தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

26.6.11

ஆசிரியைக்கு தலைமையாசிரியர் பதவி உயர்வு: ஐகோர்ட் உத்தரவு

மதுரையை சேர்ந்த ஆசிரியைக்கு முன் தேதியிட்டு தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க, அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. 

மதுரையை சேர்ந்த அலமேலு தாக்கல் செய்த ரிட் மனு
சேடப்பட்டி ஒன்றியத்தில் 1988 ஜூலை 13ல் துவக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியையாக நியமிக்கப்பட்டேன். 1992 ஜூன் 25ல் செல்லம்பட்டி யூனியனுக்கு இடம் மாற்றப்பட்டேன். எனக்கு முன், 1991 செப்., 11ல் வேறு யூனியனிலிருந்து செல்லம்பட்டிக்கு சரஸ்வதி என்பவர் மாற்றப்பட்டார். செல்லம்பட்டிக்கு நான் மாற்றப்பட்ட போது, தகுதி காண் பருவம் முடித்து, நிரந்தரமாக்கப்பட்டிருந்தேன். சரஸ்வதி நிரந்தரமாக்கப்படவில்லை. எனக்கு முன் மாற்றப்பட்டதை காட்டி, பதவி உயர்வு பட்டியலில் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அவர் ஆரம்ப பள்ளி தலைமையாசிரியராக 1998 செப். 9லிலும், பின், 2002 ஜூலை 21ல் நடுநிலை பள்ளி தலைமையாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். எனக்கு பின் பணியில் சேர்ந்த அவருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வை ரத்து செய்ய வேண்டும். முன்தேதியிட்டு எனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

மனு நீதிபதி டி.அரிபரந்தாமன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல்கள் திலீப்குமார், தர்மர் வாதிடுகையில், "பதவி உயர்வு பட்டியலை உதவி தொடக்க கல்வி அலுவலர், அனைத்து ஆசிரியர்களுக்கு அனுப்பும்படியும், அதன் மீது ஏதாவது ஆட்சேபனையிருந்தால் அதை சரி செய்து புதிய பட்டியல் வெளியிட இயக்குனர் உத்தரவிட்டிருந்தார். அதை பின்பற்றவில்லை. பதவி உயர்வு பட்டியலை ரத்து செய்யவேண்டும்,'' என்றனர்.

நீதிபதி, "ஆவணங்களை பார்க்கையில் மனுதாரர் பெயர் சீனியாரிட்டி லிஸ்டில் இருந்துள்ளது. மனுதாரரை விசாரிக்காமல், பட்டியலில் மாற்றம் செய்துள்ளனர். அந்த பதவி உயர்வு பட்டியல் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 1998 செப்., 9 முதல் ஆரம்ப பள்ளி தலைமையாசிரியர், 2007 செப்., 21ல் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கி, அதற்கான சலுகைகளை வழங்க வேண்டும்,'' என்றார்.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்