தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

23.6.11

மாநில கல்வி அதிகாரி திடீர் ஆய்வு

உடுமலை பகுதியிலுள்ள பள்ளிகளில், மாணவர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சி குறித்து அனைவருக்கும் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
 
அரசுப் பள்ளிகளில், ஒன்று மற்றும் 6ம் வகுப்புக்கு சமச்சீர் கல்வியும், 2ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலும், 7,8,9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு குழந்தைகள் மைய இணைப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மொழி, இலக்கணம், பொது அறிவு, விளையாட்டு முறையில் கணித பாடம் கற்பித்தல் போன்ற பயிற்சிகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகின்றன. அறிவியல் பாடத்தில், சுற்றுச்சூழல் உள்நோக்கும் செயல்பாடுகள், பறவைகள், காலநிலை உள்ளிட்ட தலைப்புகளிலும், சமூக அறிவியல் பாடத்தில், பள்ளியினை முழுமையாக வரைந்து விளக்குவதும், புவியியலில் வரைபடம் வரைவது போன்ற தலைப்புகளில் பயிற்சி கொடுக்கப்படுகிறது. வாரத்தில் ஒரு நாள் களப்பயணமாக அருகிலுள்ள மருத்துவமனை, தபால் நிலையம் போன்ற இடங்களுக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


உடுமலையிலுள்ள பள்ளிகளில் மாணவர்களுக்கு பயிற்சிகள் முறையாக வழங்கப்படுகிறதா என அனைவருக்கும் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடுமலை கணபதிபாளையம் சீனிவாச வித்யாலயா நடுநிலைப்பள்ளிக்கு சென்று ஒன்று மற்றும் ஆறாம் வகுப்பில் சமச்சீர் கல்வி பாட முறையையும், மற்ற வகுப்புகளில், குழந்தைகள் இணைப்பு மைய பயிற்சி குறித்தும் ஆய்வு செய்தார். பின் மாணவர்களிடம் பாடங்கள் நடத்தும் முறையினை கேட்டறிந்தார். 

வெனசப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, உடுமலை நெல்லுக்கடை வீதி நகராட்சி நடுநிலைப்பள்ளி, போடிபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார். 

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில், ""பள்ளிகளில் அளிக்கப்படும் இணைப்பு மைய பயிற்சிகளை மாணவர்கள் கற்று வருகின்றனர். மாணவர்களை கள ஆய்வுக்கு அழைத்து செல்லவும் அறிவுறுத்தப்பட்டது,'' என்றார்.

நன்றி

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்