அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு வயதை 59 ஆக நீட்டியதால் தமிழகத்தில் படித்து வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றமாக விளைகிறது எனவே ஆணையை ரத்து செய்ய வேண்டுமென தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் அ.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது 58 லிருந்து 59 ஆக மாற்றி ஓராண்டு நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையை தமிழக அரசு அலுவலகங்களின் பணிபுரிந்து வரும் அலுவலர்கள், ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள், கல்லூரிகள் பொது நிறுவன பணியாளர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பல லட்சம் இளைஞர்கள் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் நிலையில் குறிப்பாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் 70,000 பேர் வேலைக்காக காத்திருக்கும் நிலையில் அந்த எதிர்பார்ப்பு ஓராண்டு தள்ளிப்போகும் இன்னும் பல பிரச்சனைகளையும் சந்தித்து வருவதும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி எதிர்கால கனவுகளையும் சீர்குலைக்கும் விதமாக அமையும்.
ஏற்கனவே தமிழகத்தில் படித்துவிட்டு அரசுப் பணியை எதிர்நோக்கி வேலைவாய்ப்புகளில் பதிவு செய்திருக்கும் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எண்ணிக்கை சுமார் ஒரு கோடி ஆகும்
மேலும் கடந்த 5 ,6 ஆண்டுகளாக ஆசிரியர் காலிப் பணியிடங்களில் புதிய ஆசிரியர்கள் நியமனம் ஏதும் நடைபெறவில்லை அரசுப்பணியில் போதுமான அளவு நியமனங்கள் நடைபெறவில்லை மாநிலம் முழுவதும் அரசு துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன இதனால் வேலையில்லா இளைஞர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது தற்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வு வயதை உயர்த்தி உள்ளது என்பதும் இந்த ஆண்டு 58 வயது முடிந்து பணி ஓய்வு பெறுவோறுக்கு ஓய்வு காலப் பணப் பலன்களை
கொடுப்பதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளாகவே தெரிகிறது. இதற்காக தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவானது எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும் .
மேலும் அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வு பெறும் வயதை உயர்த்த வேண்டும் என்ற தமிழக அரசிடம் யாரும் கேட்கவில்லை எனவே தமிழக அரசு முழுக்க முழுக்க தன் சுயநலத்திற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கையாகும்.
இந்த முடிவானது தற்போது பணியில் உள்ள பலரது பதவி உயர்வு வாய்ப்பை பாதிக்கும் செயலாகும் எனவே தமிழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் நலன் கருதி இந்த முடிவை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் மாநிலம் முழுவதும் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும், ஓய்வூதிய வயது 58 லிருந்து 59 ஆக நீட்டிப்பு செய்த ஆணையை ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக