தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.12.12

குமரியில் கலை போட்டிகளுக்கு நுழைவு கட்டணம் வசூல் - முதல்வருக்கு மாணவர்கள் புகார்

தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் நடத்தப்பட்ட கலை போட்டிக்கு கட்டணம் வசூலித்ததால் பணமின்றி போட்டியில் பங்கேற்காமல் திரும்பிய மாணவர்கள் தமிழக முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.

திருநெல்வேலி மண்டல கலை பண்பாட்டு துறை சார்பில் நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் ஓவியம், பாடல் உள்ளிட்ட கலை போட்டிகள் கடந்த 1ம் தேதி நடந்தது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஒப்புதல் பெற்று போட்டியில் கலந்து கொள்ள சென்றனர்.

ஆனால் போட்டியில் பங்கேற்க சென்ற மாணவர்களிடம் ரூ.50 வீதம் போட்டியை நடத்தியவர்கள் கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இதற்கு ரசீது ஏதும் வழங்கப்பட வில்லை. ஏராளமான மாணவர்கள் பஸ்க்கு மட்டும் கட்டணம் எடுத்து வந்திருந்த நிலையில், திடீரென்று போட்டிக்கு ரூ.50 வீதம் கட்டணம் வேண்டும் என்று கூறியதால் ஒன்றிரண்டு போட்டிகளுக்கு தயாராகி சென்ற மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், ‘தமிழக அரசு கலை பண்பாட்டு துறை மூலம் நடத்தப்படும் மாணவர்களுக்கான கலை போட்டிகளில் நுழைவு கட்டணம் வசூல் எங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முன்கூட்டியே பணம் எடுத்து வராததால் எங்களால் போட்டியில் பங்கேற்க இயலவில்லை. எனவே 1ம் தேதி நடந்த போட்டிகளை ரத்து செய்து மீண்டும் போட்டிகளை நடத்த வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் கலை திறமைகளை வளர்க்கும் வகையில் கலை பண்பாட்டுத்துறை போட்டிகளை நடத்த வேண்டிய நிலையில், அதற்கு கட்டணம் வசூல் என்பது மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.


நன்றி:கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்