தமிழகத்தில் ஆசிரியர் கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற்றவர்கள், காலிப்பணியிடம் இல்லாததால் தவிக்கின்றனர்.
இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் 
கவுன்சிலிங் முடிந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அனுமதித்த 
காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில் பணியிட 
மாறுதல் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு செல்லும்போது, அங்கு 
காலிப்பணியிடங்கள் இல்லாத நிலை உள்ளது. 
நேரடி பணி மாறுதல் பெற்றவர்கள் 
பணியில் இருப்பதாலும், புதிய நியமனங்களின் மூலம் பணியில் 
சேர்ந்திருப்பதாலும் சிக்கல் உள்ளது. இதனால், பணியிட மாறுதல் பெற்றவர்கள், 
சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் சென்று, மீண்டும் வேறு பள்ளிக்கு 
பணி மாறுதல் உத்தரவு பெற வேண்டிய நிலை உள்ளது. 
இது குறித்து ஆசிரியர் கணேசன் கூறுகையில், "" பணி மாறுதல் பெற்ற 
ஆசிரியர்கள், காலிப்பணியிடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. வீண் 
செலவு, மன உளைச்சலாலும் பாதிக்கின்றனர்,'' என்றார். 
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக