தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

15.7.14

இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்தி பள்ளிக் கல்வி மானிய கோரிக்கையில் அறிவித்திடுக - தஇஆச தீர்மானம்

மேல் நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்திட வேண்டும் என்றும், இதற்கான அறி விப்பை பள்ளிக் கல்வி மானிய கோரிக்கையின் போது வெளியிட வேண்டும் என்றும் தமிழ் நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் வைத்து 12-07-2014 அன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் கயத்தாறு தலைமை வகித்தார். தலைமை நிலையச் செயலாளர் வெங்கடேசன், அமைப்புச் செயலாளர் அருணகிரியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைப் பொதுச் செயலாளர் எட்வின் பிரகாஷ் இதழ் அறிக்கையையும், மாநில பொருளாளர் மதலைமுத்து வரவு& செலவு அறிக்கையையும், பொதுச் செயலாளர் இசக்கியப்பன் வேலை  அறிக்கையையும் வாசித்தனர்.

தீர்மானங்கள்
:

1. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும், நகராட்சி, மாநகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் 25 ஆயிரம் இடை நிலை ஆசிரியர்களை சட்டப்பேரவையில் நடை பெறும் பள்ளிக் கல்வி மானிய கோரிக்கையின் போது பட்டதாரி ஆசிரியராக அறிவித்து ஆணை வெளியிட வேண்டும்.

2. இடைநிலை ஆசிரியர்களின் சாதாரண நிலை ஊதியத்தை ரூ.5,200 - ரூ.20,200, தர ஊதியம் ரூ.2,800 என்பதை மாற்றி ரூ.9,300 - ரூ.34,800, தர ஊதியம் ரூ.4,200 என மாற்றி அமைக்க வேண்டும்.

3. பதவி உயர்வு வாய்ப்பே இல்லாத நிலையில், உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்களின் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதிய விகி தத்தை தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலை யில் தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியமாக வழங்க வேண்டும்.

4. கோவை, சென்னை பள்ளிக்கல்வித் துறை தணிக்கை அதிகாரிகள் ரூ.750, ரூ.500 அடிப்படையில் பெற்றது தவறு என தணிக்கை தடை செய்தததை ரத்து செய்து, 2006ம் ஆண்டுக்கு முன்னர் தேர்வுநிலை, சிறப்புநிலை பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு (தர ஊதியம் ரூ.4300, ரூ. 4500 ) ரூ.500 சிறப்பு படியும், 2006ம் ஆண்டுக்கு பிறகு பெற்றதால் ரூ.750 தனி ஊதியம் வழங்க வழிவகைச் செய்யும் அரசாணையை (எண் 23 நாள் 12.1.2011) பள்ளிக் கல்வித் துறை அமல்படுத்தி பாதிப்பை சரிசெய்திட வேண்டும்.

5. அனைத்து ஆசிரியர், ஆசிரியர் அல்லாதார் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

6. பணிநிரவலில் இடைநிலை ஆசிரியர்களுக்கு முழு விலக்கும் அளித்திட வேண் டும்.

7. இடைநிலை ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு கலந்தாய்வு நடத்த வேண்டும்

என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, திருச்சி மாவட்டச் செயலாளர் தியாகராஜன் வரவேற்றார். முடிவில் மாநில இணைச் செயலாளர் ஸ்டீபன் நன்றி கூறினார்.
.

6.7.14

மாநில செயற்குழு கூட்டம் - அழைப்பிதழ்

இடம்
மரக்கடை சையது முர்துஷா அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்சி. 


நாள்
12.07.2014, சனி 


நேரம்
காலை 10.00 மணி
       

பொருள்:

1. வழக்கு விபரங்கள்
           
2. 2014-15 உறுப்பினர் சந்தா, இதழ் புரவலர் சந்தா, ஆண்டு சந்தா.
          
3. வழக்கு நிதி, வளர்ச்சி நிதி.
           
4. பதவி உயர்வு, இட மாறுதல் பணி நிரவல் - தொடர்பானவை
           
5. கோவை - தணிக்கை தடை (ரூ. 500, ரூ. 750க்கு)
           
6. செயற்குழு உறுப்பினர் கொணர்வன
           
7. இதர.

தலைமை
திரு. சு. கயத்தாறு
மாநிலத் தலைவர்


முன்னிலை
திரு. அ. அருணகிரியார், மாநில அமைப்புச் செயலாளர்.
திருமதி அ. ஜெயராணி, மாநிலச் செயலாளர்.
திரு. ச. வெங்கடேசன், மாநிலத் தலைமையிடச் செயலாளர்.


வரவேற்புரை
திரு. கு. தியாகராஜன், மாவட்டச் செயலாளர், திருச்சி.


வேலை அறிக்கை 
திரு. க. இசக்கியப்பன்
பொதுச் செயலாளர்


இதழ் அறிக்கை 
திரு. ம. எட்வின் பிரகாஷ்
மாநில துணைப் பொதுச் செயலாளர்.


வரவு-செலவு அறிக்கை
 திரு. ஆ. மதலைமுத்து 
மாநிலப் பொருளாளர்


நன்றியுரை
திரு. செ. அப்பாத்துரை, மாநில இணைச்செயலாளர்.

            
மாநில இணைப் பொறுப்பாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கிட அன்புடன் அழைக்கின்றோம்.
                                                
அன்புடன்,                                       
க.  இசக்கியப்பன்,
பொதுச் செயலாளர்.

தொடர்புக்கு:
  1. திரு. கு. தியாகராஜன், கைப்பேசி எண்: 9976006262
  2. திரு. அ. அருணகிரியார், கைப்பேசி எண்: 9486493905
.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்