தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

27.2.11

பள்ளிகளில் உடல் ரீதியான தண்டனைக்கு தடை:குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

பள்ளிகளில் குழந்தைகளுக்கு தரப்படும் உடல் ரீதியான தண்டனைகளை தடை செய்வது குறித்து, பல்வேறு கட்டளைகளை, அனைத்து மாநிலங்களுக்கும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பிறப்பித்துள்ளது.

"தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வரும் குழந்தைகளுக்கு, உடல் ரீதியான தண்டனை தரக்கூடாது' என, அரசு அறிவுறுத்தி வருகிறது. இருந்தாலும், ஆங்காங்கே பள்ளிகளில், குழந்தைகள் மீதான வன்முறை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சமீபத்தில், மதுரையில் உள்ள பள்ளியில், குப்பையை சாப்பிட ஆசிரியர் வற்புறுத்திய சம்பவம், பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு, சுப்ரீம் கோர்ட், பள்ளிக் குழந்தைகளுக்கான உடல் ரீதியான தண்டனைகளை தடை செய்தது. மேலும், குழந்தைகள் உடல் ரீதியான தண்டனைக்கு உட்படுத்தப்படாமல், பயமில்லாத, சுதந்திரமான சூழ்நிலையில் கல்வி வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ஆனாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தனியார் பள்ளிகளில், ஒழுக்கத்தை கடைபிடிக்க, உடல்ரீதியான தண்டனையை பயன்படுத்துகின்றனர். குழந்தைகளும், பயத்தின் காரணமாக, இந்த வன்முறையை அடிபணிந்து ஏற்றுக் கொள்கின்றனர்.தண்டனை அதிகரித்து, பிரச்னை விஸ்வரூபமெடுக்கும் போது மட்டுமே, அவை வெளிவருகின்றன.

சிறு சிறு தண்டனைகளே, பிற்காலத்தில் பெரும் குற்றத்துக்கு வித்தாக அமைவதை அவர்கள் உணர்வதில்லை. அதை கருதி, குழந்தைகளுக்கு ஏற்படும் வன்முறையை தடுக்கவும், அவர்களின் உரிமையை பாதுகாக்கவும், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாணையம், அனைத்து மாநிலங்களிலும் கல்வித்துறையில் பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

குறிப்பாக, பள்ளிகளில் நடைமுறைப்படுத்த வேண்டிய விதிமுறைகள் குறித்து கூறியிருப்பதாவது:

பள்ளி மாணவ, மாணவியருக்கு, கை மற்றும் கால் முட்டிகளில் அடித்தல், பள்ளி மைதானத்தை சுற்றி ஓடச் செய்தல், பல மணி நேரத்துக்கு முழங்கால் இடச்செய்தல், பல மணி நேரம் சேர்ந்தார் போல்உட்கார செய்தல், பிரம்பால் அடித்தல், கிள்ளுதல், அறைதல், பாலியல் வன்முறை, தனி அறையில் பூட்டி வைத்தல், மின்சார அதிர்ச்சி மற்றும் அவமானப்படுத்துதல், உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட உடல் ரீதியான தண்டனைகள் கண்டிப்பாக தடை செய்யப்பட வேண்டும்.

பிரசாரம் மற்றும் விளம்பரங்களின் மூலம் குழந்தைகளுக்கு, அவர்களின் உரிமையை பற்றி தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது இழைக்கப்பட்டுள்ள கொடுமைகளை எடுத்துக் கூறி, நம்பிக்கை அளிக்க வேண்டும். உடல் ரீதியான தண்டனைகளை எப்போதும் நடக்கக் கூடிய ஒரு சாதாரண செயலாக எண்ணிவிடக் கூடாது.ஒவ்வொரு பள்ளியிலும் விடுதிகள், காப்பகம் ஆகியவற்றில், குழந்தைகள் தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் சொல்லும்படியான ஒரு குழு அமைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும், குழந்தைகள் புகார்களை தெரிவிக்க, ஒரு புகார் பெட்டி அமைத்தல் வேண்டும்.

மாதாமாதம் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அல்லது பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளி மற்றும் நிர்வாகக் குழு குழந்தைகளின் புகார்களை பரிசீலித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள் செய்த புகார் அடிப்படையில், பெற்றோர் ஆசிரியர் சங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பிரச்னைகளை ஒத்தி வைத்தல் கூடாது.பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இத்தகைய அநீதிகளை எதிர்த்து குரல் எழுப்புவதற்கு, உரிமை அளித்தல் வேண்டும். ஏனெனில், இவை குழந்தைகள் மத்தியில் ஒரு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

உள்ளாட்சி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் செயல்படும் கல்வித் துறைகள், குழந்தைகளின் புகார்களை பரிசீலனை செய்யவும், கண்காணிக்கவும், ஒரு தெளிவான வழிமுறைகளை வரையறுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளை, இரண்டு மாதத்துக்குள் சமர்ப்பிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி


ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பி.எஸ்.என்.எல்., "சிம்கார்டு'

தமிழக சட்டசபை தேர்தலில், 54 ஆயிரம் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, பி.எஸ்.என்.எல்., "சிம்கார்டு'கள் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில், சட்டசபை தேர்தலுக்காக, 54 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் ஓட்டுச்சாவடி அலுவலர் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு, தேர்தல் கமிஷன் வாங்கியுள்ள பி.எஸ்.என்.எல்., குரூப், "சிம் கார்டு' வழங்கப்படும். இவர்களைத் தவிர, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் உட்பட, வேறு யாருக்கும், ஓட்டுச்சாவடிக்குள் மொபைல்போன் பயன்படுத்த அனுமதியில்லை.

ஓட்டுப் பதிவு நடைபெறுவது குறித்து, ஓட்டுச் சாவடி அலுவலர்கள், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை, தேர்தல் கமிஷனுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். வேறு யாருக்கும் தகவல் தர வேண்டியதில்லை. மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டருக்கு கூட, சென்னை தேர்தல் கமிஷனிலிருந்து மட்டுமே, ஓட்டுப்பதிவு குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.

தேர்தல் நேரத்தில் அனைத்து தகவல்களையும், தேர்தல் கமிஷனே முதலில் பெற வேண்டும் என்பதால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், "வெப்கேமரா'வும் பொருத்தப்படவுள்ளது.

நன்றி


சென்சஸ் கணக்கெடுப்பிற்கு பின் பிறப்பு, இறப்புகளை பதிய உத்தரவு

மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின் நடந்த பிறப்பு, இறப்புகளை மார்ச் 5 க்குள் கணக்கெடுத்து அனுப்ப சென்சஸ் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் 2011ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பிப். 9 முதல் துவங்கி நாளை முடிவடைகிறது. 

இதுபற்றி சென்சஸ் கமிஷனின் உத்தரவு: மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு பின், பிறப்பு, இறப்புகள் இருந்தால் அந்த விபரங்களை, மார்ச் 5ம் தேதிக்குள் கணக்கெடுக்க வேண்டும். இவற்றை மேற்பார்வையாளர்கள் சரிபார்த்து மாநில சென்சஸ் கமிஷனுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் முறையாக வீடுகளுக்கு கதவு எண்கள் வழங்காததால் கணக்கெடுப்பாளர்கள் மிகுந்த அலைச்சலுக்கு உள்ளாகினர். வீடுகள் கணக்கெடுப்பில் விடுபட்டவர்கள் அல்லது தங்கள் பகுதிக்கு கணக்கெடுக்க ஆட்கள் வரவில்லை என தெரிந்தால் சம்மந்தப்பட்ட தாசில்தாருக்கு போனில் சரியான முகவரியை தெரிவிக்கலாம். இத்தகவல் கணக்கெடுப்பாளருக்கு தெரிவிக்கப்படும். அவர், அதை பதிவு செய்வார்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் அதற்கான தனிபட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுவர் எனவும் சென்சஸ் கமிஷன் தெரிவித்துள்ளது.

நன்றி


26.2.11

Simultaneous tax deduction benefits for home loan and HRA

What are the conditions under which a person can claim both HRA exemption and as well as loss from house property at the same time? 

As per income tax act both benefits are independent of each other and there is no relation what to so ever in claiming HRA exemption and House loan interest ,if person fulfill conditions to avail benefit given in ACT than he can claim ,and condition is be checked separately for each section.

HRA EXEMPTION


To claim HRA Exemption following point/condition to be satisfied.
Persons has a salary income and Getting House rent allowance
person has actually incurred expenditure on payment of rent (by whatever name called) in respect of the residential accommodation occupied by him.


The residential accommodation occupied by the assessee should not be owned by him.


In your case you full fill all the above condition ,means have a salary income ,getting hra ,paying rent and residing in Rented house.so you are eligible to claim HRA exemption irrespective of your house loan interest claim.

House loan Interest claim.


while calculating income from house property first annual value of house is to be determined.

House is let out (value will be according to Rent received)


House is self occupied by the owner for own residence. (annual value will be nil)


house cannot actually be occupied by the owner by reason of the fact that owing to his employment, business or profession carried on at any other place, he has to reside at that other place in a building not belonging to him(annual value will be nil)


in situation two and three value of house annual will not be nil if
the house or part of the house is actually let during the whole or any part of the previous year; or


any other benefit therefrom is derived by the owner.


more over if assessee has more than one house which fullfil condition two or three above than he can take this benefit of annual value as nil ,only on one house at his option.means Income tax act permits that a person can have more than one self occupied house but he can avail benefit only for one house and other houses will be deemed to be let out.

now if you are living in rented house so you are satisfying condition of Hra so you can claim hra exemption.

In case of your own house ,the house is self occupied by you ,it doesn't matter if you are going to house at weekend or monthly and your parents are living in your own house,it is covered under definition of self occupied under income tax act.As I have clarified above In income tax act self occupied definition is not the same as we generally taken and as per act person can have more than one house as self occupied ,and as per income tax self occupied means

house is not let out for whole or part the previous year
no any other benefit therefrom is derived by the owner
so you can claim house loan interest.

if house cannot actually be occupied by the owner by reason of the fact that owing to his employment, business or profession carried on at any other place, he has to reside at that other place in a building not belonging to him


Source: 

www.caclubindia.com
.

House Rent allowance (HRA) exemption - FAQ


1. I have received salary arrears of last years.For HRA exemption arrears is to be included or not?

Ans : For HRA exemption ,salary of the relevant period for which we are calculating exemption is to be taken .so arrears are not be included for HRA purposes .salary on due basis is to be taken.


2. As per Sixth Pay commission ,Grade pay has been added in Basic Pay ,whether it is part of salary for Calculation of HRA exemption ?


Ans: as per sixth pay commission

Basic pay = Pay in pay band plus grade pay
so according to 6th cpc grade pay is part of basic pay .and basic pay you are referring is actually pay in pay band .in brief grade pay is to be included for salary as per HRA exemption calculation.

3. I am a doctor and receiving NPA (non practice allowance) ,and it is also considered in most of the retirement benefits .Is NPA to be included in salary for HRA exemption ?


Ans.No ,it is not.As per section 10(13A) ,only DA is to be included in the salary for HRA exemption calculation.


4. To claim HRA exemption ,my DDO is asking for Rent payment receipt from my landlord .what should I do?


Ans: Give him ,what he asking for .yes produce the house rent payment receipt to him.Actually DDO(drawing and disbursing officer) is responsible to deduct TDS from salary ,so to avoid penalties at later stage ,he has to verify all the saving proofs ,rent receipt etc from the employee.and if employee is unable to produce the same then DDO is empowered to reject the claim of the employee.


5. Is it necessary to Give Landlord's Pan number on rent receipt ?


Ans: No ,its not mandatory and nothing is mentioned about this in the Income tax act or rules.

6. My friend have informed me that there is a cut off amount for rent paid after which only,rent receipt is required.Is it true?


Ans: yes and No .Yes because there is a cut off Limit .No because the cut off limit is for HRA received PM and not for House rent paid.Those employees ,who are receiving house rent up to 3000 per month are not required to submit Rent receipt to DDO.I repeat this 3000/- limit is for house rent received and House rent paid in this case may be more than 3000/-.


7. I have produce rent receipt to my DDO but he his now asking for rent agreement ?


Ans: Rent receipt is enough to claim the HRA exemption ,and I request to your DDO, please do not ask for rent agreement . (jane bhi do yaar ,main bhi DDO hoon ,koi jarroorat nahin hain rent agreement ki ,rent receipt de to di aap ko ).On the reverse ,if employee has submitted a rent agreement only then DDO should ask for rent receipt as the rent agreement is not a proof of payment.


8. My DDO /employer has rejected my HRA exemption and deducted the tax accordingly.Further nothing has been mentioned about HRA exemption in Form 16 issued by the employer .Can I claim HRA exemption while filing my Income tax return?


Ans:yes ,you can .If employer has not considered your HRA exemption claim then you can claim the same while filing your
income tax return even nothing has been mentioned about HRA/HRA exemption in Form 16.

9. I have paid rent to my wife/Father .Can I claim HRA exemption?


Ans: if this is actual payment then yes you can claim rent exemption even if the rent is being paid to your family members .But remember House must be on their name or he/she must be authorise to receive rent on the property.Though the above point have no relation with HRA exemption but tax planning should be done carefully and remain with in limit .

10. Both of us (husband /wife) are working and leaving in same house on rent .we both want HRA exemption .it it in order?


Ans: yes ,you can.But subject to that rent is shared/paid by both of you and individually,both of you can claim exemption up to share of rent paid actually paid by you.


11. I am claiming HRA for three months and moving to own residence after that. When the HRA is calculated, will it take into consideration the basic for three months or basic pay for entire year? i.e., will the calculation be = Actual rent - 10% of annual basic or Actual rent - 10% of three month basic ?


Ans:calulate salary & House rent paid month to month basis and then calculate full year year exemption by aggregating all month in your case excercise is required to be done for three months only.


12. Can i get HRA exemption and interest of House loan and princial amont both the amounts, if i am not staying in my own house because it is in other city


Ans :yes ,You can claim both HRA & House loan interest if you are staying at other place due to employment.


13. I am paying rent for house at delhi where my family is living and also paying rent for accommodation in another city where iam employed. can i claim HRA exemption for total rent paid by me for both the accommodation?


Ans . As per rule 2A ,rent paid is to be considered for only one house in whih assessee is residing and paying the rent .so you can claim rent for only where you are residing ,not on house in which falily is living


14. What if i have a house in my name ,and another house joined to my house in mother name

can i get hra benefit if i pay rent to my mother ?

Ans:You can claim HRA only if you have actually paid it ,in this case also ,i you have paid rent to your mother ,then you can claim HRA exemption benefit. Further if you show House rent payment and claim HRA exemption then your own house will be deemed to be let out and you have to add rent in your income for that house.so on one side your income will be reduced by HRA exemption ,on the other side you have pay tax on deemed rent for house owned by you.Overall no benefit in doing this.


15. I have been taken a House loan and my house e is under construction.I am paying 12000 as EMI. Can I take HRA exemption?


Ans:You can Claim Hra Benefit till your house completed subject to that you have actually paid the Rent .Further in future also, you can continue to claim HRA benefit ,if your house is at a location, other than where you are employed or you will give house for a rent .Moreover you can claim House loan benefit in Fy 2009-10 only if your house is completed by 31st march,2010.


Source:
www.simpletaxindia.org
.

Tax: Should you invest in Infrastructure Bonds?

One of the fresh tax reliefs in the Budget 2010 is the deduction allowed for investing up to Rs 20,000 in infrastructure bonds.

Many media articles and the finance minister have said that this is a very positive thing. But how can the same thing be positive for every individual? If not negative, it should at least be neutral for many. Else life would be so boring.

This article will try to look the pros and cons of investing in infrastructure bonds for the sake of tax-saving. The analysis will be from the perspective of the different 'tax groups' post Budget 2010.
  • Tax group 1: Taxable income Rs 1.6 lakh to Rs 5 lakh.
  • Tax group 2: Taxable income Rs 5 lakh to Rs 8 lakh.
  • Tax group 3: Taxable income above Rs 8 lakh.
To understand the pros and cons of any tax-saving investment, we need to look at four major parameters:
  • Actual tax-saving (let's take the highest saving possible);
  • Returns from the investment (during the lock-in period at the least);
  • Opportunity cost (what if the same money had been invested in some other investment?); and
  • Effect of Inflation on the returns on investment (what would the worth of your investment be when it comes to redeem/encash it?).
Assumptions
For the sake of parameter 2, we will have to make an assumption on the lock-in period (as nothing has so far been announced by the finance minister). As is generally the case with most tax-saving instruments we can assume two scenarios -- a 3-year lock-in and a 5-year lock-in.

Let's assume the rate of return on infrastructure bonds = 5.5% per annum.

Let's consider the overall rate of inflation at 8%.

For people in the Rs 1.6-5 lakh taxable income group, income will be taxed at the rate of 10%.

Parameter 1: Actual tax-saving: 10% of Rs 20,000 = Rs 2,000 (if you invest Rs 20,000 in the instrument you get to reduce your taxable income by Rs 20,000 thus giving a 10 per cent benefit).

Parameter 2: What will be the returns at the end of the lock-in period? For a lock-in period of 3 years an investment of Rs 20,000 would fetch an income of Rs 3,484. When added to the tax saved we get an effective return of Rs 25,485 (Rs 20,000 + Rs 3,484 + Rs 2,000) on our investment.

Parameter 3: If this same amount were to be invested in a market instrument that fetched a return of 15% (which is very reasonable considering that the benchmark Sensex and many mutual funds have given comparatively higher returns over a long period), the investment would fetch an effective return of Rs 27,376 (Rs 20,000 - Rs 2000 = Rs 18,000 invested @15% per annum for 3 years).

Parameter 4: What would be the minimum amount required to counter inflation at 8%? The amount would be Rs 25,194.
Thus we see that for a person in the Rs 1.6-5 lakh slab, the benefit from investing in an infrastructure bond as a tax-saving instrument will be only Rs 291 (Rs 25,485 - Rs 25,194) whereas the benefit from paying tax and investing the balance in any decent instrument would be Rs 2,182.

Similarly, we can calculate the benefits for each segment as well as for a scenario where the lock-in period is 5 years as given in the table below.

Rate of tax  Investments in Infrastructure Bonds Tax paid in lieu of investing in Infrastructure Bonds
Slab Tax-savings Effective Returns Investment Returns from Market after Tax
3 years 5 years 3 years 5 years
30% 6,000 29,485 32,139 21,292  28,159
20% 4,000 27,485 30,139 24,334  32,182
10% 2,000  25,485 28,139 27,376  36,204






Required Returns to Counter Inflation Effect  25,194 29,387


The bottomline
As seen from the table above, it makes sense for people in the over Rs 8 lakh taxable income slab to use the infrastructure bonds as a tax-saving instrument.

For the people in the Rs 5-8 lakh bracket, it would be advisable to invest in infrastructure bonds if the period of investment is 3 years, but not for five years and for those in the Rs 1.6-5 lakh bracket, it would be an absolute no-no to invest in Infrastructure Bonds for tax-saving purpose.

Source: 

Rediff Business 

.

Infrastructure bonds for tax saving FY 2010 – 2011

As you know during FY 2010 – 2011 if you invest in long term infrastructure bonds you will get tax benefit. The limit of investment for tax benefit is Rs 20,000. This Rs 20,000 is apart from the regular investments under section 8 0 ( c ). 

IFCI (The Industrial Finance Corporation of India) is the first company to come up with infrastructure bonds eligible for tax benefit under section 80CCF of the Income Tax act, 1961 for long term Infrastructure Bonds.  As you know for the FY 2010 -2011 there is a tax deduction for an additional maximum amount of Rs 20,000 over and above the 1 Lakh limit available under section 80C.

So after looking at this don’t make a quick decision to invest in these bonds to avail tax benefit. Consider your taxable income, other investment avenues, inflation etc before investing in it.
To get the tax deduction the infrastructure bond should be of a minimum tenure of 10 Years and the minimum lock in period of the investment is 5 years. Buy-back (by the issuer of bonds) would be available only on particular dates after the lock in period i.e. 5 years. Please note that these tax rebate bonds can only be issued by certain government and RBI approved entities like LIC, IFCI, Infrastructure Development Finance Company and NBFCs classified by RBI.

The tax rebate on infrastructure bonds is not introduced for the first time by the government. Earlier it was there for a max limit of Rs 30,000 and was discontinued in later years.

Source: 

 

Budget 2011: Pranab Mukherjee set to give you a salary hike

Finance minister Pranab Mukerjee is set to spring a surprise on personal income-tax payers hurt by a sharp increase in prices. He could lighten the tax burden for those with an annual income of Rs 5 lakh by Rs 7,660 a year to compensate them for the increase in cost of living. The sum saved will be much higher for those with a higher annual income.

The relief is set to come from a rejig in tax slabs, to be aligned with those recommended in the direct taxes code. "The UPA government will partially roll out the direct taxes code in the coming Budget to provide relief to the aam aadmi," said a top government functionary.

The bill has proposed a 10% tax rate for taxable income between Rs 2 lakh and Rs 5 lakh, 20% for income above Rs 5 lakh to Rs 10 lakh and 30% for income above Rs 10 lakh. An individual can also claim a deduction of Rs 1.5 lakh a year, which will be split into two segments. One will be a deduction up to Rs 1 lakh on investments in long-term savings instruments such as Public Provident Fund, new pension schemes and recognised superannuation funds. In addition, a deduction of up to Rs 50,000 will be available on premiums paid for life insurance, medical insurance and tuition fee for children.

The income tax payer will not have to pay an education cess of 3% as well either in the new structure. The tax break of up to Rs 1,50,000 on home loan interest will continue.

So, the tax burden of an individual with an annual income of Rs 5 lakh would work out to Rs 15,000 a year instead of Rs 22,660 now, if he has no housing loan.

Income-tax slabs were last changed in 2010-11. The slabs were widened again to compensate for a higher cost of living and reward the missing middle for better compliance. The government also introduced infrastructure bonds, with a separate ceiling of Rs 20,000 to increase investment avenues for individuals, taking the total tax deduction to Rs 1,20,000. The tax break on infra bonds was meant to be available only for one year.

According to Congress sources another incentive in the Budget could be a package for handloom and power loom weavers in the state. A delegation led by Rahul Gandhi had met Prime Minister Manmohan Singh on Wednesday to seek relief for weavers in the coming Budget.

The Congress general secretary had suggested providing credit cards for weavers on the lines of Kisan Credit Card. Congress leaders said a decision on this front would give immense political mileage for the party in states like Uttar Pradesh. 
 
Source: 
 

Raise income tax exemption limit to Rs 3 lakh: Survey

The government must increase the personal income tax exemption limit to at least Rs 3 lakh from Rs 1.6 lakh at present in the upcoming Budget for giving relief to taxpayers from high inflation, majority of CEOs surveyed by industry body Assocham has said.

"In view of the unprecedented inflation particularly the food inflation, the government must increase the personal income tax exemption limit from the existing Rs 1.6 lakh to at least Rs 3 lakh to give adequate relief to the larger sections of the society, added the majority of the CEOs," the pre-Budget survey said.

The Budget 2011-12 would be unveiled by Finance Minister Pranab Mukherjee on February 28. At present, income up to Rs 1.6 lakh is exempted from tax for individuals. For women and senior citizens, the limit is Rs 1.9 lakh and Rs 2.4 lakh, respectively.

However, under the the Direct Taxes Code (DTC) Bill which was introduced in Parliament last year, the I-T exemption limit is Rs 2 lakh. The DTC is expected to replace the 50-year old Income Tax Act from April, 2012.

The survey further said that due to continuous elevated inflation and high commodity prices across globe, there is a strong case for continuation of stimulus package so that the growth momentum is not spiked.

It was a pre-Budget expectations survey conducted under the Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM) with participation from its 1,000 CEOs. Inflation, particularly food inflation, has been a concern for both the government and the common man. For past the few months, food prices are at high levels.

The WPI inflation for December rose to 8.43 per cent, from 7.48 per cent in the previous month. Food inflation, based on wholesale prices, rose to 17.05 per cent for the week ended January 22, on account of escalating vegetable prices, particularly, onions. It was at 15.57 per cent in the previous week.

Around 84 per cent of the CEOs belonging to large, micro, small and medium enterprises polled in the survey held that stimulus package for textiles, gems & jewellery, construction and real estate, cement and steel, among others, should continue for the next fiscal.

Besides, majority of the CEOs also pressed for larger and faster disinvestment in public sector undertakings, proceeds of which should partly be to fund infrastructure augmentation in PPP projects to help India grow and achieve intended growth rate of close to 9 per cent in next 2-3 years. 


Source:

.

25.2.11

வருமான வரி விலக்கு பெற வீட்டு வாடகை ரசீது தேவையில்லை

 .
மாத ஊதியம் பெறுவோர் வீட்டு வாடகைப்படி ரூ.3000/-க்கு குறைவாக பெறும் நிலையில் வருமான வரி விலக்கு பெற வீட்டு வாடகை ரசீது சமர்பிக்கத் தேவையில்லை.

Section 10(13A)

House rent allowance

For the purposes of calculating the house rent allowance that would be exempt under rule 2A, the term ‘salary’ includes ‘dearness pay’ also—Circular : No. 90 [F. No. 275/79/72-ITJ], dated 26-6-1972.

It is necessary for granting the exemption under section 10(13A) that the employee should have actually incurred the expenditure on rent. For purposes of deduction of tax, therefore, the disbursing officer should ensure that the employee concerned has in fact incurred the expenditure on rent. The payment of rent should be verified through rent receipts in the cases of all employees.
House rent allowance paid to a person, who is living in his own house or in a house for which he does not actually pay any rent, is not exempt from tax in any circumstances—Letter : F. No. 12/19/64-IT(A-I), dated 2-1-1967.

Only the expenditure actually incurred on payment of rent in respect of residential accommodation occupied by the assessee subject to the limits laid down in rule 2A, qualifies for exemption from income-tax. Thus, house rent allowance granted to an employee who is residing in a house/flat owned by him is not exempt from income-tax. The disbursing authorities should satisfy themselves in this regard by insisting on production of evidence of actual payment of rent before excluding the house rent allowance or any portion thereof from the total income of the employee. Though incurring actual expenditure on payment of rent is a pre-requisite for claiming deduction under section 10(13A), it has been decided as an administrative measure that salaried employees drawing house rent allowance upto Rs. 3,000 per month will be exempted from production of rent receipt. It may, however, be noted that this concession is only for the purpose of tax deduction at source, and, in the regular assessment of the employee, the Assessing Officer will be free to make such enquiry as he deems fit for the purpose of satisfying himself that the employee has incurred actual expenditure on payment of rent - Circular No. 798, dated 30-10-2000 [Para 5.2-(9)]. & Circular No. 8/2010 [F.No. 275/192/2009-IT(B)], dated 13-12-2010 [Para 5.2 - (9)].
.

21.2.11

"வணக்கம் சார்! மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துருக்கோம்!'


"வணக்கம் சார்! மக்கள் தொகை கணக்கெடுக்க வந்துருக்கோம்!"


- ரோட்டில் இருந்து வாசல் கதவை எட்டிப் பார்த்துக் கூவுகிறார் அந்த அரசு ஊழியர்.


"நாளைக்கு சாயந்தரமா வாங்க" என, முகத்தில் அடித்தாற்போல் பதில் வருகிறது. பென்சிலால் அதைக் குறித்துக்கொண்டு, அலுக்காமல் அடுத்த வீட்டு கதவைத் தட்டுகிறார் அந்த ஊழியர்.


இப்படித்தான் இருக்கிறது, மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களின் நிலை. சிலர் காலையில் வரச் சொல்வர்; சிலர் மாலையில்; சிலர் அடுத்த நாள். சிலரிடம் பதிலே கிடையாது. "அவ்வளவு ஏன்? விவரம் சொன்னதும், படாரென்று கதவைச் சாத்தியவர்களும் உண்டு" என, குமுறுகிறார் சென்னையின் புறநகர்ப் பகுதியில் கணக்கெடுக்கும் ஒரு பெண்மணி. மக்களைச் சொல்லியும் குற்றமில்லை. வாரம் முழுவதும் வேலை பார்த்து, வீட்டில் ஓய்ந்து கிடக்கும் நேரத்தில், யாரோ அதிகாரியின் கேள்விகளுக்கு அரை மணி நேரம் பதில் சொல்வதென்றால் கசப்பாகத் தான் இருக்கிறது. இப்படி இரண்டும் இரு துருவத்தில் இருக்கும் என்பதைக் கணித்து தான், இந்தப் பணிக்கு 20 நாட்களை ஒதுக்கியிருக்கிறது உள்துறை அமைச்சகம்.


கடந்த 9ம் தேதி துவங்கிய கணக்கெடுப்பு, 28ம் தேதி முடிவுக்கு வருகிறது. பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பவர்கள் பெரும்பாலும், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பணியாளர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், அறிவொளி இயக்கத்தில் பணிபுரிந்தவர்கள் மற்றும் சத்துணவுத் திட்டத்தில் இருப்பவர்கள். அனைவருக்கும் அடையாள அட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐந்து கணக்கெடுப்பாளருக்கு, ஒரு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று நாள் பயிற்சி கொடுக்கப்பட்டது. காலை, மாலை என அவரவர் வசதிக்கேற்ப, அரை நாள், "அனுமதி" அளிக்கப்படுகிறது. 

ஒரு கணக்கெடுப்பாளர் சராசரியாக ஒரு நாளைக்கு பத்து வீடுகளில் கணக்கெடுக்கிறார். காலை 6 மணிக்கு துவங்கும் பணி, பல நாட்களில் இரவு 10 மணி வரை நீள்கிறது. இப்படி அகாலமான வேளையில் வீடுகளுக்குச் செல்லும்போது, பெண்கள் நைட்டியுடனும், ஆண்கள் வெற்றுடம்போடும் இருப்பது, கணக்கெடுக்கச் செல்லும் எதிர்பாலினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குகிறது.


சென்னை புறநகரில் பார்த்த ஒருவர், வெறும் நாலு முழம் துண்டுடன் தான், அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்தார். மேற்கு மாம்பலத்தில் கணக்கெடுத்த ஒரு பெண்ணின் நிலை இன்னும் மோசமானது. இரவு 7.30 மணிக்கு ஒரு வீட்டுக்குப் போனார். குடும்பத்தின் மூத்த குடிமகன், முட்ட முட்டக் குடித்திருந்தார். எல்லாவற்றுக்கும் எடக்கு மடக்கான பதில்கள் தான். "எத்தனை குழந்தைகள்?' எனக் கேட்டால், "இந்த வீட்டுல ரெண்டு; அந்த வீட்டுல ரெண்டு' என பதில். நல்லவேளையாக, அருகிலேயே அவரது மனைவியும் இருந்ததால், தப்பித்தோம் பிழைத்தோம் என, கிடைத்த தகவல்களைப் பெற்றுக்கொண்டு, "எஸ்கேப்' ஆனார் பெண். இதேபோல ஆண்கள் கணக்கெடுக்கச் செல்லும் சில இடங்களில், "வீட்டுல ஆம்பளைங்க இல்லை; அப்புறமா வாங்க' என, குடும்பப் பெண்கள் கூறி விடுகின்றனர். இதனால், ஒரே தெருவுக்கு, இரண்டு, மூன்று முறை செல்ல நேர்கிறது. 

ஒரு கணக்கெடுப்பாளர் குத்துமதிப்பாக, 800 பேர் அல்லது 200 வீடுகளைப் பற்றிய விவரங்களைச் சேகரிக்கும் விதமாக, அவர்களுக்கு ஏரியா பிரித்துக் கொடுக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதியில், கடந்த ஆண்டு ஜூன், ஜூலையில் எடுக்கப்பட்ட வீட்டுப் பட்டியல் சுருக்கம், எல்லாரிடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பட்டியலை வைத்து, வீடு வீடாக விவரம் சேகரிக்கின்றனர். யாரேனும் இடம்பெயர்ந்திருந்தால், அதுவும் குறிக்கப்படுகிறது. யாரேனும் புதிதாகக் குடிவந்திருந்தால் அதுவும். பணி நிமித்தமாகவோ, வேறு காரணங்களுக்காகவோ, ஒரு குடும்ப உறுப்பினர், வெளியூரிலேயே தங்கியிருந்தால், அவர் பெயர், சொந்த ஊரில் சேர்க்கப்படுவதில்லை.


கணக்கெடுப்பின் முக்கிய அங்கமாகத் திகழ்வது சமையல். "மேன்ஷன்'களில் தங்கியிருப்போர் அல்லது உறவற்றவர்கள் ஒரு குழுவாக சமைத்துச் சாப்பிட்டால், அவர்களில் ஒருவர், குடும்பத் தலைவராகக் கருதப்பட்டு, மற்றவர்களின் விவரம் அதிலேயே பதியப்படுகிறது. அனைவரும் வெளியே சாப்பிட்டால், தனித்தனி குடும்பமாகப் பதியப்படுகிறது. ஒரே குடும்பத்தில் மாமியார், மருமகள் தனித்தனி சமையல் என்றாலும், தனித்தனி குடும்பக் கணக்கு தான். 

ஒரு விண்ணப்பத்தில் மொத்தம், 29 கேள்விகள் இருக்கின்றன. பதியப்பட்ட படிவங்களை கம்ப்யூட்டரில் படியெடுக்கும் விதமாக, அத்தனை பதில்களுக்கும், தனித்தனி எண்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. குடும்பத்தில் யாருக்கேனும் ஊனம் இருக்கிறதா? ஆமெனில், கண், காது, வாய், மனநிலை, கை, கால் என அத்தனைக்கும் தனித்தனி எண்கள். இரண்டுக்கு மேல் இருந்தால், அதற்கும் தனி எண். "வீட்டிலிருந்து வேலைக்கு எதில் போகிறீர்கள்?" சைக்கிள், பஸ், பைக், ஆட்டோ, கார் என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு எண். ஆண், பெண் மட்டுமின்றி, "வேறு இனம்" என்ற பெயரில், அரவாணிகளும் கணக்கிடப்படுகின்றனர்.


மதத்தைத் தைரியமாகக் குறிப்பிடுபவர்கள், பட்டியலினத்தவரா, இல்லையா எனக் குறிப்பிடுவதில் தயக்கம் காட்டுகின்றனர். ஜாதி, ஊனம், பிறப்பு, இறப்பு பற்றிய கேள்விகள், தர்மசங்கடத்தை ஏற்படுத்துகின்றன. பெரும்பாலான கேள்விகளுக்கு, குத்து மதிப்பான பதில்கள் சொல்லப்படுவது கவலைக்குரிய விஷயம். வேறு வேறு விதமாக கேள்விகள் கேட்டு, உண்மையான பதிலை யூகிக்க வேண்டியிருக்கிறது. பெரும்பாலான கணவன்களுக்கு, மனைவியைப் பற்றியும், மனைவியருக்கு, கணவன்களைப் பற்றியும் விவரம் (பிறந்த தேதி, பிறந்த ஊர், படிப்பு, பணியின் பெயர்) தெரியவில்லை. 

சராசரியாக ஒரு வீட்டுக்கு, 20 நிமிடம் ஆகிறது. கணக்கெடுப்பு முடிந்ததும், குடும்பத்தில் உள்ள படித்தவர்கள், படிக்காதவர்கள், குழந்தைகள் என, பல்வேறு தகவல்களின் கூட்டுத்தொகையைக் கணக்கிடுகின்றனர். 

28ம் தேதி இரவு, தத்தம் பகுதிகளுக்குச் சென்று, தெருவில் படுத்திருப்போரின் விவரத்தைச் சேகரிக்க உள்ளனர். அவர்கள், இதற்கு முன் கணக்கில் சேர்க்கப்படவில்லை எனில், வீடற்ற நபர்களாக குறிக்கப்படுகின்றனர். அன்று இரவு, துறைமுகங்களில் நிற்கும் கப்பல்களிலும் கணக்கெடுப்பு நடக்கும். 

மக்களின் ஒத்துழைப்பு குறைவாக இருப்பது தான், இந்தக் கணக்கெடுப்பின் மிகப் பெரிய சிக்கல். ஓட்டுப்பதிவன்று அரசியல்வாதிகள் கொடுப்பது போல, ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்தால், ஆர்வமாக பதில் சொல்வரோ, என்னவோ...!


கணக்கெடுப்பு ஏன்? இந்தியாவில் நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, மிகவும் துல்லியமானது. இதன் மூலம் தான், ஜனத்தொகை, விகிதாச்சாரம், பொருளாதார நடவடிக்கைகள், எழுத்தறிவு, குடியிருப்பு, வீட்டு சாதனப்பொருட்கள், நகர்மயமாக்கம், பிறப்பு, இறப்பு, தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மொழி, மதம், இடப்பெயர்ச்சி மற்றும் ஊனம் என சமூக, கலாசாரத் தகவல்கள் கிடைக்கின்றன. 

கடந்த, 1872ம் ஆண்டு, முதல் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது மேற்கொள்ளப்படுவது, 15வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு. இதன் அடிப்படையில் தான், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள், கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள், அரசு மட்டுமின்றி, தேசிய, சர்வதேச நிறுவனங்கள், ஆய்வாளர்கள், வர்த்தக அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் என, பல தரப்பினராலும் பயன்படுத்தப்படுகின்றன. சட்டசபை, பார்லிமென்ட் தொகுதிகளின் மறுசீரமைப்பும், இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை வைத்து தான் மேற்கொள்ளப்படுகிறது. 

பத்தாண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் இக்கணக்கெடுப்பின் மூலம், கடந்த ஆண்டுகளில் நம்மூரில் ஏற்பட்ட வளர்ச்சியையும், வீழ்ச்சியையும், ஆதாரப்பூர்வமாகத் தெரிந்துகொள்ள முடியும்.


தகவல்கள் ரகசியமானதா? கணக்கெடுப்பாளர்கள் அனைவரும் அடையாள அட்டை வைத்திருப்பர். அவர்கள் ஒவ்வொருவருக்கும், பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டிருக்கும். விவரங்களைச் சொல்லும் முன், பொதுமக்கள், தாராளமாக அவற்றைக் கேட்டு வாங்கிப் பார்க்கலாம். மக்கள், தங்களைப் பற்றிய உண்மையான தகவல்களை மட்டுமே சொல்ல வேண்டியது கட்டாயம். அதற்காக, எந்த ஆவணத்தையும் காட்ட வேண்டிய அவசியமில்லை. ஆனால், தவறாக தரப்படும் தகவல், சட்ட நடவடிக்கைக்கு இட்டுச் செல்லலாம். சேகரிக்கப்படும் விவரங்கள் அனைத்தும், முற்றிலும் ரகசியமாக வைக்கப்படுகின்றன. தான் சொல்லும் பதில்கள், பக்கத்து வீட்டுக்காரருக்கு கூட தெரிய வேண்டிய அவசியம் இல்லை. நலத்திட்டப் பணிகளுக்காக அரசுக்கு வழங்கப்படும் புள்ளிவிவரங்கள் கூட, ஒட்டுமொத்தமாகத் தான் தரப்படுமே தவிர, எந்தத் தனி மனிதரைப் பற்றியதாகவும் இருக்காது. இன்னும் சொல்லப்போனால், இதில் சேகரிக்கப்படும் விவரங்கள், கோர்ட்டால் கூட தருவிக்க முடியாதவை.


உங்கள் வீட்டுக்கு வரவில்லையா? மக்கள் தொகை கணக்கெடுப்பின் தமிழக இயக்குனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: கணக்கெடுப்பின் அத்தனை பெருமைக்கும், தன்னலமற்று, இந்த நாட்டுக்காக தம்மை வருத்திக்கொள்ளும், முகம் தெரியாத அந்த அத்தனை கணக்கெடுப்பாளர்களும் போற்றப்பட வேண்டியவர்கள். தாங்கள் பட்டியலினத்தவரா எனச் சொல்ல மக்கள் தயங்க வேண்டியதில்லை. அந்தத் தகவல் மூலம் தான், மக்கள் நலத்திட்டங்கள், சரியானவர்களைச் சென்றடையும். ஆசிரியர்களை தொந்தரவு செய்வதற்கு பதிலாக, வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களை ஈடுபடுத்தலாம் என நானும் பரிந்துரைத்தேன். ஆனால், அவர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும், பொறுப்புக்கு உள்ளாக்குவதிலும் சிரமங்கள் இருக்கின்றன. சாதாரண குடும்பம், நிலையற்ற குடும்பம் (சர்ச்சுகள், மடங்கள், ஆசிரமங்கள்), வீடற்ற குடும்பம் (மேன்ஷன்வாசிகள், அனாதரவானவர்கள்) என, மூன்று வகையாகப் பிரித்து கணக்கெடுக்கப்படுகிறது. அடுத்த பத்து ஆண்டுகளில், கணக்கெடுப்பு முறையே மாறலாம். காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பே இல்லை. எனவே, இதுவரை உங்கள் வீட்டுக்கு கணக்கெடுப்பாளர் வராவிட்டால், உடனே கவுன்சிலர்கள், உள்ளாட்சி அதிகாரிகள், தலைவர்கள், தாசில்தாரை அணுகலாம். சென்னையில், 1913, மற்ற நகரங்களில், 1800, 345 0111 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு அழைக்கலாம். இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.


எப்படி நடக்கிறது பணி? வீடு வீடாக கணக்கெடுத்து, விவரங்களால் விண்ணப்பங்கள் நிரப்பப்படுகின்றன. அவை, 15 நகரங்களில் அமைந்துள்ள தகவல் சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஐ.சி.ஆர்., எனப்படும் அதிநவீன மென்பொருள் மூலம், விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த மென்பொருள், முதல் முதலில், 2001ம் ஆண்டு பயன்படுத்தப்பட்டது. இன்று உலகமே அதைத் தான் பயன்படுத்துகிறது.


2001 மூலம் என்ன தெரிந்தது?


* அப்போதைய மக்கள் தொகை, 102.8 கோடி.


* பரப்பளவில் உலகின், 2.4 சதவீதம் மட்டுமே உள்ள இந்தியா, மக்கள் தொகையில், உலகின், 16.9 சதவீதத்தை ஆக்கிரமித்துள்ளது. சிம்பிளாகச் சொன்னால், உலகின் ஆறு பேரில் ஒருவர் இந்தியர்.


* இந்தியாவில் 1,000 ஆண்களுக்கு, 933 பெண்கள் தான் இருக்கின்றனர். எதிர்காலத்தில், கல்யாணத்துக்கு பெண் கிடைப்பது கஷ்டம்.


* படித்த ஆண்கள், 75.2 சதவீதம். பெண்கள், 53.7 சதவீதம்.


* இந்துக்கள் 80.5 சதவீதம் பேர். 13.4 சதவீதம் பேர் முஸ்லிம்கள். மற்ற எல்லா மதத்தினரும் சேர்த்து 6 சதவீதம். மொத்த மதங்களின் எண்ணிக்கை எவ்ளோ தெரியுமா? 2,800!


* இந்திக்காரர்கள் 41 சதவீதம் பேர். அடுத்து பெரிய பங்காளிகளாக இருப்பது வங்காளிகள் (8.1%). தமிழர்களுக்கு, மக்கள் தொகையில் ஐந்தாவது இடம் (5.9%). மொத்த மொழிகள், அதிகமில்லை... 6,661 தான்!


* கடந்த பத்தாண்டின் வேகத்திலேயே பிள்ளை பெற்றால், இந்த ஆண்டு மக்கள் தொகை, 119 கோடியாக இருக்கும். 2026ல், 140 கோடியாகிவிடும். செவ்வாயிலோ, கடலுக்கடியிலோ வீடு கட்ட வேண்டிவரும்.

நன்றி


சட்ட மேலவை தேர்தல் : சுப்ரீம்கோர்‌ட் இடைக்காலதடை

தமிழக சட்ட மேலவை தேர்தல் நடத்துவற்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

தொகுதி வரையறையிலும், வாக்காளர் பட்டியல் தயாரிப்பிலும் குளறுபடி இருப்பதால், சட்ட மேலவை தேர்தலுக்கு தடை கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நன்றி:


டேன் ஃபெட்டோ(TAN - FETO) சார்பில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.  

மூட்டா பொதுச் செயலர் மனோகர ஜஸ்டஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ராஜகுமார் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். அரசுத்துறை மற்றும் பள்ளி, கல்லூரிகளில் காலியாகவுள்ள அனைத்துப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம், மூட்டா, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு கலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் பங்கேற்றனர். 

சிவகங்கையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

அரசுத் துறை மற்றும் பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ந.காத்தமுத்து தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சங்கர சுப்பிரமணியன், மூட்டா மண்டல அமைப்பாளர் ரவிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசுத் துறைகள், பள்ளி, கல்லூரிகளில் தாற்காலிகமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றிவருபவர்களுக்கு பணி நிரந்தரம் செய்து, ஊதியக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 1.1.2006 முதல் ஊதிய மாற்ற பணப்பலன் நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் நீலமேகம் சிறப்புரையாற்றினார். 

நன்றி


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடலூரில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் பெ.கருணாநிதி, அரசு ஊழியர் சங்கத் தலைவர் சலீம் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி.பத்மநாபன், நிர்வாகிகள் ஜீ.வர்கீஸ், ஜமால்முகமது உள்ளிட்டோர் பேசினர்.

நன்றி



அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.      

அரசுத் துறை மற்றும் பள்ளி, கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசுத் துறைகளில் தாற்காலிகம், ஒப்பந்தம், தொகுப்பூதியம், தினக்கூலி ஆகிய முறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றுவோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்களின் மூலம் பணியமர்த்தப்படும் அவுட்சோர்சிங் போன்ற நியமனங்களை கைவிட்டு, வேலைவாய்ப்பகம், தேர்வாணையம் மூலம் பணி நியமிக்க வேண்டும்.     மத்திய அரசுக்கு இணையாக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2006-ம் ஆண்டு ஜனவரி முதலான காலத்திலிருந்து ஊதிய மாற்ற பணப்பலன், வீட்டு வாடகைப்படி, போக்குவரத்துப்படி உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     

அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். ஜோதிமணி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குரு. சந்திரசேகரன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் எம். காந்தி, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் கே. சச்சிதானந்தம், அரசு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் எஸ். சிவக்குமார், வட்டத் தலைவர் ஏ.டி. அன்பழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் என். சுப்பிரமணியன் வரவேற்றார். தனியார் கல்லூரி அலுவலர் கழகப் பொறுப்பாளர் எஸ். ராஜேந்திரன் நன்றி கூறினார்.கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நன்றி


அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம்தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்நடந்தது.

அரசுத்துறை மற்றும் பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு, அங்கன்வாடி, பஞ்., எழுத்தர், மக்கள் நலப்பணியாளர்கள், வருவாய் கிராம ஊழியர்களுக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகம், அரசு தேர்வாணயம் மூலமே காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராஜாஜி பூங்கா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மூட்டா நெல்லை மண்டலத் தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் டெரன்ஸ் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்தையா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி, தனியார் கல்லூரி அலுவலர் சங்க மண்டல செயலாளர் சுப்பிரமணியன், அரசுப் பணியாளர் சங்க மாநில செயலாளர் எட்வர்டு ஜெயசீலன், இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர் நெடுஞ்செழியன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் முஜிபுர், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் அந்தோணியம்மாள் ஆகியோர் பேசினர். 

நன்றி



திருநெல்வேலியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக் கோரி பாளையங்கோட்டையில் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 17-ந் தேதி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஜவஹர் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பெ.பாலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பா.சங்கரவேலாயுதம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மூட்டா மாவட்டச் செயலர் வெ. அ. ராதாகிருஷ்ணன், கல்லூரி அலுவலர் சங்க மாநில துணைத் தலைவர் எம். மகாராஜன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலச் செயலர் ஜெ. எட்வர்ட் ஜெபசீலன், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் பி. மனோகரன், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் சி. போத்திலிங்கம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்டச் செயலர் கே. இசக்கியப்பன், மாவட்ட அமைப்பாளர் கே. மாரியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷமிட்டனர்.

நன்றி



தமிழ்நாடு அரசு ஊழியர் – ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியர் – ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 17-ந் தேதி மாலை 6 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் கோரிக்கைகள் வருமாறு :
  •  அரசு துறை மற்றும் பள்ளி கல்லூரிகளில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப வேண்டும்..
  • இனிவரும் காலங்களில் தனியார் நிறுவங்களின் மூலம் பணியமர்த்தும் அவுட்சோர்சிங் உள்ளிட்ட இது போன்று நியமனம் கைவிட பட வேண்டும்
  • குறைந்தபட்ச ஒய்வுஊதியம் ரூ 3500/- வழங்கிட வேண்டும்
  • பெண்களுக்கு 180  நாட்கள் மகப்பேறு விடுப்பு ,குழந்தைகளை பரமாரிதல் சிறப்பு விடுப்பு வழங்கிட வேண்டும்
  •  மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான படிகளை வழங்க வேண்டும். ஊதியக் குழு மாற்ற அறிவிப்புஒரு நபர் குழுவின் அறிவிப்பால் பெரும்பாலான ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளதால் அதிலுள்ள குறைகளை நீக்க வேண்டும். 
  • அரசுத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
  • சிறப்பு காலமுறை ஊதிய விகிதங்களில் பணியாற்றிவரும் அனைத்து ஊழியர்களுக்கும் காலமுறை ஊதியம்ஓய்வூதியம் வழங்க வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு ஏற்கெனவே நடைமுறையிலுள்ள ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் 
என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இதில் சுமார் 500  பேர்  கலந்துகொண்டுள்ளனர்.



நன்றி:

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்