி, வாக்காளர்களுக்கு ஓட்டளிக்கும் உரிமையை தேர்தல் அதிகாரிகள் மறுக்கக் கூடாது. சிறு தவறுகளை பொருட்படுத்தாமல் வாக்காளர்களை ஓட்டு போட அனுமதிக்கலாம் என்று தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக மாநில அரசின் இதழிலும் வெளி வந்துள்ளது.

இந்த செய்தி பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களின் கவனத்திற்கு செல்லும் வகையில் பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் வெளிவர வேண்டும். மேலும், தொகுதியில் போட்டியிடும் எல்லா வேட்பாளர்களுக்கு இது குறித்து கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.


தேர்தலின் போது, தேவைப்படும் பாதுகாப்புக்கு, ஊர்காவல் படை, வனக்காவலர்கள், ஓய்வு பெற்ற தீயணைப்புப் படை வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற போலீசார் போன்றவர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

நன்றி

 

வாக்குச்சாவடி அலுவலர் பணிநியமன ஆணைகளில் குளறுபடி: குமரி மாவட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குழப்பம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்குச் சாவடி அலுவலர் பணிநியமன ஆணைகளில் காணப்படும் குளறுபடியால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் குழப்பத்தில் உள்ளனர்.  

இம்மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 1410 வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இந்த வாக்குச் சாவடிகளில், வாக்குச்சாவடி அலுவலர்களாகப் பணிபுரிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்று மொத்தம் 6981 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பணிநியமன ஆணை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அனுப்பப்பட்டுள்ளது.  

இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) மாவட்டத்தில் 9 மையங்களில் தேர்தல் சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. தேர்தல் வாக்குச் சாவடிகளில் வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையைப் பெற்று ஒப்புதல் அளிப்பதுடன், தேர்தல் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜேந்திர ரத்னூ எச்சரித்துள்ளார். 

இந்நிலையில், வாக்குச் சாவடி அலுவலர்களாக பணிநியமன ஆணைகளைப் பெற்றுள்ள பல அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காரணம், பல பணிநியமன ஆணைகளில் மாவட்ட தேர்தல் அலுவலர் கையெழுத்திட்டுள்ள இடத்தில் கன்னியாகுமரி என்பதற்குப் பதிலாக மதுரை, ராமநாதபுரம், தேனி என்று பிறமாவட்டங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 

இதனால் பிறமாவட்டங்களுக்கு தேர்தல் பணிக்குச் செல்லவேண்டுமோ என்ற குழப்பம் உருவாகியுள்ளது. இது குறித்து விசாரித்தால் உறுதியான பதில் எதுவும் உயர் அதிகாரிகளால் தெரிவிக்கப்படவில்லை.  

சம்பந்தப்பட்ட ஆணைகளில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ராஜேந்திர ரத்னூதான் கையெழுத்திட்டுள்ளார். ஆனால் மாவட்டங்களின் பெயர்கள் மாறியுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இக் குழப்பத்தை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கை.

நன்றி



தேர்தல் பணியை தவிர்த்தால் நடவடிக்கை: ஆட்சியர்

தேர்தல் பணியை உதாசீனப்படுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  
தேர்தல் வாக்குச் சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களாகப் பணிபுரிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அனுப்பப்பட்டுள்ளது.  

தேர்தல் சம்பந்தமான பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சிபெற அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குச் சாவடிகளில், வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையைப் பெற்று ஒப்புதல் அளிப்பதுடன், தேர்தல் பயிற்சி வகுப்பிலும் கலந்துகொள்ள வேண்டும்.  

எனவே, இந்த ஆணையைப் பெற்றுக்கொள்ளாமல் உதாசீனப்படுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 134-ன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.

நன்றி:


வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி மையங்களில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் பணிகளில் ஈடுபடவுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜேந்திர ரத்னூ வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.  

தேர்தல் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு, வாக்குச் சாவடிகளில் செய்யவேண்டிய பணிகள் மற்றும் பொறுப்புகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்க ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 27) கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 மையங்களில் வகுப்புகள் நடைபெறவுள்ளன. அதன்படி, 
  • தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 568 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும், 
  • சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்பள்ளியில் 656 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், 
  • எஸ்.எல்.பி. அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 689 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும், 
  • டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 755 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், 
  • கோட்டார் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் 651 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், 
  • தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 956 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும், 
  • மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளியில் 767 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கும், 
  • கருங்கல் பெத்லஹேம் மேல்நிலைப்பள்ளியில் 883, 
  • மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் 1056 
என்று மொத்தம் 6981 வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த வாக்குச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி மையங்களுக்கு ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் கூறியதாவது:  சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பணியமர்த்தப்பட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இம் மாவட்டத்திலுள்ள 9 மையங்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரண்டு பிரிவுகளாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாளும் முறைகள், வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக கடைப்பிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது என்றார் அவர்.  

மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். பிரபாகரன், வட்டாட்சியர்கள் பவானி ஜீஜா, நாராயணதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துவேல், ராம்லால், செல்லத்துரை, துணை வட்டாட்சியர் (தேர்தல்) மணிதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நன்றி



13 ஆவணங்கள் எவை?

வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச் சாவடி சீட்டு இல்லாமல் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் 13 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம்.
  1.  பாஸ்போர்ட்,
  2. ஓட்டுநர் உரிமம் (கடந்த பிப்ரவரிக்கு முன் வழங்கப்பட்டிருக்க வேண்டும்), 
  3. வருமான வரிக் கணக்கு அட்டை, 
  4. மாநில, மத்திய அரசு ஊழியர்கள் எனில் அவர்களுக்கான அடையாள அட்டைகள், 
  5. புகைப்படம் ஒட்டப்பட்ட வங்கி அல்லது தபால் நிலைய சேமிப்புக் கணக்கு புத்தகம் (கடந்த பிப்ரவரிக்கு முன் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்), 
  6. ஓய்வூதிய ஆவணங்கள் (பிப்ரவரிக்கு முன் பெறப்பட்டதாக வேண்டும்), 
  7. புகைப்படம் ஒட்டப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை, 
  8. பட்டா போன்ற சொத்து ஆவணங்கள், 
  9. எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சான்றிதழ்கள் (பிப்ரவரிக்குள் கொடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்), 
  10. துப்பாக்கி உரிமச் சான்று, 
  11. மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்று, 
  12. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான அடையாள அட்டை (இவை பிப்ரவரிக்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்), 
  13. தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் அளித்துள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டை 
என 13 ஆவணங்கள் மூலமாக வாக்குகளைச் செலுத்தலாம். 


நன்றி:


பேரவைத் தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை, வாக்குச்சாவடி சீட்டு மட்டுமே செல்லும்: பிரவீண் குமார் அறிவிப்பு

வாக்காளர் பட்டியலில் புகைப்படத்துடன் பெயர் இடம் பெற்றிருந்தால், அவர்கள் வாக்காளர் அடையாள அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடி சீட்டுகளை மட்டுமே வைத்து வாக்களிக்க முடியும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் குறுந்தகடுகள், துண்டுப் பிரசுரங்களை சென்னையில் வெள்ளிக்கிழமை பிரவீண் குமார் வெளியிட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  

தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டைகள் 99.9 சதவீதம் பேருக்கு அளிக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி சீட்டுகளும் கொடுக்கப்பட உள்ளன. சென்னையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அவை அளிக்கப்படுகின்றன.  

வாக்குப் பதிவுக்கு 10 நாள்களுக்கு முன்பே வாக்குச் சாவடி சீட்டுகளை அளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  

பட்டியலில் பெயர் அவசியம்: தேர்தலில் வாக்களிக்கும் ஆவணங்களாக புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச் சாவடி சீட்டு ஆகிய இரண்டில் ஒன்று மட்டுமே ஆவணமாக எடுத்துக் கொள்ளப்படும்.  தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், மதுரை ஆகிய நகரங்களில் உள்ள சுமார் 60 ஆயிரம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் இதுவரை வழங்கப்படவில்லை.  அவர்களின் பெயர், முகவரி ஆகியன வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இல்லாமல் இருக்கும்பட்சத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவணங்களைக் கொண்டு அவர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்தலாம்.  

 51 ஆயிரம் அதிகாரிகள்: வாக்குச் சாவடி சீட்டுகளை அளிக்கும் பணியில், வாக்குச் சாவடி அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவர். தமிழகத்தில் மொத்தம் 54 ஆயிரம் வாக்குச் சாவடிகள்  உள்ளன.  இந்த வாக்குச் சாவடிகளில் 51 ஆயிரம் வாக்குச் சாவடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூலமாக வாக்குச் சாவடி சீட்டுகள் அளிக்கப்படவுள்ளன என்றார் பிரவீண் குமார்.

நன்றி



23.3.11

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

மத்திய அரசு ஊழியர்களுக்கு, 6 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கு, தற்போது, 45 சதவீத அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் பணவீக்கம், விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை, 6 சதவீதம் உயர்த்துவதற்கு, நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. அகவிலைப்படி உயர்வுக்கு, நுகர்வோர் விலை குறியீட்டெண்ணை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டு தோறும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை, அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும். இந்த வகையில், 6 சதவீத உயர்வு, கடந்த ஜனவரி முதல் தேதியிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். இதன் மூலம், ஆண்டொன்றுக்கு அரசுக்கு, 5,716 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். ஜனவரி முதல், மார்ச் வரையிலான மூன்று மாத காலத்திற்கு வழங்கப்படும் அகவிலைப்படியை சேர்த்து, அடுத்தாண்டு, அரசுக்கு, 6,668 கோடியே 52 லட்சம் கூடுதலாக செலவாகும். இதன் மூலம், 50 லட்சம் அரசு ஊழியர்களும், 38 லட்சம் பென்ஷன்தாரர்களும் பயன்பெறுவர். 

மத்திய அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படும், அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வாடிக்கை. ஆனால், இம்முறை தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதால், சிறிது காலம் தள்ளிப்போகும்.

நன்றி


20.3.11

ஓய்வூதியம் / மறு நியமனத்திற்கான திருத்திய ஊதியம் தொடர்பான தெளிவுரை

ஒரே கல்வியாண்டில் இரட்டைப் பட்டம் பெற்றவர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவல்

டியூசன் நடத்த ஆசிரியர்களுக்கு தடை: அகில இந்திய ஆசிரியர் கல்வி கவுன்சில் உத்தரவு

ஆசிரியர்கள் டியூசன் நடத்தவும், உடற்கல்வி ஆசிரியர்கள், புத்தக பதிப்பாசிரியர்களிடம் அன்பளிப்பு, பரிசுகள் பெறவும் அகில இந்திய ஆசிரியர் கல்வி கவுன்சில் தடை விதித்துள்ளது. மீறினால், நடவடிக்கை எடுக்க மாவட்ட, மாநில, தேசிய அளவில் குழு அமைக்கப்படவுள்ளது.
பள்ளி நேரம் போக காலை, மாலையில் ஆசிரியர்கள் டியூசன் நடத்துவதால், மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதில் பாதிப்பு ஏற்படுகிறது, என அகில இந்திய கல்வி கவுன்சிலுக்கு புகார்கள் சென்றன. இக்கவுன்சில் முன்னாள் இயக்குனர் ஆர்.கே.சர்மா தலைமையில் அமைக்கப்பட்ட குழு, ஆசிரியர்களின் ஒழுக்க விதிகள் குறித்து ஆய்வு நடத்தியது. இக்குழு, தேசிய கல்வி கவுன்சிலிடம் சமர்ப்பித்த அறிக்கை: மாணவர்கள் படிக்காவிட்டாலும், ஆசிரியர்கள் தங்களை தண்டிக்க கூடாது என்பதற்காக, அவரிடம் சில மாணவர்கள் டியூசனுக்கு செல்கின்றனர். அதிக மதிப்பெண் பெறுவதற்காக டியூசனுக்கு செல்கின்றனர். மாதம்தோறும் ஆசிரியர்கள் கட்டணம் வசூலிக்கின்றனர். இதை முறைகேடாக கருத வேண்டியுள்ளது.

காலை, மாலையில் ஆசிரியர்கள் டியூசன்கள் எடுப்பதால், பள்ளிகளில் தொடர்ந்து அவர்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. பள்ளிகளில் கல்வி கற்பிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. பள்ளியில் தன்னிடம் படிக்கும் மாணவர்களுக்காக வெளியிடங்களில் டியூசன் நடத்துவது, ஆசிரியர் பணி ஒழுங்கு விதிகளுக்கு எதிரானது. எனவே, பள்ளி ஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை விதிக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் விளையாட்டு நிறுவனங்களிடம் அன்பளிப்போ, பரிசுகளோ பெறக்கூடாது. பிற ஆசிரியர்கள், புத்தக பதிப்பாளர்களிடம் அன்பளிப்போ, பரிசுகளை பெற்றுக்கொண்டு, அந்த பதிப்பாளரின் புத்தகத்தை மாணவர்கள் வாங்குவதற்கு பரிந்துரை செய்வது சட்ட விரோதம். இது போன்ற செயல்களுக்கு ஆசிரியர்கள் செய்ய தடை விதிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை அனைத்து மாநில, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி, அவர்களது கருத்துக்களை தெரிவிக்கும்படி, தேசிய கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.

தடை உத்தரவை மீறும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய, மாநில, மாவட்ட அளவில் கல்வியாளர்கள் கமிட்டி அமைக்க வேண்டும். இந்த கமிட்டி, புகார்கள் குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும். மாவட்ட கமிட்டி பிறப்பிக்கும் உத்தரவை எதிர்த்து, மாநில கமிட்டியிடம் மேல் முறையீடு செய்யலாம். மாவட்ட கமிட்டி தலைவராக கலெக்டர், மாநில கமிட்டி தலைவராக பள்ளி கல்வி இயக்குனர் செயல்படுவர். விதிமுறைகளை மீறி டியூசன் எடுக்கும் ஆசிரியர்களை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்ய பரிந்துரைக்கும் அதிகாரம் கல்வியாளர்கள் கமிட்டிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் டியூசன் நடத்தும் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

நன்றி


15.3.11

திருத்திய ஊதிய முரண்பாடு - முறையீடுகளை பரிசீலிக்க ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அமைத்து அரசு ஆணை

திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் - சில வகைப்பணியிடங்களின் ஊதிய விகிதங்கள் திருத்தியமைக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை பரிசீலிக்க ஊதிய குறைதீர்க்கும் பிரிவு அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.

அரசாணை எண்: 71 நாள்: 26 - 02 - 2011 
.

13.3.11

அரசு ஊழியர் ஓட்டு வங்கியில் விழுந்தது "ஓட்டை"

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட நிறைவேறாத கோரிக்கைகள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் நடந்த தடியடி போன்றவற்றால் அரசு ஊழியர்கள் ஆளுங்கட்சி மீது அதிருப்தியடைந்துள்ளனர். தி.மு.க.,வின், "செல்லப்பிள்ளை'களாக கருதப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டு மற்றும் "தேர்தல் கால ஒத்துழைப்பு' இம்முறையும் அக்கட்சிக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர்கள் உள்ளிட்ட, அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேர் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியர் சங்கம், அரசு பணியாளர் சங்கம், அரசு அலுவலர் ஒன்றியம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளனர்.இதில், அரசு ஊழியர் சங்கமும் மார்க்சிஸ்ட் கட்சியை சார்ந்தும், அரசு பணியாளர் சங்கம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தும் இயங்கி வருகின்றன. யார் ஆளுங்கட்சியாக இருக்கிறார்களோ அவர்களைச் சார்ந்து அரசு அலுவலர் ஒன்றியம் இயங்கி வருகிறது. ஆசிரியர்களைப் பொறுத்தவரை தமிழக ஆசிரியர் கூட்டணி, தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், உடற்கல்வி ஆசிரியர், இயக்குனர் சங்கம், பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் என பத்துக்கும் மேற்பட்ட சங்கங்கள் இயங்கி வருகின்றன. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தி.மு.க.,வின் ஓட்டு வங்கியாகவே இருந்து வருகின்றனர். அதற்கேற்ப, ஆட்சியில் அமரும் போது, பல்வேறு சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டு, ஓட்டு வங்கியை தி.மு.க., தொடர்ந்து தக்க வைத்து வருகிறது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, அரசு ஊழியர் போராட்டம் நடந்த போது, "எஸ்மா, டெஸ்மா' சட்டங்கள் பிரயோகிக்கப்பட்டன. அரசு ஊழியர்களின் வீடுகளில் போலீசார் புகுந்து அவர்களை கைது செய்த சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பங்களால் கொதித்துப் போன அரசு ஊழியர்கள் அ.தி.மு.க., அரசுக்கு எதிராக திரும்பினர்.தேர்தலில் தங்களது பங்களிப்பையாற்றி அ.தி.மு.க.,வின் தோல்விக்கு காரணமாக அமைந்தனர்.தற்போதைய தி.மு.க., ஆட்சியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு இருந்தாலும், நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்காக அவர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையே உள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் மற்றும் படி, போனஸ் வழங்க வேண்டும்; காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.ஆசிரியர் சங்க அமைப்புகளும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்ட களத்திற்கு வந்துள்ளனர்.

சாலை பணியாளர்கள் தங்களது பணி நீக்க காலத்திற்கு சம்பளம் வேண்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். சத்துணவு ஊழியர்கள் சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற போது, அந்தந்த மாவட்டங்களில் வைத்து கைது செய்யப்பட்டனர்.இதன் உச்சகட்டமாக, காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட அரசு ஊழியர்கள், பிப்ரவரி 25ம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய @பாது போலீசார் தடியடி நடத்தினர். இதில் அரசு ஊழியர்கள், சாலைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் விரட்டி, விரட்டி தாக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.அரசு ஊழியர்கள் தி.மு.க., அரசின் மீது கொண்ட அபிமானம் குறைய இந்த சம்பவம் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. மேலும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.தி.மு.க., அணியில் இருப்பதால், அரசு ஊழியர் சங்கம் மற்றும் பணியாளர் சங்கங்கள் அந்த நிலைப்பாட்டிற்கு ஏற்ப செயல்படும் வாய்ப்புள்ளது.

காலிப் பணியிடங்களை நிரப்பாததால் கடுமையான வேலைப் பளு அரசு ஊழியர்கள் மேல் சுமத்தப்பட்டுள்ளது. வருவாய்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஆளுங்கட்சியினரின் தலையீடு, மிரட்டல் காரணமாகவும் தி.மு.க.,வின் மேல் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இது தொடர்பாக போராட்டங்களும் நடந்துள்ளன. இது போன்ற காரணங்களால், தி.மு.க.,வின் பிடியில் இருந்த அரசு ஊழியர் ஓட்டு வங்கியில், "ஓட்டை' விழுந்துள்ளது. கடந்த தேர்தலின் போது, அ.தி.மு.க., ஆட்சியை எதிர்த்து, "பகை முடிப்போம், பணி முடிப்போம்' என்று குரல் கொடுத்த அரசு ஊழியர்கள் தற்போது, " வஞ்சனைக்கு எதிராய் வெஞ்சினம் கொள்வோம்' என்று கிளம்பியுள்ளனர்.இவர்களின் கோபத்தால் ஆளுங்கட்சிக்கு சென்று சேர வேண்டிய நேரடி ஓட்டுக்கள் மற்றும் அவர்களது குடும்ப ஓட்டுக்களும் கணிசமாக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநில தலைவர் கு. பாலசுப்பிரமணியன் :அரசு பணியாளர்களுக்கு ஊதிய மாற்றம் செய்ததில் குறைபாடுகள் அதிகரித்துள்ளன. மத்திய அரசுக்கு இணையான வீட்டு வாடகை, கல்வி படிகள் கிடைக்கவில்லை. மத்திய அரசு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் 3,500 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 3,050 ரூபாய் வழங்கப்படுகிறது.ஓய்வூதியம் பெறுவோரின் வயது அதிகரிக்க, அதிகரிக்க பென்ஷனை அதிகரித்து மத்திய அரசு வழங்கிறது; ஆனால், தமிழகத்தில் இந்த நிலை இல்லை. பல்வேறு துறைகளில் இரண்டு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளனர். அதிகாரிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; அடிப்படை பணிகளை பார்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.அலுவலக உதவியாளர், இரவு காவலர், பதிவு எழுத்தர் ஆகியோருக்கு சம்பள உயர்வு கிடைக்கவில்லை.டாஸ்மாக் பணியாளர்கள், ரேஷன்கடை, நீச்சல்குள பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் கிடைக்கவில்லை. சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி எழுத்தர், கிராம பணியாளர்கள், பட்டு வளர்ச்சி, மக்கள் நல பணியாளர்களுக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்கப்படவில்லை.ஒப்பந்த பணியாளர்கள் நியமனம் தொடர்கிறது; நிரந்தர பணியிடங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அரசு அலுவலர்களின் பணிப்பளுவுக்கு ஏற்ப நிரந்தர பணியிடங்களை அரசு உருவாக்கவில்லை. கல்லூரி கவுரவ ஆசிரியர்கள் நிரந்தரப்படுத்தப்படுவதாக, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தனர். அவர்கள் நிரந்தரப்படுத்தப்படவில்லை.அரசு பணியாளர்கள் போராட்டங்கள் பல நடத்தியும், குறைகளை தீர்க்க அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அரசு அலுவலர்களுக்கு சம்பள மாற்றத்தின்போதும், ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் அமலான போதும் சங்கங்களை அழைத்து அரசு பேசவில்லை. ஒரு சங்கத்தினர் போராட்டம் நடத்தியபோது, தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது.

அரசு பணியாளர்கள் மக்களுக்கும், அரசுக்கும் இடையே பணியாற்றுபவர்கள்; அரசின் சட்டத்தின்படி செயல்படுபவர்கள். நிர்வாகத்தில் அரசாணைகள் தான் முன்னிலைப்படுத்த வேண்டும். ஆனால், அரசு பணியாளர்களின் இடமாறுதல் உள்ளிட்ட பல விஷயங்கள் மேலிட சிபாரிசின் பேரிலேயே நடந்து வருகிறது.பணியாளர்கள் தேவையை வேலைவாய்ப்பகம், டி.என்.பி.எஸ்.சி., மூலம்தான் நிரப்ப வேண்டும். ஆனால், பொது சுகாதாரத்துறையில் ஏஜன்சிகள் மூலம் ஆள் எடுப்பு நடக்கிறது. ஒப்பந்தம், தினக்கூலி என பல விதங்களில் பணியாளர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதுவும், ஆளுங்கட்சியின் சிபாரிசு இருந்தால்தான் பணியில் சேர முடிகிறது. வேலையில் சேரும்போது, சிபாரிசோடு வந்தால், அவர் எப்படி சரியாக செயல்படுவார்?நான் சொல்பவருக்கு வேலை கொடு என்று அரசியல்வாதிகள் தங்கள் அடிமைகளாக பணியாளர்களை வைத்துள்ளனர். அரசு நிர்வாகத்தில் நியாயமாக நடந்தால், சிக்கல் வந்துவிடும் என்ற பயம் வந்துவிட்டது. அதனால், ஆளுங்கட்சியோடு ஒத்துப்போக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற காரணங்களால், அரசு பணியாளர்கள் அதிருப்திக்குள்ளாகி இருக்கின்றனர்.

அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலர் சீனிவாசன் பேட்டி: கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் எங்களது சங்கத்தின் மாநில மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பங்கேற்று பேசும்போது, " அரசுத்துறையில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 714 பணியிடம் காலியாக உள்ளது. அவர்றை அரசு படிப்படியாக பூர்த்தி செய்யும்' என்று அறிவித்தார்.ஆனால், காலிப்பணியிடங்களை நிரப்புவதில் அரசு அக்கறை காட்டவில்லை. கடந்த 12 ஆண்டுகளாக ஒவ்வொரு அறிவிப்பின்போதும், 12 லட்சம் அரசு ஊழியர்கள் என்று அரசு சொல்லி வருகிறது. ஆனால், தணிக்கைத்துறை கணக்கு படி கடந்த ஐந்து ஆண்டுகளில் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், இந்த பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவில்லை.கடந்த ஐந்து ஆண்டுகளில், ஐந்து லட்சம் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டதாக சொல்கின்றனர். ஆனால், அ.தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட சத்துணவு, அங்கன்வாடி, மக்கள் நல பணியாளர்கள், தி.மு.க., ஆட்சியில் நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய ஆசியர்களுக்கு காலவரை ஊதியம் நிர்ணயித்துவிட்டு, அவர்களை புதிதாக பணி நியமனம் செய்தது போல் கணக்கு காட்டி வருகின்றனர்.

வேலைவாய்ப்பகங்களில் 70 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், மொத்தமுள்ள 146 அரசு துறைகளில், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் போன்ற, "குரூப் - 4' ஊழியர்களைப் பொறுத்தவரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. கருணை அடிப்படையில் நிரப்ப வேண்டிய 90 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.அரசு ஊழியர் பணியிடங்களை நிரப்ப வேண்டிய டி.என்.பி.எஸ்.சி.,யில் மொத்தமுள்ள 600 பணியிடங்களில் 300 பணியிடங்கள் காலியாக உள்ளன. வேலைவாய்ப்பு துறையில் மொத்தமுள்ள 1,340 பணியிடங்களில் 600 பணியிடம் காலியாக உள்ளது. இந்த லட்சனத்தில் விளம்பரத்திற்காக அரசு வேலைவாய்ப்பு மேளா நடத்தி வேடிக்கை காட்டி வருகிறது.

காலிப்பணியிடங்களால், அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆளுங்கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் தலையீடு அதிகரித்துள்ளது.சாத்தூர், ராஜபாளையம் நகராட்சி கமிஷனர் அரசியல் தலையீடு காரணாக தாக்கப்பட்டார். விருதுநகர் ஆளுங்கட்சி பிரமுரிடம் குடிநீர் கட்டணம் கட்டுமாறு கூறிய ஊழியர் தாக்கப்பட்டார். இது போன்ற பல சம்பவங்கள் மாநிலம் முழுவதும் நடந்துள்ளது.அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படவில்லை. அரசு அறிவித்த ஒரு நபர் குழு குறைகளை தீர்ப்பதற்கு பதிலாக பல புதிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களோடு ஒப்பிடுகையில், வீட்டுவாடகை, கல்வி, போக்குவரத்து படிகளில், 2,595 ரூபாய் குறைந்தபட்ச வேறுபாடு உள்ளது. கண்காணிப்பாளர் நிலையில் 7,000 ரூபாய் குறைகிறது.ஆனால், அமைச்சர், உயர்அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்கள் பரிந்துரை மூலம் சம்பளத்தை உயர்த்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

பணிச்சுமை, அரசில் தலையீடு, அரசியல்வாதிகளால் தாக்குதல் போன்ற காரணங்களால் அரசு ஊழியர்கள் மத்தியில், அரசின் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.இந்த குறைகளை முதல்வரிடம் முறையிடச் சென்ற எங்கள் சங்க நிர்வாகிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. தற்போதைய முதல்வர் எதிர்கட்சியாக இருக்கும்போது, அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடந்தால் கண்டித்தார். இப்போது அந்த தவறை அவரே செய்கிறார்.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல் ஐந்து ஆண்டு காலத்தில், இதுவரை சங்கங்களை சந்தித்து பேசவே இல்லை. தங்களுக்கு, "ஜால்ரா' போடுபவர்களை மட்டும் அருகில் நெருங்க விடுவது ஆளுங்கட்சியின் செயல்பாடாக உள்ளது.

கடந்த ஆண்டு சத்துணவு ஊழியர்கள் முற்றுகை போராட்டம் நடத்த சென்னைக்கு வர திட்டமிட்டிருந்தபோது, அவர்கள் வரும் வழியில் மடக்கி கைது செய்யப்பட்டனர். பலரை வீடுகளுக்குள் புகுந்து போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவங்களை பார்ந்து நொந்து போயுள்ள அரசு ஊழியர்கள் அ.தி.மு.க., அரசே பரவாயில்லை என்று நினைக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.இந்த உணர்வுகள் வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயமாக எதிரொலிக்கும். தபால் ஓட்டுக்களை முழுமையாக பயன்படுத்த அரசு ஊழியர்களுக்கு அனுமதி கிடைத்தால் நிச்சயம் ஆளுங்கட்சிக்கு பாதிப்பு ஏற்படும்.

அண்ணாமலை - தென் மாநிலச் செயலர், அகில இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், தொகுப்பூதிய ஆசிரியர் நியமனம் இருக்க கூடாது என்றோம். 42,500 பேர் நிரந்தரப்படுத்தப்பட்டனர். வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 52 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் பெற்றுள்ளனர். கல்வித்துறை அலுவலக பணியாளர்களைப் பொறுத்தவரை போதிய பணியிடங்கள் இல்லை. ஓய்வு பெற்றவர்கள் பணியிடம் நிரப்பபடாததால் வேலைப் பளு அதிகரித்துள்ளது.மத்திய அரசுக்கு இணையான சம்பளத்தை, தமிழக ஆசிரியர்களுக்கு தருவோம் என முதல்வர் உறுதி அளித்தார். 21 ஆண்டு காலமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு கிடைத்து வந்த, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரையின் போது வழங்கப்படவில்லை. இதனால், இடைநிலை ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பும், வருத்தமும் நீடிக்கிறது. புதிய ஆட்சி வரும் போது, இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டுமென எதிர்பார்க்கிறோம்.வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமனம் என்ற எங்கள் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றனர். ஆனால், அதிகாரப்பூர்வமான உத்தரவு வரவில்லை. மத்திய அரசு வழங்கும் வீட்டு வாடகைப்படி தொடர்ச்சியாக வழங்கப்படவில்லை.நான்கரை ஆண்டு ஆட்சியில், ஆறு மாத காலமாக அனைத்து ஆசிரியர் சங்கங்களும் வீதியில் நின்று போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். சில கோரிக்கைகளுக்கு மட்டும் தீர்வு கிடைத்துள்ளன. ஆசிரியர் பணி நியமனம் வெளிப்படையாக நடந்தது. பணி மாறுதலில் தவறுகள் நடக்கிறது. சிபாரிசுகள் மூலம் பணி மாறுதல் எல்லா ஆட்சியிலும் நடக்கும். இந்த ஆட்சியிலும் நடந்துள்ளது.

"ஒத்துழைப்பு" கிடைக்குமா? சட்டசபை தேர்தல் பணியில் இரண்டு லட்சத்து 76 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளனர். கடந்த தேர்தலின்போது பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் தி.மு.க.,வினருக்கு, "ஒத்துழைப்பு" கொடுக்கும் வகையில் செயல்பட்டதாக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின. தற்போது அரசு ஊழியர்கள் தி.மு.க.,வின் மீது அதிருப்தி கொண்டுள்ள நிலையில், வரவுள்ள சட்டசபை தேர்தலில் இத்தகைய, "ஒத்துழைப்பு" கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

குறைகள் என்ன? 
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகள் கிடைக்கவில்லை.
  • அரசு ஊழியர்கள் மத்தியில் உள்ள ஊதிய முரண்பாட்டை நீக்கவில்லை
  • அரசு அலுவலர்களின் பணிப்பளுவுக்கு ஏற்ப நிரந்தர பணியிடங்களை அரசு உருவாக்கவில்லை.
  • 2 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு முயற்சி எடுக்கவில்லை.
  • கோரிக்கைகள் குறித்து சங்கங்களை அழைத்து பேச்சு நடத்தவில்லை.
  • கடந்த மாதம் 25ம் தேதி அரசு அலுவலர்கள் மீது போலீசார் நடத்திய தடியடி சம்பவத்தால் அதிருப்தி.
- எஸ். கோவிந்தராஜ் -
 
நன்றி


விடைத்தாள் திருத்தும் பணி: ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

பிளஸ்2, பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. 

பிளஸ்2, பத்தாம் வகுப்பு தேர்வு முடிந்ததும் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறும். இப்பணியில் ஈடுபடும் பிளஸ்2 ஆசிரியர்களுக்கு தினமும் காலை, மாலையில் தலா 12 விடைத்தாள் வீதம் தினமும் 24 தாள்கள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு தலா 15 விடைத்தாள்கள் வீதம் நாள் ஒன்றுக்கு 30 தாள்கள் வழங்கப்படும். 

இந்த ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிக்கான ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதையடுத்து அரசு அவர்களுக்கான ஊதியத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. (அரசாணை எண்- 45, நாள்: 1.3.2011).
 
பிளஸ்2, ஆசிரியர் பட்டய பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு இதுவரை தாள் ஒன்றுக்கு வழங்கப்பட்ட 5 ரூபாயை ரூ. 7.50 ஆக உயர்த்தியுள்ளனர். பத்தாம் வகுப்பு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.4 ஐ ரூ.6 ஆக உயர்த்தியுள்ளனர். எட்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 1.50, ரூ. 2.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழ்நாடு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமிசத்தியமூர்த்தி, மதுரை செயலாளர் எஸ்.பாஸ்கரன் கூறியதாவது: விடைத்தாள் திருத்தும் பணிக்கு 2006ல் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதன் பின்பு திருத்தம் செய்யப்படவில்லை. இந்த ஊதியத்தை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தினோம். இதையடுத்து உத்தரவிட்ட அரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இதேபோல இப்பணியில் ஈடுபடும் கேம்ப் அலுவலர், தொடர்பு அலுவலர், கூர்ந்தாய்வாளர், முதன்மை கண்காணிப்பாளர், துறைஅலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், பறக்கும் படையினர், வினாத்தாள் பாதுகாப்பு மைய அலுவலர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும், என்றனர்.

நன்றி: 

தேர்தல் பணிகளில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்த முடிவு

தமிழகத்தில் தேர்வு பணிகளில் உள்ள ஆசிரியர்கள், ஐகோர்ட் உத்தரவுப்படி, தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலாக மெட்ரிக், ஆரம்ப, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகள் ஏப். 11ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதன் பின்னர் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் நடக்கவுள்ளது. தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு பதில் மெட்ரிக், ஆரம்ப, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 

இதையடுத்து, இப்பள்ளிகளில் தேர்வுப் பணி இல்லாத ஆசிரியர்களின் பட்டியல் தயாரித்து வழங்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நன்றி


11.3.11

தேசிய திறனறிதல் தேர்வு முடிவு வெளியீடு

தேசிய திறனறிதல் தேர்வின் மாநில அளவிலான தேர்வு முடிவுகளை, தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. இதில், 310 பேர் தேர்வு பெற்றுள்ளனர். 

அரசின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் நாடு தழுவிய அளவில் மூன்று வகையான தேர்வுகள் நடத்தி, அதில் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு பெறும் 1,000 மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வி முதல் உயர்கல்வி வரை மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு 40 உதவித்தொகைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
 
முதற்கட்டமாக மாநில அளவில் நடக்கும் தேர்வு, தமிழகத்தில் கடந்த நவம்பர் 21ம் தேதி நடந்தது. இதில், 20 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. வகுப்பு வாரியான ஒதுக்கீட்டின்படி, மதிப்பெண் அடிப்படையில் 310 பேர் முதல்நிலைத் தேர்வில் தேர்வு பெற்றுள்ளனர். இதன்பின், மத்திய அரசு நடத்தும் ஒரு தேர்வும், அதன்பின் நேர்முகத் தேர்வும் நடைபெறும். 


தேர்வு முடிவு விவரங்களை தேர்வுத்துறை இணையதளத்தில் ( www.dge.tn.gov.in ) மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி:



வாக்குச்சாவடி அமையும் பள்ளிகளை ஏப்ரல் 11ம் தேதி ஒப்படைக்க உத்தரவு

"ஓட்டுச் சாவடிகள் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளை, 11ம் தேதி பிற்பகல் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்,'' என, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, அவர் பள்ளிக் கல்வித்துறைக்கு கூறியிருப்பதாவது: 
தமிழகத்தில் தற்போது பொதுத் தேர்வுகள் நடந்து வருகின்றன. 11ம் தேதி வரை பொதுத் தேர்வுகள் நடக்கின்றன. 13ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. ஓட்டுச் சாவடிகளுக்காக, பள்ளிகளை தேர்தல் கமிஷன் தேர்வு செய்துள்ளது. எனவே, தேர்வுப் பணிகளை முடித்து, 11ம் தேதி பிற்பகல் சம்பந்தப்பட்ட பள்ளிகளை, தேர்தல் அதிகாரிகள் வசம் ஒப்படைக்க வேண்டும். 

தேர்தல் பணிக்காக, ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் பயிற்சி அளித்து வருகிறது. ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள், தேர்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், தேர்தல் தொடர்பான பயிற்சிகளுக்கு அவர்கள் செல்லும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். இது தொடர்பான முழு விவரங்களையும், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சபீதா கூறியுள்ளார்.

செயலரின் உத்தரவு, நேற்றே அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டன. 

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தப்படும் 43 மையங்களில் மட்டும் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவில்லை. 

மேலும், ஏப்ரல் 12, 13 ஆகிய இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஏப்ரல் 16ம் தேதிக்குப் பின், மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் எனவும், தமிழக அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

நன்றி


தேர்தல் நாளில் தேர்வுகள்: தேதிகளை மாற்றம் செய்து கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் ஏப்., 13ல் சட்டசபை தேர்தல் நடப்பதால், அன்று நடக்கவிருந்த 6, 7, 8, 9ம் வகுப்பு தேர்வுகளின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்பு தேர்வுகள், ஏப்.,11ல் துவங்கி 21ம் தேதி வரை நடைபெறும் என அட்டவணை வழங்கப்பட்டது. சட்டபை தேர்தலையொட்டி இந்த அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி ஏப்.,6ல் தமிழ் முதல் தாள், 7ல் இரண்டாம் தாள், 9ல் சுற்றுச்சூழல் கல்வி, 15ல் ஆங்கிலம் முதல்தாள், 18ல் ஆங்கிலம் இரண்டாம் தாள், 19ல் கணிதம், 20ல் அறிவியல், 21ல் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். 

இருப்பினும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு தேதிகளில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

நன்றி:



1.3.11

மக்கள் தொகை கணக்கெடுப்பு இறுதி கட்டம் : பள்ளிகள் மூடும் சூழ்நிலை

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை விடுப்பு அறிவித்துள்ளதால், பல பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. 

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது நடந்து வருகிறது. பிப்., 9ம் தேதி துவங்கிய இப்பணி இன்றுடன் (பிப்., 28) முடிவடைகிறது. இன்று நள்ளிரவு வரை கணக்கெடுப்பாளர்கள், தெருவோரங்களில், நடைபாதைகளில் வசிப்போரை கணக்கெடுக்க வேண்டும். பின், மார்ச் 1 முதல் 5ம் தேதிக்குள் விடுபட்டவர்களையும் கண்டுபிடித்து சேர்த்து பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். 

கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு அரைநாள் "ஆன் டூட்டி' சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு ஆசிரியரோ, பிற ஊழியர்களோ தாங்கள் விரும்பும் நேரத்தில் கணக்கெடுப்பு பணியை பள்ளிப் பணிகள் பாதிக்காதவாறு நடத்தலாம். அதன்படியே நடந்தும் வருகிறது. 

இந்நிலையில், மார்ச் 1 முதல் 5ம் தேதி வரை உள்ள நாட்களை, கணக்கெடுப்பாளர்களுக்கு விடுப்பு நாளாக கருதும்படி உத்தரவிடப் பட்டுள்ளது. பெரும்பாலும் கணக்கெடுப்பில் பள்ளி ஆசிரியர்களே ஈடுபட்டுள்ளனர். சில பள்ளிகளில் உள்ள மொத்த ஆசிரியர்களில், மாற்றுத் திறனாளிகள் தவிர பெரும்பாலும் அனைவருக்குமே கணக்கெடுப்புப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகளையே மூடும் நிலை உள்ளது.


பிளஸ் 2 தேர்வுகள் நாளை மறுதினம் துவங்க உள்ள நிலையில், உயர்நிலை பள்ளிகளில், பத்தாம் வகுப்பு தேர்வுக்காக மும்முரமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பிற நடுநிலை, துவக்கப் பள்ளிகளிலும் இறுதிகட்ட நிலையில் உள்ளனர். இந்நிலையில், ஆசிரியர்களில் பெரும்பாலானோர் கணக்கெடுப்பு பணிக்காக செல்வதால், கணக்கெடுப்பில் அதிக ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளை மூடும் நிலை உள்ளது.

நன்றி



பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்