தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.10.10

மேலவை ஆசிரியர் வாக்காளர் பட்டியல் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம்

சட்ட மேலவை தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலில் ஆசிரியர்கள் தாங்கள் பணிபுரியும் பள்ளிகள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அதேசமயம், சங்கங்கள் மூலமாக விண்ணப்பிக்க கூடாது என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. 

சட்ட மேலவை ஆசிரியர் தொகுதிக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடக்கிறது. தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. நவ., 6 வரை விண்ணப்பிக்கலாம். உயர்நிலைப்பள்ளி மற்றும் அதற்கு மேல் தகுதியுள்ள பள்ளி, கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். இவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகளாவது பணி செய்திருக்க வேண்டும். இவர்கள் தனித்தனியாக விண்ணப்பிக்கலாம் அல்லது இவர்கள் பணிபுரியும் நிறுவனம் (முதல்வர்/தலைமை ஆசிரியர்) மூலமாக மொத்தமாக விண்ணப்பங்களை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைக்கலாம். அதேசமயம், சங்கங்கள் மூலமாக விண்ணப்பிக்க கூடாது. இவ்வாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

நன்றி: 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்