பயிற்சி வகுப்பிற்கு வராமல் "கட்' அடித்த தேர்தல் அலுவலர்களை  சஸ்பெண்ட்  செய்யுமாறு கலெக்டர் பழனிசாமி உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில்  உள்ள 11 தொகுதிகளிலும் தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு முதல் கட்ட  பயிற்சி முகாம் நேற்று நடந்தது. மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 780  பணியாளர்கள், பயிற்சிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
  
 
உளுந்தூர்பேட்டையில் நேற்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடந்த  பயிற்சி வகுப்பில் தேர்தல் பணியாற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் 1,118  பேர் பங்கேற்றனர். தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனபால், தேர்தல்  தாசில்தார் ராதாகிருஷ்ணன், தனி தாசில்தார் ராஜேந்திரன், தேர்தல் நடத்தும்  உதவி அலுவலர் வேல்முருகன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
பயிற்சி வகுப்பின்போது, மதியம் 1.15 மணியளவில் கலெக்டர் பழனிசாமி  திடீரென "விசிட்' செய்தார். ஒவ்வொரு அறையாக பார்வையிட்ட கலெக்டர்,  பயிற்சிக்கு வராதவர்களை உடனடியாக"சஸ்பெண்ட்' செய்யுமாறு தேர்தல்  அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இவர்களில் உடல் நிலை பாதித்து  மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள், பிரசவ வலி மற்றும் குழந்தை பெற்ற  இரண்டு மாதங்களுக்குள் இருப்பவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க  அறிவுறுத்தினார். 
இப்பயிற்சியில் கலந்து கொள்ளாத 22  அலுவலர்களின் பெயர்  பட்டியல், கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக