கோடை காலத்தில் தேர்தல் நடப்பதால் மரங்கள் இல்லாத ஓட்டுச் சாவடிகளில்  வாக்காளர்கள் வெயிலில் அவதிப்படுவதைத் தடுக்க சாமியானா பந்தல் போட தேர்தல்  கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஓட்டு போட வரும் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை  ஒதுக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில், ஏப்ரல் 13ம் தேதி சட்டசபை தேர்தல்  நடக்கிறது. தேர்தல் நாளில் வாக்காளர்கள் ஓட்டு போடுவதற்காக பள்ளிகளில்  ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் ஏப்ரல் மாதம் கோடைகாலம்  என்பதால், வெயில் உக்கிரம் அதிகமாக இருக்கும்.
 பெரும்பாலான பள்ளிகளின் மைதானம் மற்றும் வராண்டாவில் நிழல்தரும் பெரிய  மரங்கள் இருப்பதில்லை. நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போடும் வாக்காளர்கள்,  ஓட்டுச்சாவடிகளில் நிழல் தரும் மரங்கள் இல்லாவிடில், வெயில் நேரத்தில்  அவதிப்பட நேரிடும். அதை கருத்தில் கொண்டு, அருகில் மரங்கள் இல்லாத ஓட்டுச்  சாவடிகளில் சாமியானா பந்தல் அமைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, மரங்கள் இல்லாத ஓட்டுச்சாவடிகள் குறித்து வி.ஏ.ஓ.,க்கள்  கணக்கெடுத்து வருகின்றனர். 
தேர்தல் நாளில் 60 வயது கடந்த மூத்த குடிமக்கள்  ஓட்டு போட நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க முடியாது என்பதால்,  ஓட்டுச்சாவடிகளில் மூத்த குடிமக்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்படுகிறது. எனவே,  மூத்த குடிமக்கள் ஓட்டு போட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம்  இல்லை. 
மேலும், ஓட்டுச்சாவடிகளில் கர்ப்பிணி பெண்கள், கைக்குழந்தைகளுடன்  வரும் பெண்கள், ஊனமுற்றோர் ஆகியோருக்கும் ஓட்டு போட முன்னுரிமை  அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அனைவரும் நீண்டநேரம் காத்திருக்காமல் உடனடியாக  ஓட்டு போட முடியும்.
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக