பொது மாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பம் வழங்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடாததால், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்,  தலைமை ஆசிரியர்கள், உதவி கல்வி அலுவலர்களிடம், கடைசி பள்ளி வேலை நாளில்  பொது மாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பங்கள் பெறுவது வழக்கம். இந்த  விண்ணப்பங்கள் பெறப்பட்டு, முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட தொடக்க கல்வி  அதிகாரிகள் பரிசீலனை செய்து, கையெழுத்திட்டு வழங்கப்படும். இந்த கடிதம்  இருந்தால் தான், அடுத்த மாவட்டத்தில் நடக்கும் பொது மாறுதல்  கவுன்சிலிங்கில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியும். ஏப்., 21ல்  பள்ளிகளுக்கு கடைசி வேலை நாள் என்பதால், இதுவரை பள்ளிக் கல்வித்துறை  விண்ணப்பம் வழங்குவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. 
பொது மாறுதல்  கவுன்சிலிங், மே கடைசி வாரத்தில் தான் நடக்கும். அதற்கு முன்னதாக இந்த  பணிகள் நடந்தால் தான், பொது மாறுதல் கவுன்சிலிங் நடத்த முடியும். மே கடைசி  வாரத்தில் தான் கவுன்சிலிங் நடப்பதால், அதற்குள் தேர்தல் முடிவுகள்  வெளியாகி, புது அரசு பதவி ஏற்ற பின் தான், ஆசிரியர்களுக்கு மாறுதல் உத்தரவு  வழங்கப்படும். ஜூனில் பள்ளி திறக்கும் நாளில், மாறுதல் பெற்ற புதிய  பள்ளிக்கு சென்று பணியாற்ற முடியும். 
தற்போதுள்ள சூழ்நிலையில், பள்ளி  திறந்த பின் கவுன்சிலிங் நடத்தினால், மாணவர்களுக்கு கற்பிக்கும் பணியில்  பாதிப்பு ஏற்படும். பள்ளிக்கல்வித்துறை, இதுவரை பொது மாறுதல் கவுன்சிலிங்  விண்ணப்பங்கள் வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாததால்,  ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக