தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை தமிழக அரசு முடக்கி வைத்து உத்தரவிட்டும் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை குறைக்கப்பட்டதை தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக கடுமையான எதிர்ப்பை தெரிவித்து கொள்கிறது
தமிழக அரசு வெளியிட்ட அரசாணை எண் 232 நிதி (படிகள்)துறை நாள் 27/04/2020 படி தமிழக அரசு அரசுஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 30/06/ 2021 வரை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது .அதேபோன்று அரசாணை எண் 48 (பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை) நாள் 27/04 /2020 ன்படி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பெற்றுவந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து ஊதியம் பெறும் உரிமையை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டது .
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு என்பது விலைவாசி ஏற்றத்திற்கு தக்கவாறு மத்திய அரசு கடும் விலைவாசி புள்ளிகளின் அடிப்படையில் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகவும் இன்றைய நிலையில் நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து வரும் நிலையில் நோய் தொற்றினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அடுத்து 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரத்து செய்வது என்பது எவ்விதத்திலும் நியாயமானதல்ல.
மேலும் அகவிலைப்படி அதாவது பஞ்சப்படி என்பது முதல் உலகப்போரில் 1917 தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் போது அவர்களின் வாழ்க்கை தரத்தை பாதுகாக்க முழக்கமிட்டு பெறப்பட்ட முதல் உரிமைப்போர் பின்பு
இரண்டாம் உலகப்போரின் 1929 அனைத்து தொழிலாளர்களும் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் இந்த பஞ்சபடியானது பஞ்சம் போக்க வழங்கப்பட்டது
இதனை தொடர்ந்து 1944 ல் வரதாச்சாரியார் குழு ஒன்று அமைத்து பஞ்சப்படியுடன் உணவுப்படியும் சேர்த்து குறைந்த சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்திய விடுதலைக்குப் பிறகு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஏறும் அல்லது இறங்கும் பஞ்சப் படியை கணக்கிட்டு 1960 ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கணக்கில் கொண்டு விலைவாசி உயர்வு 100 புள்ளிகள் என நிர்ணயம் செய்து ஆண்டிலிருந்து இன்று வரை இந்தப் படியனது வழங்கப்பட்டு வருகிறது .
இப்படி போராடிப் பெற்ற உரிமைகளை 18 மாதங்களுக்கு பஞ்சப்படி ரத்து என்ற அறிவிப்பானது கொரோனா தொற்று காலங்களில் மத்திய அரசானது தேவையற்ற தொற்றை எதிர்ப்பாக கொள்கிறது
மத்திய அரசு பின்பற்றி மாநில அரசு செய்துள்ள இச் செயலானது அரசு ஊழியர் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அடுத்த 18 மாதங்களில் விலைவாசி புள்ளியை 01/07 2019 நிலையிலேயே வைத்திருப்பதற்கும் மத்திய மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்குமா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 35 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது ஒரு மாத காலத்தில் மத்திய மாநில அரசுக்கு மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு தனது ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்யக் கூடிய அளவிற்கு நிலைமை உருவாகி உள்ளது என்றால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதன் தன்மையின் மீது அவநம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது.
மேலும் கொரோனா நோய்த்தொற்று இந்தியாவில் பரவி இரண்டு மாத காலம் ஆகிவிட்ட நிலையில் அதை கட்டுவதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அடுத்த 18 மாதங்களில் அகவிலைப்படி உயர்வை முன்கூட்டியே ரத்து செய்துள்ளது என்பது கொரோனாவை காரணம் காட்டி மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது.
மேலும் தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக களத்தில் நிற்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் சுகாதாரப் பணியாளர்கள் காவல்துறையினர் வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஆகியோரது அகவிலைப்படி உயர்வை ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு செய்து ரத்து செய்து செயல் என்பது மிகப் பெரிய கொடுமையாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பார்க்கப்படுகிறது நோய்த்தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதி திரட்டுவதற்கு மத்திய மாநில அரசுகளுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன நாட்டின் பெரும் முதலாளிகளுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வரிச்சலுகை பல லட்சம் கோடி ரூபாய் வரை கடன் தள்ளுபடி பல லட்சம் கோடி ரூபாய் செலவில் ஆடம்பர திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்தும் மத்திய மாநில அரசுகள் ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதை போல தனது ஊழியர்கள் தலையில் கை வைப்ப து வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும் .
எனவே தமிழக அரசு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகிவிற்றை நிறுத்திவைத்து வெளியிட்டுள்ள அரசாணையை யும் மறுபரிசீலனை செய்து ரத்து செய்திட தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் மாநில மையம் சார்பாக தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக