ஓட்டுச்சாவடிகளுக்கு, நிரந்தரமாக அலுவலர்களை நியமித்துக் கொள்ள, தேர்தல்  கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 
தேர்தல் காலங்களில் மட்டுமே, வாக்காளர் அட்டை  சரிபார்த்தல், வினியோகித்தல் போன்ற பணிகளை, ஓட்டுச்சாவடி அலுவலர்கள் செய்து  வந்தனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், மாற்றம்,  திருத்தம் பணிகள், அந்தந்த தாலுகா அலுவலகங்களில் நடந்தன. அங்கு பணிகள்  மந்தமாக நடப்பதாக, தேர்தல் கமிஷனுக்கு தகவல் சென்றது. இதை தவிர்க்கும் பொருட்டு, வாக்காளர் பெயர் பட்டியலில் சேர்த்தல்,  நீக்கம், அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்கு, அந்தந்த பகுதி  ஓட்டுச்சாவடி அலுவலர்களை பயன்படுத்திக் கொள்ள, தேர்தல் கமிஷன்  உத்தரவிட்டுள்ளது. 
இதற்காக, ஒவ்வொரு ஓட்டுச்சாவடி அலுவலரும், பதிவேடு  வைத்திருக்க வேண்டும். தேர்தல் காலத்தில் வழங்கப்படும் சிறப்பு ஊதியத்தை  விட, கூடுதலாக சம்பளம் வழங்குவது குறித்து, தேர்தல் கமிஷன் ஆலோசித்து  வருகிறது.
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக