தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.12.12

புதிய முதுகலை ஆசிரியர் பணி நியமனம்: டிசம்பர் 31இல், "ஆன்-லைன்" கலந்தாய்வு

"புதிய முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன  "ஆன்-லைன்" கலந்தாய்வு டிசம்பர் 31இல், நடைபெறும்" என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 2,308 முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணி நடந்தது.

இதற்கிடையே, தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு டி.ஆர்.பி.அனுப்பியுள்ளது. அனைவரது விவரங்களும், கல்வித்துறைக்கு வந்துசேர, மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கும்.

அதன்பின் "புதிய முதுகலை ஆசிரியர்கள் பணி நியமன  "ஆன்-லைன்" கலந்தாய்வு டிசம்பர் 31இல், நடைபெறும்" என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
.

27.12.12

குறுவள மைய பயிற்சி (CRC) - 05.01.2013

தொடக்க/ உயர் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான அடுத்த குறு வள மைய பயிற்சி (CRC) 05.01.2013 அன்று நடைபெறுகிறது.

"கலை மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல்" என்ற தலைப்பில் தொடக்க / உயர் தொடக்கப் பள்ளி குறு வள மையங்களில் பயிற்சி நடைபெறும்.
 .

ஜனவரி மாதத்தில் 13 விடுமுறை நாட்கள்

வருடந்தோறும் ஜனவரி மாதம் என்றாலே, "ஜாலி' மாதம் தான். இம்மாதத்தில் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை மட்டும், 13 நாட்கள் கிடைக்கிறது. இதிலும், தொடர்ந்து, ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும் இன்னொரு வாய்ப்பும் ஒளிந்திருக்கிறது.

ஜன., 12 சனி, ஜன., 13 போகி, ஜன., 14 பொங்கல், ஜன., 15 திருவள்ளுவர் தினம், ஜன., 16 உழவர் தினம் ஆகிய ஐந்து நாட்கள், தொடர்ச்சியாக அரசு விடுமுறை. இதைத் தொடர்ந்து, ஜன., 19, 20 சனி, ஞாயிறும் விடுமுறை.ஒரு அரசு ஊழியர், இடையில் உள்ள ஜன., 17, 18 ஆகிய, இரு நாட்கள் மட்டும் விடுப்பு எடுத்தால், அவருக்கு தொடர்ந்து ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

அது மட்டுமா? ஜன., 1 புத்தாண்டு, ஜன., 5 சனி, ஜன., 6 ஞாயிறு, ஜன., 25 மிலாடி நபி, ஜன., 26 குடியரசு தினம், ஜன., 27 ஞாயிறு ஆகிய நாட்களும் விடுமுறை. 31 நாட்கள் உள்ள இம்மாதத்தில், விடுமுறை மட்டுமே, 13 நாட்கள்.
.


ஆன்-லைன் வழி சான்றிதழ் சரிபார்ப்பு: அடுத்த கல்வி ஆண்டில் அமல்

ஆன்-லைன் வழியாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம், அடுத்த ஆண்டில் அமலுக்கு வருகிறது. இந்த புதிய திட்டத்தால், உயர்கல்வி நிறுவனங்கள், தங்களிடம் சேரும் மாணவர்களின் சான்றிதழ்களை, உடனுக்குடன் சரிபார்க்க முடியும். போலி சான்றிதழ்கள் ஊடுருவலையும், எளிதில் தடுத்து நிறுத்த முடியும்.

பிளஸ் 2 தேர்வுக்குப் பின், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்வேறு உயர்கல்வி படிப்புகளில் சேர்கின்றனர். இவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆண்டுதோறும் அரசு வேலைகளில் சேர்பவர்களின் சான்றிதழ்கள் என, ஆண்டுக்கு பல லட்சம் சான்றிதழ்களை, சரிபார்க்க வேண்டிய பெரும் பணியால், தேர்வுத்துறை திணறி வருகிறது.

தேர்வுத்துறை இயக்குனரகத்தில், சான்றிதழ் சரிபார்ப்பு பிரிவுகளில், போதுமான பணியாளர்கள் இல்லை. இதனால், லட்சக்கணக்கான சான்றிதழ்கள், சரிபார்ப்புக்காக, ஆண்டுக்கணக்கில் கிடப்பில் இருக்கின்றன. இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு, முந்தைய ஆட்சியில், ஆன்-லைன் வழியாக, சான்றிதழ்களை சரிபார்க்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

தேசிய தகவல் மையத்தின் (நிக்), தொழில்நுட்ப உதவியுடன், ஆன்-லைன் வழியாக, சான்றிதழ் சரிபார்க்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு உத்தரவிட்டது. இதற்கு தேவையான மின்னணு சாதனங்கள் வாங்க, 8.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், ஒரு வடிவமைப்பு உதவியாளர் பணியிடமும் அனுமதிக்கப்பட்டது.

திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, நிக் தேர்வுத்துறை அதிகாரிகள், டேட்டா சென்டர் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர், பல்வேறு கட்டங்களில் கூடி, விவாதித்தனர். இதைத் தொடர்ந்து, தேவையான மின்னணு சாதனங்கள் வாங்கப்பட்டன. வடிவமைப்பு உதவியாளர் பணியிடமும் நிரப்பப்பட்டது. ஒட்டுமொத்த பணிகளையும், தேர்வுத்துறை இயக்குனரகம் மேற்பார்வை செய்து வருகிறது.

திட்டத்தின்படி, கணிசமான எண்ணிக்கையில், மாணவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றிற்கும், தேர்வுத்துறையால், குறியீட்டு எண் ஒன்று வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய விரும்பும் கல்வி நிறுவனங்கள், சரிபார்ப்புக்கான கட்டணத்தை செலுத்தி, அதற்குரிய கருவூலச்சீட்டு ரசீது, சரிபார்க்க வேண்டிய மதிப்பெண் சான்றிதழ்கள் குறித்த பட்டியலை, தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும்.

அப்படி அனுப்பினால், தேர்வுத்துறை இயக்குனரகத்தில் நிறுவப்படும் சாதனம் மூலம், சம்பந்தபட்ட கல்வி நிறுவனம், குறிப்பிட்ட சான்றிதழ்களை, தேர்வுத்துறை இணையதளம் வழியாக சரிபார்த்துக் கொள்ள, அனுமதி வழங்கப்படும்.

இதன்பின், சம்பந்தபட்ட உயர்கல்வி நிறுவனங்கள், சான்றிதழ்களை சரிபார்த்து, வேறுபாடுகள் நிறைந்த சான்றிதழ்கள் இருந்தால், அதை நகல் எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும். மாறுபட்ட விவரங்கள் கொண்ட சான்றிதழ்களை, சம்பந்தபட்ட கல்வி நிறுவனங்களிடம் இருந்து பெற்று, தேர்வுத்துறை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கும்.

இந்த முறையால், உயர்கல்வி நிறுவனங்கள் மட்டும் இல்லாமல், அரசுத் துறைகள், தங்களிடம் சேரும் பணியாளர்களின் சான்றிதழ்களையும், ஆன்-லைன் வழியாக, உடனுக்குடன், சரிபார்த்துக் கொள்ள முடியும். இதற்காக, ஆண்டுக்கணக்கில், காத்திருக்க தேவையில்லை. முக்கியமாக, போலி சான்றிதழ்கள் ஊடுருவலை, முற்றிலுமாக தடுத்து நிறுத்த முடியும் என்றும் தேர்வுத்துறை நம்புகிறது.

திட்டம் அமலுக்கு வந்தபின், அதை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் நடவடிக்கை எடுத்தல் பணியை மேற்கொள்ளும் பொறுப்பை, யார் ஏற்பது என்பதில், மூன்று துறையினரிடையே, பிரச்னை நிலவி வருவதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி:

 

26.12.12

கல்வித்துறை அதிகாரிகள் மாற்றம் : புத்தாண்டில் வருகிறது அறிவிப்பு

பள்ளி கல்வித் துறையில், இயக்குனர் நிலையில், ஏற்கனவே ஒரு பணியிடம் காலியாக உள்ள நிலையில், இம்மாத இறுதியில், மேலும் ஒரு பணியிடம் காலியாகிறது. இதனால், புத்தாண்டு பிறந்ததும், அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் வரும் என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பள்ளிக் கல்வி இயக்குனராக இருந்த மணி, ஓய்வு பெற்றதும், ஆசிரியர் கல்வி இயக்குனராக இருந்த தேவராஜன், பள்ளிக் கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டார். மத்திய இடைநிலைக் கல்வி திட்ட கூடுதல் இயக்குனர் இளங்கோவன், ஆசிரியர் கல்வி இயக்குனர் பொறுப்பை, கூடுதலாக கவனித்து வருகிறார். பொது நூலகத்துறை இயக்குனர் பணியிடமும், காலியாக உள்ளது. இதை, தொடக்க கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், கூடுதலாக கவனித்து வருகிறார்.

நூலகத் துறையில் அனுபவம் வாய்ந்த வரை, நூலகத் துறை இயக்குனராக நியமிக்க வேண்டும் என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. புதிய இயக்குனர் நியமிக் கப்படும் வரை, கூடுதல் பொறுப்பு நிலையே தொடரும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், மெட்ரிக் பள்ளி இயக்குனர்
செந்தமிழ்ச் செல்வி, இம்மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார். இதனால், அதிகாரிகள் மட்டத்தில், விரைவில் மாற்றங்கள் வரும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தேர்வுத்துறை இணை இயக்குனர் தங்கமாரி மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கண்ணப்பன் ஆகியோர், பதவி உயர்வு பட்டியலில் உள்ளனர். இவர்களின் பதவி உயர்வால், இரண்டு இணை இயக்குனர் பணியிடங்கள் காலி ஏற்படும். நூலகத்துறையில், ஒரு இணை இயக்குனர் பணியிடம், ஏற்கனவே காலியாக உள்ளது. இந்தப் பதவியை, கண்ணப்பன், கூடுதலாக கவனித்து வருகிறார். எனவே, பணிமூப்பு பட்டியலில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூன்று பேர், இணை இயக்குனர்களாக பதவி உயர்வு செய்யப்படுவர்.

 இந்த மாற்றங்கள் அனைத்தும், புத்தாண்டு பிறந்ததும் நடவடிக்கைக்கு வரும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி:

 

3ம் பருவ பாடப்புத்தகங்கள் விடுமுறைக்கு பின் வழங்கப்படும்

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம்வகுப்பு வரை, மூன்று பருவமாக பிரிக்கப்பட்டு, கல்வி கற்பிக்கப்படுகிறது. இரண்டாம் பருவத் தேர்வு,தற்போது நடந்து வருகிறது. மூன்றாம் பருவம், ஜனவரி மாதம் துவங்குகிறது. அதற்குரிய பாடப்புத்தகம்,அந்தந்த மாவட்டத்துக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்படுகிறது.

அனைத்து மாவட்டங்களிலும், ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்வதற்காக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளது.

"அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்தபின், பள்ளித் துவங்கியதும், அந்தந்த பள்ளிக்கு தேவையான புத்தகம் அனுப்பி வைக்கப்பட்டு, மாணவ, மாணவியருக்கு மூன்றாம் பருவ பாடப்புத்தகம் வினியோகம் செய்யப்படும்" என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி:

 

"இ-கன்டன்ட்": மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டி

தமிழகத்தில், அடுத்த கல்வியாண்டில், பாட புத்தகங்களை "சிடி' வடிவில் கொண்டு வருவதற்கான, முயற்சியில், கல்வி துறையினர் இறங்கியுள்ளனர். இதற்காக, பள்ளிகள்தோறும், 6 முதல், 8 வகுப்பு வரையிலான, பாடத்தினை "இ-கன்டன்ட்' என்ற மின்னனு பாடப்பொருள் தயாரிக்க போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம், ஆசிரியர்களுக்கு, கம்ப்யூட்டர் பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளுக்கு "லேப் டாப்' வழங்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்ப முறையின் கீழ், "வெர்ஷன் 2020' இலக்கை அடைய, அடுத்த கல்வியாண்டில், கம்ப்யூட்டர் வழியாக, பாடம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, பாடங்களை சிடி வடிவில் தொகுத்து, முதல் கட்டமாக, பள்ளிகளுக்கு வழங்கப்படும். சிடிக்கள் மூலம், ஆசிரியர்கள் பாடம் நடத்துவர். இதை தொடர்ந்து, புத்தகங்களுக்கு பதில், மாணவர்களுக்கு சிடியாக வழங்கப்படும்.

தற்போது, மாவட்டம் வாரியாக,6 முதல், 8 வகுப்பு பாடம் தொடர்பாக, மின்னணு பாடப்பொருள் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் கம்ப்யூட்டர் ஆர்வம் உள்ளவர்கள், 6 முதல், 8ம் வகுப்பு பாடங்களில், ஏதேனும், ஒரு பாடப்பகுதியை தேர்ந்தெடுத்து, 3டி வீடியோ முறையில், எளிமையாக புரியும் வகையில், தமிழில் விளக்க பயிற்சியுடன் வழங்கவேண்டும்.

இப்போட்டியில், பங்கேற்போர், வரும், ஜனவரி 18ம் தேதிக்குள், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகத்திற்கு, முழுவிபரத்தை அனுப்ப வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரி, ஒருவர் கூறியதாவது: முதல் கட்டமாக, 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான பாடங்களை தேர்வு செய்து, அதில், கடினமான பாடங்களை, எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், கம்ப்யூட்டர் மூலம் நடத்துவதற்காக, சிடி தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இதற்காக, பாடங்கள் குறித்து, "கிராபிக்ஸ், அனிமேஷன்' போன்று பாடங்களை உருவாக்கி, மாணவர்களுக்கு, எளிதில் புரியும் வகையில், சிடி தயாரிக்கும் போட்டி நடத்த உள்ளோம். தொடர்ந்து மாநில அளவில், புத்தகங்கள் சிடி வடிவில் வெளியிடப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:

 

இரண்டாயிரம் முதுகலை ஆசிரியர்கள் தேர்வில் குளறுபடி: தகுதியில்லாதவர்களுக்கு பணி வழங்கியது அம்பலம்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளை தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும், பெரும் குளறுபடி நடந்திருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடல்தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். மேலும், சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களும், இறுதி பட்டியலில் தேர்வாகி உள்ளனர். இவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து நீக்கும் பணிகள் நடந்து வருவதால், ஓரிரு நாளில், புதிய தேர்வுப் பட்டியல் வெளியாக உள்ளது.

நெருக்கடி:
அதிகார வட்டாரத்தில் இருந்து வந்த, நெருக்கடி காரணமாக, டி.இ.டி., ஆசிரியர் தேர்வுப் பணி, இடியாப்ப சிக்கலாக மாறி, டி.ஆர்.பி., தவியாய் தவித்து வருகிறது. பணி நியமனத்திற்கு முன், சான்றிதழ்களை சரியாக சரிபார்க்காமல் கோட்டை விட்டுவிட்டு, 18 ஆயிரம் பேருக்கு, பணி நியமனம் வழங்கியாகி விட்டது. உத்தரவுகளை பெற்றோர், பணியிலும் சேர்ந்துவிட்டனர்.ஆனால், இப்போது, மீண்டும் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி, சத்தமில்லாமல், டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. பணியில் சேர்ந்து, சம்பளமும் வாங்கிய பின், அவர்களை பணி நீக்கம் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.அப்படி பணி நீக்கம் செய்தால், அரசுத் தரப்பின் மெத்தனப்போக்கு, வெட்ட வெளிச்சத்திற்கு வருவதுடன், பாதிக்கப்படுபவர்கள், கோர்ட் படியேறும் நிலை உருவாகலாம்.

அம்பலம்:
இதுபோன்ற நிலையில், முதுகலை ஆசிரியர் தேர்விலும், குளறுபடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னையில் நடந்தது.அதிகமான ஆசிரியர்களுக்கு, உத்தரவு வழங்குவதை காட்டுவதற்காக, கடைசி நேரத்தில், திடீரென, 2,308 முதுகலை ஆசிரியர்கள் தேர்வு பட்டியலும் வெளியிடப்பட்டது. மொத்தம், 2,895 பேரை தேர்வு செய்ய, தேர்வு நடத்தியபோதும், வழக்கு காரணங்களால், 587 பணியிடங்களை, "ரிசர்வ்' செய்துவிட்டு, மீதமுள்ள பணியிடங்களுக்கு மட்டும், தகுதியானவர்கள் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டது.

முதல்வர் விழாவில், 2,308 பேருக்கும், தேர்வுக்கான உத்தரவு மட்டுமே வழங்கப்பட்டது. இன்னும், அவர்களுக்கு, பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கவில்லை. டி.ஆர்.பி.,யில் இருந்து, 2,308 பேர் சம்பந்தமான கோப்புகளை, பள்ளி கல்வித்துறையிடம் ஒப்படைத்து, டி.ஆர்.பி., தலைவர், "தேர்வுக் கடிதம்' வழங்கிய பின், அவர்களை பணி நியமனம் செய்வதற்கான பணியை, கல்வித்துறை செய்யும்.

சரிபார்ப்பு
:
இதுவரை, டி.ஆர்.பி.,யில் இருந்து, கல்வித்துறையிடம், கோப்புகள் ஒப்படைக்கவில்லை. தேர்வு பெற்றவர்கள் அனைவரும், தகுதியானவர்கள் தானா என்பதை, மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணியில், டி.ஆர்.பி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.இதற்கிடையே, தகுதியில்லாதவர்கள் பலர் தேர்வு பெற்றுள்ள தகவலை, டி.ஆர்.பி.,யின் கவனத்திற்கு, பல தேர்வர்கள் கொண்டுசென்றனர். புகார்களை அலட்சியப்படுத்தாமல், கவனமுடன் ஆய்வு செய்த, டி.ஆர்.பி., தகுதியற்றவர்கள் பலர், தேர்வாகி இருப்பதை கண்டுபிடித்துள்ளது.

* உடல்திறன் நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வு பெற்றுள்ளனர். ஊனமுற்றோர் பிரிவில், "கட்-ஆப்' மதிப்பெண்கள் குறைவு என்பதால், இந்தப் பிரிவில், பலர் தேர்வாகி உள்ளனர்.இவர்களுடைய தேர்வு, உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவில் மட்டும், 20க்கும் மேற்பட்டோர், நீக்கப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது.

* சரியான கல்வித்தகுதி இல்லாதவர்களும், இறுதி தேர்வுப் பட்டியலில், தேர்வாகி உள்ளனர். எம்.எஸ்சி., ஆர்கானிக் கெமிஸ்ட்ரி, எம்.எஸ்சி., கெமிஸ்ட்ரி படிப்பிற்கு நிகரானது கிடையாது. ஆனால், ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்தவர்களும், தேர்வாகி உள்ளனர்.

* ஆர்கானிக் கெமிஸ்ட்ரி படித்த ஒருவர், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில் தேர்வாகியும், சரியான கல்வித்தகுதி இல்லை என கூறி, அவரது தேர்வை, டி.ஆர்.பி., நிராகரித்துள்ளது. ஆனால், அதே தேர்வர், முதுகலை ஆசிரியர் தேர்வில், தேர்வாகி உள்ளார். இது எப்படி சாத்தியம் என, தேர்வர்கள் கொதிக்கின்றனர்.

* "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்" படித்தவர்கள், ரெகுலர், "ஆங்கிலம்" பாடத்திற்கு நிகரானவர்கள் கிடையாது. ஆனால், "கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ்" படித்தவர்கள் பலர், தேர்வு பெற்றுள்ளனர்.

இதுபோன்ற தகுதியற்றவர்களை கண்டுபிடித்து, அவர்களை, தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கும் பணியில், டி.ஆர்.பி., ஈடுபட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோர் நீக்கப்படலாம் என, கூறப்படுகிறது. தகுதியற்றவர்கள் நீக்கத்தால், அடுத்த, "ரேங்க்"கில் உள்ளவர்களை தேர்வு செய்து, அவர்களின் சான்றிதழ்களையும் சரிபார்க்க வேண்டிய கட்டாயத்தில், டி.ஆர்.பி.,உள்ளது. எனவே, ஓரிரு நாளில், புதிய தேர்வுப் பட்டியலை எதிர்பார்க்கலாம்.

"கட்-ஆப்" மதிப்பெண் வெளியிட தயக்கம் ஏன்?
டி.இ.டி., மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வில், இன சுழற்சி வாரியாக, "கட்-ஆப்' மதிப்பெண்கள் விவரங்களை, இதுவரை, டி.ஆர்.பி., வெளியிடவில்லை.அதேபோல், இணையதளத்தில், தனிப்பட்ட தேர்வர், தங்களுடைய தேர்வை தெரிந்துகொள்வதற்கு ஏற்ப மட்டுமே, தகவல் தரப்படுகிறது. பாட வாரியாக தேர்வு பெற்ற அனைவரின் தகவல்களையும், ஒரே பட்டியலில் வெளியிடுவது இல்லை. இதுபோன்று பட்டியல் வெளியிட்டால், தகுதியானவர்கள் மட்டும் தான் தேர்வாகி இருக்கிறார்களா என்பதை, அனைவருமே தெரிந்து கொள்ள முடியும். தற்போது, அதற்கு வழியில்லாமல் உள்ளது.

டி.இ.டி., தேர்வில், தேர்வு பெற்றவர்களின் பெயர் விவரங்களையும், அவர்கள், பிரிவு வாரியாக பெற்ற மதிப்பெண்கள் விவரங்களையும், அனைத்து தேர்வர்கள் பார்வைக்கு, டி.ஆர்.பி., வெளியிட வேண்டும். இப்படி எதையுமே செய்யாமல், "வெளிப்படையாக தேர்வுப் பணிகள் நடக்கிறது" என, டி.ஆர்.பி., திரும்ப திரும்ப கூறி வருவது, தேர்வர்களை எரிச்சல் அடைய செய்துள்ளது.

நன்றி:

 

22.12.12

தஇஆச கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் 20-12-2012 அன்று தக்கலையில் நடந்தது.

மாவட்டத் தலைவர் ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளரும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளருமான எட்வின் பிரகாஷ் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர் திவாகரன் பிள்ளை அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இசக்கியப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாநில பொதுச் செயலாளர் இசக்கியப்பன் அவர்களுக்கு மாவட்டத் தலைவர் ஹெர்பர்ட் ராஜா சிங் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  • கன்னியாகுமரி மாவட்ட உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் சங்க உறுப்பினர்களாக்க வேண்டும்.
  • கல்வி மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை விரைவு படுத்த வேண்டும்.
  • ஜனவரி மாதம் முதல் வெளிவர இருக்கும் நமது முழக்கம் மாத இதழ்  அனைத்து உறுப்பினர்களையும் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும்.
  • 2013ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி மற்றும் ஆசிரியர் குறிப்பேடு அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
  • CRC அளவில் சங்க பிரதிநிதிகளை ஏற்படுத்துதல்.
  • ஆசிரியர் கல்வி பட்டய சான்றிதழ், மேல்நிலை கல்வி தகுதி (பிளஸ்2) இணையானது என்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணையை பள்ளி கல்வித்துறை செயல்படுத்த வேண்டும். 
  • ஆர்எம்எஸ்ஏ மற்றும் எஸ்எஸ்ஏ பணியிடங்களில் விகிதாச்சார அடிப்படையில் (தமிழாசிரியர்களுக்கு 66.66%, பிறபாட ஆசிரியர்களுக்கு 50% என்ற அடிப்படையில்) இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 
  • சிறுபான்மை மலையாள மொழி ஆசிரியர்களுக்கு 2012-13ம் கல்வி ஆண்டில் பதவி உயர்வு வழங்க வேண்டும். 
  • உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். 
  • ஊதிய குறைபாடுகள் களைதல் குழு 3 நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். 
  • இடைநிலை ஆசிரியர்களுக்கு தரஊதியம் ரூ.4,200 வழங்க வேண்டும் 
என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் துணைத் தலைவர் டெல்லஸ், தலைமையிடச் செயலாளர் பால் செபாஸ்டின், குழித்துறை கல்வி மாவட்டத் துணைத் தலைவர் செர்லின், செயலாளர் ஹரிகுமார், நாகர்கோவில் கல்வி மாவட்டத் துணைத் தலைவர் சிவகுமார், பொருளாளர் ஞானசெல்வ திரவியம், தக்கலை கல்வி மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், இணைச் செயலாளர் ராஜகுமார், ஸ்டேன்லி ரெஜி, பிரசாத், பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
.

அரசு ஊழியர்களுக்கு அறிமுகமாகிறது இணையதள கல்வி

அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது.


கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளை அன்றாட அலுவலக பணியில், பயன்படுத்த வேண்டும்.
இதற்கு, போதியளவு வாய்ப்பு இல்லாததால், கணினி தொடர்பான பயிற்சிகள் முழுமையான பயன் தருவதில்லை என, அரசு நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, பயிற்சி தொடர்பான பாடங்களை, "ஆன்-லைனில்' சேர்த்து விட்டால், எப்போது வேண்டுமானாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் தெரிந்து கொள்ள முடியும். மென்பொருள் சூத்திரங்களை, ஆன்-லைனில் வைத்திருந்தால், எளிதாக அறிந்து கொள்ளமுடியும். மேலும், பாடத் திட்டத்தை ஆன்-லைன் மூலம், எவர் வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்பதால், பயிற்சி ஒரே நேரத்தில் பரவலாக்கப்படும் போன்ற காரணங்களுக்காக, கணினி பயிற்சி தொடர்பான, ஆன்-லைன் பாடத் திட்டத்தை அரசு தயார் செய்கிறது.

பாடத் திட்டங்களை வாசிக்கவும், வீடியோ மற்றும் ஆடியோவில் பார்த்து கேட்கும் படியான வசதிகளும் செய்யப்படுகின்றன. ஊழியர்களின் வசதிக்கு ஏற்ப, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே, பாட வகுப்புகளில் பங்கேற்று தேர்வுகளை எழுத முடியும். ஆன்-லைனிலேயே, கணினி தொடர்பான வகுப்புகள் நடத்தி, அதற்கான தேர்வுகளை அறிவித்து, சான்றிதழ்கள் வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, இதற்கான, பாடத் திட்டங்களை வகுத்து ஆன்-லைனில் வெளியிடுதல், வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்தும் பணியை செய்கிறது.

ஆன்-லைன் கணினி படிப்புக்காக, 11 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பாடத் திட்டங்களை வகுக்கவும், அதற்கான, ஆன்-லைன் வசதிகளை மேம்படுத்தவும், தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.
டெண்டர் இறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து, ஆறு மாதங்களில், அரசு ஊழியர்களுக்கான ஆன்-லைன் கணினி வகுப்புகள் தொடங்கும் என, தகவல் தொழில்நுட்பத் துறையினர் கூறுகின்றனர்.

நன்றி:

 

இன்று தேசிய கணித தினம்

உலகின் சிறந்த "கணித மேதைகளில்" ஒருவர் சீனிவாச ராமானுஜன். இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என சென்ற ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

நமது வாழ்வில் கணிதத்துக்கு முங்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம். உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது. தற்போதைய தலைமுறையினர், கணிதத் துறையில் அதிகளவில் ஈடுபட முன்வர வேண்டும்.

ராமானுஜன் யார்:


ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு. இவர், 1887, டிச.22ல், ஈரோட்டில் பிறந்தார். 12வது வயதில், கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயன்றார். அப்போது, "மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில்' ராமானுஜனுக்கு சிறு வேலை கிடைத்தது. அவரது கணித ஆர்வத்தை அறிந்த துறைமுக மேனேஜர் எஸ்.என்.அய்யர், ராமானுஜன் கண்டுபிடித்த முக்கிய தேற்றங்களையும், நிரூபணங்களையும் இங்கிலாந்துக்கு அனுப்ப உதவினார். அதற்கு பதில் இல்லை.

இருப்பினும், 1913ல் ராமானுஜன், கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஹார்டிக்கு மீண்டும் அனுப்பினார். அதைக் கண்ட ஹார்டி, இதை படைத்தவர் சாதாரண மனிதர் அல்ல, அவர் ஒரு மேதையாக இருக்க வேண்டும் என்பதை புரிந்து, ராமானுஜனை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு அழைத்தார். இதை ஏற்று, 1914ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற ராமானுஜனின் திறமை, சில நாட்களிலேயே உலகின் கவனத்தை ஈர்த்தது. ராமானுஜனின் உயர்வில் பேராசிரியர் ஹார்டிக்கு முக்கிய பங்கு உண்டு.

உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டு, 1917ல் இந்தியா திரும்பினார். 1920ல் மறைந்தார். 

நன்றி:


19.12.12

பள்ளிக் கல்வித்துறையில் லஞ்சம் : தகவல் உரிமைச் சட்டத்தில் அம்பலம்

பள்ளியில் பணி புரியாத ஆசிரியரை, மற்றொரு பள்ளிக்கு இடமாறுதல் செய்து "சாதனை' புரிந்துள்ளது, கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ள இந்த தகவல், கோவை பள்ளிக் கல்வித்துறையில் இடமாறுதலுக்கு பணப்பட்டுவாடா நடந்து வருவதை அம்பலமாக்கியுள்ளது.

கோவை மாவட்டத்தில் ஆசிரியராக நியமனம் பெற, ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணம் கொடுக்க வசதியில்லாத ஆசிரியர்கள், வால்பாறை, ஆனைமலை, காடம்பாறை, ரொட்டிக்கடை உள்ளிட்ட மலைப்பள்ளிகளில் நியமிக்கப்படுகின்றனர். இப்பகுதிகளில் புலி, யானை நடமாட்டம் அதிகமாக இருப்பதே காரணம். ஆனாலும் வேறு வழியில்லாமல் இங்கு பணி புரிந்தாக வேண்டிய கட்டாயத்தில் ஏழை ஆசிரியர்கள் உள்ளனர். ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும் போது, எப்படியாவது சமவெளிக்கு வந்து விடலாம் என்றால், அதற்கும் பேரம் உண்டு. சென்னை சென்று கவனிக்க வேண்டியவர்களை "கவனித்து' இடமாறுதல் உத்தரவு பெற்று திரும்பும் வரை, குறிப்பிட்ட காலிப் பணியிடத்தை மறைத்து வைத்திருக்க, கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு கணிசமான தொகை வழங்கப்படுகிறது.

இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்றாலும், மலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக பணிபுரியும் ஆசிரியர்கள் அங்கேயே தொடர வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. குழந்தைகள் ஓரிடத்திலும், கணவர் வேறிடத்திலும் ஆண்டு கணக்கில் குடும்பமே பிரிந்து கிடக்க வேண்டிய பரிதாப நிலைக்கு பெண் ஆசிரியைகள் தள்ளப்படுகின்றனர்.

கோவை மாவட்ட பள்ளிக் கல்வித்துறையில் நடைபெறும் இடமாறுதல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்ட சங்கனூரை சேர்ந்த பிரேம்குமார் என்பவர், மாவட்டத்தில் உள்ள கணித காலிப் பணியிட விபரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த செப்., 17ல் பெற்றார். அதில், 23.7.2012ல் பொதுமாறுதல் ஆணை வழங்கப்பட்டவர்கள் பட்டியலில், "எம்.பானு சரஸ்வதி' எனும் ஆசிரியையின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக காடம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி கணித ஆசிரியை ஆக உள்ளார்.

ஆனால், இவர் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிவதாகவும், அங்கிருந்து காரமடை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாறுதல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வால்பாறை மற்றும் காரமடை பள்ளிகளில் விசாரித்தபோது, பானு சரஸ்வதி எனும் பெயரில் எந்த ஆசிரியையும் இல்லை என தெரிய வந்துள்ளது. காடம்பாறை அரசு மேல் நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை எம்.பானுசரஸ்வதியிடம் கேட்டதற்கு, ""பட்டதாரி ஆசிரியை ஆக பதவி உயர்வு மூலம் காடம்பாறையில் நியமிக்கப்பட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடியும் இடமாறுதல் கிடைக்கவில்லை. கணவர் ஓரிடத்திலும் குழந்தைகள் பெற்றோரிடமும் உள்ளதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்,'' என்றார்.

ஆனால் புதிதாக சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் சிலருக்கு, கோவை பள்ளிகளில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மலைப்பள்ளி ஆசிரியருக்கு இடமாறுதல் வழங்கியது போல் ஆவணங்களில் காண்பித்து விடுவதும், பணம் பெற்றுக் கொண்டு அந்த இடங்களில் தங்களுக்கு வேண்டிய ஆசிரியர்களை நியமித்து வந்துள்ளதும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. எனவே, தகுதி இருந்தும் இடமாறுதல் வழங்காமல் ஏமாற்றப்பட்ட ஆசிரியர்களும், கோர்ட்டில் வழக்கு தொடர ஆயத்தமாகி வருகின்றனர்.

நன்றி:

 

தகவல் உரிமை சட்டம்: பிரதமருக்கு சிறுமி நோட்டீஸ்

"தகவல் பெறும் உரிமை சட்டத்தை, பெரும்பாலானோர்தவறாக பயன்படுத்துகின்றனர் என குற்றம்சாட்டிய பிரதமர்மன்மோகன் சிங், அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்;இல்லையேல், அவர், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்கநேரிடும்" என, 11 வயது பள்ளி மாணவி, பிரதமருக்கு, நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.

"காங்கிரஸ் தலைவர் சோனியா, அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று, மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவிதத்தில், மத்திய அரசு அல்லது காங்கிரஸ் கட்சிக்கு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது" என,தகவல்கள் வெளியாகின.

"அந்த தகவல் உண்மை தானா? சோனியாவின் மருத்துவ சிகிச்சைக்காக, செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?" என, தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள், கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு, காங்கிரஸ் மற்றும்மத்திய அரசு வட்டாரங்களில், கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தனிப்பட்ட மனிதர்களின் மருத்துவசெலவு பற்றி தகவல் கேட்பதா என, காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர்.

இந்நிலையில், அக்டோபர், 12ல், டில்லியில் நடந்த, தகவல் உரிமை சட்ட மாநாட்டில் பேசிய, பிரதமர்,மன்மோகன் சிங், "தகவல் பெறும் உரிமை சட்டத்தை தவறாக பயன்படுத்தும் சிலர், தேவையே இல்லாத தகவல்களையும், தனிப்பட்ட தகவல்களையும், ஒன்றுக்குமே உதவாத தகவல்களையும் கேட்கின்றனர். ஆம்னி பஸ் அளவிற்கு, அவர்கள் கேட்கும் தகவல்களை திரட்ட வேண்டியுள்ளது" என, கவலைதெரிவித்திருந்தார்.

இதை அறிந்த, உ.பி., மாநில தலைநகர், லக்னோவை சேர்ந்த, தகவல் உரிமை சட்ட ஆர்வலர், 11 வயது,ஊர்வசி சர்மா என்ற பள்ளி சிறுமி, பிரதமர், மன்மோகன் சிங்கிற்கு, தன் வழக்கறிஞர் மூலம், நேற்றுமுன்தினம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில், "60 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை என்றால், சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும்&'என, பிரதமரை அவர் எச்சரித்துள்ளார். அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்ட நான், நீங்கள்தெரிவித்த கருத்துகளால், மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.

இந்த நோட்டீஸ் மூலம் தெரிவிப்பது என்னவென்றால், எதன் அடிப்படையில் நீங்கள், அவ்வாறு கூறினீர்கள்?அதற்கான ஆதாரங்கள், உங்களிடம் உள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.இல்லையேல், இன்னும், 60நாட்களுக்குள், அவ்வாறு பேசியதற்காக, வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதைச் செய்ய தவறினால், உங்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அந்த சிறுமிஅனுப்பியுள்ள நோட்டீசில் தெரிவித்துள்ளார். "உண்மையான ஜனநாயக நாடு இந்தியா என்பதை, இந்தசம்பவம் உணர்த்தியுள்ளது" என, ஊர்வசி சர்மாவுக்கு, சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

நன்றி:

 

பதினோராம் வகுப்பு (Old SSLC) + இரண்டு வருட ஆசிரியப் பட்டயப்படிப்பு + பட்டப்படிப்பு = 10ம் வகுப்பு + மேல்நிலை (+2) வகுப்பு + பட்டப்படிப்பு

பதினோராம் வகுப்பு (Old SSLC) பின்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட இரண்டு வருட ஆசிரியப் பட்டயப்படிப்பு படித்து பிறகு தொலைதூரக் கல்வி நிறுவனம் மூலம் இளங்கலை (Open University) பட்டப்படிப்பு படித்தவர்கள் (11+2+3), 10ம் வகுப்பு மேல்நிலை (+2) வகுப்பு படிப்பு படித்து பின்பு இளங்கலை பட்டம் பெற்றவர்களுடன் இணையாகக் கருதி வேலைவாய்ப்பிற்காக / பதவி உயர்விற்காக அங்கீகரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அரசாணை எண்: 242 உயர்கல்வித்(பி1) துறை நாள்: 18-12-2012 
.

15.12.12

அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள் உட்பட 28 பேர் சுட்டுக்கொலை


அமெரிக்காவின் கானிக்டிகட் பகுதியில் கிண்டர்கார்டன் பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 குழந்தைகள்உட்பட 28 பேர் பலியாயினர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

கானிக்டிக்ட் பகுதியில் உள்ள சான்டி ஹூக் பள்ளியில் , 20 வயது மதிக்கத்தக்க அந்த நபர் இரண்டு துப்பாக்கிகள் மூலம் துப்பாக்கிச்சூடு நடத்தினான். அவனும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த நபர் குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. இந்த சம்பவம் அந்நாட்டு நேரப்படி 9.27 என தெரிகிறது.

இதனையடுத்து மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், கவர்னர் சூழ்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும், போலீசாருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறினார்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த போலீசார், அங்கு உயிருடனுள்ள மாணவர்களை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் எத்தனை குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்பது பற்றி தெரியவில்லை.

சம்பவ இடத்திலிருந்து மாணவர்கள் பயத்தில் கதறியபடி பலத்த பாதுகாப்புடன் வெளியேறும் காட்சிகளை அந்நாட்டு டிவிக்கள் ஒளிபரப்பின. இந்த சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர்கள், பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். அதிகாரிகள் தொடர்ந்து பள்ளியை சோதனை செய்து வருகின்றனர். துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு 223 காலிபர் ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தங்களை பள்ளியிலிருந்து வெளியேற்றும் முன்னர், ஒவ்வொரு மாணவரையும் போலீசார் தீவர சோதனை செய்ததாக மாணவர் ஒருவர் கூறினார்.

போலீசாருக்கு உதவ மீட்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். ஆயுதங்களுடன் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவர்களும் மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

ஒபாமா இரங்கல்:
20 குழந்தைகள் உட்பட 28 பேர் பலியான சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,இந்த துயரமான சம்பவத்திற்கு அதிபர் சார்பாகவும், எனது சார்பாகவும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக கூறினார்.மேலும் அவரிடம், அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் கட்டுப்படுத்தப்படுமா என கேட்டதற்கு, இது பற்றி விவாதிக்க இது சரியான நேரமல்ல என கூறினார்.

ஏன் சுட்டான் ? எதற்கு சுட்டான் ?

இந்நிலையில், துப்பாக்கிச்சூடுக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அப்பள்ளியில் பணியாற்றும் நான்சி லான்சா என்பவரது மகன் ஆடம் லான்சா (20) தனது தாய் மீதான கோபம் காரணமாகவே இந்த பயங்கரத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனது தாயுடன் காரில் பள்ளிக்கு சென்ற ஆடம், முதலில் தனது தாயையும், பின்னர் ஆத்திரம் அடங்காமல் குழந்தைகளையும் மற்றவர்களையும் சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், வீட்டில் தனது தாய் நான்சி லான்சாவை கொலை செய்து விட்டு, பள்ளிக்குச் சென்ற மற்றவர்களை கொன்றதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது. சம்பவம் குறித்து ஆடமின் சகோதரர் தியான் லான்சாவிடம் விசாரணை நடந்து வருகிறது.

நன்றி:

14.12.12

படிக்கட்டில் பயணம் நொடியில் மரணம்... தெரியாததேனோ?


தொலைந்த தூக்கம்... வேட்டையாடிய கொசுக்கள்... முதல்வர் விழாவில் தவித்த ஆசிரியைகள்


சென்னையில், 21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஒரே நாளில் பணி நியமனம் வழங்கப்பட்டது சாதனையாக இருந்தாலும், அதை வாங்க ஆசிரியர்கள், கடுமையான நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருந்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி மற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கு, இம்மாதம் 9, 10, 11ம் தேதிகளில் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

பணி நியமன ஆணை வழங்கும் விழா, நேற்று நடந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே, 650 பஸ்கள் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவரும், நேற்று முன்தினம் இரவு, சென்னை பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில், பெரிய தனியார் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டனர். இரவு நேரத்தில் வந்திறங்கிய அவர்களுக்கு, சிறிது நேர ஓய்வு கூட அளிக்கப்படவில்லை. உடனடியாக, குளித்து தயாராக அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, இரவு இரண்டு மணி முதலே, அவர்கள் நந்தனம் விழா அரங்கிற்கு, பஸ்கள் மூலம் அழைத்துச் வரப்பட்டு, அரங்கில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வைக்கப்பட்டனர். 50 பேருக்கு இரண்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் மூலமே, உணவு வழங்கப்பட்டது. எங்கு செல்வதாக இருந்தாலும், அவர்கள் அனுமதியின்றி செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

தேர்வுசெய்யப்பட்டவர்களில், பெண்களே அதிகம் இருந்த நிலையில், அவர்களுக்கு போதுமான கழிப்பிட வசதிகள் இல்லை. ஆங்காங்கே இருந்த, மொபைல் கழிப்பிடங்களில், தண்ணீர் வசதி இல்லை. ஒவ்வொரு மொபைல் கழிப்பிடத்திற்கும், 20க்கும் மேற்பட்டவர்கள், வரிசையில் நின்றே, சென்று வந்தனர். முதல் நாள் இரவு முதலே அவர்கள், அங்கு அமர வைக்கப்பட்டதால், பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். கொசுக்கடியால், பெரிதும் பாதிக்கப்பட்டதாக பயனாளிகள் புலம்பினர்.

ஆசிரியர் பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், 36 பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதில், நான்கு மாற்றுத் திறனாளிகளும் அடக்கம். மற்றவர்களுக்கு, அவர்கள் சார்ந்த மாவட்ட அமைச்சர்கள் வழங்கினர்.

அரை மணி நேரத்தில்,20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, நியமன ஆணைகளை அவர்கள் வழங்கினர். நிகழ்ச்சி முடிந்ததும், அனைவருக்கும் பணி குறித்த, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, அதன் பின், வந்தது போல், ஒவ்வொரு பஸ்சிலும் ஏற்றி, அவர்கள் அனுப்பப்படுவர் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், நிகழ்ச்சி முடிந்ததும், நியமன ஆணை பெற்றவர்கள் செல்ல விரும்பினால், தங்கள் உறவினர்களுடன் செல்லலாம் என அறிவிக்கப்பட்டதால், அனைவரும் நிம்மதியடைந்து சென்றனர்.

நன்றி:

 

13.12.12

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் மாணவ, மாணவியருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஆற்றிய உரை

இந்த இனிய விழாவில் முன்னிலையுரை ஆற்றிய மாண்புமிகு பள்ளிக் கல்வி, இளைஞர் நலன், விளையாட்டு, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. என்.ஆர். சிவபதி அவர்களே,

மாண்புமிகு அமைச்சர் பெருமக்களே,

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே,

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே,

வரவேற்புரை ஆற்றிய தலைமைச் செயலாளர் திரு. தேபேந்திரநாத் சாரங்கி அவர்களே,

நன்றியுரை ஆற்றவுள்ள பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் திருமதி டி. சபிதா அவர்களே,

எதிர்கால இந்தியாவின் தூண்களாகிய, மாணவச் செல்வங்களே,

அந்தத் தூண்களை நிர்மாணிக்கும் ஆசிரியப் பெருமக்களே,

வணக்கத்திற்குரிய பெரியோர்களே,

என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே,

இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான எனது அருமை உடன்பிறப்புகளே,

உங்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் மாணவ, மாணவியருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கற்றவனை கண்ணுடையர் என்றும், கல்லாதவனை புண்ணுடையர் என்றும் கூறியிருக்கிறார் திருவள்ளுவர். மெய்யறிவைத் தரக் கூடியது கல்வி என்று சங்க கால நூல்கள் கூறுகின்றன. சங்க காலம் தொடங்கி இது நாள் வரை தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்குவதால் “கல்வி சிறந்த தமிழ்நாடு” என்று தமிழ்நாட்டை சிறப்பித்து பாடியுள்ளார் மகாகவி பாரதியார். கற்றலால் சிறப்பும், கல்லாமையால் இழிவும் வந்தெய்தும் என்று புலவர் இளங்கீரனார் பாடியுள்ளார். ஒருவன் கல்வி கற்றால் அவனிடம் உள்ளத்தால் துணிவும், உடலளவில் பணிவும் வந்து சேரும் என்பது சான்றோர் வாக்கு. “கீர்த்தியும் பெருமையும் கிடைப்பது கல்வி” என்று கல்வியைப் பற்றி ஒளவையார் எடுத்துரைத்துள்ளார். அனைத்து அணிகலனையும் விட கல்வி அழகே அழகு என நாலடியார் பாடல் தெளிவாக்குகிறது. நன்மையும், தீமையும் விளையக் கூடிய நிலமாக இருப்பது மனம். ஆதலால் ஒழுக்கத்தை வளர்க்கும் கல்வியையே மக்களுக்கு போதிக்க வேண்டும் என்றார் அறிஞர் பிளாட்டோ.

“பூசை அறை, சமையல் அறை, படுக்கை அறை வைத்துக் கட்டும் நம் மக்கள் படிக்கும் அறை வைத்து வீடு கட்டும் காலம் என்று வருகிறதோ அன்று தான் நாம் எழுச்சி பெற்றவர்களாவோம்” என்று கூறினார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த கல்வியை அனைவரும் கற்க வேண்டும்; கல்லாதவர்களே இல்லாத மாநிலமாக தமிழகத்தை ஆக்க வேண்டும் என்ற அடிப்படையில், கல்விக்காக பல்வேறு சலுகைகளை எனது தலைமையிலான அரசு வழங்கி வருகிறது.

ஓன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு கட்டணமில்லா கல்வி வழங்கப்படுகிறது.

மாணவ-மாணவியர் பசியின்றி கல்வி கற்க வசதியாக சத்துணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவுத் திட்டத்தில் மாணவ-மாணவியரின் விருப்பத்திற்கேற்ப உணவு முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், 4 ஜோடி சீருடை, காலணிகள், கணித உபகரணப் பெட்டி, வண்ண பென்சில்கள், புத்தகப் பை, புவியியல் வரைபடம் ஆகியவை ஆண்டுதோறும் மாணவ-மாணவியருக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

கிராமப்புற மக்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. இது தவிர, ஆரம்பப் பள்ளிகள் இடைநிலைப் பள்ளிகளாகவும், இடை நிலைப் பள்ளிகள் உயர் நிலைப் பள்ளிகளாகவும், உயர் நிலைப் பள்ளிகள் மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளன.

மேல் நிலை வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு விலை ஏதுமின்றி மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மேல் நிலைக் கல்வியில் இடை நிற்றலை தடுக்கும் வகையில், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

மேல் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் எனது அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கணினி வழிக் கல்வி அளிக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

1,660 கோடி ரூபாய் செலவில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

முன் எப்போதும் இல்லாத உயர் அளவாக இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கென 14,553 கோடி ரூபாய் நிதியினை எனது தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு, இந்த ஒன்றரை ஆண்டுகளில் 26,220 ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் நியமனத்துக்கான தகுதித் தேர்வு இரண்டு முறை நடத்தப்பட்டு, தகுதியின் அடிப்படையில் நீங்கள் எல்லாம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நியமன ஆணைகளை இன்று பெற்றுக் கொள்ள இருக்கிறீர்கள். உங்கள் எல்லோருக்கும் எனது மனம் நிறைந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆசிரியர் பணி என்பது அறப் பணி. ஆசிரியர் பணி என்பது தன்னலமற்ற சேவைப் பணி. ஆசிரியர் பணியை விடச் சீரிய பணி ஏதுமில்லை.

ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பதல்ல. ஒழுக்கத்தை, பண்பை, பொது அறிவை, ஆன்மீகத்தை மாணவ மாணவியரிடையே எடுத்துச் சொல்லும் பணி ஆசிரியர் பணி. வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும் பணியை நீங்கள் மேற்கொள்ள இருக்கிறீர்கள். கரையாக் கல்விச் செல்வத்தை கற்றுக் கொடுக்க இருக்கிறீர்கள். எந்த ஒரு தொழிலிலும், தன்னிடம் வேலை செய்பவர் தன்னைவிட வளர்ச்சி பெறுவதை எந்த முதலாளியும் விரும்ப மாட்டார். ஆனால், தன்னிடம் பயிலும் மாணவர் புகழ் பெறுவதை, அறிஞர் ஆவதை ஆசிரியப் பெருமக்கள் கண்டு இன்புறுவர். அப்படிப்பட்ட உன்னதமானப் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் பணி ஆசிரியர் பணி. மாணவர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் பணி ஆசிரியர் பணி. இப்படிப்பட்ட பொறுப்புள்ள பணியை நீங்கள் எல்லாம் திறம்பட மேற்கொண்டு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க வேண்டும். எந்த சவால்களையும் எதிர்கொள்ளக் கூடிய திறமையை மாணவர்களிடத்திலே உருவாக்க வேண்டும். மாணவ, மாணவியரிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.


ஏழை மனிதர் ஒருவர் தெரு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார். தெருவில் ஒரு பழங்கால நாணயம் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளை இருந்தது. துளையிட்ட நாணயம் கிடைத்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. எனவே, சந்தோஷமாக அதை எடுத்து தன்னுடைய சட்டைப் பையிலே பத்திரமாக வைத்துக் கொண்டார். வீட்டிற்கு சென்ற பின் அதனை ஒரு பாலிதின் கவரில் போட்டு, அதை ஒரு துணி கவரில் சீல் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டார். தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை தன் மனைவியிடமும் தெரிவித்தார். அதை எப்போதும் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அதை தொட்டு பார்த்துக் கொள்வார். ஆனால் அதனை வெளியில் எடுக்க மாட்டார்.

அந்த நாணயம் தனக்கு வாழ்வில் உயர்வைத் தரும் என்று நம்பி, தனது முழுத் திறனையும் பயன்படுத்தி உழைக்க ஆரம்பித்தார். பின்னர் வியாபாரம் செய்ய ஆரம்பித்து அதிலும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் பல வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார். பணம், பதவி, புகழ் எல்லாம் அவரை வந்து சேர்ந்தது. அவரை எல்லோரும் பாராட்ட ஆரம்பித்தார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றி என்ற நிலைமை. எல்லாம் அந்த துளையிட்ட காசோட மகிமை என்று நினைத்தார் அந்த மனிதர்.

இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் அந்த நாணயத்தை கண்ணாலே பார்க்க வேண்டும் என்ற ஆசை அந்த மனிதருக்கு வந்தது.

அப்போது தன் மனைவியைக் கூப்பிட்டு, “ரொம்ப நாளைக்குப் பிறகு என்னுடைய அதிர்ஷ்ட நாணயத்தை இன்றைக்கு வெளியே எடுத்துப் பார்க்கப் போகிறேன்” என்று கூறினார் அந்த மனிதர்.

உடனே மனைவி, “இப்ப அதைப் பார்க்க வேண்டாமே” என்று மெதுவாக கூறினார்.

“இல்லை, இல்லை! பார்த்தே தீர வேண்டும்!” என்று சொல்லி சட்டைப் பையில் கையை விட்டு கவரை திறந்து, நாணயத்தை வெளியே எடுத்தார் அந்த மனிதர். அவருக்கு ஒரே ஆச்சரியம். அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்படியே குழம்பிப் போய் நின்றார்.

அப்பொழுது அவரது மனைவி, “உங்க சட்டை பையில் காசு இருப்பது நினைவில்லாமல் நான் தான் ஒரு நாள் உங்க சட்டை தூசியாக இருக்கு என்று ஜன்னலுக்கு வெளியே உதறினேன். அது தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அது இல்லை என்பது உங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக வேறு ஒரு நாணயத்தை அதே போன்று கவரில் போட்டு சட்டைப் பையில் போட்டு வைத்தேன்” என்று கூறினாள்.

“இது எப்ப நடந்தது?” என்று கேட்டார் அந்த மனிதர்.

“உங்களுக்கு காசு கிடைத்த மறு நாளே இது நடந்தது” என்றாள் மனைவி.

இதைக் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.

அந்த மனிதருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. அவருடைய தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி. வாழ்க்கையிலே முன்னேற நினைக்கிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை.

ஆசிரியர்களாகிய நீங்களும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, மாணவ-மாணவியரிடையே படிக்கும் ஆர்வத்தை ஊக்குவித்தால், அவர்களது ஆற்றல் நிச்சயம் வெளிப்படும். ஓவ்வொருவருக்கும் ஒரு ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலை வெளிக் கொணர வேண்டிய கடமை ஆசிரியர்களாகிய உங்களுக்கு இருக்கிறது.

ஓர் ஆசிரியர் பாடத்தை கற்பிக்கும் விதம் மாணவ-மாணவியரை ஈர்க்கும் வகையில், அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செய்முறை விளக்கத்துடன் கூடியதாக அமைய வேண்டும்.

“ஒரு பொருளின் வெப்பம் இழக்கும் வீதமானது, அப்பொருளின் வெப்ப நிலைக்கும், சுற்றுப்புறத்தின் வெப்ப நிலைக்கும் உள்ள வேறுபாட்டின் நேர்விகிதத்தில் இருக்கும்” என்பது நியூட்டனின் வெப்ப விதி. இதை மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், நடைமுறை உதாரணத்துடன் ஓர் ஆசிரியர் எடுத்துரைத்தார். அதை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இரு நண்பர்கள் ஓர் அறையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது பால், காபி டிக்காஷன், சர்க்கரை ஆகியவற்றை தனித்தனியாக கொண்டு வந்து வைத்தார் பணியாளர். பால் கொதிநிலை சூட்டிலும், டிக்காஷன் அந்த அறையின் வெப்ப நிலையிலும் இருந்தது. அந்த சமயத்தில், அந்த நண்பர்களில் ஒருவருக்கு அவரது அலுவலக உயரதிகாரி கைபேசியில் தொடர்பு கொண்டு சில விவரங்களைக் கேட்டார். அந்த விவரங்களை தன்னிடம் உள்ள மடிக்கணினி மூலம் தேடி அந்த உயர் அதிகாரிக்கு உடனடியாக அனுப்ப வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக காபியை அருந்துவதில் தாமதம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இந்தச் சூழ்நிலையில், பாலுடன் டிகாஷனை கலந்து வைத்தால் காபி சூடாக இருக்குமா? அல்லது காபியையும், டிகாஷனையும் தனித்தனியே குடுவையில் வைத்திருந்தால் சூடாக இருக்குமா? என்ற கேள்வியை மாணவர்களிடம் ஆசிரியர் கேட்டார். இதற்கு இரண்டு விதமான பதில்களும் மாணவர்களிடம் இருந்து வந்தன. ஆனால், காரணத்தை அவர்களால் விளக்க இயலவில்லை.

இதன் பின்னர், பால் அறையின் வெப்பநிலையை விட அதிக சூடாகவும், டிக்காஷன் அறையின் வெப்ப நிலையிலும் இருப்பதால், காபி சூடாக இருக்க வேண்டுமென்றால் பாலையும் டிக்காஷனையும் கலந்து காபியாக வைப்பது தான் சிறந்தது என்று ஆசிரியர் எடுத்துக் கூறி, நியூட்டனின் வெப்ப விதியை விளக்கினார். இவ்வாறு அன்றாட நிகழ்வுகளின் படி பாடத்தை விளக்கும் போது அது மாணாக்கரின் மனதில் எளிதில் பதிந்து விடும் என்பதோடு, வாழ்நாள் முழுமைக்கும் பயன் உள்ளதாகவும் அமைந்து விடும். இதைத் தான் William A. Ward என்ற அறிஞர் “The mediocre teacher tells. The good teacher explains. The superior teacher demonstrates. The great teacher inspires.” என்று கூறியிருக்கிறார்.

ஆசிரியர், மாணவர், பெற்றோர் என்பது ஒரு முக்கோண வடிவம். இதில் முக்கியப் பங்கு வகிப்பவர்கள் ஆசிரியர்கள் தான். அதே சமயத்தில் பெற்றோர்களும் பிள்ளைகளை பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பி விட்டதாலேயே தங்கள் கடமை முடிந்துவிட்டது என்று நினைக்கக் கூடாது.

பெற்றோர்கள் பிள்ளைகளை உயர்த்த உறுதுணையாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் இந்தப் படிப்பு தான் படிக்க வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆர்வமாக படிக்க விரும்பும் படிப்பில் அடைகிற வெற்றியை ஆர்வமில்லாத படிப்பில் அடைய முடியாது.

பல்லாண்டுகளுக்கு முன்பு சாமிநாதன் என்கிற சிறுவன் மேல்படிப்பு படிப்பது குறித்து அவன் வீட்டில் ஒரு விவாதம் நடைபெற்றது. அந்தக் குடும்பத்து பெரியவர் அந்தச் சிறுவனைப் பார்த்து, “ஒன்று சமஸ்கிருதம் படி அல்லது ஆங்கிலம் படி. ஆங்கிலம் படித்தால் இந்த உலகத்தில் ஆனந்தமாக வாழலாம். சமஸ்கிருதம் படித்தால் மேல் லோகத்திலே ஆனந்தமாக இருக்கலாம். நீ என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்.

அதற்கு அந்தச் சிறுவன், “நான் தமிழ் படிக்கப் போகிறேன்” என்று கூறினான்.

சிறுவனின் பதிலைக் கேட்டதும் கோபப்பட்டார் அந்தப் பெரியவர்.

“ஆங்கிலம் படித்தால் இங்கு நன்றாக இருக்கலாம். சமஸ்கிருதம் படித்தால் அங்கு நன்றாக இருக்கலாம். தமிழ் படித்தால் இரண்டு இடத்திலும் நன்றாக இருக்கலாம்” என்று தெளிவாக மீண்டும் எடுத்துரைத்தான் அந்தச் சிறுவன். அந்தச் சிறுவன் வேறு யாருமில்லை. அவர் தான் தமிழ்த் தாத்தா என்று நம்மால் அன்போடு அழைக்கப்படும் உ.வே. சாமிநாத அய்யர். பழந்தமிழ் இலக்கியங்களை நமக்கு அளித்தவர். அவர் தமிழ் படித்ததால் தான் இன்று தமிழே நன்றாக இருக்கிறது.

படிக்கும் ஆர்வத்தை பிள்ளைகளிடையே ஏற்படுத்தும் அதே சமயத்தில், அவர்களின் விருப்பத்திற்கேற்ற பாடத்தை படிக்க அனுமதித்தால் அனைத்து மாணவ – மாணவியருக்கும் வெற்றி உறுதி என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த இனிய விழாவில், 92 லட்சம் மாணவ-மாணவியர் பயன்பெறும் வகையில் விலையில்லா காலணிகள், சீருடைகள், கணித உபகரணப் பெட்டிகள், வண்ண பென்சில்கள், க்ரயான்கள், புத்தகப் பைகள், புவியியல் வரைபடங்கள் ஆகியவை வழங்கப்படுவதை தொடங்கி வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

மேலும், 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இதன் அடையாளமாக 16 மாணவ-மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளையும், 36 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் நான் இந்த மேடையிலேயே வழங்க உள்ளேன்.

இதர ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணைகளை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இந்த விழாவிலேயே வழங்குவார்கள்.

அரசின் நலத் திட்ட உதவிகளை பெறும் மாணவ-மாணவியர், மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியப் பெருமக்கள் தங்கள் வாழ்வில் அனைத்து வளங்களையும், நலன்களையும் பெற்று இன்புற வாழ வேண்டும் என்றும் வாழ்த்தி,

ஏழ்மையும், கல்வியறிவின்மையும் தமிழ்நாட்டை விட்டு முற்றிலும் அகலும் வகையில் முழு ஈடுபாட்டுடனும், அர்ப்பணிப்பு உணர்வுடனும் பணியாற்ற வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்துக் கொண்டு,

அண்ணா நாமம் வாழ்க!

புரட்சித் தலைவர் நாமம் வாழ்க!

என்று கூறி, விடை பெறுகிறேன்.

நன்றி, வணக்கம்.
.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும்: ஆசிரியர்களுக்கு ஜெ. அறிவுரை

மாணவ‌- மாண‌விய‌ர்க‌ள் இடையே த‌ன்ன‌ம்‌பி‌‌க்கையை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம். சவால்களை சமாளிக்கும் ‌திறமையை மாணவ‌ர்க‌‌ள் இட‌த்‌திலே உருவா‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஆ‌சி‌‌ரிய‌ர்களு‌க்கு முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா அ‌றிவுரை கூறியுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களு‌க்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெ‌ற்றது. இ‌ந்த விழாவில் பங்கேற்ற முதல்வர் ஜெயலலிதா, அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கிப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:
ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி எ‌ன்பது அற‌ப்ப‌ணி, த‌ன்னலம‌‌‌ற்ற ப‌ணி, சீ‌ரிய ப‌ணி. ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி எ‌ன்பது வெறு‌ம் க‌ல்‌வியை ம‌ட்டு‌ம் போ‌தி‌ப்பது ம‌ட்டும‌ல்ல, ஒழு‌க்க‌த்தை, ப‌ண்பை, பொது அ‌றிவை, ஆ‌ன்‌மீக‌த்தை மாணவ - மாண‌விய‌ர் இடையே எ‌டு‌த்து‌ச் செ‌ல்லு‌ம் ப‌ணி. வரு‌ங்கால ச‌‌ந்த‌தி‌யினரு‌க்கு வ‌ழிகா‌ட்டு‌ம் ப‌ணியை ‌நீ‌ங்க‌ள் மே‌ற்கொ‌ள்ள இரு‌க்‌‌கி‌றீ‌ர்க‌ள். கரையா க‌ல்‌வி‌‌ச் செ‌ல்வ‌‌த்தை க‌ற்று‌க் கொடு‌க்க இரு‌க்‌கி‌றீ‌ர்க‌ள்.

எ‌ந்த ஒரு தொ‌‌ழி‌லிலும் த‌ன்‌னிட‌‌ம் வேலை செ‌ய்பவ‌ர் த‌ன்னை‌விட வள‌ர்‌ச்‌சி பெறுவதை எ‌ந்த முதலா‌ளியு‌ம் ‌விரு‌ம்ப மா‌ட்டா‌ர். ஆன‌ா‌ல் த‌ன்‌னிட‌ம் ப‌யிலு‌ம் மாணவ‌ர் புக‌ழ் பெறுவதை ஆ‌சி‌ரிய‌ர் பெரும‌க்க‌ள் க‌ண்டு இ‌ன்புறுவ‌ர். அ‌ப்படி‌‌ப்ப‌ட்ட உ‌‌ன்னதமாக ப‌ணி ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி. மாணவ‌ர்க‌ளி‌ன் ஆ‌ற்ற‌ல்களை வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் ப‌ணி ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி. மாணவ‌ர்க‌ளி‌ன் ஆ‌ர்வ‌த்தை ஊ‌க்க‌ப்படு‌‌த்து‌ம் ப‌ணி ஆ‌சி‌ரிய‌ர் ப‌ணி. இ‌ப்படி‌ப்ப‌ட்ட பொறு‌ப்பு‌ள்ள ப‌ணியை ‌நீ‌ங்களெ‌ல்லா‌ம் ‌திற‌ம்பட செய‌ல்ப‌ட்ட வே‌ண்டு‌ம்.

எ‌ந்த சா‌வ‌ல்களையு‌ம் எ‌தி‌ர்கொ‌ள்ளு‌ம் ‌திறமையை மாணவ‌ர்க‌‌ள் இட‌த்‌திலே உருவா‌க்க வே‌ண்டு‌ம். மாணவ‌- மாண‌விய‌ர் இடையே த‌ன்ன‌ம்‌பி‌‌க்கையை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று ஜெயல‌லிதா அ‌றிவுரை கூ‌றினா‌ர்.

நன்றி:


21 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: ஜெ. தலைமையில் பிரம்மாண்ட விழா

முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதும் மாணவ சமுதாயம் மீது அக்கறை கொண்டு கல்வித்துறைக்கு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளார். மாணவர்களை ஊக்கு விக்கும் வகையில் ஏற்கனவே விலையில்லா சைக்கிள், விலையில்லா லேப்-டாப், சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சத்துணவு திட்டமும் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக விலையில்லா புத்தகப்பைகள், விலையில்லா காலணிகள், விலையில்லா வண்ணப் பென்சில்கள், விலையில்லா கணித உபகரணப்பெட்டிகள், புவியியல் வரைபட புத்தகம் (அட்லஸ்) விலையில்லா சீருடைகள் ஆகியவை இன்று வழங்கப்பட்டது. மொத்தம் 92 லட்சம் மாணவ- மாணவிகள் இதன் மூலம் பயன்பெறுகிறார்கள்.

மாணவர்களுக்கு உதவிகள் வழங்கும் விழா இன்று பகல் 12 மணிக்கு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியில் கல்லூரித் திடலில் நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கி பேசினார். முதல்-அமைச்சரைத் தொடர்ந்து அனைத்து அமைச்சர்களும், மாவட்ட வாரிய ஆசிரியர்களுக்கான நியமன ஆணைகளை அவரவர் இருப்பிடத்துக்கே சென்று வழங்கினார்கள்.


முன்னதாக தமிழக அரசின் தலைமைச்செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி வரவேற்று பேசினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி முன்னிலை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் சபீதா நன்றி கூறினார்.

விழாவில் கலந்து கொண்டு ஆசிரியர் பணி நியமன ஆணைகளை நேரில் பெற்றுக் கொள்வதற்காகவும், கல்வி உபகரணங்களை பெறுவதற்காகவும் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் தனி பஸ்களில் சென்னை வந்தனர். அவர்கள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த பிரமாண்டபந்தலில் அமர வைக்கப்பட்டனர்.

விழாவில் கல்வியின் சிறப்புக்களையும், முதல்- அமைச்சர் ஜெயலலிதா கல்வித்துறைக்கு செய்து வரும் சாதனைகளையும் எடுத்துக்கூறும் வகையில் மேடை நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

நன்றி:

பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ்களில் தொங்கியபடி பயணித்தால் டிஸ்மிஸ்!: கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

"பஸ் படிக்கட்டுகளில், மாணவர்கள் பயணித்தால், அவர்களின் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்க வேண்டும்; அதுவே, அடுத்தடுத்து நீடித்தால், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு, அந்த மாணவர்களை, பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்' என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, பெருங்குடி அருகில், கந்தன்சாவடி உள்ளது. மாநகர போக்குவரத்து பஸ், சாலையில் வந்து கொண்டிருந்த போது, செங்கல் லாரி, பின்னோக்கி வந்து மோதியது. இதில், பஸ்சின் பின்புற படிக்கட்டில் பயணித்த மாணவர்கள், நான்கு பேர், உடல் நசுங்கி இறந்தனர். கடந்த, 10ம் தேதி, இச்சம்பவம் நடந்தது. இது குறித்து, பத்திரிகைகளில் செய்தி வெளியானது.

இதையடுத்து, சம்பவம் குறித்து, தானாக முன்வந்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி பாஷா அடங்கிய, "முதல் பெஞ்ச்' வழக்கை விசாரணைக்கு எடுத்தது. மதுரை, ஐகோர்ட் கிளையில், இவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப் பட்டது. இத்தகைய சோக சம்பவங்கள், எதிர்காலத்தில் நிகழாமல் தவிர்க்க, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என, அரசு, போக்குவரத்துத் துறை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரிகளிடம் விளக்கம் பெற வேண்டும் என, அட்வகேட் ஜெனரலுக்கு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு, சென்னை ஐகோர்ட்டில், தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணை நடந்தது. அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர் வெங்கடேஷ் ஆஜராகினர்.போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கருணாசாகர், போக்குவரத்து துறையின், முதன்மை செயலரின் அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டது.

அட்வகேட் ஜெனரலின் வாதத்துக்குப் பின், "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், எடுக்கப் போகிற நடவடிக்கைகள், போக்குவரத்து முறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், படிக்கட்டுகளில் பயணிப்பவர்களுக்கு நேரும் விபத்துகளைக் குறைக்கும் வகையிலும் இருக்கும். இந்த நடைமுறைகள் பற்றி, பத்திரிகைகளிலும், "டிவி' சேனல்களிலும், விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என, நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பஸ் படிக்கட்டுகளில், பயணிக்கும் பள்ளி மாணவர்கள், சிறுவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி, கல்லூரிகள் செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கு தெரியப்படுத்த வேண்டும். தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை, இன்று (நேற்று) முதலே அமல்படுத்த, கூடுதல் போக்குவரத்து போலீஸ் கமிஷனர், நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்த மாணவராவது, படிக்கட்டில் பயணித்தது தெரிந்தால், அந்த மாணவனின் பெற்றோருக்கு மட்டுமல்லாமல், அவர் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரிக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த மாணவன், இரண்டாவது, மூன்றாவது முறையும், அவ்வாறு படிக்கட்டில் பயணித்தால், அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தி விட்டு, பள்ளியில் இருந்து நீக்க, நடவடிக்கை எடுக்கலாம்.

 இந்த வழக்கு, ஜன., 2ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட நடவடிக்கையின் முன்னேற்றம் பற்றி, அன்று, போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர், அரசின் முதன்மை செயலர், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.

என்ன பாதுகாப்பு?
விபத்துகளைத் தவிர்க்க, அமல்படுத்த திட்டமிட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, சென்னை கூடுதல் போக்குவரத்து போலீஸ் கமிஷனர் கூறியுள்ளதாவது:

* பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது மட்டுமல்லாமல், படிக்கட்டுகளில் பயணிக்கக் கூடாது என, அறிவுறுத்தும் வகையில், பஸ் நிலையங்கள், கல்லூரிகள், பள்ளிகள் அருகில், அறிவிப்பு பலகைகள் அமைக்கப்படும்.

* பாதுகாப்பு அம்சங்கள் பற்றி, துண்டுப் பிரசுரங்களைமாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் வினியோகிப்பது, கல்வி நிறுவனங்களிலும் வினியோகிப்பது.

* படிக்கட்டு பயணத்தால், விளையும் ஆபத்து பற்றியும், பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மீடியாக்களில், விரிவான விளம்பரங்கள் வெளியிடப்படும்.

போக்குவரத்துத் துறையின், முதன்மைச் செயலர் அறிக்கை:

* கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ள வழித்தடங்களில், சிறப்பு பஸ்கள் அதிகமாக இயக்கப்படும்.

* போக்குவரத்து போலீஸ் உதவியுடன், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு விதிகள், கண்டிப்புடன் அமல்படுத்தப்படும்.

* போக்குவரத்துக் கழக அதிகாரிகள், போக்குவரத்து போலீசார், மாணவர்கள் பிரதிநிதிகள் அடங்கிய குழுவை அமைத்து, மாணவர்களுக்கு ஆலோசனை, அறிவுரைகள் வழங்கப்படும்.

* படிக்கட்டில் பயணிக்கும் மாணவர்கள் பற்றி, அவர்களின் பெற்றோர், கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்கப்படும்.

மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம், படிக்கட்டு பயணங்களை தடுக்கலாம்.

நன்றி:


ஒன்றரை ஆண்டுகளில் 28 ஆயிரம் பேர் தேர்வு : டி.ஆர்.பி., பெருமிதம்

"ஒன்றரை ஆண்டுகளில், 10 வகை தேர்வுகளை நடத்தி, 28 ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்' என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை: கடந்த ஆண்டு, மே முதல், நடப்பு ஆண்டு டிசம்பர் வரை, 10 வகையான தேர்வுகள் நடத்தப்பட்டன. சட்டக் கல்லூரி விரிவுரையாளர்கள், உதவி பேராசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், இடைநிலை, முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு, 28,414 பேர், தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.


தேர்வுகளும், தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும் வருமாறு:
தேர்வு தேர்வு செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையும்
:

1. இடைநிலை ஆசிரியர் 9,689
2. சிறப்பு ஆசிரியர் 1,555
3. பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்கள் 13,074
4. கம்ப்யூட்டர் ஆசிரியர் 192
5. சத்துணவு பணியாளர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் 136
6. முதுகலை ஆசிரியர் 3,438
7. உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் 34
8. பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் 151
9. பாலிடெக்னிக் கல்லூரி - உதவி பேராசிரியர் 131
10. சட்ட கல்லூரி விரிவுரையாளர்கள் 14

நன்றி

 

தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன்

தண்ணீரில் உற்பத்தியாகும் எரிபொருளை பயன்படுத்தி, மேட்டூர் மால்கோ பள்ளி மாணவர், பைக்கை ஓட வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மேட்டூர், தொட்டில்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன்; அனல்மின்நிலைய பொறியாளர். அவரது மகன் அரவிந்த், 15, மேட்டூர் மால்கோ மெட்ரிக் மேல்நிலைபள்ளியில், ப்ளஸ் 1 படிக்கிறார். மாணவர்கள் அரவிந்த், கோகுல், காமேஸ்வரன், சையத் இணைந்து தண்ணீரில் எரிபொருள் உற்பத்தி செய்து, அதன் மூலம் மோட்டார் பைக்கை இயங்க வைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். கோவையில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், தங்கள் கண்டுபிடிப்பை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை அசத்தியுள்ளனர்.

மாணவர் அரவிந்த் கூறியதாவது
:
ஒரு லிட்டர் தண்ணீரை, ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் ஒரு ஸ்பூன் உப்பு (சோடியம் குளோரைடு) கலக்க வேண்டும். 12 கே.வி., பேட்டரியில் இருந்து இணைப்பு எடுத்து, இரு வயர்களையும் தண்ணீரில் விடும்போது, மின்னூட்டம் தண்ணீரில் பாய்ந்து, ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் வாயுக்கள் குமிழ் குமிழாக வெளியேறும். இந்த வாயுவை, குழாய் மூலம் பைக்கில் உள்ள பெட்ரோல் டியூப்பில் செலுத்த வேண்டும். பெட்ரோலுக்கு பதிலாக, ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் வாயுக்கள் தொடர்ச்சியாக கார்ப்பரேட்டருக்கு சென்று பிஸ்டலை இயக்கும். அதன் மூலம் பைக் தொடர்ந்து ஓடும். இதற்காக, வாயு மூலம் இயங்கும் இயந்திரத்தை பைக்கில் பொருத்த வேண்டும்.

ஜெனரேட்டர், கார் போன்றவற்றையும் எரிபொருள் இல்லாமல், இந்த முறையில் இயக்க முடியும். ஹைட்ரஜன் வாயு மிகவும் ஆபத்தானது. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதனால், அந்த வாயுவை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பைக், ஜெனரேட்டர் இயக்குவது பற்றி ஆய்வு செய்து வருகிறேன்.

இவ்வாறு மாணவர் கூறினார்.

நன்றி:

 

12.12.12

2,308 முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு : சென்னையில் இன்று ஆஜராக உத்தரவு

ஜவ்வாக இழுத்துக்கொண்டிருந்த, முதுகலை ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஒருவழியாக, நேற்றிரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. ஒதுக்கப்பட்ட 2,895 பணியிடங்களில், 2,308 பணியிடங்களுக்கான பட்டியல் மட்டும், வெளியாகி உள்ளது.

பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை சந்தித்து, சென்னைக்கு புறப்பட்டு வர வேண்டும் என, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள, 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, மே, 27ல், டி.ஆர்.பி., போட்டித் தேர்வை நடத்தியது. இதனை, 1.5 லட்சம் பேர் எழுதினர். சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து, இறுதி பட்டியல் தயாரான நேரத்தில், தமிழ்வழியில் படித்தவர்கள் பிரிவில், போதிய தேர்வாளர்கள் இல்லாதது, தாவரவியல் பாடத்திற்கு, இறுதி பட்டியலை வெளியிட, கோர்ட் தடை என, பல்வேறு சிக்கல்களால், இறுதி பட்டியல் வெளியாகவில்லை.

இந்நிலையில், நாளை சென்னையில் நடக்கும் ஆசிரியர் பணி நியமனம் வழங்கும் விழாவில், முதுகலை ஆசிரியர்களுக்கும் சேர்த்து வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இறுதி தேர்வு பட்டியலை வெளியிட முடியாது என, தமிழக அரசிடம், டி.ஆர்.பி., தெரிவித்தது.
எனினும், அரசு தரப்பு சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தி, முடிந்தவரை, பெரும்பாலானவர்களுக்கு, இறுதி பட்டியலை வெளியிடுமாறு, டி.ஆர்.பி.,க்கு உத்தரவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திய, டி.ஆர்.பி., நேற்றிரவு, 2,308 பேருக்கு மட்டும், இறுதி பட்டியலை, இணையதளத்தில் (www.trb.tn.nic.in) வெளியிட்டது. பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், "ஹால் டிக்கெட்'டுடன், சென்னைக்கு வரும் வகையில், தயாராக புறப்பட்டு, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை, இன்று சந்திக்க வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதுகலை ஆசிரியர் அனைவரும், இன்று மாலைக்குள் சென்னை வந்ததும், அவர்களுக்கு, பணி நியமன உத்தரவு நகல் வழங்கப்படுகிறது. முதல்வர் கையால், உத்தரவை பெற்றபின், வேறொரு நாளில் கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு உத்தரவை வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

மீதமுள்ள பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியலை, வழக்கு முடிந்தபின் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து, புதிதாக பணி நியமனம் பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, 20 ஆயிரத்து, 800ஆக உயர்ந்துள்ளது.

நன்றி:


முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில் வழங்கப்படுகிறது.

முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை 13.12.2012 அன்று சென்னையில் வழங்கப்பட உள்ளது.

முது நிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணி இடங்களுக்குத் தேர்வான 2308 ஆசிரியர்களின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. இந்தப் பட்டியல் விவரங்களை www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விதம் தேர்வு செய்யப்பட்ட அனைவரும் நாளையே மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்குச் சென்று சந்திக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களின் விவரம் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கும் அனுப்பப்பட்டு உள்ளது. ஒரு சில மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து நள்ளிரவில் தகவல்கள் கொடுக்கப்பட்டு வருகிறது.
.

9.12.12

வீட்டு கதவை தட்டி ஆசிரியர் வேலைக்கு அழைப்பு : 18 ஆயிரம் ஆசிரியர் நியமனத்தில் ருசிகரம்

டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில், 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட இருப்பதால், கலந்தாய்வு குறித்த தகவல்களை, பல்வேறு வகைகளில் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். பல மாவட்டங்களில், ஆசிரியர் வேலைக்கு தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று, பணி நியமன கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கினர். இதை சற்றும் எதிர்பாராமல், தேர்வு பெற்றோர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர்.

டி.இ.டி., தேர்வு மூலம், 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான முடிவு, 4ம் தேதி வெளியிட்ட நிலையில், ஒரே வாரத்தில், 13ம் தேதி, பணி நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டது. எப்போதும் இல்லாத வகையில், ஒரே நேரத்தில், அதிக பணியிடங்கள் நிரப்பப்படுவது இதுவே முதல் முறை.

கலந்தாய்வு விவரம்: குறுகிய காலத்தில், பணி நியமனம் செய்ய உத்தரவிட்டதால், அதிகாரிகள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு, "ஆன்-லைன்' மூலம், பணி நியமன கலந்தாய்வை நடத்த, ஏற்பாடு செய்துள்ளனர்.

பட்டதாரி ஆசிரியர்: பள்ளி கல்வித் துறைக்கு ஒதுக்கீடு பெற்றுள்ள, 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு இன்றும், நாளையும் நடக்கிறது. இன்று, மாவட்டத்திற்குள், பணி நியமனத்திற்கான கலந்தாய்வு நடக்கிறது. 32 மாவட்டங்களிலும், தேர்வு செய்யப்பட்ட மையங்களில் கலந்தாய்வு நடக்கிறது. நாளை, மாவட்டத்தில் இருந்து, வேறு மாவட்டங்களில் பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வு நடக்கும் இடங்கள் இறுதி செய்யப்பட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளன.

இடைநிலை ஆசிரியர்: இதேபோல், தொடக்க கல்வித் துறையில், 9,000 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு, 11ம் தேதி நடக்கிறது. பள்ளி கல்வித் துறை சார்பில் நடக்கும் கலந்தாய்வு இடங்களிலேயே, இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது. காலையில், மாவட்டத்திற்குள் பணி நியமனத்திற்கான கலந்தாய்வும், பிற்பகலில், வேறு மாவட்டங்களுக்கான கலந்தாய்வும் நடக்கிறது.

"டோர் டெலிவரி": கலந்தாய்வு நடக்கும் விவரங்களை, ஆசிரியர் வேலைக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு தெரிவிப்பதற்கு, பல்வேறு முறைகளை கல்வித் துறை அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர். நாளிதழ்கள், "டிவி' சேனல்கள் மூலம், கலந்தாய்வு விவரங்களை தெரிவித்ததுடன், தேர்வர்களின் அலைபேசி எண்களை பயன்படுத்தி, நேரடியாக அவர்களுக்கு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பணிபுரியும் ஆசிரியர்களை, புதிதாக தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு அனுப்பி, கலந்தாய்வு கடிதங்களை நேரடியாக வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, நேற்று, ஆசிரியர்கள் பல பகுதிகளுக்குச் சென்று, தேர்வு பெற்றவர்களின் வீட்டு கதவை தட்டி, "வாழ்த்துக்கள் மேடம்; வாழ்த்துக்கள் சார்' என, தெரிவித்து, கலந்தாய்வு கடிதங்களை வழங்கினர். திடீரென ஆசிரியர்கள், வீடுகளுக்கு வந்து கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கியது, தேர்வு பெற்றவர்களை, மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளது.

விழா நேரம் மாற்றம்: சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு விழா நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர், இலவச திட்டங்களைப் பெறவரும் மாணவ, மாணவியர், பெற்றோர் என, 50 ஆயிரம் பேர் வரை, விழாவிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. மாலையில் விழா நடத்தினால், அனைவரும், வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் பிரச்னை ஏற்படும் என, அதிகாரிகள் கருதினர். இதனால், பகல், 12:00 மணிக்கு, விழா மாற்றப்பட்டதாகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி:


புதிய ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடக்கும் இடங்கள் அறிவிப்பு

மாநிலம் முழுவதும், 18 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, 32 இடங்களில் நடக்கிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட இவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் இடங்கள் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு 
இன்று: மாவட்டத்திற்குள்
நாளை: வெளி மாவட்டங்கள்

இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு:
11ம் தேதி
காலை: மாவட்டத்திற்குள்
பிற்பகல்: வெளி மாவட்டங்கள்

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடக்கும் இடங்கள் விவரம்:
  • சென்னை - எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி, சேத்துப்பட்டு, 
  • கோவை - பாரதி மெட்ரிக் மே.நி.பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோவை
  • கடலூர் - சி.இ.ஓ., அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
  • தர்மபுரி - சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
  • திண்டுக்கல் - அவர்லேடி மே.நி.பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
  • ஈரோடு - வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
  • காஞ்சிபுரம் - பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மே.நி.பள்ளி, காஞ்சிபுரம்
  • கன்னியாகுமரி - எஸ்.எல்.பி., மே.நி.பள்ளி, நாகர்கோவில்
  • கரூர் - பசுபதி ஈஸ்வரா நகராட்சி பெண்கள் மே.நி.பள்ளி, கரூர்
  • கிருஷ்ணகிரி - அரசு ஆ.மே.நி.பள்ளி, கிருஷ்ணகிரி
  • மதுரை - இளங்கோ மாநகராட்சி மே.நி.பள்ளி, செனாய் நகர், மதுரை
  • நாகை - கிரசன்ட் மெட்ரிக் மே.நி.பள்ளி, நாகூர்
  • நாமக்கல் - நாமக்கல் தெற்கு அரசு மே.நி.பள்ளி
  • பெரம்பலூர் - தனலட்சுமி சீனிவாசன் மே.நி.பள்ளி, பெரம்பலூர்
  • புதுக்கோட்டை - பிரகதாம்பாள் தேர்வுக்கூடம், சி.இ.ஓ., அலுவலகம் அருகில், புதுக்கோட்டை
  • ராமநாதபுரம் - சையது அம்மாள் மே.நி.பள்ளி, ராமநாதபுரம்
  • சேலம் - சிறுமலர் மே.நி.பள்ளி, நான்கு ரோடு
  • சிவகங்கை - சி.இ.ஓ., அலுவலகம்
  • தஞ்சாவூர் - எஸ்.எஸ்.ஏ., கூடுதல் சி.இ.ஓ., அலுவலகம்
  • நீலகிரி - சி.இ.ஓ., அலுவலகம்
  • தேனி - சி.இ.ஓ., அலுவலகம்
  • திருவண்ணாமலை - சி.இ.ஓ., அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மே.நி.பள்ளி வளாகம்
  • திருவாரூர் - கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மே.நி.பள்ளி, திருவாரூர்
  • திருவள்ளூர் - ஸ்ரீலட்சுமி மே.நி.பள்ளி, திருவள்ளூர்
  • திருப்பூர் - ஜெய்வாபாய் மகளிர் மாநகராட்சி மே.நி.பள்ளி, திருப்பூர்
  • திருச்சி - அரசு சையத் முதுசா மே.நி.பள்ளி, திருச்சி-8
  • நெல்லை - சேப்டர் மே.நி.பள்ளி, நெல்லை மாநகரம்
  • தூத்துக்குடி - சி.இ.ஓ., சீ.வா.அரசு மே.நி.பள்ளி வளாகம், தூத்துக்குடி
  • வேலூர் - சி.இ.ஓ., அலுவலகம், கலெக்டர் அலுவலக வளாகம்
  • விழுப்புரம் - சி.இ.ஓ., அலுவலகம்
  • விருதுநகர் - கே.வி.எஸ்.மெட்ரிக் பள்ளி, விருதுநகர்
  • அரியலூர் - அரசு மே.நி.பள்ளி, அரியலூர்
நன்றி:

 

8.12.12

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடு - கருத்துப்படம்


பள்ளிகளில் மாணவர்கள் பங்களிப்புடன் "அட்சய பாத்திரம்" வைக்க அரசு உத்தரவு

மாணவர்களிடம் உள்ள சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் வகையில், பள்ளிக்கூட சத்துணவு மையங்களில், "அட்சய பாத்திரம்' வைக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, மாணவர்கள் தினமும், ஒரு காய் வீதம் அதில் போடவும், மறுநாள் அதை சமையலுக்கு பயன்படுத்தவும், அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்களிடம், சமுதாய ஏற்றத் தாழ்வு நிலவுவதாக, புகார் எழுந்தது. இதை களையும் வகையில், மாணவர்களின் பங்களிப்போடு, சமையல் மேற்கொள்ளும் நோக்கில், கடந்தாண்டு, "அட்சய பாத்திரம்' திட்டத்தை, முதல்வர் அறிவித்தார். ஒரு சில பள்ளிகள் மட்டும், சில நாட்களுக்கு இதை செயல்படுத்தின.

அடுத்த மாதம் முதல், அனைத்து அரசு பள்ளிகளிலும், சத்துணவில் புதிய உணவு வகை அமல்படுத்தப்பட உள்ளது. இதில், வெஜிடபிள் பிரியாணி, பிசிபேளாபாத் உட்பட, 13 வகையான கலவை சாதம் மற்றும் ஐந்து வகை சுவையில், முட்டை இடம் பெறுகிறது. சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து வகையான காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருவதால், அரசு ஒதுக்கும் நிதிக்குள், தரமான உணவு வழங்குவதில் சிரமம் இருப்பதாக, பணியாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், அரசு சார்பில், மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாணவர்கள் இடையே சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் வகையில், சத்துணவு மையங்களில், "அட்சய பாத்திரம்' திட்டம் அமல்படுத்த வேண்டும்; அந்தந்த பள்ளிகளின் சத்துணவு மையங்களில், இதற்காக பாத்திரம் வைக்க வேண்டும்.

மாணவர்கள், தினமும் வீட்டில் இருந்து, ஏதேனும், ஒரு காய் கொண்டு வந்து, இதில் போட வேண்டும். மறுநாள் சத்துணவு சமையலுக்கு, அதிலுள்ள காய்கறிகளை பயன்படுத்த வேண்டும். பாத்திரத்தில், எந்த மாணவர், என்ன காய் இட்டுள்ளார் என்பது குறித்த தகவல், ரகசியமாக வைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "அடுத்த வாரம் முதல், அனைத்து பள்ளிகளிலும், "அட்சய பாத்திரம்' கட்டாயம் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தற்போது, அறிமுகப்படுத்தும் புதிய உணவு வகைக்கு, இத்திட்டம் ஏற்றதாக இருக்குமா என்பது தெரியவில்லை'' என்றனர்.

நன்றி:

 

18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு

பள்ளிக்கல்வி, தொடக்க கல்வித்துறையில், 18 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமனம், மாணவர்களுக்கு இலவச புத்தகப் பை, இலவச காலணிகள், கலர் பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி ஆகியவை வழங்கும் விழா, 13ம் தேதி, சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒய்.எம்.சி.ஏ., திடலில் நடக்கிறது. முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு மற்றும் மாணவர்களுக்கு, நலத்திட்டங்களை வழங்க இருப்பதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜூலை, அக்.,ரில் நடந்த, டி.இ.டி., தேர்வில், இறுதியாக தேர்வு செய்யப்பட்ட, 18 ஆயிரம் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பட்டியலை, 5ம் தேதி, டி.ஆர்.பி., வெளியிட்டது. இவர்களுக்கு பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை, பிரம்மாண்டமாக நடத்த, தமிழக அரசு முடிவு எடுத்தது.இந்நிகழ்ச்சியை தள்ளிப்போடாமல், தேர்வு பெற்றவர்களுக்கு, சூட்டோடு சூடாக, பணி நியமன உத்தரவுகளை வழங்கவும், தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால், பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், விழாவை நடத்த, பம்பரமாக சுழன்று வருகின்றனர்.

ஒய்.எம்.சி.ஏ., திடலில் விழா ஏற்பாடுகள்
:

சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., திடலில், 13ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, பள்ளிக் கல்வித்துறை சார்பில், விமரிசையாக விழா நடக்கும் எனவும், இதில், முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று, ஆசிரியர் பணி நியமன உத்தரவுகளையும், மாணவர்களுக்கான நலத்திட்டங்களை துவங்கி வைப்பார் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.விழா நடக்கும் இடத்தை, பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், நேற்று பார்வையிட்டனர். இந்த இடத்தில், விழா நடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஐந்து நாட்களுக்குள், தேவையான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்படும் என்றும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பள்ளிக் கல்வித்துறையில் நடக்கும் பணி நியமனங்கள், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள், "ஆன்-லைன்' முறையில் நடந்து வருகின்றன. எனவே, 18 ஆயிரம் பேரும், இதே முறையில், பணி நியனம் செய்ய, துறை திட்டமிட்டுள்ளது.விழாவிற்கு முன்நாளில், கலந்தாய்வு நடத்தி, சில பேரை தேர்வு செய்யவும், தேர்வு செய்யப்படுபவர்கள், முதல்வர் கையால், பணி நியமன உத்தரவுகளை பெறவும், துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

நன்றி:

 

6.12.12

போலி மாற்று சான்றிதழ் - கல்வி அதிகாரி சஸ்பெண்ட்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஆசீர்வாதம். இவர் தலைமை ஆசிரியராக இருந்தபோது, படிக்காத மாணவர்கள் பெயரில் ஏராளமானோருக்கு போலியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, போலியாக மாற்றுச் சான்றிதழ் வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உதவி தொடக்கக்கல்வி அலுவலர் ஆசீர்வாதத்தை சஸ்பெண்ட் செய்து, தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் (பொறுப்பு) கணேசன் கூறுகையில், ‘உதவி தொடக்கக் கல்வி அலுவலரை சஸ்பெண்ட் செய்து, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான காரணம் தெரியவில்லை’ என்றார்.

நன்றி:


குமரியில் கலை போட்டிகளுக்கு நுழைவு கட்டணம் வசூல் - முதல்வருக்கு மாணவர்கள் புகார்

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் நடத்தப்பட்ட கலை போட்டிக்கு கட்டணம் வசூலித்ததால் பணமின்றி போட்டியில் பங்கேற்காமல் திரும்பிய மாணவர்கள் தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு துறை சார்பில் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் ஓவியம், பாடல் உள்ளிட்ட கலை போட்டிகள் கடந்த 1ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒப்புதல் பெற்று போட்டியில் கலந்து கொள்ள சென்றனர்.

ஆனால் போட்டியில் பங்கேற்க சென்ற மாணவர்களிடம் ரூ.50 வீதம் போட்டியை நடத்தியவர்கள் கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ரசீது ஏதும் வழங்கப்பட வில்லை. ஏராளமான மாணவர்கள் பஸ்க்கு மட்டும் கட்டணம் எடுத்து வந்திருந்த நிலையில், திடீரென்று போட்டிக்கு ரூ.50 வீதம் கட்டணம் வேண்டும் என்று கூறியதால் ஒன்றிரண்டு போட்டிகளுக்கு தயாராகி சென்ற மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், ‘தமிழக அரசு கலை பண்பாட்டு துறை மூலம் நடத்தப்படும் மாணவர்களுக்கான கலை போட்டிகளில் நுழைவு கட்டணம் வசூல் எங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்கூட்டியே பணம் எடுத்து வராததால் எங்களால் போட்டியில் பங்கேற்க இயலவில்லை. எனவே 1ம் தேதி நடந்த போட்டிகளை ரத்து செய்து மீண்டும் போட்டிகளை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் கலை திறமைகளை வளர்க்கும் வகையில் கலை பண்பாட்டுத்துறை போட்டிகளை நடத்த வேண்டிய நிலையில், அதற்கு கட்டணம் வசூல் என்பது மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி:



எல்லா பள்ளிகளிலும் மார்ச் 31க்குள் கழிவறை வசதி - தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கழிவறை வசதிகளை சீர்செய்தும், இல்லாத இடங்களில் புதியதாக கட்டிடம் கட்ட வேண்டும். வரும் மார்ச் 31ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் கழிவறை வசதி இருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இந்தியா முழுவதும் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிவறை வசதிகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், அதை சீர் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு என தனித்தனியாக கழிவறை கட்ட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக, மாநில தலைமை செயலர்களுக்கு மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழக ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி, தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய அனைத்து அரசு பள்ளிகளில் உள்ள கழிவறை வசதிகள் குறித்து நூறு சதவீதம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

இதில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவறைகளில் மேல் கூரை இடிந்து விழும் நிலையில் இருப்பவை, தண்ணீர் தொட்டி இல்லாதவை, தண்ணீர் வசதி இல்லாதவை குறித்து, உடனடியாக கணக்கெடுத்து அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேலும் மாணவ, மாணவிகளுக்கு என தனித்தனியாக கழிவறை வசதி இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும்.

இல்லாத பள்ளிகளில் உடனடியாக கழிவறை கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வரும் மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் முழு கழிவறை வசதிகள் இருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி:

 

கன்னியாகுமரி மாவட்ட சிஇஓ, டிஇஇஓவை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் சிஇஓ, டிஇஓவை கண்டித்து அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பு அமைப்பாளர் ஜெறோம் தலைமை வகித்தார். நிதிகாப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ், செய்தி தொடர்பாளர் நாகராஜன், இணை அமைப்பாளர்கள் பாலசந்தர், வேலவன், செயற்குழு உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், எட்வின் பிரகாஷ் உள்பட நுற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

  • புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணியை அலங்கோலமாக்கி தலைமை ஆசிரியர்களையும், பிற ஆசிரியர்களையும் கணினிகளின் முன்பாக காலத்தைப் போக்கிட வைக்கும் நிலையினை மாற்றி முறையான மாற்று ஏற்பாடு வழங்க வேண்டும். 
  • மாவட்ட தொடக்கக் கல்வித்துறையில் மலர் வெளியீடு, என்ற போர்வையில் ஆசிரியர்களிடம் நடத்திய வசூல் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு  பாட புத்தகங்களை வழங்குவதில் கமிசன் பெற்று அரசின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் தொடக்கக் கல்வி அலுவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
  • கல்வித்துறை அலுவலர்களின் ஆசிரியர் விரோதச் செயல்களை அம்பலப்படுத்தும் சங்கப் பொறுப்பாளர்ளுக்கு மறைமுக மிரட்டல் விடுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் 
என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
 
நன்றி:


டி.இ.டி., தேர்வு பெற்றவர் விவரம் இணையதளத்தில் வெளியீடு

டி.இ.டி., தேர்வில், தேர்வு பெற்ற, 18 ஆயிரத்து, 382 பேரின் பெயர் பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. ஜூலை மற்றும் அக்டோபரில் நடந்த தேர்வுகளில், தேர்வு பெற்றவர்களின், இறுதி பட்டியலை, நேற்று முன்தினம், டி.ஆர்.பி., வெளியிட்டது. அதன்படி, இரு தேர்வுகளிலும், 18 ஆயிரத்து, 382 பேர், தேர்வு பெற்றனர்.

இவர்களின், பெயர் விவரங்கள், டி.ஆர்.பி.,யின்,www.trb.tn.nic.in இணையதளத்தில், நேற்றிரவு வெளியிடப்பட்டது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்து, இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளோமா என்பதை அறியலாம். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்திய போது, முதல் தாள்களில் (ஜூலை, அக்டோபர்), 449 பேரும், இரண்டாவது தாள்களில், 84 பேரும், "ஆப்சென்ட்' ஆயினர். இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பெறாத இவர்களுக்கு, டி.ஆர்.பி., மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது.

அதன்படி, ஆப்சென்ட் ஆனவர்கள், உரிய காரணத்தை குறிப்பிட்டு, வரும், 10ம் தேதி, டி.ஆர்.பி., அலுவலகத்தில், விண்ணப்பம் தர வேண்டும். விண்ணப்பங்களை ஆய்வு செய்து, தகுதியான நபர்களை, இறுதி பட்டியலில் சேர்க்க, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அதிகளவில், விண்ணப்பம் வந்தால், ஏதாவது ஒரு தேதியில், அனைவரையும், சென்னைக்கு அழைத்து, சான்றிதழ் சரிபார்ப்பை நடத்திடவும், டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. மேலும், 1,567 பேர், உரிய கல்வித் தகுதி இல்லாதவர்கள் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது. இவர்கள், மீண்டும், விண்ணப்பம் செய்ய வாய்ப்புகள் இல்லை எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர் தேர்வில் தேர்வு பெற்ற, 47 பேர், சான்றிதழ் சரிபார்ப்பின் போது, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டையை வழங்கவில்லை. எனவே, இவர்களின் முடிவுகள், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவர்களும், 10ம் தேதி, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டையை, நேரில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.

நன்றி:

 

3.12.12

அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்

பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள புதிய அரசாணையால், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  
 நியமனம்
தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில், 2011 நவ., 15ம் தேதி, புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அதில், "தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,), ஆசிரியர் நியமனத்துக்கு உரிய கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெறவேண்டும் என்பதும், குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், 2010 ஆக., 23க்கு பின், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உதவிபெறும் பள்ளிகளுக்கு, தகுதியுடைய பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கும்போது, இதர பிற நிபந்தனைகளோடு, "ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவரே நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம்' என, கூறப்பட்டு உள்ளது. இது, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒப்புதல்
அரசாணையின் நகல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், அனைத்து அரசு உதவிபெறும் சிறுபான்மை, சிறுபான்மையற்ற மற்றும் சுயநிதி பள்ளிகளுக்கு அரசாணை நகலை அனுப்பி, ஒப்புதல் பெற்று, கோப்பில் வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த அரசாணை மூலம், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில், புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த அரசாணையினால் பல குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

கேள்விக்குறி
இதனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணையினால், தமிழகத்தில் உள்ள, "சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பணி நியமனம் பெறுபவர்கள், ஐந்தாண்டுகளுக்குள் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும்' என்ற தமிழக அரசின் முந்தைய அரசாணையின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. அரசாணை தெரிவித்துள்ளபடி, 2010 ஆக., 23க்கு பின் என, குறிப்பிடப்பட்டு உள்ளதால், ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்டதே, தற்போதைய, அ.தி.மு.க., அரசில் தான். தேர்வு நடத்தப்பட்டதோ, 2012 அக்., 14ம் தேதி தான். இதற்கிடையே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட துவக்கக் கல்வி அலுவலரின் ஒப்புதல் பெற்று, தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

சம்பளம்
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஏராளமானோர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு, மாதந்தோறும் அரசு சம்பளம் வழங்கி வரும் நிலையில், புது அரசாணையால், இனிமேல் அவர்களுக்கு சம்பளம் வழங்கபடுமா? என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது. பெரும்பாலான அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், நகரப்பகுதிகள் என்றால், 15 லட்ச ரூபாய் வரையிலும், கிராமப்புறங்கள் என்றால், எட்டு லட்ச ரூபாய் வரையிலும், "நன்கொடை' என்ற பெயரில் பள்ளி நிர்வாகத்துக்கு வழங்கிய பின் தான் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள், "இனி சம்பளம் கிடைக்குமா?' என்ற பீதியில் உறைந்துள்ளனர்.

நன்றி:



பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்