தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

19.4.11

ஊதியக் குழு நிலுவைத் தொகை - ஓரிரு நாளில் அரசாணை

ஆறாவது ஊதியக் குழுவின் கடைசி நிலுவைத் தொகையை அளிக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அரசாணை ஓரிரு நாட்களில் வெளியாகும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆறாவது ஊதியக் குழுவின் அறிக்கைப்படி, கடந்த 2006 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது. இந்த பரிந்துரைகளைப் பெற்றுக் கொண்ட தமிழக அரசு அதனை ஆய்வு செய்வதற்கு தனியாக ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை அளிக்க இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் மாநில அரசு, 1.6.2009-ம் ஆண்டு தேதியில் இருந்து புதிய ஊதியத்தை அளித்தது. 

மத்திய அரசு 1.1.2006-ம் தேதியில் இருந்தே தனது ஊழியர்களுக்கு புதிய ஊதியம் கொடுத்தது. தமிழக அரசு 1.1.2007-ம் ஆண்டில் இருந்து மட்டுமே ஊதியம் அளிக்க முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து, இந்தத் தேதியில் இருந்து 31.5.2009-ம் காலத்துக்குள் உள்ள நிலுவைத் தொகையை மூன்று தவணைகளாக அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. 2009-ம் ஆண்டு முதல் தவணையையும், 2010-ம் ஆண்டு இரண்டாம் தவணையையும், 2011-ம் ஆண்டு மூன்றாவது தவணை நிலுவைத் தொகையையும் அளிக்க தமிழக நிதித் துறை முடிவு செய்து அதனை அளித்தது. மூன்றாவது நிலுவைத் தொகை 2011 ஏப்ரலில் அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. 

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்த காரணத்தால் கடைசி நிலுவைத் தொகையை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, நிலுவைத் தொகையை அளிப்பதற்கு உரிய அனுமதியை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெறுவதற்கான கோப்புகளை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, நிதித் துறை அனுப்பியது. இதற்கு, இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரியின் அனுமதி தேவை எனக் கூறி கோப்பு தில்லிக்கு அனுப்பப்பட்டது. 

இதனிடையே, கோப்பின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தலைமைச் செயல சங்க நிர்வாகிகள், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமாரை அண்மையில் சந்தித்து வலியுறுத்தினர். அவர்களிடம், விரைவில் அனுமதி பெற்றுத் தருவதாக பிரவீண் குமார் உறுதி அளித்தார். அதன்படி, தேர்தல் ஆணையத்தின் அனுமதியை அவர் திங்கள்கிழமை பெற்றுத் தந்துள்ளார். 

இதையடுத்து, ஓரிரு நாட்களில் அதற்கான அரசு உத்தரவை நிதித் துறை வெளியிடும் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வளவு கிடைக்கும்
கடைசி கட்ட நிலுவைத் தொகை கிடைப்பதன் மூலம், அரசு ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 30 ஆயிரம் வரை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நன்றி:



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்