தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.6.11

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குறை தீர்ப்பில் சிக்கல்

தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தாததால், ஆசிரியர்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அரசு உதவி பெறும் 632 உயர்நிலைப் பள்ளிகள், 1,120 மேல்நிலைப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களது குறைகளை தீர்க்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, குறை தீர்ப்பு கூட்டங்கள், மாவட்ட கல்வி அலுவலரால் அந்தந்த கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், இரண்டு நாட்கள் நடத்தப்பட்டு வந்தது. அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தங்களது குறைகளை தலைமை ஆசிரியர்களிடம் மனுவாக வழங்குவர். அவை, குறை தீர்ப்பு கூட்டத்தின் போது, மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் வழங்கப்படும். இதை பெற்று அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். 

தற்போது, இந்த குறை தீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகங்களில் உள்ள வருகைப் பதிவேட்டில், குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டதாக பதிவு செய்து வருகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான மனுக்கள் தீர்வு கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 

குறை தீர்ப்பு கூட்டத்தை நடத்த அரசும், பள்ளிக்கல்வித் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்