தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

14.6.11

அப்பாடி... ஒருவழியாக நாளை பள்ளிகள் திறப்பு; புத்தகங்கள் இல்லாததால் ஆசிரியர்கள் முழிப்பு

சமச்சீர் கல்வி திட்டத்தால் எழுந்த தொடர் குழப்பங்களால், வழக்கமான இரண்டு மாத கோடை விடுமுறையுடன், போனசாக கிடைத்த, 15 நாட்களும் சேர்ந்ததால், இரண்டரை மாதங்களாக குதூகலித்து வந்த மாணவர்கள், நாளை முதல் பள்ளிகளுக்கு பறக்க உள்ளனர். எந்த கல்வி திட்டம் அமலுக்கு வரும் என்பது தெரியாததால், மேலும் பல நாட்களுக்கு மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான்.

வழக்கமாக, ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்கள், மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும். சமச்சீர் கல்வி திட்டத்தால் எழுந்த குழப்பத்தால், கடந்த முதல் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள், 15 நாட்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு மாதம், பிள்ளைகளை வைத்துக்கொண்டு படாதபாடு பட்ட பெற்றோருக்கு, போனசாக வழங்கப்பட்ட, 15 நாட்கள் விடுமுறையால், மேலும் திண்டாடினர். ஆனால், குழந்தைகளும், மாணவர்களும் கொண்டாட்டமாக இருந்தனர். கோடை விடுமுறைக்காக வெளியூர் மற்றும் சுற்றுலா தலங்களுக்குச் சென்றவர்கள், பள்ளி திறப்பு தேதி தள்ளி வைத்ததால், சொந்த ஊருக்கு கிளம்பும் திட்டத்தையும் தள்ளி வைத்து, சில தினங்களுக்கு முன் அனைவரும் ஊர் திரும்பினர். 

இரண்டரை மாத விடுமுறைக்குப் பின், ஒருவழியாக, நாளை (15ம் தேதி) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகள் திறந்தாலும், எந்த கல்வி திட்டம் அமல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. இதனால், பாடப் புத்தகங்கள் இல்லாமலேயே, மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புத்தகங்கள் இல்லாததால், காலையில் இருந்து மாலை வரை, மாணவர்களை எப்படி சமாளிப்பது என தெரியாமல், ஆசிரியர்கள் முழித்துக் கொண்டிருக்கின்றனர். கதை, விளையாட்டு, பொது அறிவு, நீதிபோதனை போன்ற நிகழ்ச்சிகளில் நேரத்தை கரைக்க, ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். பாடப் புத்தகங்கள் சப்ளையாகும் வரை, மேலும் பல நாட்களுக்கு மாணவர்களுக்கு கொண்டாட்டம்; ஆசிரியர்களுக்கு திண்டாட்டம் தான்! 

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்