தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

2.6.11

தமிழகம் முழுவதும் 80 ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடல்

"தமிழகத்தில், 54 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது" என, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது. மேலும், 26 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, என்.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, மாணவர்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால், இப்பள்ளிகளை மூடுவதற்கு, பள்ளி நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான விருப்ப கடிதங்களை, ஏற்கனவே ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறையிடம் வழங்கியுள்ளனர். அதன்படி, 54 பள்ளிகளில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என, ஆசிரியர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும், 26 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, என்.சி.டி.இ., உத்தரவிட்டுள்ளது.

இவற்றில், 54 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களோ, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களோ நிரப்பப்பட மாட்டாது என்று, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது. மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 54 பள்ளிகளின் பட்டியல் மற்றும் 26 பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து என்.சி.டி.இ., அறிவித்துள்ள பள்ளிகளின் பட்டியல் ஆகியவை, துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 26 ஆசிரியர் பயிற்சிப் பள்ளி களில், வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என்றும், இரண்டாம் ஆண்டில் பயிலும் மாணவர்கள் மட்டும், தொடர்ந்து பயிற்சி பெறுவார்கள் என்றும், ஆசிரியர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மொத்தம் 80 பள்ளிகளில், வரும் கல்வி யாண்டில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடை பெறாது. 

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்