- 2007 பிப்      02இல் சென்னையில் வள்ளுவர் கோட்டம் முன்பு 5000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்      கலந்துகொண்ட கோரிக்கை முழக்க ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
 
- கோரிக்கையை      வலியுறுத்தி முதலமைச்சர், கல்வி அமைச்சர், கல்விச் செயலாளர் ஆகியோருக்கு      பல்லாயிரக்கணக்கான தொலை நகல் அனுப்பட்டது.
 
- 2007 நவம்பர்      24ல் சென்னையில் 5000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்துகொண்ட      மாநாட்டில் கல்வி அமைச்சர் கலந்துகொண்டு கோரிக்கையை பரிசீலிப்பதாக உறுதி      அளித்தார்.
 
- மாவட்டத்      தலைநகரங்களில் 2008  மார்ச் 28ல் மாலை      நேர தர்ணா நடத்தப்பட்டது.
 
- 2008 ஜீன்      கடைசி வாரத்தில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கருப்பு பேட்ஜ்      அணிந்து பணிக்கு சென்றோம்.
 
- 2008 ஜீன் 30      மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடத்தப்பட்டுள்ளது.
 
- 12-12-2007, 26-12-2007      உள்ளிட்ட பலநாட்களில் பள்ளி கல்விசெயலருடன் கோரிக்கைச் சார்ந்து      சந்தித்துள்ளோம்.
 
- மேலும் நம்      கோரிக்கை வலியுறுத்தி பள்ளிக் கல்வி இயக்குனர் மற்றும் பள்ளி கல்வி இணை      இயக்குனர்(பணியாளர் தொகுதி) ஆகியோரை மாதந்தோறும் சந்தித்து வலியுறுத்தி      வருகிறோம்.
 
- 24-12-2007இல்      நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட கல்வி அமைச்சரின் உறுதி மொழிக்கு பிறகு 26-12-2007,      மற்றும் 15-04-2008 ஆகிய தேதிகளில் சந்தித்து கோரிக்கை குறித்து      வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
- மேற்கண்ட  பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பிறகு      கோரிக்கை குறித்து பேசுவதற்கு பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களால்      அழைக்கப்பட்டு 12.08.2008 மற்றும் 19.09.2008 ஆகிய தேதிகளில் நமது சங்க      நிர்வாகிகளால் கோரிக்கையின் நியாயம் முன்வைக்கப்பட்டு, மதிப்புமிகு      பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கோரிக்கை      நிறைவேற்ற அரசுக்கு கடித தொடர்பில் உள்ளதாக எழுத்துப் பூர்வ கடிதமும்      பெறப்பட்டுள்ளது.
 
