தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

22.6.11

கற்பித்தல் பணிக்கு "சிடி" - பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை

மாணவர்கள் கற்பித்தல் பணிக்காக அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை மூலம் "சிடி' வழங்கப்பட்டுள்ளது. 

தமிழக பள்ளிகளில் சமச்சீர் கல்வி தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், முதல் 10 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் , இணைப்பு பயிற்சி கல்வி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில் கேட்டல், வாசித்தல், எழுதுதல், விவாதம் போன்ற தலைப்புகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடந்து வருகிறது. இதன் கற்பித்தல் குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறையால் "சிடி' வழங்கப்பட்டுள்ளது. இந்த "சிடி'க்களை முதலில் ஆசிரியர்கள், அதன் பின் மாணவர்களுக்கு போட்டு காட்டி கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டிமன்றங்கள் நடத்த தெரிவிக்கப்பட்டுள்ளது. "மக்களை அதிகம் நெருங்குவது செய்தி தாள், ரேடியோ ,"டிவி' , "இன்றைய மாணவர்களுக்கு தேவை ஆசிரியர் , தோழர், பெற்றோர்' போன்ற தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எழுதுதலில் கவிதைகள், படித்தல் பகுதியில் சித்தர் பாடல்கள், நளவெண்பா பாடல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை பின்பற்றியே மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் செய்ய, ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்