உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் 
செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் 
ஆணையம் எச்சரித்துள்ளது. 
இதுகுறித்து தேர்தல் ஆணைய உத்தரவில் 
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 
அரசு ஊழியர்கள் தேர்தல் காலங்களில் முற்றிலும் 
பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். போட்டியிடும் எந்த வேட்பாளருக்கோ, அரசியல்
 கட்சிக்கோ ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட கூடாது. அவ்வாறு எந்த ஒரு 
அரசு ஊழியராவது போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக ஈடுபடுவதாக தெரிந்தால் 
அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறு தேர்தல் ஆணைய உத்தரவில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக