தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

15.6.11

மத சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

Pre Matric Scholarship

கல்வி உதவித்தொகை விண்ணப்பம் - புதுப்பித்தல்

கல்வி உதவித்தொகை விண்ணப்பம் - புதியது

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சிறுபான்மையினராக கருதப்படும் கிறித்துவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய மற்றும் பாரசீக மதங்களைச் சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும், மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பள்ளிப்படிப்புக்கான கல்வி உதவித்தொகை, 2011-12ம் ஆண்டு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி உதவித்தொகை பெறுவதற்கு, 
  • முந்தைய ஆண்டின் இறுதித்தேர்வில், 50 சதவீத விழுக்காடுக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். 
  • 1ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வகுப்பு வரை பயில்பவராக இருத்தல் வேண்டும். 
  • பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒரு ஆண்டு வருமானம், 1 லட்சம் ரூபாய் மிகாமல் இருக்க வேண்டும்.
  • கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மாணவ, மாணவியர் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும். 
  • ஏற்கனவே கல்வி உதவித்தொகை பெற்றவர்கள், புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை மட்டுமே கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
  • கல்வித் உதவித்தொகை வேண்டுவோர், பூர்த்தி செய்யப்பட்ட புதுப்பித்தல் விண்ணப்பங்களை, அந்தந்த கல்வி நிலையங்களில் ஜூலை 4ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
  • புதிய விண்ணப்பங்களை, அதே மாதம் 11ம் தேதிக்குள்ளும் கிடைக்கும் வகையில் மாணவ, மாணவியர் வழங்க வேண்டும்.  
  • கல்வி நிலையங்கள் மாணவ, மாணவியரிடமிருந்து பெற்ற கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை சரிபார்த்து, உரிய படிவத்தில் பதிவதற்கான கேட்பு பட்டியலை ஜூலை மாதம் 20ம் தேதிக்குள்ளும், 
  • புதுப்பித்தலுக்கான கேட்பு பட்டியலை ஜூலை மாதம் 15ம் தேதிக்குள்ளும், "சிடி'யில் பதிந்து கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரிடம் வழங்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, தொடர்பு கொள்ளலாம்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்