தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

14.2.11

மக்கள்தொகை கணக்கெடுக்க சென்ற ஆசிரியையின் நகை பறிப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்குச் சென்ற பெண் ஊழியரை தாக்கி நகை பறித்த கொள்ளையனை போலீஸôர் தேடி வருகின்றனர்.

இது குறித்த விவரம்:   
சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் கீதா (58).  இவர் அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார்.  மக்கள்தொகை கணக்கெடுப்பதற்காக இவர், ஞாயிற்றுக்கிழமை (பிப். 13) ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்றுள்ளார்.  

இந்நிலையில் அங்கு வந்த ஒரு நபர் கீதாவிடம், வீட்டு உரிமையாளரின் வீடு 4-வது மாடியில் இருப்பதாகவும், அங்கிருந்து கணக்கெடுப்பைத் தொடங்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.  இதனை நம்பி, கீதாவும் அந்த நபருடன் மாடிக்குச் சென்றுள்ளார். 

அப்போது திடீரென்று, அவரை அந்த வாலிபர் தாக்கத் தொடங்கினார். இதில், நிலைகுலைந்துப் போன கீதாவிடமிருந்து சுமார் 5 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு அந்த நபர் ஓடிவிட்டார். படுகாயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 

இது குறித்து ராயப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்