தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

12.2.11

புதிய நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண். அகவிலைப் படிக்கு ஆபத்து?

மத்திய அரசு புதிதாக அறிமுகப் படுத்தவுள்ள நுகர்வோர் குறியீட் டெண் முறையால் அகவிலைப் படி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சிஐடியு அகில இந்தியப் பொதுச் செயலாளர் தபன் சென், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கேக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு நகர்ப்புறத்திற்கென ஒரு வரிசையும், கிராமப்புறத்திற்கென ஒரு வரிசையும் ஆக இரு புதிய வரிசைகள் மாதாந்திர நுகர்வோர் விலை வாசிக் குறியீட்டெண்களை அறிமுகப்படுத்த இருப்பதாக, தேசிய நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதிலிருந்து ஏற்கனவே இருந்து வரும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புறத்தில் உள்ள ஊழியர்கள் என இருந்து வரும் நான்கு விதமான நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண்களும் இப்புதிய இரு விலைவாசிக் குறியீட்டெண்களின் மூலம் மாற்றியமைக்கப்பட இருப்பதாகத் தெரிய வருகிறது.

தற்போது நடைமுறையில் இருந்து வரும் விலைவாசிக் குறியீட்டெண்களில் உள்ள கோளாறுகள், குளறுபடிகள் குறித்து தொழிற்சங்கங்கள் அரசுக்குப் பலமுறை குறிப்பிட்டிருந்தும் அவற்றைச் சரிசெய்திட அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அதே சமயத்தில், அதைவிட மிகவும் மோசமான வகையில் புதிய இரு விலைவாசிக் குறியீட்டெண்களை அறிமுகப்படுத்த அரசு முன்வந்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

தற்போது அமலில் இருந்துவரும் நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண்கள் முழுமையாக, குறைந்த மதிப்பீட்டின் அடிப்படையிலேயே செய்யப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருந்தபோதிலும் அவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் மிகமிகக் குறைந்த மதீப்பீட்டின் அடிப்படையிலேயே நுகர்வோர் விலைவாசிக் குறியீட் டெண்கள் மதிப்பிடப்படுகின்றன. இவ்வாறு குறைத்து மதிப்பீடு செய்யப்படுகிற விலைவாசிக் குறியீட்டெண்களை வைத்துத்தான் தொழிலாளர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படிகள் அளிக்கப்படுகின்றன. இதன் விளைவாக ஒவ் வொரு மாதமும் மிகவும் அதிகமான அளவில் உண்மையான ஊதியத்தை அவர்கள் இழந்து வருகிறார்கள்.

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசிகள் குறித்து பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளின் விலை வாசிகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் தற்போதுள்ள விலை வாசிப் புள்ளிகள் சரி செய்யப்பட வேண்டும் என்றும் அரசை பலமுறை வலியுறுத்தியுள்ளபோதிலும், அரசு அவற்றைக் காதில் போட்டுக் கொள் ளவே இல்லை. இவற்றை எல்லாம் சரி செய்யாமல், தொழிற்சங்கங்களைக் கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக புதிய இரு நுகர்வோர் விலை வாசிக் குறியீட்டெண்களை அரசு அறிமுகப்படுத்த முன்வந்திருப்பதும், அதனை அடுத்து ஏற்கெனவேயுள்ள நான்கு விலைவாசிக் குறியீட்டெண் களையும் ஒன்றாக சேர்த்து மாற்றிய மைத்திட இருப்பதும், தொழிலாளர் களுக்கும், ஊழியர்களுக்கும் நியாயமாகக் கிடைத்திடும் அகவிலைப் படிகளைக் கொல்லைப்புற வழியாகப் பறித்திடும் வழிமுறைகளேயாகும்.

இத்தகைய அரசின் மோசடியான புதிய நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண்களுக்கு, சிஐடியு தன் கடும் ஆட்சேபணைகளைப் பதிவு செய்துகொள்கிறது. இதைத் தவிர்த் திட வேண்டும் என்று கேட்டுக் கொள் கிறோம். தற்போது அமலில் இருந்து வரும் விலைவாசிக் குறியீட்டெண் கள், தொழிற்சங்கங்கள் அளித்துள்ள ஆலோசனைகளின்படி சரி செய்யப் பட்டு, பின்பற்றப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு தபன்சென் அக்கடிதத் தில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்