தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.4.15

கண்ணீர் அஞ்சலி


தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவராக இருந்த எஸ். அப்துல் மஜித் (வயது 85) நேற்று மாலை மரணம் அடைந்தார்.

கடலூர் வண்ணாரப்பாளையத்தில் வசித்து வந்த இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடலுக்கு ஆசிரியர் சங்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிறுவனரும் தன் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர்களுக்காகவே செலவிட்டவருமான அப்துல்மஜீத் மறைந்து விட்ட செய்தி நம்மை மிகுந்த மன வேதனை அடையச் செய்துள்ளது.

 நாற்பதாண்டுகளுக்கு மேலாக ஆசிரிய சமுதாயத்திற்காக பல போராட்டங்களையும் பல மாநாடுகளையும் நடத்தியவர் அப்துல் மஜீத் அவர்கள். அவரை இழந்து வாடும் ஆசிரியப் பெருமக்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்