தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.10.10

ஆசிரியர்கள் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வதற்கான தகுதிகள்

  • இந்தியக் குடிமகன்/ள்-ஆகவும் தொகுதியில் சாதாரணமாக வசிப்பவராகவும் இருக்க வேண்டும். மேலும் 01.11.2010-க்கு முன்பாக கடந்த ஆறு ஆண்டு காலத்தில், குறைந்தபட்சமாக மொத்தம் மூன்றாண்டு கால அளவிற்கு, மாநிலத்திலுள்ள இடைநிலைப் பள்ளித் தரத்திற்குக் குறையாத, குறிப்பிடப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பணியாற்றியவராயும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படத் தகுதியுடையவராயும் இருத்தல் வேண்டும். அவ்வாறு குறிப்பிடப்பட்ட கல்வி நிறுவனங்களின் பட்டியல்  www.elections.tn.gov.in என்ற வலைதளத்தில் காணலாம்.
    .
  • ஆசிரியர்கள் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படக் கோரும் ஒரு நபரின் படிவம் 19 - உடன், ஒரு ஒப்பளிப்பு செய்யப்பட்ட பணியிடத்தில் முந்தைய ஆறு ஆண்டுகளில் மொத்தம் மூன்றாண்டு கால அளவிற்கு ஆசிரியப் பணியாற்றியமைக்கான சான்றிதழை கல்வி நிறுவனத்தின் தலைவரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆசிரியப் பணியாற்றியிருக்கும் நேர்வில், அந்த ஒவ்வொரு கல்வி நிறுவனத்திடமிருந்தும் தனித்தனிச் சான்றிதழ் நகல்களைப் பெற்று இணைக்கவேண்டும்.
  • விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் தேதியில் ஆசிரியர் பணியில் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், சான்று(கள்) அவர் கடந்த ஆறு ஆண்டு காலத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த கல்வி நிறுவனத்தினால் கையொப்பமிடப்படவேண்டும்.
  • நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ ஒட்டு மொத்தமாக அளிக்கப்படும் பெயர் சேர்த்திடுவதற்கான விண்ணப்பங்கள் வாக்காளர் பதிவு அலுவலரால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா. இருப்பினும் தகுதியுள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் அந்நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களின் படிவம் 19 விண்ணப்பங்களை தனித்தனியாக பெற்று தனித்தனிச் சான்றுகளுடன் இணைத்து ஒட்டுமொத்தமாக அளித்திடலாம்.
  • ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆகிய இரண்டு தொகுதிகளின் வாக்காளர் பட்டியலிலும் சேர்த்திடுவதற்கு தகுதியான நபர்கள் தனித்தனியே படிவம் 18 மற்றும் படிவம் 19இல் விண்ணப்பித்திட வேண்டும்.
  • விண்ணப்பதாரர் இருப்பிடச் சான்றாக கீழ்க்காணும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை படிவம் 18 / படிவம் 19 உடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
(அ) வங்கி/கிசான்/அஞ்சல் அலுவலக நடப்புக் கணக்குக் கையேடு; அல்லது
(ஆ) விண்ணப்பதாரரின் உணவுப்பொருள் பங்கீட்டு அட்டை/கடவுச்சீட்டு/ஓட்டுநர் உரிமம்/ வருமான வரி விதிப்பு ஆணை; அல்லது
(இ) விண்ணப்பதாரரின் பெயரிலோ அல்லது அவரது பெற்றோர் போன்ற நெருங்கிய உறவினர் பெயரிலோ உள்ள குடிநீர்/தொலைபேசி/மின்சாரம் சமையல் எரிவாயு இணைப்பு போன்றவற்றின் சமீபத்திய ரசீது; அல்லது
(ஈ) கொடுத்துள்ள முகவரியில் விண்ணப்பதாரரின் பெயருக்கு வந்து சேர்ந்த தபால் துறையின் தபால்கள்
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்