தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

15.10.10

அரசு உறுதி அளிக்காதவரை பி.எஃப். பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது

மத்திய அரசு உறுதி அளிக்காத வரை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.), பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட மாட்டாது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.  

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ரூ. 5 லட்சம் கோடி நிதி உள்ளது. இந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்று நிதி அமைச்சகம் வலியுறுத்தி வருகிறது.  

ஸ்திரமற்ற பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதனால் ஏற்படும் நஷ்டத்தை அப்பாவித் தொழிலாளர்கள் மீது சுமத்தக் கூடாது என அரசின் முடிவை கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்க்கின்றன. 

பங்குச் சந்தை முதலீடுகளுக்கு உறுதியான வருமானம் கிடைக்கும் என்ற உத்தரவாதம் கிடையாது. இதில் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அரசு உத்தரவாதம் அளிக்காவிட்டால் பங்குச் சந்தை முதலீட்டுக்கு அனுமதிக்க முடியாது என்று தொழிலாளர் நலத்துறைச் செயலர் பி.சி. சதுர்வேதி, நிதிச் செயலர் அசோக் சாவ்லாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

பிஎப் நிதியை நிர்வகிக்கும் அமைப்பாக மத்திய அறங்காவலர் வாரியம் (சிபிடி) உள்ளது. இதன் தலைவராக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் உள்ளார். இவரது தலைமையில் கடந்த மாதம் 15-ம் தேதி கூட்டம் நடைபெற்றது. அப்போது ஓய்வுக் கால நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து ஆராயப்பட்டது.

நன்றி: 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்