தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.10.17

தஇஆச மாநிலச் செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலச் செயற்குழு விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 29/10/2017 அன்று நடைபெற்றது.

அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தமிழக அரசு அறிவித்த ஏழாவது ஊதிய குழு அறிவிப்பில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை முழுமையாக களைந்து இழப்பை சரிசெய்து திருத்திய அரசாணை வெளியிட வேண்டும். வெளியிட வில்லை என்றால் ஜாக்டோ ஜியோவோடு இணைந்து போராடுவது.

2. அரசு/ அரசு உதவி பெறும் / மாநகராட்சி/நகராட்சி/ உயர்,மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரியாக உட்படுத்துக.

3. ஊதியக் குழு நிலுவைத்தொகை(22 மாதம்) உடனே வழங்க வேண்டும்.

4. CPS  ரத்து செய்ய வேண்டும்..

5. நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும்.

என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.





28.10.17

வருங்கால வைப்பு நிதி - வட்டி வீதம் தொடர்பான அரசாணை

null

null

திருத்திய ஊதிய விகிதம் - ஒய்வூதியம், குடும்ப ஒய்வூதியம் & ஒய்வூதியச் சலுகைகள் தொடர்பான அரசாணை

null

null

திருத்திய ஊதிய விகிதம் - பதவியுயர்வில் ஊதிய நிர்ணயம் - அரசாணை

null

null


12.10.17

திருத்திய ஊதிய விகி்தம் - 2017 அரசாணை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு: 

தமிழ்நாடு அரசு, மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட அலுவலர் குழுக்களின் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்து புதனன்று (அக்.11 ) எனது தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதனை முழுமையாக ஏற்றுக் கொண்டு, அவற்றை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.

மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர், ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் நிதிநிலையையும், அதே சமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடனும் அமல்படுத்த ஆணையிட்டுள்ளேன். இதன்படி, தற்போது உள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6 ஆயிரத்தி 100 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.77 ஆயிரம் என்பது உயர்த் தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15 ஆயிரத்தி 700 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுவாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான உயர்வை விட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதே போன்று, அனைத்து தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியை பின்பற்றி ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரத்தி 850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்தி 500 மற்றும் ரூ.67 ஆயிரத்தி 500 என்றும் உயர்த்தி வழங்கப்படும் மேலும், ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிக பட்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின் குறைந்த பட்ச ஊதியம் ரூ.3 ஆயிரமாகவும் அதிக பட்ச ஊதியம் ரூ.11 ஆயிரத்தி 100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்படும்.

இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு 8 ஆயிரத்தி 6 கோடி ரூபாய் கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும். இதனால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14 ஆயிரத்தி 719 கோடியை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது. இவ்வறிவிப்புகள் மூலம் சுமார் 12 லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் ஏழு லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள். இதற்கான ஆணைகளை விரைவில் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்