தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

28.6.16

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு?

நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும், ஏழாவது ஊதியக் கமிஷன் அறிக்கை, விரைவில் அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஊதியக் கமிஷன் அறிக்கை மீதான தங்களுடைய பரிந்துரையை, அரசு செயலர்கள் குழு, மத்திய அரசிடம் அளித்துள்ளது. இம்மாத இறுதியில் நடக்கும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டு, அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, மத்திய நிதித் துறை செயலர் அசோக் லாவசா கூறியதாவது: மத்திய அமைச்சரவை செயலர் பி.கே.சின்கா தலைமையிலான, மத்திய அரசு செயலர்கள் குழு, தன் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இம்மாத இறுதியில் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டு, அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

யாருக்கு, எவ்வளவு?

* மத்திய அரசு ஊழியர்களுக்கு, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளம் திருத்தி அமைக்கப்படுகிறது.

* நீதிபதி ஏ.கே.மாதுார் தலைமையிலான, ஏழாவது ஊதியக் கமிஷன், தன் அறிக்கையை, கடந்த ஆண்டு இறுதியில் தாக்கல் செய்தது.

* இந்தாண்டு ஜன., 1ம் தேதி முதல், முன் தேதியிட்டு, இது நடைமுறைக்கு வரும்.

* நாடு முழுவதும், 50 லட்சம் ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவர்.

* சம்பள கமிஷன், 23.5 சதவீத உயர்வுக்கு பரிந்துரை செய்துள்ளது.
.

27.6.16

அரசுப் பணியாளர் வீட்டுக்கடன் திட்டம்

அரசு ஊழியர்களுக்கான சலுகைகளில் முதன்மையானது “அரசுப் பணியாளர் வீட்டுக்கடன்” திட்டம். காரணம், மிகக் குறைந்த வட்டி வீதம்; வட்டி கணக்கிடும் முறை;

இன்னும் சில சிறப்பம்சங்கள்.

வட்டி வீதம்:

கடன் தொகையில் முதல் 50,000 ரூபாய் வரை : 5.5 %
50,001 முதல் 1,50,000 வரை : 7%
1,50,001 முதல் 5,00,000 வரை: 9%
5,00,000க்கு மேல் : 10%
இது இன்றைய தேதியில் உள்ள வட்டி வீதம். இது ஒரு சதம் குறைந்ததும் உண்டு; கூடியதும் உண்டு. என்றாலும் நாம் கடன் பெறும்போது என்ன வட்டி வீதமோ அதன்படிதான் கடன் முடிவில் வட்டிக் கணக்கீடு இருக்கும். மேலும் மாத இறுதியில் நிலுவையாயுள்ள கடனுக்கு மட்டுமே தனி வட்டி.

கடன் வரம்பு:

அரசுப் பணியாளரின் அடிப்படை ஊதியம், தர ஊதியம், தனி ஊதியம், சிறப்பு ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றின் எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையே கடன் வரம்பு. இதற்கான உச்சவரம்பு ரூ. 25,00,000. கணவன் - மனைவி இருவருமே அரசுப் பணியாளர் எனில், இருவரது எழுபத்தைந்து மாத ஊதியத்தின் கூடுதல் தொகையைக் கடனாகப் பெறலாம். அப்போதும் உச்சவரம்பு ரூ. 25,00,000/-க்கு உட்பட்டே இருக்கும். கடன் தொகை யாரேனும் ஒருவர் பெயரில் வழங்கப்படும். ஒருவரிடமே கடன் பிடித்தமும் செய்யக்கூடும்.

யாரெல்லாம் கடன் பெறலாம்?:
 சம்பள ஏற்ற முறையில் ( Scale of Pay) முறையான அரசுப் பணியில் ஆறு ஆண்டு காலம் நிறைவுசெய்த அரசுப் பணியாளர், ஆசிரியர், கல்லூரி விரிவுரையாளர் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

கடனின் பல்வேறு பிரிவுகள்:
1) தனது பெயரில் வீட்டு மனை உள்ள பணியாளர் வீடு கட்டுவதற்குக் கடன் கோரலாம். கூரை மட்டம்வரை முதல் தவணையும், அதற்கு மேல் வீட்டைக் கட்டி முடிக்க இரண்டாவது தவணையும் கிடைக்கும்.

2) வீட்டு மனை இல்லாதோர் மனை வாங்கவும், வாங்கிய மனையில் வீடு கட்டவுமாக இரண்டுக்கும் ஒருசேர கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். மனைக்கு 20%முதல் தவணை; பின்னர் வீட்டைக் கட்டி முடிக்க இரு தவணை என மொத்தம் மூன்று தவணைகளில் கடன் விடுவிக்கப்படும்.

3) தனிநபர், தனியார் நிறுவனங்கள் கட்டித்தரும் ஆயத்த வீட்டை வாங்க ஒரே தவணையில் கடன் பெறலாம். பொதுப்பணித்துறையின் செயற்பொறியாளர் தரும் சான்றின் அடிப்படையில் வீட்டின் மதிப்பு கணக்கிடப்பட்டு, வரம்புக்கு உட்பட்டு கடன் தரப்படும்.

4) தனியார் விற்பனை செய்யும் அடுக்ககம் வாங்கவும் கடன் உண்டு. தவணை மொத்தம் மூன்று.

5) தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் கட்டி விற்பனை செய்யும் வீடு வாங்கவும், ஒரே தவணையில் கடன் பெறலாம்.

6) தற்போது சொந்தமாக உள்ள வீட்டை விரிவுபடுத்தவும், சீரமைக்கவும் கடன் உண்டு.

7) தன் பெயரிலான மனையில், தனது சொந்த சேமிப்பைக் கொண்டு வீட்டைக் கட்ட ஆரம்பித்த ஒரு பணியாளர், ஒரு குறிப்பிட்ட அளவுக்குமேல் வீடு கட்ட பணவசதி இல்லாத நேர்வில், எஞ்சியுள்ள வேலைக்கான மதிப்பீட்டின்படி கடன் பெறலாம்.

8) தனது பெயரில் மனை இல்லாத பணியாளர், மனைவி பெயரிலான மனை மீது வீடு கட்டக் கடன் விண்ணப்பிக்கலாம். மனைவியிடமிருந்து ஒரு இருபது ரூபாய் முத்திரைத் தாளில் இசைவுக் கடிதம் பெற்று சமர்ப் பித்தால் போதும். இதற்குத் தனியே துறைத் தலைமை அனுமதி பெறவேண்டியதில்லை.

9) வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்த ஒருவர் அது ஏற்கப்படாத நிலையில், அவசரம் கருதி தனிநபரிடம்/வங்கி மூலம் கடன் பெற்று வீட்டு வேலையத் தொடங்கலாம்; தக்க உறுதிமொழியைத் தந்து, அரசுக் கடன் வரப்பெற்றதும் மேற்படி கடனை அடைக்கலாம்.

10) கூட்டுக்குடும்ப வீட்டில் பாத்தியதை உள்ள பணியாளர் தனக்கென வீடு கட்டிக்கொள்ளக் கடன்கோரி விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம்:

வீட்டு மனை எந்த மாவட்டத்தில் உள்ளதோ, அந்த மாவட்ட ஆட்சி யருக்குத்தான் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். வீடுமனை பத்திரம், மனை ஆகியன மனைவி பெயரில் இருப்பின் இசைவுக் கடிதம், வில்லங்கச் சான்று இவற்றுடன் கீழ்க்காணும் ஆவணங்களையும் இரட்டைப் பிரதிகளில் இணைத்துச் சமர்ப்பிக்கவேண்டும்.

* மனை வரைபடம்

* வீட்டு வரைபடம் ( உள்ளாட்சி அனுமதியுடன் )

* கட்டுமானச் செலவு பற்றிய விரிவான மதிப்பீடு மற்றும் சுருக்க மதிப்பீடு

* மனை உரிமையைக் காட்டும் சிட்டா/ அடங்கல் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்/வட்டாட்சியர் சான்று

* அரசு வழக்கறிஞரின் சட்ட ஒப்புதல் (Legal opinion )

* அலுவலகத்திலிருந்து பெற்ற சம்பளச் சான்று

* உத்தேசப் பணிக்கொடை கணக்கீட்டுப் படிவம்

கடன் ஏற்பளிப்பு:

மேற்கண்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பம் சரியாக இருப்பின் நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் முன்னுரிமை வரிசைப்படி கடன் ஏற்பளிப்பு ஆணை வழங்கப்படும். படிவம் 5-ல் ஒப்பந்தப் பத்திரம் எழுதித்தந்த பின் முதல் தவணை வழங்கப்படும். முதல் தவணை பணத்தைக் கொண்டு கூரை மட்டம் வரை வீட்டை கட்டியபின் பொறியாளரிடமிருந்து பெற்ற பயன்பாட்டு (Utilization Certificate) சான்றுடன், படிவம் 3-ல் பெற்ற கடனுக்கு வீட்டை அரசுக்கு அடமானம் எழுதித்தர வேண்டும்.

இந்த அடமானப் பத்திரத்தை சார் பதிவகத்தில் பதிவுசெய்துவிட்டு வந்து ஒப்படைத்த பின் மாவட்ட ஆட்சியர்/ நேர்முக உதவியாளர் / கோட்ட ஆட்சியர் வீட்டை ஆய்வு செய்வார். வரைபடத்தின்படி வீடு கட்டப்பட்டுள்ளதை உறுதிசெய்து சான்றளித்த பின் இரண்டாவது தவணை கிடைக்கும். ஆயத்த வீடு வாங்குவோருக்குக் கடனை திருப்பிச் செலுத்த ஒப்பந்தப் பத்திரம் எழுதித் தந்ததும் ஒரே தவணையில் கடன் தரப்படும். இரண்டு மாதத்தில் வீட்டை வாங்கிப் பத்திரப் பதிவு செய்ய வேண்டும்.

ஆறு மாத காலத்துக்குள் வாங்கிய வீட்டை அரசுக்கு அடமானம் எழுதிப் பதிவு செய்ய வேண்டும். கடன் பிடித்தம்: ஆயத்த வீட்டுக்குக் கடன் பெற்றவர் களுக்குக் கடன் வழங்கப்பட்ட மறு மாதமே பிடித்தம் தொடங்கும், புதிய வீடு கட்ட/வீட்டை விரிவுபடுத்த கடன் பெற்றவர்களுக்குப் புதிய வீட்டில் குடியேறிய மாதம் அல்லது முதல் தவணை பெற்ற தேதியிலிருந்து பதினெட்டாவது மாதத்தில் கடன் தவணை பிடித்தம் செய்யப்படும். இதற்கு அதிகபட்சம் 180 மாதத் தவணைகள்;

பின்னர் வட்டி, இதற்கான அதிகபட்ச தவணை 60 மாதங்கள். ஆக, இருபது ஆண்டுகளுக்கு மிகாமல் கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும். இருபது ஆண்டுகளுக்குக் குறை வாகப் பணிக்காலம் உள்ள அரசுப் பணியாளரும் விண்ணப்பிக்கலாம். எஞ்சியுள்ள பணிக்காலத்துக்கு ஏற்றாற்போல் கடன் தொகையும், தவணைக் காலமும் நிர்ணயிக்கப்பட்டு கடன் வழங்கப்படும். சில நேர்வுகளில் வட்டித்தொகையைப் பணிக்கொடையில் பிடித்தம் செய்யவும் கூடும்.

காப்பீடு:

வீட்டைக் கட்டி முடித்ததும் கடன் தொகை மற்றும் வட்டித் தொகை ஆகியவற்றின் கூடுதல் மதிப்புக்கு வீட்டைக் காப்பீடு செய்து காப்பீட்டை கடன் முடியும் வரை புதுப்பித்தல் வேண்டும்.

காப்பீடு செய்யத் தகுதியான ஐந்து நிறுவனங்கள் அரசுப் பட்டியலில் உள்ளன. அவற்றில் மட்டுமே காப்பீடு செய்ய வேண்டும். கடனும் வட்டியும் பிடித்தம் செய்யப்படும்வரை ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கும்.

கடன் தொகையை வட்டியுடன் கட்டி முடித்தபின் அடமானப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டு வந்து ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

சிறப்பு குடும்ப நலத்திட்டம்:

வீடு கட்டும் கடன் பெற்றோருக்கெனக் குடும்ப பாதுகாப்புத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன்படி, தவணைத் தொகையில் ஒரு சதவீதத் தொகையை மாதச் சந்தாவாகச் செலுத்திவர வேண்டும். கடன்பெற்ற பணியாளர் இறக்கும் பட்சத்தில் கடனும் வட்டியும் இத்திட்டத்தின் மூலம் தள்ளுபடி செய்யப்படும்.
.

17.6.16

மாநிலப் பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்

நாள் : 19.06.2016

இடம் : செய்யது மூர்துஷா அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்சி. (மரக்கடை நிறுத்தம்)

தலைமை : திரு. ஆ. மதலைமுத்து, மாநிலத்தலைவர்

வரவேற்புரை : திரு பழனிச்சாமி, மாவட்டச்செயலாளர், திருச்சி

வேலை அறிக்கை : திரு. அ. சங்கர், பொதுச்செயலாளர்

வரவு-செலவு அறிக்கை : திரு.கு.தியாகராஜன், மாநிலப் பொருளாளர்

இதழ் அறிக்கை : திரு. ம. எட்வின் பிரகாஷ், மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்

பொருள் :

1. 2016-2017 கல்வியாண்டில் உறுப்பினர் சேர்க்கை,

2. இணையம், இதழ் வளர்ச்சி, புரவலர் திட்டம்,

3. மாநில இணை நிர்வாகிகள் தேர்வு

4. வழக்கு விவரம்

5. மாநிலப் பொதுச் செயலாளர் அனுமதியுடன் கொணர்வன.

மாநில பொறுப்பாளர்கள், இணை / துணை பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், கல்வி மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

என்றும் சங்கப்பணியில் ...

அ. சங்கர்
(பொதுச்செயலாளர்)
.

16.6.16

வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என தடை

தமிழகத்தில், துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள் வரை, எந்த பள்ளி ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் எக்காரணம் கொண்டும், பள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரவே கூடாது என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை:

மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கும் வகையில், மாணவர்கள், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதித்து, 2007ம் ஆண்டே அரசாணை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் படி, மாணவ, மாணவியர், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப் படுகிறது. இதை, ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்

மீறி யாரும் கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து, ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.

வகுப்பறையில் பாடம் நடத்தும்போது, ஆசிரியர்கள் மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து வைக்க வேண்டும்; மீறினால், ஆசிரியர் கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி கல்வி இயக்குனர் அறிக்கை:

வகுப்பறையில், ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் மொபைல் போன்களைபயன்படுத்தக் கூடாது. வகுப்பறையில், மொபைல் போனில் பேசினால், அந்த ஆசிரியர் மீது, தலைமை ஆசிரியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது, மொபைல் போனை கண்டிப்பாக எடுத்து வரக் கூடாது. மீறி கொண்டு வந்தால், அவர்களின் மொபைல் போனை ஆசிரியர்கள் பறிமுதல் செய்து, மாணவனின் பெற்றோரை வரவழைத்து, எச்சரிக்க வேண்டும்.
.

14.6.16

அரசாணை வெளியிட்ட பின்பும் புதிய ஓய்வூதியத் திட்ட பணப்பலன்கள் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி

அரசாணை வெளியிட்டும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு புது பென்சன் திட்ட பணப்பலன்கள் கிடைப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. தமிழகத்தில் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். 2003 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து புதிய பென்ஷன் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் படி இத்தேதியில் இருந்து பணிக்கு சேர்ந்த வர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் பொருந்தாது என்று தமிழக அரசு அறிவித்தது. இதனால் 4.50 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள் ளனர். இத் திட்டத்தினால் ஓய்வூதியம் பாதிக்கப் பட்டதோடு பணிக் கொடை, வருங்கால வைப்பு நிதிக் கடன், கமிட்டேசன் உள்ளிட்ட ஏராளமான சலுகைகள் பறிபோனது.

மேலும், புதிய பென்ஷன் திட்டத்தில் பிடிக்கப்பட்டுள்ள தொகையும் ஒய்வு பெற்றவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. 2011 தேர்தலின் போது புதிய பென்ஷன் திட்டம் ரத்து செய்யப்படும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை சங்க நிர்வாகிகளைக் கூட அழைத்துப் பேசவில்லை. இதனால் நொந்து போன அரசு ஊழியர்கள் படிப்படியாக தங்கள் போராட்டத்தை விரிவுப்படுத்தினர். ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலை மறியல் என்று ஒரு கட்டத்தில் கலெக்டர் அலுவலகங்களில் தங்கியிருக்கும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

போராட்டம் முற்றியதால் கடந்த பிப்.19ம் தேதி புதிய பென்சன் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற, இறந்த, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு இதற்கான பணப்பலன் வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார். தொடர்ந்து பிப்.22ல் இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து பலரும் இதற்காக விண்ணப்பித்தனர். ஆனால் இன்று வரை அலைக்கழிப்பே இவர்களுக்கு மிஞ்சுகிறது.

இணைப்புப் படிவம் இல்லை, பணி பதிவேடு நகல் இல்லை, பணி விடுவிப்பு ஆணை இணைக்கப் படவில்லை என்று தொடர்ந்து தாமதப்படுத்தும் முயற்சிகளே நடந்து கொண் டிருக்கி றது. இதனால் அரசாணை வெளியிட்டும் புதிய பென்சன் திட்ட பணப் பலன்களை ஓய்வு பெற்ற பலரும் பெற முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.
.

அடைவுத் தேர்வு முறையில் மாற்றம் - அனைவருக்கும் கல்வி இயக்கம்

மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது. அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாநில அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்காக ஒன்றியத்திற்கு 10 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளியிலும் 3, 5, 8 ம் வகுப்புகளில் தலா 15 மாணவர்கள் தேர்வு எழுதினர். மேலும் 3, 5 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களிலும், 8 ம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களிலும் தேர்வு நடத்தப்பட்டன. பெரும்பாலும் நன்றாக படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத வைக்கப்பட்டதால் உண்மையான கல்வித் தரத்தை அறிந்து கொள்வதில் குழப்பம் இருந்தது.

இதையடுத்து இந்த ஆண்டு முதல் அடைவுத் தேர்வு முறையில் சில மாற்றங்களை அனைவருக்கும் கல்வி இயக்கம் செய்துள்ளது. அதன்படி அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் எல்லா மாணவர்களும் அடைவுத் தேர்வு எழுத வேண்டும். மேலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகஅறிவியல் என, அனைத்து பாடங்களிலும் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன்மூலம் மாணவர்களின் உண்மையான கல்வித்தரத்தை அறிய திட்டமிடப்பட்டுள்ளது.
.

31.1.16

தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்: பல ஆயிரம் ஆசிரியர்கள் கைது

கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பல ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். 

மத்திய அர சுக்கு இணை யான ஊதி யம் வழங்க வேண் டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய பென்சன் முறையை கொண்டு வர வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வை நீக்க வேண் டும், தொடக்கப் பள்ளி முதல் மேல் நி லைப் பள்ளி வரை தமிழ் மொழி வழிக் கல்வி நடைமுறைப் படுத்த வேண்டும் என்பன உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி ஜனவரி 30, 31, பிப்ரவரி 1ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ) அறிவித்திருந்தது.
அதன் படி, நேற்று தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


சென் னை யில் ஜாக்டோ அமைப்பை சேர்ந்த உயர் மட்ட குழு உறுப் பி னர் சங் கர பெரு மாள், பொதுக் குழு உறுப் பி னர் பக் த வச் ச லம், சி.உத ய கு மார், ஆர்.பெரு மாள் சாமி, சென்னை மாவட்ட நிர் வா கி கள் சத் தி ய நா தன், லிங் கே சன் ஆகி யோர் தலை மை யில் 500க்கும் மேற் பட்ட ஆசி ரி யர் கள் சேப் பாக் கம் விருந் தி னர் மாளிகை முன்பு திரண்டு நேற்று ஆர்ப் பாட் டத் தில் ஈடு பட் ட னர். அப் போது, அவர் கள் கோரிக் கை களை வலி யு றுத்தி கோஷம் எழுப் பி னர்.பின் னர், ஆர்ப் பாட் டத் தில் ஈடு பட் ட வர் கள் சேப் பாக் கம் விருந் தி னர் மாளி கை யில் இருந்து கோட்டை நோக்கி பேர ணி யாக செல்ல முயன் ற னர். அவர் களை அங்கு பாது காப்பு பணி யில் இருந்த போலீ சார் தடுத்து நிறுத்தி கைது செய் த னர். கைது செய் யப் பட்ட ஆசி ரி யர் கள் அரு கில் உள்ள மைதா னத் திற்கு கொண்டு செல் லப் பட்டு மாலை யில் விடு விக் கப் பட் ட னர்.
 

மாவட் டங் க ளில்: இது போல மாவட் டங் க ளி லும் போராட் டம் நடத் திய பல ஆயி ரம் பேர் கைது செய் யப் பட் ட னர். மொத் தம் 2 லட் சம் ஆசி ரி யர் கள் வரை கைது செய் யப் பட் டுள் ள தாக தெரி கி றது.

மதுரை, சிவ கங்கை, திண் டுக் கல், தேனி, விரு து ந கர், ராம நா த பு ரம் ஆகிய 6 மாவட்ட தலை ந க ரங் க ளில் சாலை ம றி ய லில் ஈடு பட்ட 4 ஆயி ரத்து 44 ஆசி ரி யர் கள் கைது செய் யப் பட் ட னர். சேலம், நாமக் கல், தர் ம புரி, கிருஷ் ண கிரி மாவட் டங் க ளில் நடந்த மறி ய லில் 3,219 ஆசி ரி யர் கள் கைது செய் யப் பட் ட னர்.


நெல் லை யில் நடந்த ஆசி ரி யர் கள் மறி ய லின் போது போலீ சா ரு டன் தள் ளு முள்ளு ஏற் பட் ட தால் பர ப ரப்பு நில வி யது. அங்கு 500 பேர் கைது செய் யப் பட் ட னர். தூத் துக் கு டி யில் 250 பேர், வேலூர், திரு வண் ணா மலை மாவட் டத் தில் 1,800 ஆசி ரி யர் கள், திருச் சி யில் 707பேர், நாகை யில் 1,030பேர், தஞ் சை யில், 850பேர், புதுக் கோட் டை யில் 527பேர், கரூ ரில் 320 ஆசி ரிய, ஆசி ரி யர் கள் கைது செய் யப் பட் ட னர்.


கன் னி யா கு ம ரி யில் 190 பேர், திருப் பூ ரில் 1500, ஈரோட் டில் 1735, நீல கி ரி யில் 334, கோவை யில் 950, விழுப் பு ரம் 800, கட லூர் 400 ஆசி ரியர்கள் கைது செய் யப் பட் ட னர்.

பிரபலமான இடுகைகள்