"சம்பள உயர்வு நிர்ணயித்ததில் ஏற்பட்ட தவறுக்காக, அரசு ஊழியர் ஓய்வு  பெற்ற பின், பணிக்கொடையில் பிடித்தம் செய்வது ஏற்கத்தக்கதல்ல' என, மதுரை  ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
  
தேனியைச் சேர்ந்த கருப்பையா தாக்கல் செய்த ரிட் மனு:  பொதுப்பணித்துறையில் கனரக இயந்திர ஆபரேட்டராக பணிபுரிந்து, 2009ல் ஓய்வு  பெற்றேன். 1996ல், எனக்கு சம்பள உயர்வு தவறாக நிர்ணயிக்கப்பட்டதாகக் கூறி,  21 ஆயிரத்து 306 ரூபாயை பணிக்கொடையில் பிடித்தம் செய்ய, பொதுப் பணித்துறை  நிர்வாக பொறியாளர் உத்தரவிட்டார். இதுகுறித்து என்னிடம், விளக்கம்  பெறவில்லை. சம்பள உயர்வு நிர்ணயித்ததில் எனக்கு பொறுப்பு இல்லை. நிர்வாக  பொறியாளர் உத்தரவை ரத்து செய்து, பிடித்தம் செய்த தொகையை திருப்பி வழங்க  உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது. 
விசாரணை செய்த  நீதிபதி கே.வெங்கட்ராமன், "சம்பள உயர்வு நிர்ணயித்ததில் ஏற்பட்ட தவறுக்காக,  அரசு ஊழியர் ஓய்வு பெற்ற பின், பணிக்கொடையில் பிடித்தம் செய்வதை ஏற்க  முடியாது. நிர்வாக பொறியாளர் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. பிடித்தம்  செய்த தொகையை நான்கு வாரங்களுக்குள், மனுதாரருக்கு திருப்பிக் கொடுக்க  வேண்டும்" என்றார்.
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக