தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.10.10

மாற்றுத் திறனாளிகள் ஊர்திப்படி ரூபாய் ஆயிரமாக உயர்வு

மாற்றுத் திறனாளிகளின் நலத்துறை ஆணையர் மாற்றுத் திறனாளிகள் பொது போக்குவரத்தினை அவர்களது இயலாமை காரணமாக பயன்படுத்துவதில் சிரமம் உள்ளதால் தனியார் போக்குவரத்தினை பயன்படுத்தும் போது அதிக செலவினம் மேற்கொள்ள வேண்டியிருப்பதாலும், தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்தும் போது, எரிபொருள் செலவினம் அதிகமாவதாலும், தமிழக அரசில் பணிபுரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊர்திப்படியை உயர்த்துவது அவசியம் என குறிப்பிட்டும், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது திங்கள்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படியை (Conveyance Allowance) ரூ.300/-லிருந்து ரூ.1000/-ஆக உயர்த்தி வழங்குமாறு அரசிடம் கோரியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் கருத்துருவினை ஏற்று அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத அலுவலர்கள், அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது திங்கள்தோறும் வழங்கப்படும் ஊர்திப்படியை ரூ.300/-லிருந்து ரூ.1,000/- ஆக (ரூபாய் ஆயிரம் மட்டும்) 1.10.2010 முதல் உயர்த்தி வழங்கலாம் என அரசு முடிவு செய்து ஆணையிட்டுள்ளது.

..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்