தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

15.10.10

மேலவை: வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்கள் தேதி மாற்றம்

மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்களின் தேதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.  

ஆயுத பூஜை விடுமுறையை ஒட்டி, இந்தத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து, வியாழக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

மேலவைத் தேர்தலில் ஆசிரியர்கள், பட்டதாரிகள் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பெயர் சேர்ப்புப் பணியை தீவிரப்படுத்த சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அக்டோபர் 16, 17, 30, 31 ஆகிய நான்கு நாட்களிலும் சிறப்பு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. அதில், 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகைகள் வருகின்றன. இதனால், அந்த இரு தேதிகளிலும் நடக்க இருந்த சிறப்பு முகாம்கள் அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.  

தேர்தல் அதிகாரிகள், அந்தத் தேதிகளில் சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பணியில் இருக்க வேண்டும் என்றும், முகாம்களுக்கு வருவோருக்குத் தேவையான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் எனவும் தனது செய்திக் குறிப்பில் பிரவீன் குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.  

பட்டதாரி தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க விண்ணப்ப படிவம் 18-ம், ஆசிரியர்கள் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க படிவம் 19-ம் பயன்படுத்தப்படுகிறது.
  
நன்றி: 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்