தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

8.4.15

கோடை விடுமுறைக்குப் பின் 2015-16-ஆம் கல்வியாண்டிற்கான பள்ளித் திறக்கும் நாள் அறிவிப்பு

தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை – 600 006.

ந.க.எண்.100404/பிடி1/இ1/2015, நாள். 06.03.2015

பொருள்: - பள்ளிக் கல்வி – கோடை விடுமுறைக்குப் பின் 2015-16-ம் கல்வியாண்டிற்கான பள்ளித் திறக்கும் நாள் – அறிவிப்பு – சார்பாக.

பார்வை: - பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.106130/பிடி1/இ1/2013, நாள்.25.03.2014.

- - - - -

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை மற்றும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து 2015-16ஆம் கல்வியாண்டில் 01.06.2015 (திங்கட் கிழமை) அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டுமென்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இதனை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய அறிவுரைகள் வழங்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

2015-16ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி உரிய விவரங்களுடன் தனியே அனுப்பி வைக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

இச்செயல்முறைகளை பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதலை மறு அஞ்சலில் அனுப்பி வைக்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

(ஒம்/-) ச.கண்ணப்பன்
பள்ளிக் கல்வி இயக்குநர்.

பெறுநர்
1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
2. அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள்.

நகல்
தொடக்கக் கல்வி இயக்குநர்,
சென்னை – 6. (தகவலுக்காக அன்புடன் அனுப்பலாகிறது)
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்