தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.8.12

பள்ளிக்கு நிலம் கொடுத்தாலும் பெயர் சூட்ட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

பள்ளி அமைக்க நன்கொடையாக நிலம் கொடுத்தவரின் பெயரை, அப்பள்ளிக்குச் சூட்ட முடியாது என, மதுரை ஐகோர்ட் தீர்ப்பளித்தது.

திருச்சி மணச்சலூரை சேர்ந்த கைலாசம் மதுரை ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
 ஊரில் செயல்படும் பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு, 1966ல், தாத்தா அய்யணன் செட்டியார், இரண்டு ஏக்கர் நிலமும், நான் ஓர் ஏக்கர் நிலமும் கொடுத்தோம். ஆக, மூன்று ஏக்கர் நிலமும் எங்களுக்குச் சொந்தமானது. நிலம் கொடுத்த என் தாத்தா பெயரை பள்ளிக்குச் சூட்டாமல், கேட் கொடுத்தவர்கள் பெயர்களை போட்டுள்ளனர். தாத்தா பெயர் சூட்ட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதி சந்துரு:
நிலம் கொடுத்ததற்கு மட்டுமே தாத்தா பெயர் வைக்க உரிமை கோர முடியாது, இப்பள்ளிக்குத் தனியார் பெயர் வைத்தால், தனியார் பள்ளி மாதிரியாகும். கட்டடங்கள் கட்டும் போது கல்வெட்டுகள் வைக்க மட்டுமே அரசாணை உள்ளது.

நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

நன்றி:

 

47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்: செப்டம்பரில் வழங்க முடிவு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்., இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா காலணி, பாடப் புத்தகம், சைக்கிள், வண்ணப் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை, ஊக்கத் தொகை உள்ளிட்ட, 14 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும், 12.50 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கிரையான் பென்சில் வழங்குவதற்கான பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலும், 35 லட்சம் மாணவர்களுக்கு, வண்ணப் பென்சில் வழங்கும் திட்டமும், இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் முடிந்துள்ளன.

கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் தலா, 16, தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கப்படுகின்றன. பாக்கெட்டின் முன்புறம், தமிழக அரசின் முத்திரையுடன், முதல்வர் படம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்புறம், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, மாவட்டம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. வகுப்புகளில், பென்சில் பாக்கெட்டுகள் மாறிவிடாமல் இருக்கவே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மூன்று திட்டங்களுக்கும், டெண்டர் விடப்பட்டு, தகுதி வாய்ந்த நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தற்போது, பென்சில், கிரையான் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி தயாரிக்கும் வேலை, மும்முரமாக நடந்து வருகிறது. செப்., இறுதி வாரத்தில் இருந்து, அனைத்து மாணவ, மாணவியருக்கும், கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் மற்றும் கணித உபகரணப் பெட்டி வழங்கப்படும் என, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி:

 

அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு: "நபார்டு' வங்கி ரூ.129 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, "நபார்டு' வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுதொடர்பாக, "நபார்டு' வங்கியின், தமிழ்நாடு மண்டல தலைமை மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை:
ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 129.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், புதிதாக, 1,508 வகுப்பறைகள், 112 ஆய்வுக் கூடங்கள், விடுதிகள், குடி நீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், 1.7 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர்.

ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், 2012-13ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதியாக, 822 கோடி ரூபாய், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சேமிப்பு தானிய கிடங்குகளை உருவாக்க மட்டும், சிறப்பு நிதியாக, 151.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

 

29.8.12

உணவு வீணாக்குவதை தடுக்க சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம்

உணவின் முக்கியத்துவத்தையும், அதன் மகத்துவத்தையும் விளக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது.

பட்டினியால் வாடும் குழந்தைகள் பற்றி அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான ஆய்வில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 42 சதவிகிதம் பேர் எடைக் குறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 5 வயதுக்கு கீழான 58% குழந்தைகள் சத்துக்குறைவுடன் காணப்படுவதாகவும் அதில் கண்டறியப்பட்டது.

இந்தப் புள்ளிவிவரங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குத் தெரிவிப்பதுடன், உணவை வீணடிப்பதை தடுக்கவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ. இயக்குனர் (பயிற்சி மற்றும் கல்வி) சாதனா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், மாணவர்களுக்கு உணவை வீணடிப்பதால் ஏற்படும் நஷ்டங்கள் பற்றியும், பள்ளிக்கு கொண்டு வரும் உணவு மீதமானால் அதனைத் தயக்க்மின்றி திருப்பி எடுத்துச் செல்ல வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:

 

மதுரையில் 30ம் தேதி புத்தகத் திருவிழா

மதுரை தமுக்கம் மைதானத்தில், 7வது புத்தகத் திருவிழா நாளை (ஆக., 30) துவங்கி, செப்., 9 வரை நடக்கிறது. தினமும் காலை 11 முதல், இரவு 9 மணி வரை கண்காட்சி நடைபெறும். அனுமதி இலவசம். இதில், 151 நிறுவனங்களின் 212 அரங்குகள் இடம்பெறுகின்றன.

கலெக்டர் அன்சுல்மிஸ்ரா கூறியதாவது
:
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில், அரசு ஆதரவுடன் புத்தகக் கண்காட்சி நாளை மாலை 6 மணிக்கு துவங்குகிறது. மேயர் ராஜன் செல்லப்பா, துணைவேந்தர் கல்யாணி பங்கேற்கின்றனர். 120 தமிழ் புத்தக அரங்குகள், 81 ஆங்கில புத்தக அரங்குகள் இதில் அடங்கும்.

தினமும் மாலை 6 மணி முதல் கலை நிகழ்ச்சிகள், பிரபல பேச்சாளர், எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இடம் பெறும். பள்ளி மாணவர்களுக்கு "புத்தகம் பேசுகிறது&' என்ற தலைப்பில் ஆக., 6ல் காலை 11 மணிக்கு பேச்சுப் போட்டி நடைபெறும். வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம், ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள நூல்கள் வழங்கப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு ஆக., 1ல், காலை 11 மணிக்கு, "நூலும் ஓர் ஆயுதம்&' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடைபெறும். இவர்களுக்கு முறையே ரூ. 7 ஆயிரம், ரூ. 5 ஆயிரம், ரூ. 3 ஆயிரம் மதிப்புள்ள நூல்கள் வழங்கப்படும். மூன்று வயது முதல் 13 வயது வரையுள்ள குழந்தைகளுக்கும் 3 பிரிவாக ஓவியப் போட்டி ஆக., 2 காலை 9 மணிக்கு நடைபெறும். போட்டிகள் தொடர்பாக 94435- 72224 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:

 

27.8.12

ஆசிரியர் தகுதித்தேர்வு உணர்த்தும் உண்மைகள்

அண்மையில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் சுமார் 2,000 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ள நிலையின் மூலம் சில கற்பிதங்களையும், சில உண்மைகளையும், எதிர்காலத்தில் இத்தேர்வில் செய்யவேண்டிய மாற்றங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாயிரம் பேரைத் தவிர, தேர்ச்சி பெற முடியாமல்போன அனைவருமே "தகுதியற்றவர்கள்' என நாம் ஒட்டுமொத்தமாகக் கருதிவிட முடியாது.

முதலில், தேர்வு அறிவிக்கப்பட்ட நாளுக்கும் தேர்வு நடைபெற்ற நாளுக்கும் இடையில் போதிய கால அவகாசம் இல்லை. பெரும்பாலானோர் இந்தத் தேர்வு நடத்தப்படுமா என்ற சந்தேகத்திலேயே இருந்தனர்.

தகுதித் தேர்வுக்காகக் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அளவிற்கேற்ப அதற்குத் தயார்படுத்திக் கொள்வதற்கு அவகாசம் இல்லை.

முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் ஒரே காலகட்டத்தில் போட்டித் தேர்வையும், தகுதித் தேர்வையும் (டிஇடி) எழுதும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இரண்டிற்குமான கால அவகாசம் பெரும்பாலானோர் கேட்டுக் கொண்ட பின்னரே (அதுவும் போட்டித்தேர்வு முடிந்த பிறகு) சற்று நீட்டிக்கப்பட்டாலும் அது போதாது என்பதே பலரது கருத்து.

இரண்டிற்குமான தேர்வு பாடத்திட்டம் முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. அதனால் இரு தேர்வுகளையும் எழுத வேண்டிய நிலையில் இருந்தவர்கள் எந்தத் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிப்பது என்று முடிவெடுப்பதே பெரும் சவாலாக இருந்தது.

சமூகப்பொறுப்பு சார்ந்த ஆசிரியர் பணி நியமனத்தில் பதிவு மூப்பா, தேர்வு முறையா என்பதில் ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் ஒவ்வொரு முடிவு எடுக்கப்பட்டு வருவதால், தேர்வுக்குத் தயாரான மன நிலையில் பெரும்பாலோர் இல்லை. பலர் பல்வேறு பயிற்சி நிறுவனங்களை நம்பி ஏமாந்தனர்.

கடந்த காலங்களில் ஏராளமான கல்வியியல் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துவிட்டு அவை எந்த அளவுக்குத் தரமான கல்வியைத் தந்தன எனக் கண்காணிக்காமல் விட்டதன் நிலைதான் தகுதித் தேர்வு என்ற ஒரு தேர்வை நடத்த வேண்டிய நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.

பல தேர்வுக் கூடங்களில் தேர்வு நேரம் தொடங்கிய பிறகு நேர மேலாண்மையைப் பாதிக்கும் வகையில் தேர்வர்களிடம் கையொப்பம் வாங்குவது, தேர்வர்களின் சிந்தனையைத் திசை திருப்பும் வகையில் தேர்வு நேரம் தொடங்கிய சில நிமிடங்களுக்கும் முடிவதற்கு சில நிமிடங்கள் முன்னதாகவும் தொடர்ந்து ஒலி பெருக்கியில் அறிவிப்புகளைக் கொடுத்துக் கொண்டே இருந்தது போன்ற நிகழ்வுகளும் நடந்ததால் சில வினாக்களைத் தவற விட்டோம் என்றும் சிலர் தெரிவித்தனர்.

தேர்வுக்கான வினாக்கள் பெரும்பாலும் பாடங்களின் ஆழமான நிலைக்குச் சென்று அதிலிருந்து கேட்கப்பட்டிருந்தன. ஆனால், ஆசிரியர் தேர்வாணைய அதிகாரிகள் பங்கேற்ற ஒரு டி.வி. நிகழ்ச்சியில், "ஆசிரியராக வரக்கூடிய ஒருவருக்கு அடிப்படையாக சில தகுதிகள் இருக்கிறதா என்பதைச் சோதிக்கும் வகையிலேயே மேலோட்டமாக, சாதாரணமாகத்தான் வினாக்கள் இருக்கும். பெரிதாகப் பயந்துகொண்டு இருக்க வேண்டியதில்லை' என்று கூறினார்கள்.

ஆசிரியருக்கான தகுதியைச் சோதிக்கும் வகையிலான தேர்வில் வினாக்களும் அவர்கள் தகுதியைச் சோதிக்கும் வகையில் பொதுப்படையாக அமைக்கப்பட வேண்டும். அதன் மூலம் அவர் மாணவர்களை எவ்வாறு வழிநடத்துவார், எப்படிப் பாடங்களைக் கற்பிப்பார், என்ன மாதிரியான உளவியலைப் பயன்படுத்துவார், எப்படிப்பட்ட பண்பு நலன்கள் ஆசிரியரிடம் இருக்க வேண்டும் என்பன போன்றவற்றை அறிகின்ற வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டால்தான், அதைத் தகுதித் தேர்வு என அழைக்க முடியும்.

மாறாக போட்டித் தேர்வுகளுக்குக் கேட்கப்படுவது போன்றே ஒரு பாடத்தைப் படித்து நினைவில் நிறுத்தி, அதிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு ஒரு வார்த்தையில் பதிலளிப்பது போன்றே அமையுமானால் அதைப் போட்டித்தேர்வு என்றே அழைத்து விடலாம்.

ஆசிரியர் பணிக்கான படிப்புகளை சில ஆண்டுகளுக்கு முன்னரே படித்து முடித்துவிட்டு, பணி கிடைக்கும் வரை வேறு வேலைகள் செய்து கொண்டிருக்கும் நிலையிலும், பாடங்களுடன் சற்று தொடர்பு விடுபட்டிருக்கும் நிலையிலும் உள்ளவர்களுக்கு இதுபோன்ற கேள்விகளுக்கு தேர்வுக்கான போதிய கால அவகாசம் இல்லாத நிலையில் உடனடியாகப் பதிலளிக்க முடியாது.

கல்வியியல் கல்லூரிகளில் பள்ளிகளில் உள்ள பாடங்கள் சொல்லித் தரப்படுவதில்லை. கற்பித்தல் முறைகள், உளவியல் முறைகள், மாணவர்களைக் கையாளும் முறைகள், ஆசிரியருக்கான தகுதிகள் போன்ற வகையிலான பாடத் திட்டங்களே அமைக்கப்பட்டுள்ளன.

ஆகையால் தகுதித்தேர்வுக்கான வினாக்களும் ஆசிரியரின் பண்பு நலன்களை, தகுதியை வெளிக் கொண்டுவரும் வகையிலும், கூடவே பாடம் சார்ந்த வினாக்களும் இடம்பெறும் வகையில் அமைக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் விரிவாக விடையளிக்கும் அமைப்பில்கூட வினாக்களை அமைக்கலாம்.

- வீ. தமிழன்பன்

நன்றி: 

 

26.8.12

அரசு பள்ளிகளில் ஜாதி வாரி மாணவ,மாணவிகள் பட்டியல்கள் தயாரிப்பு

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் ஜாதி வாரி பட்டியலை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்வோருக்கு இனச்சுழற்சியில் ஜாதி வாரி கல்வி உதவித்தொகை, அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆட்சியிலும் புதிய சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், நடப்பாண்டில் கல்வி உதவித்தொகை உட்பட வகுப்பு வாரியாக 16 சலுகைகள் அறிவித்து, ஒவ்வொன்றாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சரியான முறையில் சென்றடைகிறதா, ஜாதி வாரியாக எத்தனை சதவீதம் பேர் இச் சலுகைகளை பெறுகின்றனர். ஒவ்வொரு ஜாதியிலும் உயர், மேல்நிலை கல்வி பயில்வோரின் சராசரியை உறுதிப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தமிழகத்தில் முதல் வகுப்பில் இருந்து பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளின் ஜாதி வாரி பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதன்மை கல்வி , மாவட்ட கல்வி, தொடக்கக்கல்வி அலுவலக ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "முறைகேடுகளை தடுக்க, இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுக்கு எத்தனை பேர் அரசு சலுகைகள் பெறுகின்றனர். சலுகை அளித்தும் ஏன் இடை நிற்றல் ஏற்படுகிறது போன்ற பல்வேறு காரணங்களை தெரிந்து கொண்டு, மாற்றங்களை உருவாக்க இந்த கணக்கெடுப்பு நடக்கிறது,'' என்றார்.

நன்றி:

 

ஆசிரியர் தகுதித் தேர்வு(TET) முடிவுகள் - 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி

 ஜூலை 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) முடிவு, நேற்று வெளியிடப்பட்டது.

தேர்வு எழுதிய, 6.72 லட்சம் பேரில், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 25 ஆயிரம் பேரை தேர்வு செய்ய நடத்திய தேர்வில், வெறும், 0.36 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருப்பதால், அக்., 3ம் தேதி, மீண்டும் ஒரு தேர்வை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேரம் வழங்கவில்லை என, எழுந்த புகாரைத் தொடர்ந்து, அக்டோபரில் நடக்கும் தேர்வுக்கு, 3 மணி நேரம் வழங்கப்படும் எனவும் டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

ஜூலை 12ம் தேதி, டி.ஆர்.பி., நடத்திய முதல் தகுதித் தேர்வில், 6 லட்சத்து, 72 ஆயிரத்து, 204 பேர் பங்கேற்றனர். முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டுமே கடினமாக இருந்ததாகவும்; போதிய அளவிற்கு நேரம் வழங்கவில்லை எனவும், தேர்வர்கள் குற்றம் சாட்டினர்.அதற்கு தகுந்தாற்போல், நேற்று வெளியான தேர்வு முடிவும் அமைந்தது. தேர்வு எழுதிய 6.72 லட்சம் பேரில், வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 0.36.

தலைவர் பேட்டி:

தேர்வு முடிவுகள், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று அதிகாலை வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்வு முடிவு குறித்த புள்ளி விவரங்களை, டி.ஆர்.பி., தலைவர் சுர்ஜித் சவுத்ரி வெளியிட்டார்.அப்போது, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
முதல் தாள் தேர்வில், 1,735 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 713 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். விண்ணப்பத்திலும், விடைத்தாளிலும் கேட்கப்பட்ட அடிப்படை விவரங்களை சரிவரச் செய்யாத தேர்வர்களுக்கு, அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, மதிப்பெண் குறைக்கப்பட்டுள்ளது.கையெழுத்தில் வித்தியாசம் இருந்ததால், இரு தேர்வர்களுக்கு, டி.ஆர்.பி., தேர்வில் பங்கேற்க, ஐந்தாண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல் தாள் தேர்வில், 685 பேருக்கும்; இரண்டாம் தாள் தேர்வில், 1,547 பேருக்கும், அவர்கள் செய்த தவறுகளுக்கு ஏற்ப, உரிய தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.இரு தேர்வர், தங்கள் அசல் விடைத்தாள் நகலை ஒப்படைக்காததால், அவர்களுடைய தேர்வு ரத்து செய்யப்பட்டது.

தரமானதேர்வு:

தேர்வில், குறைந்த தேர்ச்சி சதவீதம் ஏற்பட்டிருப்பது குறித்து, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவ, மாணவியரின் எதிர்காலத்தையும், தரமான கல்வித் தரத்தை ஏற்படுத்துவதையும் கருத்தில் கொண்டும், 60 சதவீத மதிப்பெண் பெறுபவர் மட்டுமே தேர்ச்சி என்ற நிலையை தொடர்ந்து கடைபிடிக்குமாறு, அரசு அறிவுறுத்தியது.தரமான ஆசிரியரை பணியில் அமர்த்தினால் தான், தரமான கல்வியை வழங்க முடியும் என்பதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அக்., 3ல் மீண்டும்...:

அத்துடன், 60 சதவீத மதிப்பெண் பெறாத தேர்வருக்காக, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில், மற்றொரு டி.இ.டி., தேர்வை உடனடியாக நடத்தவும், அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அக்., 3ம் தேதி, அடுத்த டி.இ.டி., தேர்வு நடக்கும்.இதன் முடிவு, அக்., இறுதிக்குள் வெளியிடப்படும். ஏற்கனவே நடந்த தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெறாத தேர்வர் மட்டுமே, இந்தத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.இந்தத் தேர்வுக்காக, தனியாக விண்ணப்பிக்கவோ, தேர்வுக் கட்டணம் செலுத்தவோ தேவையில்லை. புதிய, "ஹால் டிக்கெட்' அனுப்பப்படும்; அதில் குறிப்பிடும் மையங்களுக்குச் சென்று தேர்வு எழுதினால் போதும்.ஏற்கனவே நடத்திய தேர்வுக்கு, போதிய நேர அவகாசம் வழங்கவில்லை என, கடும் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அக்., 3ல் நடக்கும்,முதல் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய இரண்டு தேர்வுக்கும், தலா 3 மணி நேரம் வழங்கப்படும்.

மாற்றம் இல்லை:

கேள்வித்தாள் கடினமாக இருந்தது என, அனைவரும் கூறினர். ஆனால், இந்தத் தேர்விலும், இத்தனை ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக, பெண்கள் அதிகளவு மதிப்பெண் பெற்றுள்ளனர். அவர்களால் மட்டும் எப்படி முடிந்தது?கேள்வித்தாள் அமைப்பை புரிந்து, தேர்வுக்கு முழுவதுமாக தயாரானால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும். அடுத்து நடக்கும் டி.இ.டி., தேர்வு கேள்வித்தாளின் தரத்தில், எவ்வித மாற்றமும் இருக்காது. ஏற்கனவே இருந்த அதே தரம், தொடர்ந்து கடைபிடிக்கப்படும். கேள்வித்தாள் தரத்தில், சமரசம் கிடையாது.இதுவரை, 13 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி, இறுதி செய்யப்பட்டுள்ளது. அக்., இறுதிக்குள், மேலும், 26 ஆயிரம் ஆசிரியரை தேர்வு செய்யும் பணி முடிவடையும்.

இவ்வாறு சுர்ஜித் சவுத்ரி கூறினார்.

நன்றி:

 

24.8.12

தலைமை இல்லாமல் முடங்கிய சாரணர் இயக்கம்

தமிழக சாரணர் இயக்கத்தின் தலைமைப் பதவிகளான, புரவலர், தலைவர், ஆணையர் இடங்கள் காலியாக உள்ளதால், சாரணர் இயக்கத்தின் செயல்பாடுகள் முடங்கி உள்ளன.

பாரத சாரண, சாரணியர் தமிழ்நாடு மாநில தலைமையகம், சென்னை திருவல்லிக்கேணியில் இயங்குகிறது. இதன் புரவலராக, மாநில கவர்னரும்; தலைவராக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும்; மாநில முதன்மை ஆணையராக, கல்வித் துறை இயக்குனரும் செயல்படுவர். இந்த தலைமைப் பதவியிடங்கள், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நிரப்பப்படும். 2010ல், அப்போதைய கல்வித் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, தலைவராக பொறுப்பேற்றார். ஆட்சி மாற்றம் காரணமாக, 2011ல் அவர் ராஜினாமா செய்தார். இவரை தொடர்ந்து, மாநில முதன்மை ஆணையராக செயல்பட்ட, அப்போதைய பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் பெருமாள் சாமியும் ராஜினாமா செய்தார்.

செயல்படாத நிலை:
சாரண இயக்கப் பதவிகளை வகிக்க, கவர்னர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், கல்வித் துறை இயக்குனர் ஆகியோருக்கு, இயக்கத்தின் செயற்குழு அழைப்பு விடுக்கும். ஆனால், அழைப்பு விடுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், கடந்த ஓராண்டாக இந்தப் பதவிகள் காலியாக உள்ளன. இதனால், செயல்படாத நிலைக்கு சாரண இயக்கம் தள்ளப்பட்டு உள்ளது. மேலும், கடந்த, 2005லிருந்து, சாரண இயக்க மாநிலச் செயலர் பதவியில், நூலக இணை இயக்குனராக உள்ள தர்ம ராஜேந்திரன் செயல்படுகிறார். அரசின் அனுமதி பெறாமல் இந்தப் பதவியை அவர் வகித்து வருவதாக, தணிக்கைத் துறை குற்றம் சாட்டியது. இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காமல், செயலர் பதவியில் அவர் தொடர்வதாக, சாரண இயக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆர்வம் குறைகிறது:
இதுகுறித்து, சாரண இயக்க ஆசிரியர் ஒருவர் கூறியதாவது:
தலைவர்கள் இல்லாத காரணத்தால், இயக்கத்தின் பொதுக்குழு, செயற் குழு கூட்டப்படுவது இல்லை. இதனால், சாரண இயக்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்கி உள்ளன. மாணவர்களிடையே உள்ள தேசிய பங்கேற்பு ஆர்வமும், தற்போது குறைந்து வருகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள சாரண, சாரணியர் இயக்கத் தலைமை அலுவலகத்தில் இயங்கி வந்த விற்பனை பிரிவு முடங்கி உள்ளது. இதனால், அங்கீகரிக்கப்படாத நிறுவனங்களிடமிருந்து, மாணவர்களுக்கான சீருடை, "பேஜ்' உள்ளிட்டவைகளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குன்னூர் மாநில சாரண பயிற்சி மையத்தில், 15க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். முறையான பராமரிப்பு இல்லாததால், இந்த மையம் செயல்படவில்லை. இதே நிலை தான், ஆலந்தூர் பயிற்சி மையத்திற்கும். சாரண இயக்கத்தின் தலைமை பதவிகள் நிரப்பப்பட்டால் தான், இந்த மையங்கள் புத்துயிர் பெறும்.

இதுதவிர, ராஜ்ய புரஸ்கார் விருதுக்கு தேர்வு பெற்ற, 12 ஆயிரம் சாரணர்களுக்கு, இயக்கத்தின் புரவலரான கவர்னர் கையெழுத்திடாத காரணத்தால், விருதுகள் வழங்கப்படவில்லை. ஜனாதிபதி விருதுக்கும், அவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை.

இவ்வாறு ஆசிரியர் கூறினார்.

நன்றி:

 

டி.இ.டி., தேர்வு முடிவு வருமா, வராதா?

டி.இ.டி., தேர்வு முடிவு தயாராக உள்ள போதும், "வருமா, வராதா?' என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜூலை, 12ம் தேதி நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வை, 5.50 லட்சம் பேர் எழுதினர். தமிழக அரசு, முதல் முறையாக நடத்திய இத்தேர்வு கேள்வித்தாள் அமைந்த விதம், கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு, 3 மணி நேரம்; 150 மதிப்பெண்கள், டி.இ.டி., தேர்வுக்கு, ஒன்றரை மணி நேரம்; 150 மதிப்பெண்கள் என, இரு தேர்வுக்கும் மிகப்பெரிய முரண்பாடு; யாருமே சிந்தித்துப் பார்க்காத வகையில் அமைந்த கேள்விகள் என, அடுக்கடுக்காக பல்வேறு குமுறல்களை, தேர்வர் வெளிப்படுத்தினர்.

தேர்வர் மத்தியில் இருந்து, இதுவரை எதிர்பார்த்திராத அளவுக்கு, கடும் விமர்சனங்களை, டி.ஆர்.பி., எதிர்கொண்டது. 10 சதவீத தேர்ச்சியை எதிர்பார்த்த நிலையில், 2 சதவீதமாக தேர்ச்சி முடிவு சரிந்தது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருபத்தி ஐந்தாயிரம் பேரை தேர்வு செய்ய, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்க வேண்டிய கட்டாயத்தில், டி.ஆர்.பி., உள்ளது. ஆனால், பணியிடத்திற்கு ஒருவர் என்ற வீதத்தில் பார்த்தால் கூட, 10 ஆயிரம் பேர் மட்டுமே தேறுவர் என, கூறப்படுகிறது.தேர்வு முடிவைப் பற்றி, வெளிப்படையாக கருத்துக் கூற, டி.ஆர்.பி., மறுத்து வருகிறது. "தேர்வு முடிவு தயாராகி விட்டது; எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவோம்' என்று மட்டும், திரும்பத்திரும்ப கூறி வருகிறது.

உண்மையான தேர்ச்சி என்னவோ, அதை வெளியிட வேண்டும் என்பது தான், தேர்வரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கூடுதலாக தேவைப்படும் ஆசிரியரை, அடுத்த டி.இ.டி., தேர்வு மூலம் தேர்வு செய்ய வேண்டும் எனவும், தேர்வர் கோரிக்கை வைக்கின்றனர். ஆனால், தேர்வு முடிவை வெளியிட்டால், அது அரசியல் ரீதியாகவும், பெரும் விமர்சனங்களை ஏற்படுத்திவிடுமோ என, டி.ஆர்.பி., பயப்படுவது தான், முடிவு வெளியாமல் இருப்பதற்கு காரணம் என, கூறப்படுகிறது.

நன்றி:

 

23.8.12

விழிகளுக்கு இல்லை மரணம்; விடியலை காணும் உங்கள் விழி


தேசிய கண் தானம் வாரம் ஆண்டுதோறும் ஆக., 25ல் துவங்கி செப்., 8ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. நாம் மறைந்த பின்னும் இந்த அழகிய உலகை பார்க்கும் நம் கண்களுக்கு இறவா வரம் கொடுப்பது தான் "கண் தானம்' அந்த அர்ப்பணிப்பு மனதிற்கு நம்மை தயார் செய்வது தான் "தேசிய கண் தான வாரம்'

ஆண்டு முழுவதும் ஒவ்வொரு நாளுக்கு ஒரு பெயர் சூட்டி அதற்கு விழா எடுத்து வாழ்த்துகளை பரிமாறிக்கொள்கிறோம். அந்த வரிசையில் தேசிய கண் தானம் வாரத்தையும் நாம் வரவேற்று, பிறருக்கு நன்மை செய்யலாமே!

கோவை அரவிந்த் கண் மருத்துவமனை கருவிழி சிகிச்சை தலைமை டாக்டர் ரேவதி மற்றும் டாக்டர் மங்களா ஆகியோர் கூறியதாவது
:
கண் தானம் மகத்துவத்தை தெரிந்ததால் தான் இன்று ஆயிரக்கணக்கானோர் தங்கள் கண்களை தானமாக தர உறுதி அளித்துள்ளனர்; நம் நாட்டில் கண்புரைக்கு அடுத்து கருவிழி பாதிப்பால் ஏற்படும் பார்வை இழப்பு அதிகமாக உள்ளது.கருவிழி பாதிப்பை, கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குணப்படுத்த முடியும். கருவிழி வெண்மையாக கொண்டு பிறக்கும் குழந்தைகள் மற்றும் கருவிழியில் தழும்பு ஏற்படும் குழந்தைகளுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஒருவர் செய்யும் கண்தானம், இருவருக்கு கண் பார்வை கிடைக்க வழிவகுக்கிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் கண்கள் தேவைப்படுகிறது; ஆனால் 27 ஆயிரம் கண்கள் மட்டுமே தானமாக பெறப்படுகிறது. இவற்றில் 40 முதல் 50 சதவீத கருவிழிகளே பயன்படுத்தும் நிலையில் உள்ளன. இறப்புக்கு பின், தாமதமாக கண்கள் பெறப்படுவதே, தானமாக பெறப்படும் கண்களில் பலவற்றை பயன்படுத்த முடியாததற்கு காரணம். அரவிந்த் கண் மருத்துவமனையில் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை கடந்த 1997ல் துவக்கப்பட்டது. முதலாமாண்டு 38 கண்களே கிடைத்தது. பல நல்ல உள்ளங்களின் முயற்சி மற்றும் ஆதரவு காரணமாக கடந்த 2010ல் 1,410 மற்றும் 2011ல் 1,204 கண்கள் கிடைத்தது.

கண்ணாடி அணிபவர்கள், கண்புரை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் என, யார் வேண்டுமானாலும் கண் தானம் செய்யலாம். சமுதாயத்துக்கு உதவும் நோக்கில், ஒருவர் கண்தானம் செய்ய உறுதிமொழி அளிப்பது மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களையும் கண்தானம் உறுதிமொழி அளிக்க வழிவகை செய்ய வேண்டும். பல்வேறு காரணங்களால், கண் தானம் செய்ய உறுதிமொழி அளிப்பவர்களிடமும் சில நேரங்களில் கண்களை தானமாக பெற முடிவதில்லை. கண்தானத்தை ஊக்குவிக்க மருத்துவமனையில் "கிரீப் கவுன்சிலர்ஸ்' பணிறாற்றுகின்றனர். இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்களை தானமாக பெறுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவ்வாறு, டாக்டர்கள் ரேவதி மற்றும் மங்களா தெரிவித்தனர்.

தேசிய கண் தான வாரத்தை முன்னிட்டு, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், வரும் 25ல் துவங்கி செப்., 8ம் தேதி வரை மருத்துவமனை, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கண்தான உறுதிமொழி அளித்தல், பேரணி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

நன்றி:

 

தமிழகத்தை சேர்ந்த 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

தமிழகத்தைச் சேர்ந்த, பள்ளி ஆசிரியர்கள், 22 பேருக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி, மத்திய அரசு கவுரவிக்க உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான, செப்டம்பர் 5ம் தேதி, ஆண்டுதோறும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தில், சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், நல்லாசிரியர் விருதை வழங்குகின்றன.

கடந்த ஆண்டிற்கான, தேசிய நல்லாசிரியர் விருது, தமிழகத்தைச் சேர்ந்த துவக்கப் பள்ளி ஆசிரியர்கள், 15 பேர், பள்ளி கல்வித் துறை ஆசிரியர்கள், ஏழு பேர் என, மொத்தம், 22 பேருக்கு வழங்கப்பட உள்ளது. வரும், 5ம் தேதி, ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி, ஆசிரியர்களை கவுரவிக்கிறார்.

நன்றி:

 

21.8.12

'நமது முழக்கம்' மின்னிதழ் - மே 2012

N-M May. 2012

சி.இ.ஓ., பணியிடங்கள் "காலி'' சுணங்கும் அரசு திட்டங்கள்

தமிழகத்தில் 27 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் மாணவர் நலன் கருதி அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதில் சுணக்க நிலை ஏற்பட்டுள்ளது.மதுரை (எஸ்.எஸ்.ஏ.,), சிவகங்கை (எஸ்.எஸ். ஏ.,) விழுப்புரம் (ரெகுலர் மற்றும் எஸ்.எஸ்.ஏ.,) கடலூர் (ரெகுலர்), வேலூர் (எஸ்.எஸ்.ஏ.,), காஞ்சிபுரம் (எஸ்.எஸ்.ஏ.,) உள்ளிட்ட 27 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன. மேலும், பல்வேறு மாவட்டங்களில் 27 கல்வி அலுவலர் பணியிடங்களும் பல மாதங்களாக காலியாக உள்ளன.

பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, புத்தகப் பை, சீருடை, கலர் பென்சில், செருப்பு போன்ற என 13 வகையான விலையில்லா பொருட்களை அரசு அறிவித்துள்ளது. இத்திட்டங்களை செயல்படுத்தும் ஆய்வு அதிகாரிகளாக சி.இ.ஓ.,க்கள் உள்ளார்கள். சி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ள பகுதிகளில் இத்திட்டங்கள் முடங்கிபோயுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். முப்பருவ கல்வி முறையை செயல்படுத்துவதிலும் இந்த மாவட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்னை குறித்து அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்  சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது: பள்ளி கல்வி துறையில் சி.இ.ஓ.,க்களின் பங்கு முக்கியம். ஆய்வு அதிகாரிகளும் அவர்கள் தான். பல மாவட்டங்களில் 27 சி.இ.ஓ.,க்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது கல்வியில் நேரடியாகவும், மறைமுகமாவும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும். குறிப்பாக அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்படும். அதிகாரிகள் இதுகுறித்து சிறப்பு கவனம் செலுத்தி சி.இ.ஓ.,க்களை நியமிக்க வேண்டும். 25 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) பணியிடங்களும் காலியாக உள்ளன. அவற்றையும் சேர்த்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

நன்றி:

டி.ஆர்.பி. தேர்வுப் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வரும் தேர்வுப் பணிகள், தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன.

பள்ளி, கல்லூரி ஆசிரியர் தேர்வு, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கான ஆசிரியர் தேர்வு போன்றவற்றை, டி.ஆர்.பி., நடத்தி வருகிறது. அனைத்து பணியிடங்களுக்கும், போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட துறைகளிடம் தேர்வுப் பட்டியலை ஒப்படைக்கும் பணியை, டி.ஆர்.பி., செய்கிறது.

தேர்வுப் பணிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக, அதில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அதன்படி, தேர்வுப் பணிகளில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக, அதை தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், ஒப்பந்த அடிப்படையில் வழங்க, "டெண்டர்&' விளம்பரம் வெளியிட்டுள்ளது.

ஸ்கேனிங், பிரின்ட்டிங், தகவல் தொகுப்பு நிர்வாகம் மற்றும் தேர்வுப் பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நிறுவனத்திடம், முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டும் பணி வழங்கப்படும்.

அந்த நிறுவனத்தின் சேவையில் திருப்தி ஏற்பட்டால், ஒப்பந்தம் மேற்கொண்டு நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் நிறுவனம், தேர்வுப் பணிகளுக்கு தேவையான அனைத்து மின்னணு சாதனங்கள் மற்றும் தேவையான பணியாளரை நியமனம் செய்ய வேண்டும்.

ஸ்கேனிங், பிரின்ட்டிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும், டி.ஆர்.பி., இடத்தில் நடக்கும் எனவும், தேர்வு செய்யப்படும் நிறுவனம், திங்கள் முதல், சனிக்கிழமை வரை, தினமும் காலை, 9 முதல், மாலை 6 மணி வரை, வேலை செய்ய வேண்டும் எனவும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள சம்பத் மாளிகையில், நான்காவது தளத்தில், டி.ஆர்.பி., இயங்கி வருகிறது. இந்த தளத்தில் போதிய இட வசதி இல்லை. ஆறாவது மற்றும் எட்டாவது தளத்தில் இயங்கி வந்த, விளையாட்டு பல்கலை அலுவலகம், தரமணிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த இரு தளங்களையும், டி.ஆர்.பி., எடுத்துக் கொண்டது.

இந்த தளங்களில், தேர்வு செய்யப்படும் சேவை நிறுவனத்தின் அலுவலகம் அமைய, அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.

தேர்வுப் பணிகளுக்கான தகவல் தொழில்நுட்பப் பணிகளை, தற்போது, தனியார் நிறுவனம் ஒன்று வழங்கி வருகிறது. இந்நிறுவனம் பல ஆண்டுகளாக சேவை வழங்கி வரும் நிலையில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில், புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, தற்போது, "டெண்டர்&' கோரப்பட்டுள்ளது. இவ்வாறு அவை தெரிவித்தன.

நன்றி:

9.8.12

கல்வி உதவித்தொகையில் முறைகேடு இல்லை: பள்ளி கல்வி இணை இயக்குனர்

"தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கல்வி உதவி தொகையில் முறைகேடுகள் நடக்கவில்லை,'' என பள்ளி கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுப்பு) ராஜராஜேஸ்வரி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் செயல்பாடுகள் குறித்து பள்ளிகல்வி இனை இயக்குனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பள்ளி கல்வி இணை இயக்குனர் (பணியாளர்கள் தொகுப்பு) ராஜராஜேஸ்வரி கடந்த இரு நாட்களாக ஆய்வு செய்தார்.நேற்று தர்மபுரி செந்தில் மெட்ரிக்குலேசன் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.ஸி., ப்ளஸ் 2வில் கடந்த கல்வியாண்டில், 50 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி சதவீதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு கல்வி சதவீதத்தை அதிகரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

அப்போது, ராஜராஜேஸ்வரி கூறியதாவது:
தமிழகம் முழுவதும் பள்ளிகல்வி இணைஇயக்குனர்கள் மூலம் பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் எனது தலைமையில் நடந்த ஆய்வில் இங்கு மாணவர்களுக்கான உதவி தொகையில் முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு மாவட்டங்களுக்கு பணிக்கு வரும் ஆசிரியர்கள் தொடர் பணியாற்றாதாதல் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்கிறது. இதை போக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்.

இராண்டாம் பருவத்துக்கான பாட புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இப்பணி ஒரு சில நாட்களில் முடிக்கப்படும், இங்கு மாணவர்களுக்கு தேவையான கட்டிட வசதிகள் அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் நபார்டு வங்கி மூலம் செய்யபபடுகிறது. பாப்பாரப்பட்டியில் உள்ள உண்டு உறைவிட பள்ளியை ஆய்வு செய்தோம் அங்கு அனைத்து வசதிகளும் உள்ளது.

வரும் வழியில்:
பள்ளி வாகனங்களை சோதனை செய்ததில் பாப்பாரப்பட்டி தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி வாகனத்தில், 26 மாணவர்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட வாகனத்தில் 109 மாணவர்களை அழைத்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி வாகனத்தில், 26 பேருக்கு அனுமதிக்கப்பட்ட வாகனத்தில், 71 மாணவர்களை ஏற்றி செல்வதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆர்.டி.ஓ.அங்கமுத்துவிடம் தெரிவிக்கப்பட்டதின் பேரில் போக்குவரத்து ஆய்வாளர்கள் அந்த வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மாணவர்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உள்ள பழுதான் அரசு பஸ்களை உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு ஆங்கில பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கபடுவார்கள்.

இவ்வாறு கூறினார்.

நன்றி:

கல்வி உதவி கையாடல் வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றத் திட்டம்

கல்வி உதவித் தொகை கையாடல் வழக்கை சிபிசிஐடி அல்லது லஞ்ச ஒழிப்புதடுப்புப் பிரிவுக்கு மாற்ற மாவட்டக் காவல் துறை திட்டமிட்டுள்ளது.

சுகாதாரமற்ற தொழில் புரிவோர் குழந்தைகளுக்காக வழங்கப்பட்ட கல்வி உதவித் தொகையை பள்ளியில் படிக்கும் அனைத்துக் குழந்தைகளின் பெயரிலும் பட்டியல் தயாரித்து கையாடல் செய்ததாக நாமக்கல் மாவட்டத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் 77 பேர் அண்மையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கல்வி உதவித் தொகை கையாடல் என்பது மிகப் பெரிய ஊழலாக நடந்துள்ளது. இதில், இப்போது 77 தலைமையாசிரியர்கள் மட்டுமே சிக்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்கள், ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்குத் தேவையான ஆதாரங்களைத் திரட்டவும், அனைத்து வழிகளிலும் விரிவான விசாரணை நடத்தவும் சிபிசிஐடி அல்லது லஞ்ச ஒழிப்பு தடுப்புப் பிரிவு மேற்கொண்டால் மட்டுமே சிறப்பாக இருக்கும். எனவே இந்த வழக்கை இப் பிரிவுகளுக்கு மாற்றுவது தொடர்பாக உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்று மாவட்டக் காவல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

நன்றி:

 

உதவித் தொகை திட்டங்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவு

ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உதவித் தொகை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்காக மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் 99 பள்ளிகளுக்கு கல்வி உதவித் தொகையாக சுமார் ரூ.81 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில் முழுமையாகவும், பகுதி அளவிலும் பணம் கையாடல் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னை தொடர்பாக, 77 தலைமையாசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்தப் பிரச்னை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு தனித்தனியே சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

அதன் விவரம்:
ஆதிதிராவிடர் நலத் துறை மூலம் நடத்தப்படும் பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு துறையின் மூலமாக ஒவ்வொரு மாணவருக்கும் தலா ரூ.1,850-வீதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அரசு வழங்கிய கல்வி உதவித் தொகையை மாணவர்களுக்கு வழங்காமல் பள்ளித் தலைமையாசிரியர்கள் கையாடல் செய்தது தெரியவருகிறது.

அறிக்கை அனுப்புங்கள்:
ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசால் பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டங்கள் முறையாகச் செயல்படுத்தப்படுவது தொடர்பாக உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மூலம் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும். இதன்பின், தங்களது முழுமையான அறிக்கையை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆய்வின் மீது அதிரடி நடவடிக்கை:
 அனைத்து மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை கிடைத்த பிறகு, மாவட்டவாரியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி:

 

8.8.12

கிருஷ்ண ஜெயந்தி நாளை(09-08-2012) விடுமுறை: அரசு அறிவிப்பு

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை(09-08-2012) விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.

பள்ளி, கல்லூரி, அரசு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட இருக்கிறது. முன்னதாக தமிழக அரசு முன்பு வெளியிட்டு இந்து விழாக்கள் பண்டிகைகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா அடுத்தமாதம் செப்டம்பர் 9ம் தேதியாக இருந்தது.

அரசாணை எண்:708  நாள்: 08-08-2012
.

6.8.12

தமிழக கோவில்களில் செப்டம்பர் 8-ந்தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா - தமிழக அறநிலையத்துறை அறிவிப்பு

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 8-ந் தேதிதான் கொண்டாடப்படுகிறது என்று தமிழக அறநிலையத்துறை அதிகாரி தெரிவித்தார்.

எந்த தேதியில் கிருஷ்ண ஜெயந்தி:
தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அரசு விடுமுறை பட்டியலில் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 8 என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள நாள் காட்டியிலும் அன்றைய தினமே கிருஷ்ண ஜெயந்தி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக வீடுகளில் பயன்படுத்தப்படும் நாள்காட்டிகளில் கிருஷ்ண ஜெயந்தி வரும் 9-ந்தேதி (ஆகஸ்டு-9) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ணஜெயந்தி அன்று அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கிருஷ்ண ஜெயந்தி விழா வீடுகளில் உள்ள நாள்காட்டிகளில் கூறியபடி ஆகஸ்டு 9 அல்லது அரசு வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலில் இருப்பது போன்று செப்டம்பர் 8 கொண்டாடுவதா? என்பதில் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பக்தர்கள் குழப்பத்திற்கு உள்ளாகி உள்ளனர். கோவில்களிலும் எந்த தேதியில் விழா எடுப்பது என்று அறநிலையத்துறை அதிகாரிகளுக்கும் குழப்பம் ஏற்பட்டது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்ட இந்த குழப்பத்தை போக்க அரசு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது
:-
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் தேதிகள் இரண்டு விதமாக உள்ளது. ஆனால் செப்டம்பர் 8ந் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பெருமாள் கோவில்களில் கொண்டாடப்படுகிறது. இதே தேதியைத்தான் அரசு விடுமுறைப்பட்டியல் மற்றும் அரசு நாள் காட்டியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தேதியில் தான் ஸ்ரீரங்கம், சென்னை பார்த்தசாரதி கோவில், மதுரை திருமோக்கூர் பெருமாள் கோவில் உட்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா எடுக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:


தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - கேள்வியும் பதிலும்

Cce Faq & Clarifications

எங்கெங்கு காணினும் ஊழலடா!

நாமக்கல் மாவட்டத்தில், துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகளுக்காக ஆதி திராவிடர் நலத்துறை வழங்கிய கல்வி உதவித்தொகை ரூ.81 லட்சத்தில், சுமார் ரூ.68 லட்சத்தை கையாடல் செய்துள்ளதாக 77 பள்ளித் தலைமையாசிரியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.இது ஏதோ நாமக்கல் மாவட்டத்தில், தொடக்கப்பள்ளிகளில் மட்டுமே நடந்ததாகக் கருதத் தேவையில்லை.

தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி அனைத்திலும் இதுதான் நிலைமை! இது ஏதோ இந்த ஆண்டு மட்டும்தான் இப்படியாகிவிட்டது என்றும் கருதிவிட வேண்டாம். இது தமிழகத்தில் பல ஆண்டுகளாய் தொடர்ந்து நடைபெறும் முறைகேடுதான்.

துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காகக் கொடுக்கப்பட்ட உதவித்தொகையில் மட்டும்தான் இந்தக் கையாடல் என்று நினைத்தால் அதுவும் தவறு. எல்லா உதவித்தொகைகளிலும் இதுபோல் கையாடல் நடக்கிறது.

கையாடல் செய்த பணத்தைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மட்டுமே எடுத்துக் கொண்டார்கள் என்று கருதுவது மடமை. இதில் கல்வித்துறை அலுவலர்கள் அதிகாரிகளுக்கும் உரிய பங்கு முறையாகப் போய்ச் சேருகிறது என்பது விஷயம் தெரிந்தவர்களுக்கு எல்லாம் புரியும். சில இடங்களில், பள்ளி அமைந்துள்ள கிராமம், புறநகர் பகுதிகளில் உள்ள ஆளுங்கட்சிப் பிரமுகர்களுக்கும் முறையாகக் கிஸ்தி செலுத்தப்பட்டு வருகிறது. நடக்கும் முறைகேடுகள் பற்றி யாருமே பேசத் தயாராக இல்லை, அவ்வளவே!

2012-13 நிதிநிலை அறிக்கைப்படி பள்ளிக் கல்விக்காக ரூ. 14,555 கோடியைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது ஆசிரியர்களின் சம்பளம் நீங்கலாக சுமார் 40% தொகை மாணவர்களின் நலன் மற்றும் கல்வி மேம்பாட்டுக்காக செலவிடப்படுகிறது. இதில் மேலிடம் மட்டுமே ஊழல் செய்ய முடியும். ஆனால், கல்வி உதவித்தொகை, சீருடை வழங்குதல், காலணி வழங்குதல், பாடப்புத்தகங்கள் வழங்குதல், உணவுத் திட்டம், அனைவருக்கும் கல்வித் திட்டம், நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர்படை, விளையாட்டுப் போட்டிகள் இத்யாதி சில்லறை விவகாரங்களில்தான் பள்ளி அளவில் ஊழல் நடைபெறுகிறது. இந்த ஊழலுக்கு பச்சைக்கொடி காட்டும் கல்வித் துறை அதிகாரிகள்தான் இந்த ஊழலுக்கு அச்சாணி.

2011-12-ல் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.1,891 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2012-13-ல் 2,000 கோடி செலவிடவுள்ளனர். இதில் ரூ.700 கோடி மாநில அரசின் பங்குத்தொகை. மீதித்தொகை மத்திய அரசின் பங்கு. தரமான கல்வி, தொடக்கப்பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றுக்காக அளிக்கப்படும் இந்த நிதி, அந்தந்த மாவட்ட அதிகாரிகளின் மேற்பார்வையில், அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் மூலம் செலவிடப்படுகிறது.

அனைவருக்கும் கல்வித் திட்டம் அமலுக்கு வந்தபிறகு, தலைமையாசிரியர் பதவிக்கு அடிதடி, பேரம் அமலுக்கு வந்தன. இதுபோக, இப்போது தொடர் கல்வித் திட்டத்துக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகப் பள்ளிகளில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தில்தான் அதிகமான ஊழல் நடந்துள்ளது என்பது கல்வித் துறையுடன் தொடர்பு கொண்ட அனைவருக்குமே தெரியும்.

இடைநில்லாமல் படிக்க பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முறையே ரூ.1,500, ரூ.2,000 வைப்புநிதியாக அளிக்கப்படுகிறது. 21 லட்சம் மாணவர்களுக்கு ரூ.313 கோடியை அரசு ஒதுக்குகிறது. முதலில் "வைக்க வேண்டியதை வைக்காமல்', இவர்களுக்கு வைப்புநிதி கடிதங்கள் கிடைப்பதில்லை என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?கல்வி உதவித்தொகையைப் பள்ளி அளவில்தான் வழங்க முடியும். ஆனால், அந்த உதவித்தொகை இன்னும் வந்து சேரவில்லை என்று சொல்லி, இழுத்தடித்து, மறக்கச்செய்துவிடுவதுதான் வழக்கமான மோசடி முறை. பள்ளிக் கல்வி உதவித்தொகை சில நூறு ரூபாய்கள்தான். ஆகவே இந்த சிறுதொகையை ஒரு குடும்பத் தந்தை மறப்பது எளிது. இருப்பினும் 200 மாணவர் உள்ள பள்ளியில் குறைந்தது ரூ.50,000/-கல்வி உதவித்தொகை கிடைக்கும்.

நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, பசுமை மன்றம், பள்ளி விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும் நிதியில் பெரும்பகுதி மாணவர்களுக்கு வந்து சேருவது இல்லை. எத்தனை என்சிசி மாணவர்களுக்கு உடை, உணவுப்படி கிடைக்கிறது. பள்ளி விளையாட்டுப் பொருள்கள் தரமானவையா? போட்டிகளில் வழங்கப்படும் பரிசுப்பொருள் எத்தனை மதிப்புக்கு வழங்கப்பட வேண்டும்? வழங்கப்படும் பரிசுப்பொருளின் மதிப்பு என்ன? யாராவது கேள்வி கேட்டதுண்டா?

தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டவை, சரியாக கொடுக்கப்பட்டதா என மாணவர்களிடமும் பெற்றோரிடமும் விசாரித்தால், இந்த ஊழலின் விரிவையும் ஆழத்தையும் அரசு கண்டறிவது மிக எளிது. எந்தக் கட்டுப்பாடும், எந்தக் கேள்வியும் இல்லாமல் காசு கொடுத்தால் மாணவர்கள் மட்டும்தான் கெட்டுப்போவார்கள் என்றில்லை, ஆசிரியர்களும் கெட்டுப்போவார்கள்.

இந்தியாவுக்கு சுதந்திரம் ஏன் கிடைத்தது என்பதற்கான காரணம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதல்லவா புரிகிறது! மக்கள் வரிப் பணத்தையும், அரசு கஜானாவையும் அவரவர் திறமைக்கும் வாய்ப்புக்கும் தகுந்தபடி கொள்ளை அடித்துக் கொழித்துக் கொள்வதற்காகத்தான் நமக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்றும்; அவரவர்களுக்குத் தர வேண்டிய பங்கைத் தந்து விட்டால் தப்பித்துவிடலாம் என்றும்!

இருப்பினும் இத்தகைய அவநம்பிக்கையான சூழலிலும் ஊழலுக்கு எதிரான சில நல்ல நடவடிக்கைகள், புதிய நம்பிக்கைகளைத் தருகின்றன.

நன்றி:

 

5.8.12

480 நாட்கள் வேலை செய்தால் பணி நிரந்தரம்: ஐகோர்ட் தீர்ப்பு

"இரண்டு ஆண்டுகளில், 480 நாட்கள் தொடர்ந்து பணியாற்றியிருந்தால், தானாக அந்த ஊழியரின் பணி நிரந்தரமாகி விடும்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேட்டூர் அணை மின் வாரியத்தில், ஒப்பந்த தொழிலாளராக ராஜு என்பவர் பணியாற்றினார். 1991 முதல் 1999ம் ஆண்டு வரை, பல்வேறு ஒப்பந்ததாரர்களிடம், இவர் பணியாற்றியுள்ளார். அதன்பின், மின் வாரியத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். 2003ம் ஆண்டு நவம்பரில் இறந்தார். இவரை பணி நிரந்தரம் செய்து, மின் வாரியம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.

இதையடுத்து, மின் வாரியத்தில், 480 நாட்களுக்கும் மேல் பணியாற்றியுள்ளதால், பணி நிரந்தர அந்தஸ்து பெற கணவருக்கு உரிமையுள்ளது என்றும், குடும்ப பென்ஷன், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரி, சென்னை ஐகோர்ட்டில் ராஜுவின் மனைவி லட்சுமி மனு தாக்கல் செய்தார். மின் வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வாரியத்தின் நிரந்தர ஊழியர் இல்லை என்பதால், 1981ம் ஆண்டு சட்டப்படியான பலன்களை வழங்க முடியாது என கூறப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் அடங்கிய "டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
ஒரு ஊழியர், இரண்டு ஆண்டுகளில் தொடர்ந்து, 480 நாட்கள் பணியாற்றியிருந்தால், அவருக்கு நிரந்தர ஊழியர் அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். கடந்த 1981ம் ஆண்டு சட்டப்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டியது, அந்த நிறுவன உரிமையாளரின் கடமை. அவ்வாறு நிரந்தர அந்தஸ்து வழங்கப்படவில்லை என்றாலும், 480 நாட்கள் பணி முடித்திருந்தால், தானாக நிரந்தர ஊழியராக ஆகி விடுவார்.

எனவே, மனுதாரருக்கு குடும்ப பென்ஷன், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை, எட்டு வாரங்களுக்குள் வழங்க வேண்டும். மனுதாரரின் மகள் வளர்மதிக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்கக் கோரிய மனுவை, விதிகளின்படி, நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து, பைசல் செய்ய வேண்டும்.

இவ்வாறு, "டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

நன்றி:

 

புத்தகம் வைத்து தேர்வு எழுதினால் மாணவர் திறன் மேம்பட வாய்ப்பு

மாணவர் மனப்பாடம் செய்யும் நிலைமாறி, அறிவு மேம்படும் வகையில் புத்தகத்தை வைத்து எழுதும் தேர்வு முறை அமல்படுத்தப்படுமா, என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது மாணவர் அறிவை மேம்படுத்தவும், புத்தக சுமையை குறைக்கவும் எட்டாம் வகுப்புவரை முப்பருவ முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. பெற்றோரிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இம்முறையைப் போலவே, தேர்வு முறையிலும் நவீனத்தை அமல்படுத்த வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போதுள்ள முறையில் மாணவர்கள் மனப்பாடம் செய்யும் முறையே அதிகம் உள்ளது. பெரும்பாலும் "புக் பேக்' என்ற, புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள வினாக்களே அதிகம் கேட்கப்படுகிறது. எனவே வினாவிடை புத்தகங்களையே அதிகம் நம்பி உள்ளனர். மனப்பாட சக்தியுள்ள மாணவரே அறிவுத்திறன் மிக்கவர் என்ற நிலை உள்ளது. இதைவிடுத்து புத்தகத்தினுள் இருந்து ஒரு வினாவை கேட்டால், "வினாத்தாள் மிகவும் கடினம்' என விமர்சனம் கிளம்புகிறது.

ஒரு தலைப்பிலான பாடம் அல்லது கேள்விக்கு ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை புரட்டிப் படிக்கும் வகையில் மாணவர்கள் தேர்வு முறை இருக்க வேண்டும். மாணவர்களுக்கு பாடம் நடத்தி முடித்தபின், தேர்வில் வினாக்களை பாடப்புத்தகத்தினுள் இருந்து நுணுக்கமாக கேட்க வேண்டும். தேர்வு எழுதும்போது புத்தகத்தையும் கையில் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். அவர்கள் விடையை புத்தகங்களில் தேடி எடுத்து எழுத வேண்டும். இதற்கு புத்தகத்தை ஆழ்ந்து படித்திருந்தால்தான் விடையை தெளிவாக எழுத முடியும். அரசு துறைகள் பலவற்றில் இதுபோன்ற தேர்வுகள் (டிபார்ட்மென்டல் எக்ஸாம்) தற்போது நடைமுறையில் உள்ளது.


உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் கூறுகையில், "இத்தேர்வு மேலோட்டமாக பார்க்கும்போது எளிதாகத் தெரியலாம். ஆனால் மாணவர்கள் விடையை அறிய புத்தகத்தை ஆழ்ந்து படிப்பர் என்பதால், புரிந்துகொள்ளும் திறன் வளரும். அவர்களின் முழுத்திறனும் வெளிப்படும்,'' என்றார்.

நன்றி:

 

கிருஷ்ண ஜெயந்தி - விடுமுறையில் குழப்பம்

கிருஷ்ண ஜெயந்தியை பொதுமக்கள் இம்மாதம் 8ம் தேதி கொண்டாடும் நிலையில், கிருஷ்ண ஜெயந்திக்கான அரசு விடுமுறை அடுத்த மாதம் 8ம் தேதி விடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பகவான் கிருஷ்ணர் ஆவணி மாதம் அஷ்டமி திதியில், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். இந்தாண்டு, கிருஷ்ணஜெயந்தி வரும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஆவணி மாதத்தில் வரும் வேளையில் நிர்ணயம் செய்துள்ளனர். இதையொட்டியே அனைத்து காலண்டர்களிலும் கிருஷ்ண ஜெயந்தி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் விடுமுறை பட்டியலிலும் செப்டம்பர் மாதம் 8ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி என குறிப்பிடப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது இதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, ஆவணி அவிட்டத்தன்று பிராமணர்கள் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையடுத்த, எட்டாவது நாள் வரும் அஷ்டமி திதியன்று கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு, ஆவணி அவிட்டம், ஆடி மாதத்தில் 17ம் தேதி அதாவது இம்மாதம் முதல் தேதி வந்துள்ளது. இதைபின்பற்றி, பிராமணர்கள் அன்று பூணூல் மாற்றிக் கொண்டனர். இதையடுத்து, கிருஷ்ண ஜெயந்தி தற்போது இம்மாதம் 9ம் தேதியன்று அஷ்டமி திதியில் கொண்டாடப்படுகிறது. ஆனால், அரசு அறிவிப்போ, அடுத்த மாதம் 8ம் தேதி அஷ்டமி திதியாக உள்ளது.

இதுகுறித்து, ஜோதிடர் சீனிவாசன் கூறும்போது, "ஆவணி மாதத்தில் முதல் தேதி மற்றும் 30ம் தேதியில் என இரண்டுமுறை அமாவாசை வருகிறது. இதனால் தான் ஆடிமாதத்தில் ஆவணி அவிட்டம் வருகிறது. இதை அடியொற்றியே, கிருஷ்ண ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது,'' என்றார்.

இதைத் தொடர்ந்து, அரசு விடுமுறை தினம் மாற்றப்படுமா என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நன்றி:

சிபிஎஸ்இ 10, 12 வகுப்புகளில் ‘திறந்த புத்தகம்’ தேர்வு முறை

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளில் ‘திறந்த புத்தகம்’ தேர்வு முறை வரும் 2013&14ம் ஆண்டு நடைமுறைக்கு வர இருக்கிறது.

மனப்பாடம் செய்து பாடம் படிக்கும் நடைமுறைக்கு ஓரளவு தீர்வு காணும் வகையில் சிபிஎஸ்இ புதிய தேர்வுமுறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. 10, 12ம் வகுப்புகளில் போர்டு தேர்வுகளுக்கு திறந்த புத்தகம் என்ற தேர்வு முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 2013&14 முதல் இது நடைமுறைப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

திறந்த புத்தம் என்ற உடன் புத்தகத்தை திறந்துவைத்து தேர்வு எழுதும் நடைமுறை அல்ல. தேர்வில் எந்தெந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் இடம்பெறுமோ 4 மாதங்கள் முன்பே அது தொடர்பாக மாணவ மாணவியருக்கு தெரிவிக்கப்படும். அதனை மட்டும் படித்தால் போதும் என்ற நிலை மாணவர்களுக்கு உருவாவதால் அவர்களின் மனரீதியான அழுத்தம், தேர்வு பயம் குறையும். முடிந்த வரை நன்றாக படிக்கவும், தேர்வு எழுதவும் முடியும் என்பது இதற்கு மற்றொரு காரணம் ஆகும்.


பள்ளிகளில் தேர்வு முறையில் புனரமைப்பு செய்வது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நியமித்த குழு இதுபோன்ற பரிந்துரைகளை அளித்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் புதிய தேர்வு முறை தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

நன்றி:

 

4.8.12

தேசிய விளையாட்டு ஹாக்கியா? மறுக்கிறது மத்திய அமைச்சகம்

ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து ஆறு முறை தங்கம் வென்ற, ஹாக்கி விளையாட்டை, நாமெல்லாம் தேசிய விளையாட்டு என நினைக்கலாம். ஆனால், ஹாக்கி உட்பட எந்த ஒரு விளையாட்டிற்கும், "தேசிய விளையாட்டு என்ற அந்தஸ்து கொடுக்கப்படவில்லை என, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நம் நாட்டின் தேசிய விளையாட்டு எது? தேசிய விலங்கு, தேசிய பறவை, தேசிய பூ, தேசிய சின்னம், தேசிய கீதம் போன்றவை அறிவிக்கப்பட்டிருந்தால், அதற்கான உத்தரவின் சான்றிதழ் நகல்களைத் தர வேண்டும் எனக் கேட்டு, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ், லக்னோவைச் சேர்ந்த 10 வயது ஐஸ்வர்யா பராஷர் என்ற சிறுமி, பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பித்திருந்தார். பிரதமர் அலுவலகம் இந்த விண்ணப்பத்தை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியது. அதில், தேசிய விளையாட்டு எது என்ற கேள்விக்கு பதில் அளிக்கும்படி, மத்திய விளையாட்டு அமைச்சகத்தை, உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டது.


அதன்படி, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. அதில், "எந்த ஒரு விளையாட்டையும் தேசிய விளையாட்டாக மத்திய அரசு அறிவிக்கவில்லை. தேசிய விளையாட்டு என்ற அந்தஸ்து, எந்த விளையாட்டிற்கும் கொடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், மத்திய அரசின், www.india.gov.in இணையதளத்தில், தேசிய சின்னங்கள் என்ற தலைப்பில், 14 சின்னங்கள் இடம் பெற்றுள்ளன. அதில், தேசியக் கொடி, தேசியப் பறவை, தேசிய மரம், தேசிய கீதம், தேசிய நதி, தேசிய விளையாட்டு(ஹாக்கி) என, 14 வகையான சின்னங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:

கும்பகோணம் பள்ளி தீவிபத்து வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

கும்பகோணத்தில் 2004ம் ஆண்டில் நிகழ்ந்த பள்ளி தீவிபத்து வழக்கை, 6 மாதங்களுக்குள் முடிக்க தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டிற்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2004ம் ஆண்டு, ஜூலை16ம் தேதி கும்பகோணத்தில் செயல்பட்டு வந்த பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 94 குழந்தைகள் பலியாயினர். இச்சம்பவம் தொடர்பாக வட்டாட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில், குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக, இந்த வழக்கு தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

7 பேர் விடுதலை: இவ்வழக்கு தொடர்பாக, இதுவரை 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை கோரி வழக்கு: இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் கல்வி அதிகாரி பாலகிருஷ்ணன், தன்னை இவ்வழக்கிலிருந்து விடுவிக்குமாறு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது, தீவிபத்து சம்பவம் நடைபெறுவதற்கு 1 ஆண்டிற்கு முன்னதாகவே, நான் அம்மாவட்டத்திலிருந்து வேறு இடத்திற்கு மாறிச் சென்று விட்டதாகவும், எனவே, என் மீது தவறில்லை எனக்கூறி, இவ்வழக்கிலிருந்து தன்னை விடுவிக்குமாறு அவர் அதில் தெரிவித்திருந்தார். அவர் பணியில் இருந்தபோது, பள்ளி விபத்து தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டிருந்தால், இவ்விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று கூறி பாலகிருஷ்ணனின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

சுப்ரீம் கோர்ட் உத்தரவு : கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வழக்கை, அடு்த்த மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டிற்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நன்றி:

 

பள்ளிக் கல்வி இயக்குனராக தேவராஜன் நியமனம்





பள்ளிக்கல்வி இயக்குனராக தேவராஜன், நேற்று நியமிக்கப் பட்டார்.


ஈரோடு மாவட்டம், குமலன்குட்டை கிராமத்தைச் சேர்ந்த 55 வயதான தேவராஜன், எம்.ஏ., - எம்.எட்., பட்டதாரி. 1995ல், போட்டித் தேர்வு மூலம் மாவட்டக் கல்வி அதிகாரியாக தேர்வு பெற்று, பின் முதன்மைக் கல்வி அலுவலராக, பல மாவட்டங்களில் பணியாற்றினார்.

இணை இயக்குனர் பதவி உயர்வு பெற்று, தேர்வுத்துறை, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும், இயக்குனர் பதவி உயர்வுக்குப் பின், தொடக்கக் கல்வி இயக்குனர், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் ஆகிய பதவிகளுக்குப் பின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனராக பணிபுரிந்து வந்தார். தற்போது பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரும் 6ம் தேதி, புதிய பொறுப்பை ஏற்கிறார். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், புதிய பாடத் திட்டங்களை மெருகேற்றியது; முப்பருவ கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு திட்டங்கள் குறித்து பயிற்சி கையேடுகளை தயாரித்து, மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தது உள்ளிட்ட பல்வேறு பணிகளை, தேவராஜன் சிறப்பாக செய்து முடித்தவர்.

கல்வியில் பின் தங்கியுள்ள வட மாவட்டங்களை முன்னேற்றுவது; ஒட்டுமொத்த கல்வித்தரத்தை உயர்த்துவது; பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, தரமான, புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது போன்றவை, புதிய இயக்குனர் முன் வைக்கப்பட்டுள்ள சவால்கள்.

நன்றி:

2.8.12

லண்டன் செல்கிறார் அமைச்சர் சிவபதி

லண்டனில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிடுவதற்காக தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் விளையாட்டுத்துறை விளையாட்டுத்துறை அமைச்சர் சிவபதி செல்ல உள்ளதாகதமிழக விளையாட்டுத்துறை மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் லண்டன் செல்ல உள்ள அமைச்சர் சிவபதியின் பயணம் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் செல்லும் சிவபதி அங்கு ஒரு வாரம் தங்கி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நன்றி:



பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக நாகராஜன் நியமனம்

பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக நாகராஜன் நியமிக்கப்பட்டார். இவர், நேற்று புதிய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக, தற்காலிக அடிப்படையில் சிதம்பரம் பணியாற்றி வந்தார். தற்போது, சட்டத் துறையில் சார்பு செயலராக பணியாற்றி வந்த நாகராஜனை, பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக பணி நியமனம் செய்து, சட்டத்துறை செயலர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். கடந்த 31ம் தேதி, சார்பு செயலர் பணியில் இருந்து நாகராஜன் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை சட்ட அலுவலராக நேற்று நாகராஜன் பொறுப்பேற்றார்.

நன்றி:

 

ஆக., 11ல் சென்னைக்கு வருகிறது "சயின்ஸ் எக்ஸ்பிரஸ்' சிறப்பு ரயில்

இந்தியா முழுவதும் வலம் வரும், "சயின்ஸ் எக்ஸ்பிரஸ்' கண்காட்சி ரயில், ஆக., 11ல் சென்னை வருகிறது.


உயிரி பன்மயம் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், "சயின்ஸ் எக்ஸ்பிரஸ்' சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில், 12 பெட்டிகள் உள்ளன. மாணவர்களுக்கு விளக்கம் அளிக்க, இந்த ரயிலில், 60 பேர் பணியாற்றுகின்றனர். உயிரினங்கள் அழிந்து வருவதை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில், ஆக., 11ல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வருகிறது. அங்கு மாணவர்கள், பொதுமக்கள் பார்வைக்காக, ஆக., 15 வரை நிறுத்தப்படுகிறது. மதுரையில் கூடல் நகர் ரயில் நிலையத்தில் ஆக., 16 முதல் 19 வரையும், கன்னியாகுமரியில் ஆக., 20 முதல் 23ம் தேதி வரையும் நிறுத்தப்படுகிறது. மாணவர்கள், இதை பார்வையிடலாம்.

இதில், மாணவர்களுக்காக தினசரி ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, இறுதி நாளில் பரிசும் வழங்கப்படுகிறது. மேலும், இதில் அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. 

இது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள, அந்தந்த மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்களை அணுகலாம் என, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தெரிவித்து உள்ளது.

நன்றி:

 

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்