தமிழ்நாடு அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.  
மூட்டா  பொதுச் செயலர் மனோகர ஜஸ்டஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத்  தலைவர்  ராஜகுமார் ஆகியோர் கூட்டுத் தலைமை வகித்தனர். அரசுத்துறை மற்றும் பள்ளி,   கல்லூரிகளில் காலியாகவுள்ள அனைத்துப் பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும்   என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்கம்,  தமிழ்நாடு தனியார் கல்லூரி அலுவலர் சங்கம், மூட்டா,  தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி  ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி  ஆசிரியர் கழகம்,  தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு கலை  ஆசிரியர் சங்கம்,  தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்  பட்டதாரி ஆசிரியர் கழகம்  ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும்  பங்கேற்றனர். 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக