தொடக்க நிலை முதல் மேல் நிலைப் பள்ளி வரையிலான அனைத்து ஆசிரிய சங்க நிர்வாகிகளுடன் கல்வித்துறை செயலர் ஜோதிஜெகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தமிழகத்தில் ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊதிய குழுவில் பல்வேறு முரண்பாடுகள் நிலவுகிறது. மத்திய அரசுக்கு இணையான சம்பளம் ஆசிரியர்களுக்கு தரப்படவில்லை. இதையடுத்து அமைக்கப்பட்ட ஒருநபர் குழுவும், சம்பள வேறுபாடுகளை களையவில்லை என்பதால் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் அதிருப்தி அடைந்துள்ளன.
இதற்கிடையில் ஒரு நபர் கமிஷன் பரிந்துரை குளறுபடிகளை கண்டித்து டிட்டோஜாக் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக மாநில அளவில் சென்னையில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், முதுகலை ஆசிரிய சங்கங்கள் இணைந்து "ஜாக்' சார்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், சமீபத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தை, ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பும் நடத்தப்போவதாக அறிவித்திருந்தது.
இதையொட்டி, ஆசிரியர் இயக்கங்களை அழைத்து கல்வித்துறை செயலர் ஜோதிஜெகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். "ஆசிரியர்களின் சம்பள வேறுபாட்டையும் எதிர்பார்ப்பையும், அரசு அறிந்துள்ளது. சம்பள முரண்பாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அவர் தெரிவித்தார்.
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
12.10.10
ஆசிரிய சங்க நிர்வாகிகளுடன் கல்வித்துறை செயலர் ஜோதிஜெகராஜன் பேச்சுவார்த்தை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழு திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீப்பர் மேல்நிலைப்பள்ளியில் 25.11.2012 பகல் 2 மணிக்கு நடைபெ...
-
"பகுதிநேர ஆசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வுகள், இம்மாத இறுதிக்குள் முடிந்துவிடும். பிப்ரவரி முதல் வாரத்தில், பணி நியமன உத்தரவுகள் வ...
-
டில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 7 வது ஊதியக் குழு அளித்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 23.55...
-
மேலவைத் தேர்தலில் பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் சனிக்கிழமை (நவம்பர் 6) கடைசி நாளாகும். ...
-
N-M Nov. 2011
-
ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அ...
-
Constitution of School Management Committee
-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 8ம் தேதி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. அரசு,...
-
Report of the Committee for Evolution of the New Education Policy 2016

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக