தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

23.9.13

+ 2, 10ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு: மாணவர் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள்


பிளஸ் 2, 10ம் வகுப்பு துணை பொதுத்தேர்வு நடைமுறைகளில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் வழங்கப்படுகிறது. இம்மாற்றம் தமிழகம் முழுவதும் இன்று அமலுக்கு வருகிறது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு:

தமிழகத்தில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு துணை பொது தேர்வு இன்று (23ம் தேதி) முதல் அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெற உள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகள் ஒரே கால கட்டத்தில் வெவ்வேறு தேர்வு மையங்களில் நடைபெறும்.

இந்த தேர்வுக்கு 20 வினாத்தாள் அடங்கிய முத்திரையிட்ட வினாத்தாள் கட்டுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் ஒரு வினாத்தாள் கட்டு வழங்கப்படும். வினாத்தாள் கட்டுக்களை தலைமை கண்காணிப்பாளர், துறை அலுவலர்கள் பிரிக்க கூடாது.

10 மற்றும் 12ம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கும் மாற்று எண் விடைத்தாள் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய பார் கோடிங் ஷீட் அனைத்து தேர்வர்களுக்கும் தனித்தனியே ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கப்படும். பார் கோடிங்ஷீட் தான் புதிய டம்மி பிளை ஷீட் ஆகும்.
பார்கோடிங் ஷீட்டின் முதல் பகுதியை மாணவர்களும், 2ம் பகுதி மற்றும் 3ம் பகுதியை விடைத்தாள் திருத்தும் மையத்தில் உதவி தேர்வர்கள் பூர்த்தி செய்வர்.

மேல்நிலை தேர்வுக்கு இரண்டு டம்மி நம்பர் மெயின் ஷீட் எடுத்து பிளை லீப் அகற்றப்படுகிறது. பின்னர் இரண்டாவது முதன்மை விடைத்தாளின் முதல்தாளை அகற்றிவிட்டு, இரண்டு முதன்மை விடைத்தாள்களும் இணைக்கப்படுகிறது. இதனையடுத்து முதல் பக்கத்தில் மாணவர் புகைப்படத்துடன் கூடிய பார் கோடிங் வைத்து, தையல் இயந்திரம் மூலம் தைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்வில் ஒரு முதன்மை விடைத்தாளுடன் 22 பக்கங்கள் வரும் வகையில் கூடுதல் விடைத்தாள்கள் இணைத்து பார் கோடிங்ஷீட் தைக்கப்பட்டிருக்கும்.

20 மாணவர்கள் ஒரு தேர்வு அறையில் தேர்வு எழுதும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்வு அறையில் வினாத்தாள் உறையை மாணவர் இருவர் கையொப்பம் பெற்ற பின்னரே வழங்கவேண்டும்.

காலையில் 10.10க்கு விடைத்தாள்களை தேர்வர்களின் புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்த்து வழங்க வேண்டும். கூடுதல் விடைத்தாள் "கே" படிவத்தில் கையொப்பம் பெற்று வழங்க வேண்டும். 10.30 வரை தேர்வுக்கு வராத மாணவர்களின் தேர்வு எண்ணை உறையின் இடது புறத்தில் சிவப்பு மையால் எழுத வேண்டும். அவர்களின் விடைத்தாளின் பார்கோடிங் தாளில் "ஏ" என்பதை சிகப்பு மையால் "டிக்" செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகள் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

நன்றி:


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்