தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

16.10.11

வாக்கெடுப்புக்கு முதல் நாள் பள்ளிகளுக்கு விடுமுறை

Local Body Elections - 14-10-2011

12.10.11

அக்.,17, 19 ல் அரசு விடுமுறை - அரசாணை

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் பகுதிகளில், வரும் 17ம் தேதியும் (திங்கள்), இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் பகுதிகளில் வரும் 19ம் தேதியும் (புதன்) அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. 

இதன்படி, அந்த தினங்களில் அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த தொழிற்சாலைகள், அரசு கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டிருக்கும்.

 
Holiday - Local Body Election

7.10.11

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான கையேடு

Polling Officers Hand Book

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - வாக்குச் சாவடி தலைமை அலுவலர் கையேடு

Presiding OfficersHand Book

3.10.11

7% அகவிலைப்படி அரசாணை எண்: 273 நாள்: 03 - 10 - 2011

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

.

அதிகாலையில் "மாதிரி ஓட்டுப்பதிவு"

உள்ளாட்சி தேர்தலில், ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்குகிறது. ஓட்டுப் பதிவிற்கு முன் நடத்தப்படும் "மாதிரி ஓட்டுப்பதிவை' எத்தனை மணிக்கு நடத்துவது என்ற குழப்பம் ஏற்பட்டது. 

தேர்தல் கமிஷன், மாதிரி ஓட்டுப்பதிவை, ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பாக நடத்த வேண்டும் என கூறியுள்ளது. இதனால், அதிகாலை 5.30 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது. 

மாதிரி ஓட்டுப்பதிவு நடத்திக் காட்ட குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். அதிகாலை 5.30 மணிக்கு அலுவலர்கள் பணியை துவக்கினால் தான், ஓட்டுப்பதிவை சரியான நேரத்தில் துவக்க முடியும். 

நன்றி:

தேர்தல் அலுவலர்களுக்கு கமிஷன் புதிய உத்தரவு

நகராட்சி, பேரூராட்சிகளில் முதன் முறையாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் தேர்தல் அலுவலர்களுக்கு, கமிஷன் புதிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.
  • தலைவர், கவுன்சிலருக்கு என இரண்டு ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதால், அவற்றை இரண்டு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். 
  • கமிஷன் அறிவித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில் வாக்காளர்களை அனுமதிக்க வேண்டும். 
  • ஒரு ஓட்டுக்கு மேல் பட்டனை அழுத்திவிடாமல் இருக்க கவனமுடன் கண்காணிக்க வேண்டும். 
  • இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் பறக்கும் படைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 
  • முன்னோட்ட ஓட்டுப்பதிவை செய்து காட்ட வேண்டும். 
  • ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முதல் நாளே, ஓட்டுச்சாவடியில் வந்து தங்க வேண்டும்
என கூறப்பட்டுள்ளது.

நன்றி:  


2.10.11

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 7 சதவீதம் உயர்கிறது; விரைவில் அரசாணை வெளியாகிறது

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக் கேற்ப அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும். ஜனவரி 1-ந்தேதியை மையமாகவும் ஜூலை 1-ந்தேதியை மையமாகவும் வைத்து அக விலைப்படி கொடுக்கப்படுகிறது.
 
கடந்த மாதம் 15-ந்தேதி மத்திய அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. ஏற்கனவே பெற்று வந்த 51 சதவீத அகவிலைப்படியுடன் தற்போது உயர்த்தப்பட்ட 7 சதவீதமும் சேர்த்து 58 சதவீத அகவிலைப்படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறுகிறார்கள்.
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டவுடன் தமிழக அரசு ஊழியர்கள் தங்களுக்கு எப்போது உயரும் என்று எதிர்பார்த்து இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் முதல் - அமைச்சர் ஜெயலலிதா அகவிலைப்படியை உடனே உயர்த்தி கொடுக்க முடிவு செய்தார்.
 
நிதித்துறை செயலாளர் சண்முகத்துடன் ஆலோசனை நடத்தி மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்துட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் அதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஓரிரு நாட்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
 
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியதும் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி கொடுக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டார். தற்போது இடைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் மத்திய- மாநில தேர்தல் ஆணையத்திடம் அகவிலைப்படி உயர்வு வழங்க தமிழக அரசு முறைப்படி அனுமதி பெற்றுள்ளது.
 
அகவிலைப்படி உயர்த்தியதற்கான அரசாணையை மத்திய அரசு இன்னும் வெளியிடாததால் தமிழக அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசின் அரசாணையை எதிர் பார்த்து தமிழக அரசு இருப்பதே இந்த தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி அடையக்கூடிய அகவிலைப்படி உயர்வு விரைவில் வருகிறது. அதற்கான அனைத்து அரசு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு தயாராக இருக்கின்றன.
 
அறிவிக்கப்பட உள்ள புதிய அகவிலைப்படி 7 சதவீதத்துடன் சேர்த்து மொத்தம் 58 சதவீத அக விலைப்படியை இனி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறுவார்கள். தட்டு ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 7 சதவீத அக விலைப்படி நிர்ணயிக்கப்படுகிறது. இதன் மூலம் குறைந்த பட்சம் ரூ. 600 முதல் அதிக பட்சமாக ரூ. 5000 வரை சம்பள உயர்வு கிடைக்கும். 13 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் 5 லட்சத்து 50 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் மற்றும் 3 லட்சம் அரசு நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களும் பயன் அடைவார்கள். 
 
நன்றி:

1.10.11

அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

அரசு அலுவலக ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு கடந்த வாரம் 7 சதவீத அகவிலைப்படியை உயர்த்தி வழங்க உத்தரவிட்டது. 

அதை தொடர்ந்து தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நன்றி:



பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்