தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

30.9.11

அகவிலைப்படி உயர்வு: ஓரிரு நாளில் அரசாணை

அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 7 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவு ஓரிரு நாளில் வெளியாகும் எனத் தெரிகிறது. 

மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வை, கடந்த 15-ம் தேதி வழங்கியது. மத்திய அரசு வழங்கியவுடன் மாநில அரசு ஊழியர்களுக்கும் அதே அளவுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். ஆனால், 10 நாள்களுக்கு மேலாகியும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு  வெளியாகவில்லை. இதனால், அகவிலைப்படி உயர்வுக்கான அரசு உத்தரவு எப்போது வெளியாகும் என்பது குறித்த ஆவல் அரசு ஊழியர்களிடையே எழுந்தது.

இந்த நிலையில், அகவிலைப்படி உயர்வுக்கான கோப்புகள் கையெழுத்தாகி உள்ளது. இதற்கான அரசு உத்தரவு ஓரிரு நாளில் வெளியாகக்கூடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி:
 
Quarterly Leave Director Proceedings

29.9.11

வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டால் அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. 

இதுகுறித்து தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
அரசு ஊழியர்கள் தேர்தல் காலங்களில் முற்றிலும் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். போட்டியிடும் எந்த வேட்பாளருக்கோ, அரசியல் கட்சிக்கோ ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது. அவ்வாறு எந்த ஒரு அரசு ஊழியராவது போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக ஈடுபடுவதாக தெரிந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

இவ்வாறு தேர்தல் ஆணைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி


ஒரே பணியாளர்களை இரு கட்ட தேர்தலிலும் பயன்படுத்த முடிவு

உள்ளாட்சித் தேர்தலில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, இரண்டு கட்ட தேர்தலிலும் ஒரே பணியாளர்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உள்ளாட்சித் தேர்தல் அக்., 17, 19 ல் இரண்டு கட்டமாக நடக்கிறது. இதன் பணியில் ஊரக வளர்ச்சி, வருவாய், கல்வித்துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். உள்ளாட்சித்தேர்தலில் அதிக ஓட்டுச்சாவடிகள் உள்ளதால், போதுமான பணியாளர்கள் இல்லை. காலிப்பணியிடங்கள் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது. இதனால் அக்., 17 ல் நடக்கும் முதல் கட்ட தேர்தலில் பணிபுரியும் பணியாளர்களை கொண்டு, அக்., 19 ல் நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலில் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், "உள்ளாட்சித் தேர்தலில் அதிகளவு ஓட்டுச்சாவடிகள் உள்ளன. கிராமங்களில் நான்கு ஓட்டு பதிவு செய்வதால் தாமதம் ஆகும். இதற்கு போதுமான அலுவலர்கள் தேவைப்படுவதால், முதல்கட்ட தேர்தலில் பணியாற்றியவர்களே இரண்டாம் கட்ட தேர்தலில் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது,'' என்றார். 

நன்றி


ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் பொருந்தாது : ஐகோர்ட் தீர்ப்பு

ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் தொடர்பாக, பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. 

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் தொடர்பாக, 1988ம் ஆண்டு தொழிலாளர் நலத் துறை அரசாணை பிறப்பித்தது. பின், 2003ம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணைகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், சிறுபான்மை பள்ளிகள் மற்றும் பள்ளிகள் சங்கங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் சேவியர் அருள்ராஜ், சந்திரசேகரன் உள்ளிட்டோர் மனுக்கள் தாக்கல் செய்தனர். 

மொத்தம் 21 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களில், "வர்த்தக ரீதியில் பள்ளிகளை நடத்தவில்லை. தொழிலாளர் தொடர்பான பல்வேறு சட்டங்கள், ஆசிரியர்களை தொழிலாளர்களாகக் கருதவில்லை. எனவே, ஆசிரியர்களுக்கு இந்த அரசாணைகள் பொருந்தாது" என குறிப்பிடப்பட்டது.

மனுக்களை விசாரித்த நீதிபதி ராஜா பிறப்பித்த உத்தரவு: ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில், நீதிபதி இக்பால் (சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி) தலைமையிலான, "டிவிஷன் பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவில், "கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கிளார்க், பியூன் உள்ளிட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் சட்டம் பொருந்தும். அவர்கள் குறைந்தபட்ச ஊதியம் பெற உரிமையுள்ளது" என கூறப்பட்டுள்ளது. 

இந்த தீர்ப்பின்படி, ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவரும், குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் வரம்புக்குள் வருவர். ஆசிரியர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டம் பொருந்தாது. எனவே, ஆசிரியர்களை பொறுத்தவரை இந்த அரசாணைகள் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி ராஜா உத்தரவிட்டுள்ளார். 

நன்றி


காலாண்டுத் தேர்வு விடுமுறை அக்., 9ம் தேதி வரை நீட்டிப்பு

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான, காலாண்டுத் தேர்வு விடுமுறை, அக்., 9ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 10ம் தேதி மீண்டும் பள்ளிகள் துவங்குகின்றன.

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் மணி கூறும்போது, "பள்ளிகளில் நடந்து வரும் காலாண்டுத் தேர்வுகள், வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிகின்றன. அதன்பின், காலாண்டுத் தேர்வு விடுமுறை. விடுமுறைக்குப் பின், அக்., 7ம் தேதி மீண்டும் பள்ளிகள் துவங்கும் என, ஏற்கனவே அறிவித்திருந்தோம். தற்போது, பள்ளிகள் திறப்பு 10ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.

அக்., 7ம் தேதி வெள்ளிக்கிழமை. அதன்பின், சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். இதை கருத்தில்கொண்டு, பள்ளிகள் திறப்பு தேதி, 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நன்றி:


28.9.11

பூத் சிலிப் குழப்பம் தவிர்க்க கமிஷன் புது கட்டுப்பாடு

பூத் சிலிப் கையொப்பம் இடுவதில், தேர்தல் அதிகாரிகளுக்கு, கமிஷன் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க, சட்டசபைத் தேர்தலில், வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷனே நேரடியாக பூத் சிலிப் வழங்கியது. இதனால், ஓட்டளித்த வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த பூத் சிலிப்பில், தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்திட்டு வழங்கினார். 

இதில், சுணக்கம் ஏற்பட்டதால், சில இடங்களில் வாக்காளர்களுக்கு, பூத் சிலிப் தாமதமாக வினியோகம் செய்யப்பட்டது. சில இடங்களில், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப் தொலைந்து விட்டதாகத் தெரிவித்தவர்களுக்கு, பூத் சிலிப் நகல் எடுத்துத் தரப்பட்டதால், பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டது. 

உள்ளாட்சித் தேர்தலில் பூத் சிலிப் வழங்குவதில் தாமதத்தைத் தவிர்க்க, இம்முறை மாநகராட்சி, நகராட்சிகளில் கமிஷனர்கள் பூத் சிலிப்பில் கையெழுத்திடவும், கிராமப்புறங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்திடவும் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகளின் கையெழுத்துகளை ஸ்கேன் செய்து, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

"ஸ்கேன் செய்து பூத் சிலிப்பில் பதிவு செய்து அனுப்புவதை, நகல் எடுக்கக் கூடாது. வாக்காளர்கள் பூத் சிலிப்பை தவற விட்டால், புதிய சிலிப் வழங்கக் கூடாது" என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

நன்றி


தமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: கிரேடு முறை அறிமுகம்

தமிழக பள்ளி தேர்வு முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
 
சி.பி.எஸ்.இ., தேர்வு முறை போன்று, மாநில பாடத்திட்டத்தில் மதிப்பெண்களுக்கு பதிலாக கிரேடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. மனப்பாட முறை தேர்வுக்கு பதிலாக சிந்தித்து, கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் புதிய தேர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

 
இப்புதிய தேர்வு மற்றும் மதிப்பீடு முறை (முழுமையான தொடர் மதிப்பீடு முறை) 1 முதல் 8ம் வகுப்பு வரை, அடுத்த கல்வியாண்டில் (2012-13) அமல்படுத்தப்படும். 9, 10ம் வகுப்புகளுக்கு, 2013-14 கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும்.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு:
கல்வி கற்கும் முறை மாணவர்களுக்கு எளிமையாகவும், இனிமையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆசிரியர்களை மையப்படுத்தாமல், மாணவர்களை மையப்படுத்தும் வகையில் பல மாறுதல்கள் செய்யப்பட்டு வருகின்றன.தற்போதுள்ள தேர்வு முறை, மானப்பாடம் செய்து எழுதும் வகையில் உள்ளது. வகுப்புகளில் படிப்பதை அடிப்படையாகக் கொண்டு சிந்தித்து செயல்படும் வகையில் இல்லை. கேள்வித்தாள்களும், பாடங்களுக்கும் அப்பாற்பட்டு அவர்களை சிந்திக்கவிடுவதில்லை.


எனவே, தேசிய கல்விக் கொள்கைபடி, பாடங்கள் மற்றும் பாடங்கள் அல்லாத உடற்கல்வி, ஓவியம் போன்றவற்றையும் ஒருங்கிணைத்து மதிப்பிடும் முழுமையான தொடர் மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய தேர்வு மதிப்பீட்டு முறையால், குழந்தைகளுக்கு அழுத்தத்தை குறைப்பதோடு அவர்களது தனித் திறனை வளர்க்க உதவும். இந்த மதிப்பீட்டு முறை, ஏற்கனவே சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திலும் கேரளம், கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது.எனவே, தமிழகத்திலும் தற்போதுள்ள தேர்வு மதிப்பீட்டு முறையை மாற்றி, முழுமையான தொடர் மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துவது அவசர, அவசியமாகிறது.


புதிய தேர்வு முறைப்படி, கல்வியாண்டு மூன்று பருவங்களாக பிரிக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும். ஜூன் முதல் செப்டம்பர் முதல் பருவம், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாவது பருவம், ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலம் மூன்றாவது பருவமாகும்.


ஒரு பருவம் முழுவதும் வகுப்பறைகளில் தேர்வு நடத்தி உடனடியாக மதிப்பீடு செய்வது . இது உடனடி மதிப்பீடு. பருவ இறுதியில் தேர்வு நடத்தி மதிப்பீடு செய்வது, மொத்த மதிப்பீடு என்ற வகையில் தேர்வு நடத்தப்படும். இதில் வகுப்பறை உடனடி தேர்வுகளுக்கு மொத்த மதிப்பெண் 40, பருவ இறுதியில் நடைபெறும் மொத்த தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 60. இரண்டு மதிப்பெண்களை கூட்டினால் கிடைக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும். மொத்தம் 6 வகுப்பறை தேர்வுகள் நடத்தப்பட்டு, இதில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ள 4 தேர்வுகள் கணக்கில் கொள்ளப்படும்.பாடங்களுக்கும், பாடங்கள் அல்லாத உடற் பயிற்சி கல்வி உள்ளிட்டவற்றுக்கும் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.


பருவ இறுதியில் நடைபெறும் தேர்வில் 55 முதல் 60 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்களுக்கு ஏ1 கிரேடு அளிக்கப்பட்டு 10 புள்ளிகள் வழங்கப்படும். இதுபோல் 49-54 (ஏ2), 43-48 (பி1), 37-42 (பி2), 31-36 (சி1), 25-30 (சி2) என்ற வரிசையில் கிரேடு அளிக்கப்பட்டு, புள்ளிகள் வழங்கப்படும். இதில், 12 மதிப்பெண்களுக்கு கீழே எடுத்திருந்தால் இ2 கிரேடு மட்டும் வழங்கப்படும். புள்ளிகள் அளிக்கப்படாது. இதே முறை, பருவம் முழுவதும் நடைபெறும் வகுப்பறை தேர்வுகளுக்கும் பின்பற்றப்படும்.


வகுப்பறை தேர்வு மற்றும் பருவ இறுதி தேர்வு இரண்டையும் சேர்த்து மொத்த மதிப்பெண் 100 என நிர்ணயித்து, அதன் அடிப்படையில் கிரேடு வழங்கப்படும். இதுபோன்று, ஒவ்வொரு பருவத்துக்கும் தேர்வு நடத்தப்பட்டு, கிரேடு வழங்கப்படும்.


இதில், ஏ கிரேடு எடுத்தால் மிக மிக சிறந்த மாணவன், (பி) கிரேடு மிக சிறந்த மாணவன், (சி) கிரேடு சிறந்த மாணவன், (டி) கிரேடு திருப்திகரம், (இ) கிரேடு திருப்தி இல்லை. இன்னும் சிறப்பாக படிக்க வேண்டும் என நிர்ணயிக்கப்படும். ஒரு பருவத்தில் படிக்கும் பாடங்களை அடுத்த பருவத்தில் படிக்க தேவையில்லை.


கல்லூரிகளை போல, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வுக்கு செமஸ்டர் முறை அமல்படுத்த யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய ஓய்வூதிய மசோதாவைக் கைவிடக் கோரி பிரதமருக்கு விண்ணப்பம்

Letter to PM

புதிய ஓய்வூதிய மசோதா எதிர்ப்பு மாநாட்டு அறைகூவல்

PFRDA Conference

25.9.11

உள்ளாட்சித் தேர்தல் பணி: ஆசிரியர்களுக்கு குழப்பம்


உள்ளாட்சித் தேர்தலில் பணி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தால் ஆசிரியர்கள் வேதனையடைந்தனர்.

உள்ளாட்சித் தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு வாடிப்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட டவுன் பஞ்., தேர்தல் பணிக்காக செப்., 20ம் தேதி முதற்கட்ட பயிற்சி வகுப்பு முடிந்துள்ளது. அதே ஆசிரியர்களுக்கு நேற்று நடந்த யூனியன் அளவிலான தேர்தல் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. 

இதனால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். அக்., 17ம் தேதி வாடிப்பட்டி, அலங்காநல்லூர், மதுரை மேற்கு, கிழக்கு, மேலூர், கொட்டாம்பட்டி யூனியன்களில் தேர்தல் நடக்கும்போது, அங்குள்ள பேரூராட்சிகளிலும் அதே நாளில்தான் தேர்தல் நடக்கும். அப்படி இருக்கும்போது எப்படி ஆசிரியர்கள் ஒரே நாளில் 2 டூட்டி பார்க்க முடியும். மாவட்ட தேர்தல் அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். 



அத்துடன் தற்போது காலாண்டு தேர்வு நடப்பதால் பள்ளிப் பணிகள் வெகுவாக பாதிக்கும். எனவே யூனியனுக்கான தேர்தல் பணிக்கு செல்ல முடியாது என மறுத்து வருகின்றனர்.
நன்றி:


24.9.11

ABL, SALM & ALM தொடர்பான தெளிவுரை

SSA ABL ALM

சமச்சீர் புத்தகங்கள் கிடைக்க நடவடிக்கை

சமச்சீர் கல்வித்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாடப் புத்தகங்கள் முழுமையாக கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. 

மாணவர்கள் பலர், புத்தகம் இல்லாத நிலையில், இணையதளத்தில் டவுன் லோடு செய்து படிக்கின்றனர். இதை தொடர்ந்து, அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் கிடைக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ் நாடு பாட நூல் நிறுவனத்ததால் அச்சிடப்பட்ட, அரசு கிடங்குகளில் மீதம் உள்ள புத்தகங்கள் பட்டியல் பெறப்பட்டு, அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேவையான புத்தகங்களை அருகில் உள்ள கிடங்குகளில் பெற்று மாணவர்களுக்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி, பற்றாக்குறை புத்தகங்கள் குறித்து வகுப்பு வாரியாக கணக்கிட்டு, தேவையான புத்தகங்களை வழங்க, கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

நன்றி:

கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற்றும் பணியிடம் இன்றி தவிக்கும் ஆசிரியர்கள்

தமிழகத்தில் ஆசிரியர் கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற்றவர்கள், காலிப்பணியிடம் இல்லாததால் தவிக்கின்றனர்.

இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங் முடிந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அனுமதித்த காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில் பணியிட மாறுதல் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு செல்லும்போது, அங்கு காலிப்பணியிடங்கள் இல்லாத நிலை உள்ளது. 

நேரடி பணி மாறுதல் பெற்றவர்கள் பணியில் இருப்பதாலும், புதிய நியமனங்களின் மூலம் பணியில் சேர்ந்திருப்பதாலும் சிக்கல் உள்ளது. இதனால், பணியிட மாறுதல் பெற்றவர்கள், சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் சென்று, மீண்டும் வேறு பள்ளிக்கு பணி மாறுதல் உத்தரவு பெற வேண்டிய நிலை உள்ளது. 

இது குறித்து ஆசிரியர் கணேசன் கூறுகையில், "" பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், காலிப்பணியிடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. வீண் செலவு, மன உளைச்சலாலும் பாதிக்கின்றனர்,'' என்றார். 

நன்றி:

20.9.11

புதிய ஓய்வூதியத் திட்டம் - PFRDA எதிர்ப்பு கருத்தரங்கம் விளக்க அறிக்கை

PFRDA Notice

STFI - ஆசிரியர் பவன் திறப்புவிழா அழைப்பிதழ்

STFI Building

19.9.11

'நமது முழக்கம்' மின்னிதழ் - செப்டம்பர் 2011

N-M Sep. 2011

15.9.11

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்தியஅரசு ஊழியர்கள் அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி ஜூலை 2011 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுளளது.

நன்றி:


13.9.11

மேல்நிலை - தொழிற்கல்விப் பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை +2 தேர்ச்சி பெற்றவர்களாக கருத வேண்டும்

"பத்தாம் வகுப்பு பயின்ற பின்பு மேல்நிலை வகுப்பில் தொழிற்கல்விப் பாடப் பிரிவில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களை +2 தேர்ச்சி பெற்றவர்களாக கருத வேண்டும்", என தொடக்கக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க. எண்: 12118/டி1/2011நாள்: 13 - 09 - 2011இல் பத்தி எண்: 22இல் மேற்படி கருத்து இடம்பெற்றுள்ளது.

El Director Procedings

கல்வித்துறை இயக்குனர்கள் அதிரடி மாற்றம்

கல்வித்துறை இயக்குனர்களை அதிரடி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, தொடக்கக் கல்வித்துறையின் புதிய இயக்குனராக சங்கரும், பள்ளி கல்வித்துறை இயக்குனராக மணியும் மற்றும் மத்திய இடைநிலை கட்டாய கல்வித்துறை இயக்குனராக இளங்கோவனும் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி:


ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை & நடைபெறும் இடங்கள்

Transfer counselling Centre

12.9.11

கூடுதல் பள்ளி வேலை நாட்கள் விவரம் & பாடப்பகுதி பங்கீட்டுப் பட்டியல்

WORKING SHEET FOR COMPENSATORY WORKING DAYS & PERCENTAGE OF PORTIONS

மாற்றியமைக்கப்பட்ட பள்ளி நாள்காட்டி 2011 - 12

Revised Calnder 2011 - 12

ஆசிரியர் பொது மாறுதல் - நெறிமுறைகள் 2011 -12

Counselling Norms 2011 - 12

11.9.11

ஒவ்வொரு மாதமும் இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்கள்; அனைத்து வேலை நாட்களிலும் 40 நிமிடங்கள் கூடுதல் பணி

சமச்சீர் கல்வி அமல்படுத்து வதில் ஏற்பட்ட சர்ச்சையால் பள்ளிகள் திறக்கவும், புத்தகங்கள் வழங்கவும் காலதாமதம் ஏற்பட்டது.இதை ஈடுகட்டும் வகையில் அனைத்து பள்ளிகளிலும், செப்., முதல், ஒவ்வொரு மாதமும் இரண்டு சனிக்கிழமைகளில் வகுப்புகள் நடத்த வேண்டும். அனைத்து வேலை நாட்களிலும் 40 நிமிடங்கள் கூடுதலாக வகுப்புகள் நடத்த வேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது. 

காலாண்டு தேர்வு விடுமுறை நாட்கள் 10 நாட்கள் என்பது ஐந்து நாட்களாக குறைக்கப்படுகிறது. 2012 மார்ச் 22ல் துவங்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் முதல் வாரத்தில் துவங்கும். கல்வியாண்டின் கடைசி பணி நாள் ஏப்.,18 ற்கு பதில் ஏப்.,28 ஆகும். 

இதன் மூலம் மாணவர்களுக்கு ஏற்பட்ட 32 நாள் இழப்பு ஈடுகட்டப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி


ஆசிரியர் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதல் கவுன்சிலிங், 19 மற்றும் 20ம் தேதிகளிலும், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங், 16, 17, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும் நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட தேதிகளில், எந்த எந்த வகையிலான ஆசிரியர்களுக்கு, எந்த நேரத்தில் கவுன்சிலிங் நடத்துவது குறித்து, துறை அதிகாரிகள் அட்டவணை வகுத்து வருகின்றனர். இதற்கான அட்டவணை, இன்றோ அல்லது நாளையோ வெளியாகலாம் எனத் தெரிகிறது.

நன்றி:


7.9.11

நிரந்தர தலைமை இல்லாமல் திண்டாடும் பள்ளிக் கல்வித் துறை: துறை ரீதியிலான பணிகள் தேக்கம்


பள்ளிக் கல்வித் துறைக்கென, தனி இயக்குனரை நியமிக்காததால், துறை ரீதியிலான முக்கியப் பணிகளைச் செய்வதிலும், நிர்வாகத்தைக் கவனிப்பதிலும் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. தேர்வுத் துறை இயக்குனருக்கு, அந்தத் துறைப் பணியே மலைபோல் இருக்கும் நிலையில், அவரிடம் பள்ளிக் கல்வித் துறையை கூடுதல் பொறுப்பாக ஒப்படைத்திருப்பதால், இந்தப் பிரச்னை எழுந்துள்ளது.


முந்தைய தி.மு.க., ஆட்சியில், பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக இருந்த பெருமாள் சாமி, தேர்தல் நெருக்கத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவியிடம், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டது. தேர்தல் முடிந்து, புதிய ஆட்சி பொறுப்பேற்று, நான்கு மாதங்கள் முடிந்து விட்டன. ஆனாலும், இன்னும் பள்ளிக் கல்வித் துறைக்கென தனி இயக்குனரை நியமிக்கவில்லை. பள்ளிக் கல்வித் துறை, அமைச்சகத்தின் பிரதானமான துறை. ஐந்து மாதங்களுக்கும் மேலாக, கூடுதல் பொறுப்பு நிலையிலேயே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேர்வுத் துறையில், போதுமான பணியாளர்கள் இல்லை. ஆனால், ஆண்டிற்கு 40க்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தி, முடிவுகளை வெளியிடும் பொறுப்பு, அத்துறைக்கு உள்ளது. இதனால், இருக்கின்ற ஊழியர்களை கசக்கிப் பிழிந்து, வேலைகளை முடிக்க வேண்டிய ஒரு நிர்பந்தம் அத்துறையில் நிலவுகிறது. அதிலும், பொதுத் தேர்வு நெருங்கிவிட்டால், சனி, ஞாயிறு என விடுமுறையே இல்லாமல், ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். இப்படி பணிப்பளு அதிகமாக இருப்பதால், இயக்குனர் வசுந்தரா தேவி, பெரும்பாலும் தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்திலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அறை பூட்டியே கிடக்கிறது. இயக்குனரைப் பார்க்க வரும் ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் என பலரும் ஏமாற்றம் அடைகின்றனர்.

தேங்கிக் கிடக்கும் பணிகள்:


*சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்புத் தேர்வுக்கான வினாத்தாளை வடிவமைக்கும் பணியை, பள்ளிக் கல்வித் துறை செய்ய வேண்டும். இந்தப் பணிகளை முடித்து, தேர்வுத் துறையிடம், "புளூ பிரின்ட்' ஒப்படைத்தால் தான், அதற்கேற்ப பொதுத்தேர்வுக்கு தேர்வுத் துறை வினாத்தாளை அச்சிடும் பணியை மேற்கொள்ளும்.

* பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும், இந்த ஆண்டு செய்முறைத் தேர்வைச் செய்ய வேண்டும். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், "லேப்' அமைப்பதற்கு, இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

* ஜனவரி இறுதியிலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ, செய்முறைத் தேர்வு நடைபெறும். முதல் முறையாக, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள், செய்முறைத் தேர்வை எதிர்கொள்கின்றனர். இவர்களுக்கு முன்கூட்டியே பயிற்சி அளித்தால் தான், பொதுத் தேர்வின் போது செய்முறையை நன்றாகச் செய்ய முடியும். இதற்கு, பள்ளிக் கல்வித் துறை தரப்பில் இருந்து, எந்தவித பதிலும் கிடையாது.

* செய்முறைத் தேர்வுக்கான பாடப் பகுதிகளும், இதுவரை அறிவிக்கப்படவில்லை.

* ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட, 5,000 பட்டதாரி ஆசிரியர்களை விரைவாக நியமனம் செய்தால் தான், ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி பெற வழி பிறக்கும். வழக்கு காரணமாக, நியமனம் செய்ய முடியவில்லை என்று, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

* ஜூன் மாதம் நடத்த வேண்டிய ஆசிரியர் பொது மாறுதல் கவுன்சிலிங், இதுவரை நடத்தப்படவில்லை. இதனால், ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட முடியாத நிலை இருக்கிறது. பொது மாறுதல் கவுன்சிலிங்கை விரைந்து நடத்தி முடித்தால், புதிய பணியிடங்களுக்குச் சென்று, முழு ஈடுபாட்டுடன் பணியில் ஈடுபட ஏதுவாக இருக்கும். இப்படி, பல்வேறு பிரச்னைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால், மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே, சமச்சீர் கல்வி பிரச்னையால், இரண்டு மாதங்களாக மாணவர்கள் பாதிக்கப்பட்டதை கருத்தில் கொண்டு, மேலும் அவர்கள் பாதிப்பிற்கு ஆளாகாமல் தடுக்க, தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஏ.சங்கரன் - 

நன்றி:


தேசிய திறனாய்வுத் தேர்வுத் தேதி நீட்டிப்பு

தேசிய திறனாய்வுத் தேர்வு மற்றும் தேசிய வருவாய் வழித்திறன் படிப்புதவி தொகை திட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆக., 30 இறுதி நாள் என அறிவிக்கப்பட்டது. தற்போது, இத்தேதி செப்., 10ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, என அரசு மண்டல தேர்வுத்துறை துணை இயக்குனர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

நன்றி:


நெல்லை மாவட்ட நல்லாசிரியர்கள்

நெல்லை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களின் விபரமாவது: 
  1. மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கல்யாணி, 
  2. பொய்கை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அருணகிரி முருகன், 
  3. வடக்கன்குளம் நேரு தேசிய மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வராஜ், 
  4. களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சிசிலியா சுகந்தி, 
  5. குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுப்பாராஜ், 
  6. பாளை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலி ராஜாபாய்.
  7. விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் முருகேஷ், 
  8. திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொன்னழகன். 
  9. மானூர் பள்ளமடை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி, 
  10. புன்னைவனம் பஞ்.,யூனியன் பள்ளி தலைமை ஆசிரியை ரூபி, 
  11. வடக்குப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் காளிராஜ், 
  12. சிந்தாமணி பஞ்.,யூனியன் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி சுகிர்தபாய், 
  13. திசையன்விளை ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன். 
  14. இட்டமொழி விஜயஅச்சம்பாடு இந்து அருள்நெரி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை லீலாவதி, 
  15. புளியங்குடி கட்டளைகுடியிரப்பு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் காஜா முகைதீன், 
  16. கொடிக்குறிச்சி இந்து மறவர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம், 
  17. கீழப்புலியூர் ஆர்.சி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்பூமாலைராசு. 
.

நீலகிரி மாவட்ட நல்லாசிரியர்கள்

நீலகிரி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்:
  1. செவனன், அரசு மேல்நிலைப்பள்ளி காத்தாடி மட்டம்; 
  2. சந்திரன், அரசு மேல்நிலைப்பள்ளி கூடலூர்; 
  3. ஜோஸ், அரசு மேல்நிலைப்பள்ளி பிதர்காடு;
  4. ராமலிங்கம், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மஞ்சூர்; 
  5. மனோகரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெட்டட்டி; 
  6. பெள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கொல்லிமலை; 
  7. மாதன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிளன்மார்கன்; 
  8. பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பிதர்காடு; 
  9. கேசவன், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வெள்ளேரி.
.

திருச்சி மாவட்ட நல்லாசிரியர்கள்

திருச்சி மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களின் பட்டியல்: 
  1. திருச்சி உறையூர் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மஞ்சுளா, 
  2. சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜீவானந்தம், 
  3. வடுகர்பேட்டை செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை தமிழரசி, 
  4. பெருவளப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை திருநாவுக்கரசு, 
  5. கண்ணனூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருஞானம், 
  6. பெருமாள்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயகாண்டீபன். 
  7. புத்தூர் ஆல்செயின்ட்ஸ் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்லதுரை, 
  8. மேலப்புதூர் புனித அன்னாள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை இருதயம்மாள், 
  9. கார்த்திகைப்பட்டி பஞ்., நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகரன், 
  10. பில்லித்துறை சென்னம்மாள் மானிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஜோதி. 
  11. அதவத்தூர் கிறித்தவ மானிய துவக்கப்கப்பள்ளி தலைமையாசிரியை ஷீலா, 
  12. பள்ளிவிடை புனித மேரி பிரைமரி பள்ளி தலைமையாசிரியர் ஜேம்ஸ், 
  13. தவளவாய்ப்பட்டி பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பிலவேந்திரன், 
  14. கானக்கிழிய நல்லூர் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி ஆசிரியை பாப்பா, 
  15. ஆமூர் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி தலைமையாசிரியை காந்திமதி. 
  16. நவலூர் குட்டப்பட்டு வின்சென்ட் மெட்ரிக் பள்ளி ஆசிரியை அமிர்தா மஞ்சரி, 
  17. திருச்சி மெட்ரிக் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் ஆலத்தூர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி ராதா.
.

கடலூர் மாவட்ட நல்லாசிரியர்கள்

கடலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் விவரம் வருமாறு:-
  1. பாண்டியன்-தலைமை ஆசிரியர் அரசு மேல்நிலைப்பள்ளி புதுப்பேட்டை, 
  2. விமலா கிறிஸ்டி-தலைமை ஆசிரியர் கிறிஸ்தவ மகளிர் மேல் நிலைப்பள்ளி மேல் பட்டாம் பாக்கம் 
  3. கோவிந்தசாமி-தலைமை ஆசிரியர் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி மங்களம்பேட்டை, 
  4. கோவிந்தசாமி- தலைமை ஆசிரியர் அரசு உயர்நிலைப்பள்ளி கீழக்கல்பூண்டி(திட்டக்குடி அருகே) 
  5. இளஞ்செழியன்- தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சித்தரசூர்(அண்ணாகிராமம் ஒன்றியம்), 
  6. ஆறுமுகம்- பட்டதாரி ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சிறுவத்தூர் (பண்ருட்டி ஒன்றியம்), 
  7. பாலகுருநாதன்- தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குறிஞ்சிப்பாடி 
  8. சுப்பிரமணியன்- தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, இளமங்கலம்(மங்களூர் ஒன்றியம்), 
  9. கமலக்கண்ணன்- தலைமை ஆசிரியர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வடக்குமாங்குடி(குமராட்சி ஒன்றியம்), 
  10. ஆடியபாதம்- தலைமை ஆசிரியர் அரசு உதவிபெறும் தனியார் தொடக்கப்பள்ளி சிதம்பரம்.
.

6.9.11

கோவை மாவட்ட நல்லாசிரியர்கள்

கோவை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் விவரம் வருமாறு:-

தொடக்கப்பள்ளி:

  1. தொண்டாமுத்தூர் ஒன்றியம், கல்வீராம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வி.திரிபுரசுந்தரி, 
  2. சூலூர் ஒன்றியம் அத்தப்பகவுண்டன்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அ.ஆறுச்சாமி, 
  3. மதுக்கரை ஒன்றியம் வெள்ளாளபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கே.ராமகிருஷ்ணன், 
  4. வால்பாறை, கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஞானசெல்வம். 
  5. ஆனைமலை ஒன்றியம் குமரன்கட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.சாவித்திரி, 
  6. பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் நாச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆ.கருப்பணன்
உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி:
  1. சூலூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.வேலுச்சாமி, 
  2. தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைவேலு, 
  3. பொள்ளாச்சி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கரும்பாசலம், 
  4. பொள்ளாச்சி சேரிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி. லோகநாயகி 
மெட்ரிக் பள்ளிகள்
  1. பாரதீய வித்யாபவன் மெட்ரிக் பள்ளி முதல்வர் குமுதினி பெரியசாமி, 
  2. ஏ.வி.பி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சந்திராவரதராஜலு
.

மதுரை மாவட்ட நல்லாசிரியர்கள்

மதுரை மாவட்டத்தில் தமிழக அரசு நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் விவரம்:
 
பள்ளிக் கல்வித் துறை:

  1. மதுரை மாநகராட்சி ஈ.வெ.ரா., நாகம்மையார் பள்ளி தலைமை ஆசிரியை வெள்ளைத்தாய், 
  2. மகபூப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியை வான்மதிதேவி, 
  3. மேலூர் தும்பைப்பட்டி அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், 
  4. உத்தங்குடி சேவா இல்ல பள்ளி முதுகலை ஆசிரியர் சந்திரசேகரன், 
  5. திருமங்கலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை காந்திமதி, 
  6. டி.புதூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பரிமளம்.
மெட்ரிக் பள்ளி

  1. மதுரை ஒய்.டபிள்யூ.சி.ஏ., மெட்ரிக் பள்ளி முதல்வர் ரீட்டாஹெப்சிபா, 
  2. டால்பின் பள்ளி தமிழாசிரியை கமலா.
துவக்கக் கல்வித் துறை:
  1. குறவன்குளம் பஞ்., யூனியன் நடுநிலைப்பள்ளி ஹெப்சிகுணசீலி, 
  2. போடிநாயக்கன்பட்டி ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார், 
  3. மதுரை முருகன் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செல்வராணி. 
  4. சிட்டம்பட்டி பஞ்., நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ரங்கநாயகி, 
  5. மேலூர் ஆர்.சி.,நடுநிலைப் பள்ளி வி.ஆர்.,ஜூலியட், 
  6. கருப்பாயூரணி அப்பர் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை மு.சாந்தி. 
  7. நல்லுத்தேவன்பட்டி பஞ்., துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நாகையாசாமி, 
  8. ஆவல்சூரன்பட்டி பஞ்., நடுநிலைப் பள்ளி தமிழாசிரியர் நவநீதகிருஷ்ணன், 
  9. ஆலம்பட்டி பஞ்., நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்ஞானராஜ்.
.

370 பேருக்கு நல்லாசிரியர் விருது:அமைச்சர் வழங்கினார்

முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள், ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழக அரசின், டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா, சென்னை சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில் நேற்று நடந்தது. 

பள்ளிக்கல்வி இயக்குனர் வசுந்தராதேவி வரவேற்றார்.

விழாவில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் பேசியதாவது

தமிழக அரசின், பள்ளி மாணவர்களுக்கு இலவச, "லேப்-டாப்" வழங்கும் திட்டம், கல்வியில் பெரிய புரட்சியை ஏற்படுத்த உள்ளது. சமச்சீர் கல்வி முழு வெற்றிபெற, அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம். இதைக் கருத்தில் கொண்டு, அரசு பள்ளிகளில் வகுப்பறை, ஆய்வகம், குடிநீர், கழிவறை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 1,082 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தை கருத்தில்கொண்டு, மொத்தம் 57 ஆயிரத்து 756 ஆசிரியர்கள், மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கு 5,000 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், நாகை உள்ளிட்ட கல்வி மாவட்டங்களை சேர்ந்த துவக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் 200 பேர், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 134 பேர் உள்ளிட்ட 370 ஆசிரியர்களுக்கு, டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருதை, அமைச்சர் வழங்கினார். வெள்ளி பதக்கம், பாராட்டு சான்றிதழ் மற்றும் 5,000 ரொக்கப் பணம் ஆகியவை இவ்விருதில் அடங்கும்.

விழாவில், சென்னை மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) அண்ணாமலை, பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதா, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கக இயக்குனர் இளங்கோவன், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் ராமேஸ்வர முருகன். மெட்ரிக் பள்ளிகள் இயக்கக இயக்குனர் தேவராஜன், தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விருது பெறுவோருக்கு விருந்து கிடைக்குமா? 
"மத்திய அரசின் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு, ஜனாதிபதி, பிரதமர், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆகியோர் விருந்து தந்து கவுரவிக்கின்றனர். அவர்களுக்கு, வாழ்நாள் முழுவதும் ரயிலில் இலவசமாக பயணிக்கும் சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு மாநில கவர்னரோ, முதல்வரோ விருந்தளிப்பதில்லை. அவர்களுக்கு, அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் சலுகையும் தரப்படுவதில்லை" என, விழாவிற்கு வந்திருந்த ஆசிரியர்கள் சிலர் வருத்தம் தெரிவித்தனர்.

நன்றி:


5.9.11

ஆசிரியர் தினம் - முதல்வர் வாழ்த்து

Teachers Day - CM's Wishes

1.9.11

சிறப்பாக பணியாற்றிய 364 ஆசிரியர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான வரும் ஐந்தாம் தேதி, சிறப்பாக பணியாற்றிய 364 ஆசிரியர்களுக்கு தமிழக அரசு சார்பில், "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' சென்னையில் வழங்கப்படுகிறது. விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு, நாளை தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

சாதாரணமான ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு, பின் ஜனாதிபதி அளவுக்கு உயர்ந்தார் ராதாகிருஷ்ணன். எனினும், ஆசிரியர் பணியை பெரிதும் நேசித்தார். அவரது பிறந்த தினமான செப்டம்பர் ஐந்தாம் தேதியன்று, ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில், தேசிய அளவில், "ஆசிரியர் தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் தேசிய அளவிலும், அந்தந்த மாநிலங்கள் அளவிலும் தேர்வு செய்யப்பட்டு பாராட்டப்படுகின்றனர். 

ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு, ராஷ்டிரபதிபவனில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, விருதுகளை வழங்குவார். 25 ஆயிரம் ரூபாய் ரொக்கம், வெள்ளிப் பதக்கம், நற்சான்றிதழ் ஆகியவற்றை ஜனாதிபதி வழங்குவார். தமிழகத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் 22 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

தமிழக அரசு சார்பில், "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது'க்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், நேற்று அவரது இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர். 

மாநிலம் முழுவதும் இருந்து பெறப்பட்ட ஆசிரியர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்து, அதில் இருந்து 364 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, வரும் ஐந்தாம் தேதி சென்னை சேத்துப்பட்டு கிறிஸ்தவக் கல்லூரி பள்ளியில் நடக்கும் விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார். 5,000 ரூபாய் ரொக்கம், வெள்ளிப் பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் ஆகியவை, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன. "விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்களுக்கு, நாளைக்குள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்படும். விருதுக்குரியோர் பட்டியல், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு, அவர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்று, கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
 தேர்வு எப்படி நடக்கிறது
ஆசிரியரின் பணிக்காலம், பணியாற்றிய பள்ளிகளில் எல்லாம் அவர் பாடத்தில் மாணவர்கள் பெற்ற தேர்ச்சி சதவீதம், பணிபுரியும் பள்ளியின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, பொதுமக்கள், உள்ளூர் பிரமுகர்கள் துணையுடன் தனிப்பட்ட முறையில் ஆசிரியர் எடுத்துக்கொண்ட முயற்சி, கல்வி மேம்பாட்டில் ஆசிரியரின் பங்கு, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த எடுத்த சிறப்பு முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில், விருதுக்குரிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

நன்றி



பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்