தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.6.11

தேர்தல் பணியில் குழப்பம்: அலுவலர்கள் பட்டியல் தயாரிப்பு

சட்டசபை தேர்தலில் ஓட்டு பதிவு, ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி செய்தவர்கள், பணியை புறக்கணித்தவர்கள் பட்டியல் தயாரிக்க தேர்தல் பிரிவு அலுவலர்களுக்கு கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலை தேர்தல் கமிஷன் சிறப்பாக நடத்தி முடித்தது. இப்பணியில் அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டனர். பணியின் போது ஊழியர்கள் தேர்தல் நடைமுறை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும், பணியில் குளறுபடி, முறைகேடு செய்பவர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணி மற்றும் ஒழுங்கு நடவடிக்கை சட்டத்தின் கீழ் எடுக்கப்படும் என தலைமை தேர்தல் கமிஷனர் எச்சரித்து இருந்தார். தேர்தலில் ஓட்டு பதிவன்று ஓட்டு பதிவு முடிந்ததும் இ.வி.எம்., மெஷினின் குளோசர் பட்டனை குளோஸ் செய்து இருக்க வேண்டும். ஓட்டுபதிவு மையத்தில் நடந்த அனைத்து சம்பவங்களையும் தேர்தல் பதிவேட்டு புத்தகத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும். இது போன்ற பணிகளை செய்யதவறிய அலுவலர்கள் பட்டியலை அனுப்பி வைக்கும்படி தேர்தல் கமிஷன் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் பிரிவு அலுவலர் ஒருவர் கூறுகையில்,"" தேர்தல் பணிக்கான பயிற்சியின் போது உணவு மற்றும் இடவசதி செய்துதரப்படவில்லை என தேர்தல் பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்து பயிற்சியினை புறக்கணித்தனர். பலர் தேர்தல் பணிக்கு செல்லாமல் காரணங்களை கூறி புறக்கணித்தனர். பணியாற்றியவர்களில் ஓட்டு சாவடியிலும், ஓட்டு எண்ணிக்கை மையத்திலும் தேர்தல் நடைமுறை விதிகளை மீறி செயல்பட்டனர். இதுபோன்ற பணியில் ஈடுபட்டவர்களின் பட்டியலை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பிவைக்க உள்ளோம். இதற்கு தமிழ்நாடு குடிமைப்பணி மற்றும் ஒழுங்கு நடவடிக்கை விதி 17 அ வின்படி மூன்று ஆண்டு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு போன்றவை நிறுத்தி வைக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.



நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்