தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.4.14

பணிநிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா

கன்னியாகுமரி மாவட்டம், அரசு, அரசு உதவி பெறும் உயர், மேல் நிலைப் பள்ளிகளில் பணியாற்றி பணிநிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு  பாராட்டு விழா நாளை 14-04-2014 அன்று மாலை 3மணிக்கு நடைபெறுகிறது.
  
நாள்:
 14-04-2014, திங்கள், மதியம் 3.00 மணி

இடம்:
டீம் இல்லம், TNPGTA அலுவலகம், K. P. ரோடு, செட்டிக்குளம் சந்திப்பு, நாகர்கோவில்.  

தலைமை
திரு. R. ஹெர்பர்ட் ராஜா சிங், மாவட்டத் தலைவர்.

முன்னிலை:  
கல்வி மாவட்டத் தலைவர்கள்

வரவேற்புரை
திரு. P. D. திவாகரன் பிள்ளை, மாவ. அமை. செயலாளர்.

வாழ்த்துரை
திரு. M. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர். 
கல்வி மாவட்டச் செயலாளர்கள் 
தோழமைச் சங்க நிர்வாகிகள்

சிறப்புரை
திரு. க. இசக்கியப்பன், பொதுச் செயலாளர்.

ஏற்புரை
பணி நிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்கள்

நன்றியுரை
திரு. T. செல்வராஜ், மாவட்டப் பொருளாளர்.


விழாவில் பணிநிறைவு பெறும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.

 இவண்,

த.இ.ஆ.ச.,
கன்னியாகுமரி மாவட்டம்
.

3.4.14

ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்களுக்கு10 சதவீத அகவிலைப்படி உயர்வை அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையிபல், 1.1.2014 முதல் மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில் 10 விழுக்காடு உயர்த்தி வழங்க மத்திய அரசு ஆணையிட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 1.1.2014 முதல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை அவர்களது அடிப்படை மற்றும் தர ஊதியத்தில்10 விழுக்காடு உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசாணை எண்: 96 நாள்: 03-04-2014
.

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்