தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

1.12.12

கல்வி நிறுவனங்களில் மன நல ஆலோசனை மையங்கள்:நீதிபதி அறிவுறுத்தல்

"ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும், தற்கொலை தடுப்புக்கான மன நல ஆலோசனை மையங்கள் அமைய வேண்டும். தீவிரமாக முயற்சித்தால், மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க முடியும்,'' என, நீதிபதி, பிரபா ஸ்ரீதேவன் பேசினார்.

சர்வதேச தற்கொலை தடுப்புச் சங்கமும், "சிநேகா' தற்கொலை தடுப்புச் சங்கமும் இணைந்து, தற்கொலை தடுப்புக்கான, ஐந்தாவது பசிபிக் மாநாட்டை சென்னையில் நடத்தின. இதில், நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் பேசியதாவது:இந்தியாவில் நிகழும் தற்கொலைகளில், மாணவர்களின் தற்கொலை Œம்பவங்களை சகித்துக் கொள்ள முடியவில்லை. எதிர்காலத்தில், பெரிய அளவில் சாதிக்க இருப்பவர்கள், தற்கொலையை தீர்வாக தேர்ந்தெடுப்பது, துரதிஷ்டமானது.

பள்ளி கல்வியில், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், தோல்வி அடையும் மாணவர்கள், தற்கொலை செய்து கொள்கின்றனர். தோல்வி அடைந்தவர்கள், வெற்றி பெறுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருப்பதை அவர்கள் அறியாதததே, இதற்கு காரணம்.
அதுமட்டுமின்றி, பெற்றோர்களின் அதிகப்படியான எதிர்பார்ப்பே, மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணமாகும். தங்கள் குழந்தைகள் எப்படியாவது பொறியாளராகவும், டாக்டர்களாகவும் உருவாக வேண்டும் என, பெற்றோர் நினைக்கின்றனர்.
தங்கள் கனவுகளை, பிள்ளைகளின் மீது திணிக்கின்றனர்; இது தவறானது. படிக்கும் மாணவர்கள் அனைவரும், டாக்டர்களாகவும், பொறியாளராகவும் மாற முடியாது என, பெற்றோர்கள் உணர வேண்டும்.

கிராமப்புறங்களில் இருந்து வரும் மாணவர்கள், நகரங்களில் படிக்கும் போது, ஆங்கிலம் தெரியாததால் தற்கொலை செய்கின்றனர். பல ஆலோசனை வழங்கிய பின்னரும், தற்கொலைகள் தொடர்கின்றன.ஒவ்வொரு கல்வி நிறுவனத்திலும், தற்கொலை தடுப்புக்கான மன நல ஆலோசனை மையங்கள் அமைய வேண்டும். தீவிரமாக முயற்சித்தால், மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க முடியும். கடந்த பத்து ஆண்டுகளாக, நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஆதாரங்களின்படி, தற்கொலைகள் தடுக்கப்படலாம் என்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அறிவியல் வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், விழிப்புணர்வு ஏற்படுத்தினால், தற்கொலைகளை முற்றிலும் தடுக்கலாம்.

தற்கொலை செய்ய முயற்சிக்கிறவர்களை, நமது அரசியல் சட்டம் தண்டிக்கிறது. இதனால், அவர்கள் மேலும், மன அழுத்தத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். எனவே, தண்டனையை மாற்றி, மன நல ஆலோசனை வழங்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், "சிநேகா" தற்கொலை தடுப்புச் சங்கத்தின் தலைவர், நல்லி குப்புசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். பல்வேறு நாடுகளில் இருந்து, மன நல ஆலோகர்களும், தற்கொலை தடுப்பு சங்கத்தினரும் பங்கேற்றனர்.

நன்றி:
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்