பள்ளிகளில் சுற்றுச்சூழல் தினத்தை ஜூனிலே கொண்டாடி  அறிக்கை அனுப்ப, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் ஜூன் 5 ம்  தேதி சுற்றுச்சூழல் தினம் கொண்டாடுவது வழக்கம். இந்தாண்டு பள்ளிகள் ஜூன்  15ல் திறக்கப்பட்டதால், சுற்றுச்சூழல் தினத்தை அன்றைய நாளில் கொண்டாட  முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, ""ஜூனிலே அனைத்து பள்ளிகளிலும்  சுற்றுச்சூழல் தினம் கொண்டாடவும், இதன் அறிக்கையை விழா நடத்தியதற்கான  ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கவும்,''அனைத்து மாவட்ட சுற்றுச்சூழல் மன்ற  ஒருங்கிணைப்பாளர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
இவ்விழாவில், சுற்றுச்சூழல் குறித்து மாணவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு  ஊர்வலம், போட்டிகள் நடத்தப்படும். மரக்கன்றுகள் நடப்படும். சுற்றுச்சூழல்  குறித்து மாணவர்களுக்கு வனத்துறையினரால் பயிற்சியும் வழங்கப்படுகிறது. 
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக