தமிழக சட்ட மேலவைத் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் தகுதி உடைய பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு மேல்சபை தேர்தலுக்கு பட்டதாரி தொகுதிகள், ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க 1960-ம் ஆண்டின் வாக்காளர் பதிவு விதிகளின்படி, தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்கள் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும்.
1.11.2010-ஐ தகுதி நாளாகக் கொண்டு பட்டதாரி தொகுதிக்கு படிவம்-18-ஐ, ஆசிரியர் தொகுதிக்கு படிவம் 19-ஐ பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது நிர்ணயிக்கப்பட்ட அதிகாரியிடம் அளிக்கலாம். மாநகராட்சி பகுதிகளில் மண்டல உதவி ஆணையாளர்களும், இதர பகுதிகளில் தாலுகா அலுவலகங்களில் தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்களும் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்வார்கள்.
தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக இணையதளத்திலும் விண்ணப்பங்களை டவுண்லோடு செய்து பயன்படுத்தலாம். வாக்காளர்களுக்கான தகுதிகள், தொகுதி பட்டியல் ஆகிய விவரங்களையும் இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். பெயர் சேர்க்கக் கோரி கோரி நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ மொத்தமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
பட்டதாரி தொகுதிகளைப் பொறுத்தவரையில், ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர் இதர உறுப்பினர்களுக்கும் சேர்த்து விண்ணப்பம் கொடுக்கலாம். இதற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களின் அசல் கல்விச் சான்றிதழ் ஆவணங்களை காண்பிக்க வேண்டும்.
ஆசிரியர் தொகுதியைப் பொறுத்தமட்டில், சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் தலைவர் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சேர்த்து உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பம் கொடுக்கலாம். பட்டதாரி, ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பெயர் சேர்ப்புக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பெற கடைசி நாள் நவம்பர் 6-ந் தேதி ஆகும். வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் 22-ந் தேதி வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கு கடைசி நாள் டிசம்பர் 7-ந் தேதி ஆகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை டவுண்லோடு செய்க.
. .
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டக் கிளையின் சார்பாக 2009-2010 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை...
-
பெறுநர் பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர் தொகுதி) அவர்கள், பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை – 6. மதிப்புமிகு அய்யா , பொருள...
-
பச்சை மையை யார், எப்போது, எந்தத் தருணத்தில் பயன்படுத்தலாம் என்பது குறித்து தமிழக அரசு புதிய வழிகாட்டுதல் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அ...
-
கடித எண்: 06/2010, நாள் 17-04-2010. பெறுநர்: மாண்புமிகு தமிழக முதல் அமைச்சர் அவர்கள், தலைமைச் செயலகம், சென்னை. ஐயா, பொருள்:...
-
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான காலக்கெடு ஜூலை 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ப...
-
பெறுநர்: பள்ளிக்கல்வி இணை இயக்குனர் (பணியாளர் தொகுதி) அவர்கள், பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை - 6. மதிப்புமிகு அய்யா, பொருள்: கல்வி - ...
-
. மாநிலத் தலைவர் திரு. G. குமார் மாநில பொதுச் செயலாளர் திரு. M. குமரேசன் மாநிலப் பொருளாளர் திரு. T. உதயசூரியன் மாநில அமை...
-
தொடக்க நிலை முதல் மேல் நிலைப் பள்ளி வரையிலான அனைத்து ஆசிரிய சங்க நிர்வாகிகளுடன் கல்வித்துறை செயலர் ஜோதிஜெகராஜன் பேச்சுவார்த்தை நடத்தினார். ...
-
பெறுநர்: பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர் தொகுதி) அவர்கள், பள்ளிக்கல்வி இயக்ககம், சென்னை - 6. மதிப்புமிகு அய்யா, பொருள்: கல்வி - பள்ள...
-
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் நாகர்கோவிலில் சனிக்கிழமை தர்ணா போராட்ட...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக