தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

13.12.12

தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன்

தண்ணீரில் உற்பத்தியாகும் எரிபொருளை பயன்படுத்தி, மேட்டூர் மால்கோ பள்ளி மாணவர், பைக்கை ஓட வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மேட்டூர், தொட்டில்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன்; அனல்மின்நிலைய பொறியாளர். அவரது மகன் அரவிந்த், 15, மேட்டூர் மால்கோ மெட்ரிக் மேல்நிலைபள்ளியில், ப்ளஸ் 1 படிக்கிறார். மாணவர்கள் அரவிந்த், கோகுல், காமேஸ்வரன், சையத் இணைந்து தண்ணீரில் எரிபொருள் உற்பத்தி செய்து, அதன் மூலம் மோட்டார் பைக்கை இயங்க வைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். கோவையில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், தங்கள் கண்டுபிடிப்பை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை அசத்தியுள்ளனர்.

மாணவர் அரவிந்த் கூறியதாவது
:
ஒரு லிட்டர் தண்ணீரை, ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் ஒரு ஸ்பூன் உப்பு (சோடியம் குளோரைடு) கலக்க வேண்டும். 12 கே.வி., பேட்டரியில் இருந்து இணைப்பு எடுத்து, இரு வயர்களையும் தண்ணீரில் விடும்போது, மின்னூட்டம் தண்ணீரில் பாய்ந்து, ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் வாயுக்கள் குமிழ் குமிழாக வெளியேறும். இந்த வாயுவை, குழாய் மூலம் பைக்கில் உள்ள பெட்ரோல் டியூப்பில் செலுத்த வேண்டும். பெட்ரோலுக்கு பதிலாக, ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் வாயுக்கள் தொடர்ச்சியாக கார்ப்பரேட்டருக்கு சென்று பிஸ்டலை இயக்கும். அதன் மூலம் பைக் தொடர்ந்து ஓடும். இதற்காக, வாயு மூலம் இயங்கும் இயந்திரத்தை பைக்கில் பொருத்த வேண்டும்.

ஜெனரேட்டர், கார் போன்றவற்றையும் எரிபொருள் இல்லாமல், இந்த முறையில் இயக்க முடியும். ஹைட்ரஜன் வாயு மிகவும் ஆபத்தானது. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதனால், அந்த வாயுவை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பைக், ஜெனரேட்டர் இயக்குவது பற்றி ஆய்வு செய்து வருகிறேன்.

இவ்வாறு மாணவர் கூறினார்.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்