தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

16.4.11

தேர்தல் பணி மதிப்பூதியம் வழங்கியதில் குழப்பம்: ஆசிரியர்கள் அதிருப்தி

தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பணம் குறைத்து வழங்கியதால் ஆசிரியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
 
தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தேர்தல் கமிஷன் சார்பில் மதிப்பூதியம் வழங்கப்படும். இதில் ஓட்டு சாவடி அலுவலருக்கு ரூ.1,450ம், பி.1, 2,3 என மூன்று நிலையில் பணியாற்றிய அலுவலர்களுக்கு ரூ.1,075 ம் தேர்தல் கமிஷன் வழங்கியது. மூன்று கட்ட பயிற்சி வகுப்புகளுக்கு ஒரு வகுப்புக்கு ரூ.250 வீதமும், தேர்தலுக்கு முதல் நாள் ஓட்டு சாவடிக்கு செல்வதால் ரூ.250 ம், சாப்பாட்டுக்கு 100, ஓட்டுப்பதிவு நாளில் ரூ.350 ம் வழங்க வேண்டும். பி.1, பி.2, பி.3, அலுவலர்களுக்கு மூன்று கட்ட பயிற்சியில் ஒரு வகுப்புக்கு ரூ.175 ம், ஓட்டு சாவடிக்கு முதல் நாள் செல்லும் போது ரூ.175 ம், சாப்பாட்டுக்கு 100 அதே போல் ஓட்டுப்பதிவு நாளில் ரூ.275 ம் மதிப்பூதியம் அனுமதிக்கப்பட்டது.


தேர்தல் பணியில் ஈடுபடும் ஓட்டு சாவடி அலுவலர்கள், பி.1, நிலை அலுவலர்களுக்கு இரண்டு கட்ட முழு நாள் பயிற்சி வழங்கப்பட்டது. பி.2, பி.3, ஆகியோருக்கு அரைநாள் பயிற்சி மட்டுமே வழங்கப்பட்டது. மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பில் பணி நியமன உத்தரவு மட்டும் வழங்கப்பட்டது. இதில் ஒரு சில மாவட்டங்களில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு மதிய சாப்பாடாக லெமன், தயிர் சாத பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இதற்காக ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு ரூ.1,250 ம், பி.1,பி.2, பி.3, நிலை அலுவலர்களுக்கு ரூ.900 மட்டுமே வழங்கப்பட்டது.


இதில் மதிய உணவுக்காக பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு சில மாவட்டத்தில் ஆயிரம் பணியாளர்கள் தேவை எனில் கூடுதலாக 200 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தேர்தல் நாளில் பணி வழங்கப்படாததால் மதிப்பூதியம் வழங்கப்படவில்லை. தேர்தல் கமிஷன் வழங்கிய மதிப்பூதியத்தில் பல இடங்களில் குறைத்து வழங்கப்பட்டதால் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். 

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்