தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

22.12.12

தஇஆச கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட பொதுக்குழு கூட்டம் 20-12-2012 அன்று தக்கலையில் நடந்தது.

மாவட்டத் தலைவர் ஹெர்பர்ட் ராஜா சிங் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச் செயலாளரும் கன்னியாகுமரி மாவட்ட செயலாளருமான எட்வின் பிரகாஷ் முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர் திவாகரன் பிள்ளை அனைவரையும் வரவேற்றார்.

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இசக்கியப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். மாநில பொதுச் செயலாளர் இசக்கியப்பன் அவர்களுக்கு மாவட்டத் தலைவர் ஹெர்பர்ட் ராஜா சிங் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
  • கன்னியாகுமரி மாவட்ட உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் சங்க உறுப்பினர்களாக்க வேண்டும்.
  • கல்வி மாவட்ட அளவில் குழுக்கள் ஏற்படுத்தி உறுப்பினர் சேர்க்கையை விரைவு படுத்த வேண்டும்.
  • ஜனவரி மாதம் முதல் வெளிவர இருக்கும் நமது முழக்கம் மாத இதழ்  அனைத்து உறுப்பினர்களையும் சென்றடைய வழிவகை செய்ய வேண்டும்.
  • 2013ஆம் ஆண்டுக்கான நாள்காட்டி மற்றும் ஆசிரியர் குறிப்பேடு அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
  • CRC அளவில் சங்க பிரதிநிதிகளை ஏற்படுத்துதல்.
  • ஆசிரியர் கல்வி பட்டய சான்றிதழ், மேல்நிலை கல்வி தகுதி (பிளஸ்2) இணையானது என்ற சென்னை உயர்நீதிமன்ற ஆணையை பள்ளி கல்வித்துறை செயல்படுத்த வேண்டும். 
  • ஆர்எம்எஸ்ஏ மற்றும் எஸ்எஸ்ஏ பணியிடங்களில் விகிதாச்சார அடிப்படையில் (தமிழாசிரியர்களுக்கு 66.66%, பிறபாட ஆசிரியர்களுக்கு 50% என்ற அடிப்படையில்) இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். 
  • சிறுபான்மை மலையாள மொழி ஆசிரியர்களுக்கு 2012-13ம் கல்வி ஆண்டில் பதவி உயர்வு வழங்க வேண்டும். 
  • உயர், மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். 
  • ஊதிய குறைபாடுகள் களைதல் குழு 3 நபர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும். 
  • இடைநிலை ஆசிரியர்களுக்கு தரஊதியம் ரூ.4,200 வழங்க வேண்டும் 
என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் துணைத் தலைவர் டெல்லஸ், தலைமையிடச் செயலாளர் பால் செபாஸ்டின், குழித்துறை கல்வி மாவட்டத் துணைத் தலைவர் செர்லின், செயலாளர் ஹரிகுமார், நாகர்கோவில் கல்வி மாவட்டத் துணைத் தலைவர் சிவகுமார், பொருளாளர் ஞானசெல்வ திரவியம், தக்கலை கல்வி மாவட்டச் செயலாளர் பாலச்சந்திரன், இணைச் செயலாளர் ராஜகுமார், ஸ்டேன்லி ரெஜி, பிரசாத், பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்ட பொருளாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்